இழப்புகள் தரும் வலி
………………..
இருப்பதை இழந்தால் உறுத்தும் மனசு …வலிக்கும் இதயம்
பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி என்றால்
இருப்புக்கும் இழப்புக்கும் அதே நியதிதானே…பின்னர் ஏன்
இருப்பதை இழக்கும் நேரம் வலிக்குது இதயம் ?
விடை இதுதான் …நம்மிடை ஒன்று இருக்கும் சமயம் தெரிவதில்லை
நம்முடன் இருப்பதன் அருமையும் பெருமையும் !
இழந்தது பொருளானால் மீட்கலாம் அதை கடும் உழைப்பால்!
இழந்தது நட்பானாலும் மீண்டும் மலர்ந்து தொடரும் அதே நட்பு
நடந்ததை நண்பர்கள் மறந்தால் !
இழந்தது நெருங்கிய உறவானால் நிச்சயம் நொறுங்கும் இதயம் !
இந்த இழப்பினால் வரும் வலி, ” நான் ” ” எனது ” என்னும் நம்
குறுகிய உணர்வை துறக்க ஒரு வழியையும் திறக்கும் !
இழப்புகள் தரும் வலியால் பிறக்கும் ஒரு நல் வழியும் இதுவே !
Natarajan
Nice kavithai. Heart warming and touching.