ஏழ்மையின் எதிர்பார்ப்பு …
……………………
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது …அதனிலும்
அரிது வறுமை இல்லாத ஒரு நல்ல வாழ்க்கை … பிறக்கும் போது
தெரிவதில்லை பொருளின் அருமை … பிறந்து வளரும்போது
புரியுதே வறுமையின் கொடுமை …ஏங்குதே மனசு
புரியாத புதிரான ஏழ்மையை நினைத்து நினைத்து !
பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லையெனில் இங்கு
பிறந்தது என் தவறா ? இது இந்த ஏழையின் கேள்வி …நானும்
வாழப் பிறந்தவன்தானே இந்த உலகில்? …விடை இல்லா வினாவா
இது ?
பொன்னும் மணியும் வேண்டாம் … “ஒரு பிடி அன்னம் போறும்
எனக்கும் என் பிள்ளைக்கும்” இது ஒன்றுதானே என் அன்றாட தேவை !
தன் தேவைக்கு மேல் பொருள் தேடி அலையும் மனிதர் பலருக்கும்
அந்த ஆண்டவனுக்கே சிறு பொருள் கொடுத்து பெரும் பொருள் கேட்கும்
மாந்தர் சிலருக்கும் இந்த ஏழையின் சிறிய தேவை ஒரு
பெரிய கோரிக்கை !
ஒரு பிடி அன்னமே ஏழ்மையின் பெரிய எதிர்பார்ப்பு எனில்
இந்த ஏழை தன் பசிப்பிணி நீங்கி முகம் மலர்ந்து சிரிப்பது எப்போது ?
அந்த சிரிப்பில் இறைவனை மனிதன் பார்ப்பது எப்போது ?
Natarajan
Good one. Some born with Poverty and some with silver spoon. Our society should work hard for removing poverty encouraging entrepreneurship instead exploiting the same freebies. Hope the situation will change one day.