இந்த வாரக் கவிதை….”காத்திருப்பு” ..!!!

 

காத்திருப்பு ….
……….
அன்னையின் கருவறையில் காத்திருந்து  இந்த மண்ணில்
பிறந்த நேரம் முதல்  முடியாத ஒரு தொடர்கதை  மனிதனின்  காத்திருப்பு !
நம் வாழ்வின் ஒவ்வொரு திருப்புமுனையும்  காத்திருப்பின் முடிவில்
அரும்பும் புது மலர்களே … புன்னகைப் பூக்களே !!!
நல்லதே நடக்கும்  நாளைக்கு என எதிர் வரும் நாளுக்கு
 நல்வரவு சொல்லி நம்பிக்கை யுடன் காத்திருக்கும் நமக்கு
இன்றைய பொழுதின் இன்னல் யாவும் பகலவன் முன் பனி போல்
மறையும் !
நாளை நமதே …இது   நம் நம்பிக்கை!  காத்திருப்போம் நாம்
ஒரு வளமான ஒளி மிகு பாரதம்  காண !
இந்த காத்திருப்பு நிச்சயம் ஒரு சுமையல்ல நமக்கு…அது ஒரு
சுகமான  சுவையான முன்னோட்டமே !
Natarajan

Leave a comment