வாக்கு உன் செல்வாக்கு !
…………………..
உன் கையில் தான் இருக்கு தம்பி இந்த
நாட்டின் நம்பிக்கை …
வாக்குறுதி பல கொடுத்து பல பேர் வாக்கு கேட்டாலும்
யாரும் அரியணை ஏற முடியுமா உன் செல்வாக்கு இல்லாமல் ?
பலர் சொல்லும் வாக்கை மட்டும் நம்பி உன் வாக்கை ஒரு செல்லாத வாக்கு
ஆக்கிவிடாதே தம்பி …ஒன்று மட்டும் உறுதி தம்பி !
உன் செல்வாக்கின் முன் மற்றெல்லாம் ஒரு செல்லா காசுதான் !
இதோ வந்து விட்டது தருணம் ..உன் செல்வாக்கை மற்றவர்
தெரிந்து கொள்ள …புரிந்து கொள்ள !
மறக்காமல் பறை சாற்று உன் செல்வாக்கு என்னவென்று !
Natarajan
5 april 2016