பேசும் மௌனம்
……………
வாய் திறந்து பேச தேவை ஒரு மொழி! ..ஆனால் பேசுமே மௌனம்
மௌனமே மொழியாக !
வாய் அடைத்து பேச்சு துறக்கும் நிலையிலும் மறக்காமல் ஒருவர்
பேசும் மொழி …மௌனம்!
அகத்தின் அலைகள் முகத்தில் தெரிய இதயம் திறந்து
காட்டுமே மௌனம் ! இதயம் பேசும் மொழியும் அதுவே !
வாய் திறந்து பேசாமல் பேசும் மௌனம்! …பேசாமல் பேசும்
மௌனம் நம்மில் பலரை மௌனமாக்கி வியக்க வைக்கும் !
இதயம் இறுக்கமான சமயம் வலியைக் காட்டுவது மௌனம்
துயரத்தின் உச்சத்தில் நம் மன வலிமையை சொல்லுவதும் மௌனமே !
சினம் தவிர்த்து பொறுமை காத்திட வித்திடுவது மௌனம்
மனம் திறந்து இரு இதயங்கள் உரையாட, உறவாட , துணைபோவதும்
மௌனமே !
Natarajan