தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்….!!!
—————————————————————————
1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு… இதாங்க
சரி…
2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்….
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ………..
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் …
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்…
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்…….
4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ….
சூடு அல்ல சுவடு…
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது…
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்….
5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்….
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்….
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் …
காலப்போக்கில்….நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்…!!!
6.சட்டியில் இருந்தா ஆப்பையில் வரும்(சஷ்டியில் இருந்தால் அக பை(கருப்பை) இல் வரும்)
.7.அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்(அடி(கடவுள் பாதம்)உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்)
Source…………..Facebook input from Sridhar Sivaraman
Natarajan