வாரம் ஒரு கவிதை …” நிலா விடும் தூது “

 

நிலா  விடும்  தூது
——————
நிலா சோறு சாப்பிட்ட நீ கால் பதித்தாய் என் மண்ணில்
ஒரு நாள் … நிலவு எனக்கு அன்று ஒரே பெருமை !
 பூமித்தாயின் பிள்ளைகள் வருவார்கள் என் வீட்டுக்கு !
 ஆட்டமும் பாட்டமும் இருக்கும் என் வீட்டிலும் ! நான் அவருக்கு
ஊட்ட வேண்டும் சோறு பூமி காட்டி என் நிலவு வீட்டில்!
இந்த நிலவின் கனவு அது !இலவு காத்த கிளி போல ஆனதே
இந்த நிலவின் கனவு !நானும்  தூது விட்டுப் பார்க்கிறேன்
என்னைத் தாண்டி செல்லும்  விண்கலத்தில் எல்லாம்!
வழி மேல் விழி வைத்து தேடுகிறேன் உன்னை
மனிதா  என் மேலே வட்டமிடும் விண்கலத்தில் ! இரக்கமே
இல்லையா உனக்கு ? என் மண்ணில்  இறங்க மறுப்பது ஏன் ?
உயர உயர பறப்பதுதான் உன்  இலக்கா ? புதுப்புது
மண்ணை விண்ணிலும் தொட்டு முத்தமிட்டு உன் வீட்டுக்கே
திரும்பி செல்வது மட்டும்  உன் அறிவியல் விளையாட்டா ?
உன் மண்ணில் நீ விளையாட இடம் இல்லாமல் இந்த
விண்ணில் நீ விளையாட நானும் இந்த விண்மண்டலமும்
ஒரு விளையாட்டு திடல் மட்டுமா  உனக்கு ?
புதுப்புது அறிவியல் செய்தி உன் வசம் கொண்டு  சேர்க்கும்
உன் விண்கலம்  இந்த நிலா விடும் தூதை மட்டும் உன்னிடம்
கொண்டு சேர்க்காத காரணம் என்ன சொல்லு மனிதா?
நிலா நான்  காத்திருக்கிறேன் உன் கால் என் மண்ணை
மீண்டும் முத்தமிட்டு  என் மண்ணில் நீ ஓடி ஆடும்
அந்த நல்ல நாளுக்காக !
Natarajan  in http://www.dinamani.com dated 27th Feb 2017
Natarajan

Leave a comment