மேகம் போடும் தாளம்
__———————
நீல வானம் இசைக்கும் மழை இசைக் கச்சேரிக்கு
வான் மேகம் தவறாமல் போட்டிடும் சரியான தாளம் !
கரு மேகத் தாளம் இல்லாமல் மழை இசைக் கச்சேரி ஏது ?
மனிதன் போட்ட தப்பு தாளத்தால் இன்று நீல
வானம் இசைக்க மறந்ததே தன் இன்னிசை மழையை !
மழையின்றி மனிதன் தவித்து ஒரு வாய் குடிநீருக்கு
போடுகிறான் தாளம் இன்று ! மேள தாள வாத்தியம்
சகிதம் காத்திருக்கிறான் அவன் வான் மழை இசைக்கு !
வான் மழை இசைக்கு சரியான தாளம் போடும்
மேகமே இன்று போடுதே தாளம் அதன் முகத்தை
தொலைத்து விட்டு !
தொலைத்த முகத்தை தேடி எடுத்து வான் மேகம்
போட வேண்டும் மீண்டும் ஒரு தாளம் வான் மழை
இசைக்கு கட்டியம் கூறி ! இசைக்க மறந்த வானமும்
மேகம் போடும் தாளத்தில் தன்னை மறந்து இசைக்க
வேண்டும் ஒரு இனிய மழை கீதம் இந்த மண் குளிர!
Natarajan … in http://www.dinamani.com datec 5th June 2017
I enjoyed kavidai
Thanks …Sairam