வாரம் ஒரு கவிதை…” ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம் “

 

ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம் …
———————————
புள்ளியில் தொடங்குது ஒரு மனித வாழ்வு
அந்த சிறு புள்ளி பெரும் புள்ளி ஆகுமா ..
இல்லை அதன் குடும்பத்துக்கும் இந்த உலகுக்கும்
ஒரு கரும்புள்ளியா? …அது ஒரு கேள்விக்குறியே !
புள்ளியில் தொடங்கும் வாழ்க்கை பயணம்
அழகு புள்ளி கோலமாய் மிளிர்வது அந்த
பிள்ளையின் கையில்… கோலம்
அலங்கோலம் ஆவதும் அந்த பிள்ளையின் செயலில்!
புள்ளியில் துவங்கிய வாழ்க்கை பயணம்
ஒரு கேள்விக்குறியாய் இருக்கலாம் …ஆனால்
கேலிக்குரியதாய்  இருக்கலாமா ?
வாழ்வுக்கு  முற்றுப்புள்ளி  வரும் நேரம்
யாருக்கு தெரியும் ?  பெரும்புள்ளிக்கும் தெரியாது
கரும்புள்ளிக்கும் தெரியாது ! முற்றுப்புள்ளிக்குப்
பின் என்ன நடக்கும் ? …
எந்த “டாட் காம் ”  இணைய தளத்திலாவது
இந்த கேள்விக்கு விடை கிடைக்குமா !
Natarajan…My Tamil kavithai as published in http://www.dinamani.com dated 31st july 2017

Leave a comment