வாரம் ஒரு கவிதை …” கடல் பயணம் “

 

கடல் பயணம்
————-
தினம் தினம் கடல் பயணம் …திரவியம்
தேட  அல்ல … அலை கடலில் அவன்
அலைவது  அவன் வீட்டு  அடுப்பு எரிய !
மீனவன் அவனுக்கு தேவை கடல் மீன் !
விண்மீனை பிடிக்க பறக்கவில்லை  அவன் !
கடல் மீனை அவன் தேடி பிடிக்கையில்
அவனை துரத்தி மிரட்டி விரட்டுதே  ஒரு கூட்டம் !
இல்லை  இது உன் எல்லையில் என்று
தினம் தினம் அவனுக்கு தொல்லை !
பிழைப்பு தேடி கடல் நாடி ஓடும் அவன்
தினம் தினம் செத்துப் பிழைக்கிறானே !
என்று தீரும் அவன் அவலம் ?
கடல் பயணம் அவனுக்கு ஒரு சொகுசு
சுற்றுலா அல்ல … அவன் வாழ்க்கையின்
பயணமே  அந்த கடல் அலையோடுதான் !
மண்ணை நம்பும் விவசாயி ….கடலை
நம்பும் மீனவன் … இந்த இருவருக்கும்
பிறக்குமா ஒரு விடிவு  காலம் விரைவில் ?
Natarajan in http://www.dinamani.com dated 7th August 2017
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s