ஆபத்பாந்த வான் ….பெரியவர்….!!!!

காஞ்சியில் ஒரு கோவிலில் பெரியவா எல்லாருக்கும் தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். அப்போது உணர்ச்சிப் பெருக்கை உடலால் சமாளிக்க முடியாமல் ஒரு தம்பதி தங்கள் பெண் குழந்தையுடன் வந்து பெரியவாளை நமஸ்கரித்தனர். “ஆந்த்ரப்ரபா” பத்திரிகையின் ஆசிரியரும், காந்திஜியின் நெருக்கமான தோழருமான நீலம் ராஜு வேங்கடஸேஷைய்யாவின புதல்விதான் அந்த அம்மா. பெரியவா அவர்களுடைய க்ஷேம லாபங்களை விஜாரித்தார். அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோட கூறியதை கேட்டு, சுற்றி நின்று கொண்டிருந்த அத்தனை பேருக்கும் மயிர்க்கூச்சல் எடுத்தது..

“இன்னிக்கு பெரியவாளோட க்ருபையாலதான் இங்க வந்திருக்கோம்…நாஙĮ 1;க லண்டன்ல இருக்கோம். கொஞ்ச நாளைக்கு முன்னால [ஏதோ ஒரு தேசத்தின் பெயரைக் கூறி] அந்த country க்கு flight ல போய்ண்டிருந்தோம். திடீர்னு இஞ்சின்ல ஏதோ பெரிய கோளாறு. அதுனால safe landing கூட முடியாது..ங்கற மாதிரி பைலட் எல்லாருக்கும் ரெட் சிக்னல் குடுத்தார். விமானத்துக்குள்ள இருந்த அத்தனை பேரோட மனநிலையும் சொல்லக் கூட முடியாது!

ஆனா, உயிரே போகப்போறது..ங்கற நிலைமைல எங்களால பெரியவாளைத் தவிர வேற எதையுமே நினைக்கத் தோணலை! பெரியவாளோட சரணங்களை மானசீகமா கெட்டியா பிடிச்சிண்டோம்! எங்களோட பயம் பயமாத் தெரியலை! எங்களோட டிராவல் பண்ணிக் கொண்டிருந்த அத்தனை வெளிநாட்டுக்காராள& #;யும் தைரியமா இருக்கச் சொல்லி, “Sage of Kanchi ” ன்னு பெரியவாளை நாங்க தெய்வமாவே வர்ணிச்சு, ஆபத்பாந்தவர் அவரை வேண்டிண்டா, எந்த பெரிய விபத்தும் ஓடிப் போய்டும்ன்னு சொன்னதும், ப்ராணாபத்து வந்தா, பொழைக்கறதுக்கு எதைத்தான் பிடிச்சுக்க மாட்டா? அன்னிக்கி அந்த முழு விமானமும் பெரியவாளை த்யானிக்கற, பெரியவாளோட திருவடில தஞ்சமடையற த்யானகூடமாயிடுத்த&

கொஞ்ச நேரத்துல பைலட்டுகளுக்கு cooperate பண்ணாத முக்யமான இஞ்சின்கள், கருவிகள் எல்லாமே ஏதோ அதிசயமா “miracle “ன்னு அத்தனை பேரும் [பைலட்டுகள் உட்பட] ஆச்சர்யப்படும் ரொம்ப லகுவா வேலை செய்ய ஆரம்பிச்சுடுத்து! சாவோட விளிம்புலேர்ந்து எங்க எல்லாரையும் பெரியவா காப்பாத்திட்டா! விமானம் கீழ இறங்கினதும், பைலட்டுலேர்ந்து அத்தனை பேரும் எங்களை சூழ்ந்துண்டு, Kanchi Sage க்கு லெட்டர் எழுதினாலோ, அவரை பார்த்தாலோ, எங்க எல்லாரோட இதயபூர்வமான நன்றியையும், நமஸ்காரத்தையும் கட்டாயம் அவருக்கு தெரிவிக்கணும்ன்னு ரொம்ப கேட்டுண்டா….எங்களு க்கோ ஒடனே இந்தியாவுக்கு வந்து பெரியவாளை தர்சனம் பண்ணி, அவருக்கு பாதபூஜை பண்ணனும்னு ரொம்ப தவியா தவிச்சு, நேரே இங்க வந்துட்டோம்…” என்று விம்மல்களுக்கிடைய& ; சொல்லி முடித்தனர்.

ஆனால் பெரியவாளோ எப்போதும்போல் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி, தனக்கு அவர்கள் சொல்லித்தான் எதுவுமே தெரிந்தா மாதிரி மலர்ந்து சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். பாரிஷதரிடம் பாதுகைகளை கொண்டு வரச் சொல்லிவிட்டு, அவர்களுடைய சின்னப் பெண் குழந்தையை அருகில் அழைத்து, பெற்றோர் கொண்டுவந்திருந்த ஸ்வர்ணபுஷ்பங்கள், வாஸனை புஷ்பங்கள் எல்லாவற்றையும் அதன் குட்டி பூ போன்ற கைகளால் அள்ளி அள்ளி போடச் சொன்னார். அதுவும் அழகாக அர்ச்சனையாகவே பாதுகைக்கு புஷ்பங்களைப் போட்டது.

பெரியவா அந்த தம்பதியிடம் “நீங்க ரெண்டு பேரும் சேந்துதான் இந்தக் கொழந்தை. இது பண்ற பூஜை, நீங்களே பண்ணறதுதான்! அதோட ஒங்க கையால பண்றதை விட, இது குட்டிக் கையால பண்ணறச்சே நெறைய அர்ச்சனை, நெறைய நாழி நடக்கும்!” என்று தெலுங்கில் கூறினார். அன்று அங்கு எல்லோருமே அந்த ஆனந்தத்தை அனுபவித்தனர்.

அவதார புருஷர்களிடம் உண்மையான பக்தி கொண்டவர்கள், எங்கிருந்தாலும் எந்த ஆபத்திலிருந்தும் நிச்சயம் காப்பாற்றப் படுவார்கள். இந்த மாதிரி “miracles ” ஐ நாம் அப்பேர்ப்பட்ட மஹான்களிடம் சென்று கூறினால், “அப்படியா!” என்று நம்மைவிட ரொம்ப அதிசயப்படுவது போல் அழகாக நடித்து விடுவார்கள். அதுவும் ஒருவகையில் பார்க்க அழகாக இருக்கும்.

ஆபத்தோ, ஸம்பத்தோ, எந்நேரமும் சத்குருவின் திருவடிகளியே நம் சிந்தை இருக்க குருவிடமே ப்ரார்த்திப்போம் !

source::::perivaa forum
natarajan
Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3133#ixzz2GtIA49lN

Alongwith Water , Happiness and Bliss also Gushing out !!!!

It was a hot summer season. Severe water scarcity prevailed in the villages. The rivers and ponds had all dried up. In many homes, even their wells went dry. Whatever water was available, the villagers shared among themselves.

On the request of devotees of a village where there was severe water scarcity, Periva had come to the village and was giving darshan.

Everyone in the village came for darshan – the rich and the poor, the good and the bad, the miser and the philanthropist; everyone.

A very old person had come. The others who were there gave him way, out of respect, to have Periva’s darshan. It was evident that he was an important person in the village.

He paid his obeisance, and stood up.

Periva asked him “What is your age?”

“Me? I am quite old now – eight two years”, replied the old man.

“Sowkiama?” (Is all well with you?), asked Periva.

“No, Sami. Where is the room for happiness? There are quarrels in my family all the time. No one listens to what I say. I am not in good health too. I am living life just for the sake of it”, said the old man.

“You must be very depressed…”

“Yes.., Sami”

“If I show you a way to be happy, will you obey me?”, asked Periva.

“Tell me Sami”, said the old man, eagerly.

“You have fenced the pump-set in your Thottam (field), with the intention that others cannot take even a drop of water. People here are undergoing a lot of hardship for water to drink and cook. You are using the water from your pump-set to water your crops, and your Thottam (field) alone is flourishing. You say that your property and family is not giving you any happiness. Break down the fence around your pump-set. Let all the people take the water. They will all bless you for this and you will find the happiness that you want”.

Tears were flowing down the eyes of the old man.

The villagers who were listening to Periva’s advise stood there stunned!

“None of them had told Periva about the pump-set in the old man’s house (or) that he had fenced it preventing them from fetching water. Nor did they tell Periva that the old man will not hesitate to pick up a fight if they trespassed”. They only prayed for the water crisis to be resolved by Periva’s grace. That’s all.

When Periva was about to leave the place, two youngsters came running. “The old man has taken off the fencing around the pump-set!”, they exclaimed.

Water was gushing from the pump-set.

Happiness and sheer bliss was also gushing from the heart of the old man who had removed the fence, paving way for everyone in the village to use the water.

Periva’s compassion has no boundaries. His Arul (Divine grace) will continue to flow like a river which never runs dry.

source::::perivaa forum….
natarajan
Read more: http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3187#ixzz2GacB9Na4

கேட்காமலே கொடுக்கும் மனசு …பெரியவருக்கு …

ஒரு முறை பெரியவாள் மதுரை அருகே முகாமிட்டிருந்த சமயம். மகானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நாராயணசாமி என்றொரு பக்தர், தன நண்பருடன், நடமாடும் தெய்வத்தை தரிசிக்க போயிருந்தார். கையில் அவ்வளவு பண வசதியில்லாதவர் அவர். கொஞ்சமாகத்தான் பணத்தை எடுத்துக்கொண்டு போயிருந்தார்.

அவர் ஒரு சம்சாரி. எந்த செலவு என்றாலும், அளவோடுதான் செலவு செய்ய முடியும். மகானை தரிசிக்க வந்ததில், நண்பருக்கும், அவருக்கும், பஸ் கட்டணத்துக்கே பணம் சரியாக போய்விட்டது. மகானை தரிசித்தோம் என்ற ஆனந்தத்திற்கு பதிலாக, திரும்பவும் ஊர போய் சேர, கையில் காசில்லையே என்கிற கவலைதான் அவரை அதிகமாக ஆட்கொண்டது.

மகானிடம் உத்தரவு வாங்கிகொண்டு, எப்படி ஊர திரும்புவது என்று விசனத்தோடு அவர் வெளியே வெகுதூரம் வந்துவிட்டார். அவரது பின்னால் ஓடி வந்த ஒருவர், அவரை மகான் திரும்ப அழைப்பதாகச் சொன்னார். நாராயணசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. அவ்வளவு பெரிய பக்தர் கூட்டத்தில் , தன்னை மட்டும் மகான் குறிப்பிட்டு அழைப்பானேன்? மனதில் குழப்பத்துடன் பெரியவாள் முன் நின்றார்.

“பாவம், நீ சம்சாரி. இதை வச்சுக்கோ”, என்று ஐந்து ரூபாயை மகான் கொடுத்தபோது, சாட்சாத் சுந்தரேஸ்வரரே தன கஷ்ட நிவர்த்திக்கு பணம் கொடுத்து அருளுவது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது.

பக்தர்களின் மனதின் ஆழத்தில் உள்ள எண்ணங்களை படிக்க அந்த மகானால் முடியும் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்? இதை போன்ற அருள் சுரக்கும் பரமேஸ்வரரை தரிசித்து வணங்கினால், வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும், சர்வ மங்களங்களையும் பெற்று ஆனந்த வாழ்வு பெறுவது சாத்தியமே!

source:::: kanchiperivaa forum
natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3153#ixzz2GQdZ0Uxr

மகாபெரியவரின் மனித நேயம் !!!

source:::: input from my friend….
natarajan

ஒருமுறை ‘திருவாடனை
‘ என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது.
பெரியவர்கள் அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட
எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர்
இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது வருடங்களுக்கும் மேலாக
அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒருமுறை, அன்றைய பாரதப் பிரதமர்
திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவர் தம் மௌன விரதத்தை
விட்டுக் கொடுக்கவில்லை.

அன்றைக்குத் திருவாடனை ஊரிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில்
சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேச
விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண்
பார்வையையும் இழந்தவர்.

மடத்துச் சிப்பந்தி ஒருவர், வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும்
பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவர் மௌனமாகவே ஆசி
வழங்கிக்கொண்டு இருந்தார்.

சங்கரன் முறை வந்தபோது, அவரையும் பெரியவருக்கு அறிமுகம் செய்தார்
மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவருக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப்
பார்த்ததும் பெரியவர் உரத்த குரலில், “என்ன சங்கரா? எப்படி இருக்கே?
சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூட
உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?”
என்று கேட்டு, ஆசீர்வதித்தார்.

சங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். அதே நேரம், மடத்து சிப்பந்திகளுக்கும்
மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம்… முப்பது வருஷமாகக் கடைப்பிடித்து
வரும் மௌன விரதத்தை முறித்து விட்டாரே பெரியவர் என்று!

எல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்ற பின்பு,
சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று, “பெரியவா எதுக்காக
மௌன விரதத்தை முறிச்சுட்டீங்க? எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே
இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே? இவர் என்ன அவ்வளவு பெரிய
ஆளா?” என்று கேட்டனர்.

பெரியவர் புன்னகைத்தபடியே, “எல்லாரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது.
இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு
அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால் என்னைப் பார்க்க
முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச்
சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசீர்வாதம் பண்ணினேனான்னு அவனுக்குத்
தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப்படுவான். இந்தத்
தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன். அவனுக்காக நான் என்
ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது. அதனால
எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம்
ஒண்ணுமே இல்லே!” என்றார் நிதானமாக.
பெரியவர் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் வறட்டுப் பிடிவாதமாகப்
பிடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல; அதற்கும் மேலாக மனிதாபிமானத்தை, மனித
நேயத்தையே விரும்பியவர்; இந்த விஷயத்தில் மற்றவர்களுக்குத் தாமே ஒரு
வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்!

பெரியவர் பெரியவர்தான் !!!!!

source:::: input from my friend…

Natarajan

காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிச்
சமீபத்தில் எனக்குத் தெரிய வந்த சிலிர்ப்பூட்டும் தகவல்களை இங்கே
பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே பெரியவர் பெரியவர்தான்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச்
சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில் எக்கச்சக்கக் கூட்டம்
திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன்
மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார்.
அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள்
ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த
மாத்திரத்திலேயே புரிந்தது.

பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத்
தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி
இருக்கே?” என்று விசாரித்தார் பெரியவர்.

அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும்,
தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை
பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும்
சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை
வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு
செலவாச்சு?” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில்,
“சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” என்றார்.

பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்…
திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ
எப்படி இருக்கான்?” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை
எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.

தொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக்
கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார்.
அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள்
பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று
விசாரித்தனர். அதற்கு அவர், “நான் அயோக்கியன்… அயோக்கியன்..!” என்று
திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவாறு
சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு அவர் சொன்னார்…

“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன்
பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி
வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை
என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி
விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத்
தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை
பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய
தர்மவானா?’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார்.
உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப்
பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றபடி தன் மனைவியுடன்
கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.

பெரியாரும் , மகாபெரியவரும் ….

காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை
செய்யும் பாக்கியம் பெற்றவர் லக்ஷ்மிநாராயணன் என்னும் 76 வயதுப்
பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். காஞ்சிப் பெரியவர் பற்றி அவர்
சொன்ன ஒரு விஷயம்……

காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங்களுடன் நடந்து வருகிறார். லஸ் அருகில்,
அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர்
கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள். காஞ்சிப்
பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக்
கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே., சதாசிவம் போன்றோர் கையைப்
பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று
அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள்
இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு
ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல
வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

பெரியவர் புன்னகைக்கிறார். “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண
மாட்டா!’ என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று
சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே
நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்…
திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்பு!

அந்த நேரத்தில், ஈ.வே.ரா. பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத்
தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், “எல்லாரும் கட்டைகளைக் கீழே
போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது
எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு
ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!’ என்று
கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி
நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. “நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!’
என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை
பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார்.

பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக்
கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம்
நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது,
அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது.

இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப்
பெரியவர் ‘மேனா’ என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு
இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில்
இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு
பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான்
அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள்.

ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில்
மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள்
சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே,
இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது!
துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர்
தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள
முடியும்?’ என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின்
காதுகளில் விழுந்தது.

அவ்வளவுதான்… மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார்
பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா
எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா
கருதறோம்!’என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம்
கெஞ்சியிருக்கிறார்கள்.

“இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.
இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும்
நடந்துதான் போகப் போறேன்’ என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார்
காஞ்சிப் பெரியவர்.
கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள்
தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன.

source:::::input from one of my friends…
Natarajan

No Limit for The Compassion of Mahaperiavaa….

It was the beginning of May, with the sun at its scorching best. There was a political meeting opposite to Kacchabeswarar (Kacchabam – tortoise) temple. Atheists. The audience was around 200. The leader swore that he would demolish all temples, build industries in those places and provide jobs to everyone.

Inside the Kanchi mutt, Periava called for the Paatti who used to serve butter milk in front of the mutt. He told her to make an ‘Unda’ full of butter milk. He listed the ingredients – asafetida, curry leaves, green chillies, ginger, mustard (boiled). The Sishyas and devotees were surprised at His knowledge and were also worried because it was an ordinary day and there were not too many people at the mutt.

Meanwhile, the atheist’s meeting ended, and the leader got into the car and drove away. The crowd walked to the bus stop near the mutt. Then they saw the Paatti serving butter milk. In hardly 10 minutes, the ‘unda’ was empty. Then, one of them said to another, ‘ shall we go and have darshan of Sami?’. Everyone felt the same, but hesitated because they thought others would curse them.

At that moment, Maha Swami came out to go to Gangai Kondan Mandapam to have darshan of Anjaneyar. The whole crowd prostrated before Him on the mid-day, May month, hot sand. Periava stopped, blessed them and asked, ‘ did all of you get butter milk?’.

There could be limits to Gods’ (Shiva, Vishnu…) mercy, but not for Periava’s compassion.

source::: periva. proboards .com
Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3029#ixzz2G7lLB3qa

சிரிக்க ..சிந்திக்க ….

source::::story by Prema Subramanaiam…..kanchi perivaa forum.

Natarajan

பிராம்மணர்கள் கடல் கடந்து போவது ஆசாரகாவலரான ஆசார்யனுக்கு உகந்ததல்ல
என்று அறிந்த ஒரு அந்தண அடியார், சீமை சென்று திரும்பிய பின், அங்கும்
தமது ஆசாரங்களை வழுவாது பின்பற்றியதை பெரியவாளிடம் தெரிவித்தால் அதை அவர்
ஏற்று கொள்வார் என்று எண்ணினார்.

“இங்கிலாந்தில் கூட விடாமல் அம்மாவாசை தர்ப்பணம் பண்ணினேன்”

“அதாவது…..நீ போனது போறாதுன்னு, ஒன்னோட பித்ருக்களையும் சீமைக்கு
வரவழைச்சுட்டியாகĮ 1;கும்?” என்று சிரித்துகொண்டே ஒரு வெட்டு வெட்டினார்
பெரியவா!

——————————————————————————————————————— ———–

பெரியவாளின் முன் உளறி கொட்டி கிளறி மூடிய ஒரு உபன்யாசகர், “ஒரே அபத்தமாக
சொன்னேன். வ்ருத்தியாறதுக்கு பெரியவாதான் அனுக்ரஹிக்கணும்”

“அபத்தம் வ்ருத்தியாவதற்கு நான் வேற அனுக்ரஹிக்கணுமா?” என்றார் குறும்பாக பெரியவா!

——————————————————————————————————————— ———–

ஒருமுறை திருமதி M S ம் திரு சதாஸிவமும் கச்சேரிக்காக வெளிநாடு
சென்றுவிட்டு திரும்பியதும் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்கள். பூஜை
முடிந்து எல்லாருக்கும் தன் கையாலேயே தீர்த்தம் குடுத்துக்
கொண்டிருந்தார் பெரியவா. அந்த வரிசையில் சதாஸிவத்துக்கு பின்னால் திரு
ரா.கணபதி நின்று கொண்டிருந்தார்.

சாதாரணமாக கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணனுக்கு பெரியவா தன்
கையால் சந்திரமௌலீஸ்வரர் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்ர விரோதமாகையால்
சதாசிவத்துக்கு பெரியவா கையால் தீர்த்தம் கிடைக்காது என்பது ரா.கணபதிக்கு
நிதர்சனமாக தெரிந்திருந்தது. ஆனால், சதாசிவத்துக்கு இந்த விஷயம்
தெரியாதாகையால் ரொம்ப சந்தோஷமாக இவரோடு பேசிக்கொண்டே கியூவில் முன்னேறிக்
கொண்டிருந்தார்.

ரா.கணபதிக்கு ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. “பெரியவாளே கதி” என்று நகர்ந்து
கொண்டிருந்தார். இதோ! சதாஸிவம் பெரியவா முன்னால் தீர்த்தத்துக்காக கையை
நீட்டிவிட்டார்…….

பெரியவா உத்ரணியை பாத்திரத்துக்குள் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த
தேங்காயை எடுத்து தரையில் தட்டி உடைத்தார்……

“இன்னிக்கி ஒனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” இளநீரை சதாசிவத்தின் கைகளில்
விட்டார்! சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம்! ரா.கணபதிக்கோ
நிம்மதி பெருமூச்சு!

“பாத்தியா? இன்னிக்கி பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷல்..லா தீர்த்தம்
குடுத்துட்டார்!…”

சாஸ்த்ரத்தையும் மீறாமல், பிறர் மனஸ் நோகாமல் தீர்வு காண தெய்வத்தால்
மட்டுமே முடியும்!

Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=2777#ixzz2G7gwArA2

புறத்தோற்றம் ஒரு அளவுகோள் அல்ல !!!

[image]

மகான் கர்நாடாகாவில் 1979 – ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். பயணித்தப்பிறகு, மாலை நேரத்தில் ஓர் இடத்தில தங்குவது வழக்கம்.

அன்றும் வழக்கம்போல் காலையில் ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து, பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து கொண்டு இருந்தார்.

அப்போது, மகானை பார்க்க இரு அந்தண இளைஞர்கள் அங்கே வந்தனர்.

தரக்குறைவான ஆடைகளுடன் , குளிக்காத தோற்றத்தோடும் , படிப்பு அறிவே கொஞ்சமும் இல்லாதவர்களை போல் காட்சியளித்த அவர்களை பார்த்த டாக்டர் ராமமூர்த்தி முகம் சுளித்தார்.

மகானை பார்க்க வரும்போது குளித்துவிட்டு, சுத்தமான அடைகளை அணிந்துகொண்டு வரவேண்டாமோ?

மகானை வழங்கி எழுந்த அவர்களை கணிவுடன் பார்த்து, மகான் கேட்டார்,

“அத்யயனம் முடிந்தாகி விட்டதா?

அவர்களும் தலையை ஆட்டினார்கள்.

“ரிக்வேதம்” சொல்லுங்கள்” என்று மகான் கட்டளை இட்டவுடன், அருவியிலிருந்து நீர் பெருக்கெடுத்து வந்தது போல், அவர்கள் வேதத்தை சொல்ல தொடங்கினார்கள்.

கண்களை மூடியவாறு மகான் அதை கேட்டு கொண்டிருந்தவர் – பிறகு அவராக கையமர்த்தியபின் தான் அவர்கள் வேதம் சொல்வதை நிறுத்தினார்கள்.

“எங்கிருந்து வருகிறீர்கள்?” – மகான் கேட்டார்.

இருபது மைல்களுக்கு அப்பால் இருந்த ஓர் இடத்தை சொன்னார்கள் இளைஞர்கள்.

“அங்கிருந்து எப்படி வந்தீர்கள்?

“நடந்துதான் வந்தோம்”

“திரும்பி போகும்போது?

“நடந்துதான் போகவேண்டும்”

மகானை பார்க்க இருபது மைல் தூரத்தை நடந்தே கடந்து வந்து இருகிறார்கள்.

உடம்பில் அழுக்கு ஏன் சேராது?

மடத்தின் மூலமாக அவர்களுக்கு புதிய ஆடைகளை கொடுத்து, உண்ண உணவு கொடுத்து அனுப்பினார், மகான்.

அவர்களை பற்றி தவறாக நினைத்துகொண்டிரு;த டாக்டரின் பக்கம் திரும்பினார் மகா பெரியவர்.

“மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து, அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதை குழப்பிக் கொள்ளக்கூடாது”, என்றார்.

அவர் மனதில் என்ன நினைத்தார் என்று இவருக்கு எப்படி தெரியும்? டாக்டர் மெய்சிலிர்த்தார்…

source::::www.perivaa.proboards.com

Natarajan

Read more:http://www.periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3141#ixzz2FJUawOXb

மகாபெரியவா …மருத்துவருக்கு மருத்துவர் !!!!

கல்யாணமாகி இரண்டே மாதங்கள் ஆன அந்த இளம் தம்பதிக்கு ஒரு பேரிடி விழுந்தது! ஆம். கணவனுக்கு தலைக்குள் கட்டி. பல டாக்டர்களிடம் காட்டி எல்லாவித டெஸ்டும் பண்ணியாகிவிட்டது.

“ஸ்கல்லை ஓபன் பண்ணி, ஆபரேஷன் பண்ணி கட்டியை எடுத்துடலாம். ரொம்ப ஈஸி!…” டாக்டர்கள் ரொம்ப ஈஸியாக சொல்லிவிட்டனர். அந்த பையனின் மனைவிக்கோ வயிற்றை கலக்கியது. ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகனை நாடி ஓடி வந்தனர். சாதாரணமாக கல்யாணமாகி “Honey Moon ” என்று தேன்நிலவு போகவேண்டியவர்கள் தேனம்பாக்கத்துக்கு வந்தார்கள். பெரியவாளுடைய திருவடிகளில் நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்தபோது அந்த பெண் அடக்கமாட்டாமல் அழுதாள். அவள் அழுது ஓயும் வரை பெரியவா மெளனமாக அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

“இவருக்கு தலைக்குள்ள tumour ன்னு சொல்லிட்டா பெரியவா….. ரொம்ப பயமா இருக்கு பெரியவா….கல்யாணமாய 07; ரெண்டு மாசம் ஆறது. பெரியவா என்ன சொன்னாலும் கேக்கறேன்….காப்பாத்துங்கோ பெரியவா!”….குழந்தை அழுவதை தாயார் சஹிப்பாளா?

“ஆபரேஷன்ல எனக்கு நம்பிக்கை இல்லே……அதுவும், தலேல ஆபரேஷன் நேக்கு சரியா படலே…” மௌனமானார்.

தம்பதிகளும் சுற்றி நின்றவர்களும் இந்த மௌன இடைவெளிக்குப் பின் என்ன உத்தரவு வருமோ என்று காது, கண் எல்லாவற்றையும் கூராக்கிக் கொண்டனர். தெய்வம் அந்தப் பையனைப் பார்த்து திருவாய் மலர்ந்தது.

“நீ என்ன பண்றே….காவேரிக் கரையோரமா இருக்கற எதாவுது ஒரு
க்ஷேத்ரத்துக்கு போ! ஸ்வாமி தர்சனம் பண்ணு! தெனோமும் விடிகாலம்பற காவேரிக் கரையோட களிமண்ணை தலைல முழுக்க அப்பிண்டு அரை மணி உக்காரு. அப்புறம், ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், ஸ்வாமி தர்சனம், எல்லாம் பண்ணு. நல்ல
ஆசாரமான எடத்ல தங்கணும். ஸ்வயம்பாகம் பண்ணி சாப்டணும்…… இப்டீயா ஒரு மண்டலம், நாப்பது நா…இருந்தா, எல்லாம் செரியாயிடும்…”

தம்பதிக்கு சந்தோஷம் எல்லை தாண்டி போனது! நமஸ்காரம் பண்ணிவிட்டு ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு நேராக, திருச்சி அருகே காவேரிக் கரையில் ஒரு க்ஷேத்ரத்தில் தங்கினார்கள். பெரியவா சொன்னபடியே ப்ராத காலத்தில் களிமண் காப்பு, ஸ்நானம், ஸந்த்யா வந்தனம், ஸ்வாமி தர்சனம், ஸ்வயம்பாகம் எல்லாம் அழகாக நாற்பது நாள் பண்ணினார்கள்.

ஊருக்கு வந்ததும், டாக்டரிடம் போனதும், அவர் செக் பண்ணிவிட்டு,
“ஒண்ணுமேயில்லியே ! கட்டி கம்ப்ளீட்டா கரைஞ்சு போய்டுத்து” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

உடனேயே இருவரும் ஓடி வந்தனர் பெரியவாளிடம். ஒண்ணரை மாசத்துக்கு முன் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டவள், இப்போது ஆனந்தம் தாங்காமல் கண்ணீர் விட்டாள். நன்றி பெருக்கால் வார்த்தைகளே வரவில்லை. “பெரியவா….இல்லேன்னா
எங்களுக்கு யார் இருக்கா?”

“நா….என்ன பெருஸ்…ஸா பண்ணிட்டேன்? “வைத்யோ நாராயணோ ஹரி” தெரியுமோன்னோ? நேக்கு ஒண்ணும் தெரியாது” என்று அமைதியாக சொன்னார்

“பேஷஜாம் பிஷக்” [ மருத்துவர்க்கெல்லாம் மருத்துவர்].

source:::::input from one of my friends….

Natarajan