வைகுண்ட ஏகாதசி … ஒரு தகவல் …..

 

Temple images

நார, அயந என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம் என்பது உயிர்த்தொகுதி, அயனம்-இடம் உயிரிங்களுக்கு இடமானவன் நாராயணன். உயிரினங்களைக் காப்பதற்கு இறைவன் சில தலங்களைத் தேர்ந்தெடுப்பது போல சில காலங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவை புண்ணிய காலங்கள் எனப்படும். தலங்களில் திருவரங்கம் போல புண்ணிய காலங்களில் ஏகாதசி உயர்ந்தது; ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு. ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே வைணவம். எட்டு வயதுக்கு மேல் எண்பது வயது வரை மானிடர் யாவராயினும் இரு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர், சிவனை அணுகி அபயம் கேட்டனர். நாரணனைச் சரணடையுமாறு வழிகாட்டினார் சிவன். சரணடைந்த தேவர்களுக்காக முன்னின்று யுத்தம் புரிந்தான் நாரணன். முரன் கிளர்ந்தெழுந்தான், அமரர் சிதறினர், இறைவனும்  ஆற்றலிற் குறையுடையவன் போல் பயந்தோடி வதரி மலையிலுள்ள சிம்ஹவதி என்னும் குகையில் போய் களைப்புதீர கண்ணுறங்கினான். முரன் பின் தொடர்ந்து வாள் கொண்டு வதம் செய்ய முற்பட்டான். அவ்வமயம் இறைவன் திருமேனியினின்று கன்னி ஒருத்தி வெளிப்பட்டுப் போரிட முரனுக்கு முன்னின்றாள். முரன் முடிந்தான். கன்னி வடிவத்தில் தன்னிடமிருந்து வெளிப்பட்ட சக்தி அவ் இறைவனுக்கே வியப்பளிக்கிறது.

என் பகவானை முடித்தது யார்? என்று பரமன் கேட்கிறான் அக்கன்னி உலகை அச்சுறுத்தும் அசுரனைத் தானே கொன்றதாக கூறினாள். பேருதவி புரிந்த அக்கன்னியிடம் நன்றி கூற வரம் வேண்டுமாறு கேட்டான் மாயன். ஏகாதசி என்று பெயர் கொண்ட அவ்வனிதை நின் அன்புக்கு உரியவளாக நான் ஆகவேண்டும் , திதிகளுள் முக்கியமானவளாக நான் விளங்க வேண்டும். நான் பிறந்த இந்நாளில் உபவாசம் இருப்போர் சித்திகள் அனைத்தும் பெற வேண்டும் என்னும் வரங்களை வேண்டிக்கொண்டாள். இப்படிதான் ஏகாதசி தோன்றியது, மார்கழி மாதம் கிருஷ்ணபட்சத்தில் ! ஆகையால், மார்கழி மாதத்து கிருஷ்ணபட்ச ஏகாதசி உத்பத்தி ஏகாதசி என்று வழங்கப்பட்டது. மார்கழி மாதத்து சுக்லபட்ச ஏகாதசி மோட்ச ஏகாதசி என்று வழங்கப் பெறும். இதுவே விமோசனம் தரவல்லது இந்த ஏகாதசி விரதத்தைக் கைக்கொண்ட அளவிலே ஒருவன் இன்னல்களிலிருந்து விடுதலை பெறுவதோடு தன் தொடர்புடையவர்களையும் இன்னல்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் பெறுகிறான் என்கிறது சாஸ்திரம்.

source:::::Dina Malar…Tamil Daily

Natarajan

வைகுண்ட ஏகாதசி …ஒரு பார்வை ….

source:::::input from a friend of mine….

Natarajan

 

 

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது கிரெகொரியின் நாட்காட்டியில் திசம்பர்-சனவரி மாதங்களில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் “சொர்க்க வாயில்” என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.

திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் “இராப்பத்து” என்றும் பிந்தைய பத்து நாட்களில் “பகல்பத்து” என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது…

இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நாலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.[1]. இதனால் இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.

புராண நூலின்படி திருமால் தனது எதிரிகளாகவிருந்த இரு அரக்கர்களுக்கு இந்நாளன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும் , இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.

மகாபாரதத்தில் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் கிருட்டிணன் அருச்சுனனுக்குஇந்த நாளில்தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது………

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்றதிருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது. ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் (“பரம்பத வாசல்”, சொர்க்க வாசல்” என்றும் அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்….

ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் “வைகுண்ட துவாரம்” என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது.[2] எனவே இத்திருநாளில் பெருந்திரளான பக்தர்களும் உயர்நிலையாளர்களும் திரள்கின்றனர்.

 

திருப்பாவை ..திருவெம்பாவை …மகாபெரியவா !!!!!

1949, மகாசுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள& #3021;.

மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள&

‘அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்க& தெரியுமோ?’

உடன் வந்துக்கொண்டிருந்& பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா.

ஒரே குரலில்,‘தெரியாது’ என்று பதில் வந்தது.

‘அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா – நல்ல ராகத்தோட..’

இரண்டு நிமிஷ நடை.

‘இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?..’

‘ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும் ?..’

பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் !

அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..

‘ராமமூர்த்தி.. திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..’

அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம்!

திருவெம்பாவை – திருப்பள்ளிஎழுச்ச& #3007; – திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்ட& #2985;.

பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை.

பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின.

மார்கழி மாதம் வந்தது.

பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நடத்திக் காட்டுபவர்கள்.

‘மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும்‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ?

‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.

அப்புறம் கேட்பானேன்!

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லா& பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் – ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம்!

ஓரிரு ஆண்டுகள் சென்றன.

ராமமூர்த்தியையுமĮ 1; கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள்.

‘ஞாபகம் இருக்கா? — திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே? — இப்போ யாரவது பாடராளா?…’

இது, பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு!

Read more: http://periva.proboards.com/
Natarajan

திருப்பாவை பாடல் ஒன்று….மழை வேண்டி !!!!!!

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, “ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் “கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே “பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக “கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

கவலை கல்லு போல..பகவான் தெப்பம் மாதிரி…மகாபெரிவா சொன்னது !!!!

ஒரு முறை பெரிவாளிடம் ஒரு அம்மா சொன்னார். நான் நெறைய ஸ்ல ோகம் பாராயணம் பண்றேன்.மத்யானம் சாப்பிடவே ஒரு மணியாறது. ஆனா பிரச்சினைகள் தீரலே…பகவான் கண் பார்க்கலேன்னு வருத்தப்பட்டார்.

“ஸ்லோகம் சொல்றச்சே சுவாமி முன்னாடி உட்கார்ந்துண்டு, சுவாமியை மனசிலே நிறுத்திண்டுதானே பாராயணம் பண்றேள்”னு கேட்டேன்.

“அதெப்படி முடியும்? குளிச்சிண்டே,வேற வெலை பார்த்துண்டே தான் சொல்றேன்.எல்லாம் மனப்பாடம்.தப்பு வராது”ன்னா.

காய் நறுக்கணும்னா அரிவாள்மணை,கத்தியைக் கிட்டே வைச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்பு கிட்டே போகணும்.

குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம். ஸ்கூட்டர், கார் எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினா தான் ஓடறது.

ஆனா ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமிகிட்டே போக வேண்டாமா? “ஸர்வாந்தர்யாமி” தான் அவன். ஆனாலும் பிரச்சினை பெரிசுன்னா பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சிரத்தையா
சொல்லுங்கோ… நிச்சயம் கேட்பான்.

வேறு வேலையில் கவனம் இல்லாமிலிருந்தால் விபத்து நடக்கும். ஆனா பகவான் ஞாபகம் இல்லாம ஸ்லோக மந்திரத்தை முணு முணுத்தா போறும்னு நெனைக்கலாமா?

புதுப் பூவைப் பார்த்தா பகவானுக்குத் தரணும்னு ஆசை வரணும். தளதளன்னு இருக்கிற சந்தனத்தை பகவானுக்கு பூசிப் பார்க்கணும்னு நெனைப்பு வரணும்.இந்தப் புடவையிலே அம்பாள் எப்படி
இருப்பாள்னு நெனைச்சு தியானம் பண்ணினாலேகருணை செய்கிறவாளாச்சே!

கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே!

கவலைகள் கல்லு மாதிரி,பகவான் தெப்பம் மாதிரி, மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பமாக்கணும். தெய்வத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை மந்திரங்கள் எல்லாம்.
அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சாரசாகரத்தில் மூழ்கடிக்கப்படாமல் கரை சேர்ந்து விடலாம்.

source::::input from one of my friends…
Natarajan

Message For the Day…He becomes Yours and You become HIS…

A green gourd sinks in water, but a dry one floats. Become dry – rid yourselves of attachments, desires, and avoid anxieties and worries. Then you can float unaffected on the waters of change and chance. Even water, when it becomes steam, can rise into the sky. Be free from the desires that drag you down; have only the yearning to come face to face with the Truth. The truth is shining inside you, waiting to be discovered. God is your Indweller and so when you seek Him outside, He cannot be caught. Look for Him within you. Love Him with no other thought, and feel that without Him, nothing is worth anything. Feel that He is all. Then you become His and He becomes yours. There is no kinship nearer than that!

SOURCE:::Excerpts from Divine discourses of Swami Satya SAI..

Natarajan

திருட்டு போன பிரசாதம் திரும்ப வந்த கதை !!!!

[image]

மகா பெரியவாளை முதல் முதலாக காஞ்சியில் தரிசிக்க வந்த தம்பதிகள், அந்த பிரசாதத்தை வாங்கிகொண்டு ரயிலில் தஞ்சை போக முடிவு செய்தனர். ஸ்டேஷனில் இறங்கி டிக்கெட்டை எடுக்க பர்ஸைத் தேடியபோது, அது அங்கே இல்லை. பர்ஸ் காணாமல்போனது கூட அவர்களுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. பர்ஸுக்குள் இருந்த மகானின் பிரசாதம் அல்லவா காணமல் போய்விட்டது என்கிற கவலைதான் அவர்களுக்கு.

தங்கள் ஊரான பெங்களுருக்கு போன பிறகும் இதே கவலையாக இருந்தபோது, எல்லாம் தெரிந்த மகான் அவர் கனவில் தோன்றி, “உனக்கு பிரசாதம் பத்திரமாக வந்து சேரும்”, என்றார்.

அவரது அருள் வாக்கு பொய்க்குமா என்ன?

கனவில் அருளியது போலவே, மறுநாள் தபாலில் ஒரு கவர் வந்தது.

உள்ளே ஒரு கடிதம்.

“நான்தான் உங்கள் பர்ஸை திருடினேன். நீங்கள் அதில் அட்ரஸ் வைத்து இருந்தீர்கள் – பணத்தை எடுத்துக்கொண்ட நான், அதில் இருந்த பிரசாதத்தை தூக்கி எறிய மனமில்லாமல், உங்களுக்கே அனுப்பியிருக்கிறே

இப்படிக்கு
தஞ்சாவூர் ஸ்டேஷன் திருடன் ”

திருடனுக்கும் அப்பிரசாதத்தை திருப்பி அனுப்பத் தோன்றியது மகானின் கருணை உள்ளத்தால் தானே?

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

source:::::kanchi perivaa forum

Natarajan

 

Read more:http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3130#ixzz2EopUbMpn

அறநெறி சங்கரர் …மஹா பெரியவா !!!

source::::input from one of my friends….

Natarajan

ஸமார்த்த ராமதாஸின் புனித நினைவு கமழும் ஸதாரா. அப்பகுதிக்கு இயல்பான ஏகாந்த அமைதி. வைகறையின் சாந்தத்தில் இணைந்து தோய்ந்த அதிகாலை நாலரை மணி. ஸ்ரீ காஞ்சி முனிவரின் குரல் கேட்கிறது. முதல் நாளெல்லாம் பெரியவர் மௌனமானதால் இன்று தெய்வத்தின் குரலைக் கூடுதல் ஆவலுடன் அந்த வேளையிலும் அங்கே குழுமியிருந்தவர்கள் கேட்கிறார்கள்.

” ஆமாம், வாய் மௌனமானாலும் ராத்திரி மூக்குக்கு உப்புமா வாஸனை எட்டித்து! நான் சொல்ல வேண்
டாம்னு பார்த்தாலும் என்னவோ பாவம், இங்கே இருக்கிற ரெண்டு மூணு பேருக்கு ஏற்படற சிரமத்தை எப்படி சொல்லாமயிருக்கிறதா? சாதுர்மாஸ்யம்னு நான் வந்து ஒக்காந்துட்டேன். இன்னம் ரெண்டு மாஸத்துக்கு இந்த இடத்தை விட்டுப் பொறப்படறத்துக்கு இல்லை. ஆனா இது என்ன டவுனா, பட்டணமா? இங்கே பார்த்துப் பார்த்துப் பண்ணறத்துக்கு ஜனக்கட்டு இருக்கா? இந்தச் சின்ன விஷயம் என்னைப் பாக்க வரவாளுக்குத் தெரிய வேண்டாமா? ப்ரியத்தினாலே, பக்தியினாலேதான் எங்கெங்கிருந்தோ எத்தனையோ கஷ்டப் பட்டுண்டு வரேள், வாஸ்தவம்தான். ஆனாலும் பிறத்தியாருக்கு ச்ரமம் தரலாமா? என்னை ஏதோ ஒரு வேளை பாத்துட்டு அப்படியே நகந்துண்டே இருக்க வேண்டியதுதானே? போஜனம், டிஃபன், பலகாரம்னு வந்தவாளுக்குப் பண்ணி வைக்க இந்தச் சின்ன ஊர்லே ஏது வசதி? இங்கே இருக்கப்பட்ட ரெண்டு மூணு பேர்தானே கஷ்டத்தைப் பாக்காம எல்லாம் பண்ணவேண்டியிருக்கும்? அவா நல்ல மனஸோட, ஒண்ணும் மொணமொணக்காமதான் பண்றான்னாலும், என்னைப் பராமரிக்கிறதே கஷ்டம். அது போறாம, என்னைப் பாக்க வரவா, பார்க்க வரவாளைப் பார்க்க வரவான்னு பல பேருக்கு அவாளை சுச்ருக்ஷை பண்ண வைக்கிறது ஸரியா?”

உப்புமா தாளிப்பில் சற்றுக் கார நெடி கூடுதலானது போல் பெரியவரின் குரல் த்வனித்தாலும், அன்பு என்னும் சுத்த நெய்யிலாக்கும் அது வறுபடுகிறது என்பதும் அக மூக்குக்குத் தெரிகிறது. பணிவிடையாளரிடம் எசமானரின் பரிவன்பு!

“எங்கே அந்த ‘பெல்காம் —-இருக்கானா?” என்கிறது நெய்–மிளகாய்க் குரல், மிளகாயை விட்டு விட்டு!

“இதோ இருக்கேன்”—என்று தண்டம் ஸமர்ப்பிக்கிறார் ‘பெல்காம்’…..

“நான் இந்த மஹாராஷ்ட்ராவிலே சுத்த ஆரம்பிச்சதிலேருந்து நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க ஓடி வந்திருப்பே?”

மிளகாயே அறியாத சுத்த நெய் தன் உள்ளே வர்ஷிப்பதாக உணர்ந்த ‘பெல்காம்’—தான் அடிக்கடி பெரியவாள் தரிசனத்துக்கு வந்திருப்பதை இன்று அவரே எல்லோருக்கும் தெரியப்படுத்துவதில் உற்ற பெருமிதம், அவர் ‘இத்தனாம் தடவை’ என்று சொன்ன குரலிலே பிரதிபலிக்கிறது.

“ஆமாம், உன்னாலே எப்படி இத்தனை தடவை வர முடியறது?”

“எனக்கு ரெயில்வே உத்யோகமொல்லியோ? பாஸ்லே வரேன்”

“ஓஹோ! ஸரி! உன் பாசை இங்கே வை” என்று தமக்கு முன்

தரையைத் தட்டிக் காட்டுகிறார் ஸ்ரீ பெரியவர்.

பெரியவாள் பணித்த வண்ணமே அந்த பக்தர் செய்கிறார்.

இருள் பிரியாத அந்த இளம் பொழுதிலே பெரியவரின் திருக்கர அழுத்தலில் பக்கத்தில் இருந்த டார்ச் பாஸ் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது!.

பெரியவர் பாஸை உன்னிப்பாக கவனிக்கிறார்; பேசத் தொடங்குகிறார். நெய்யிலே மறுபடி மிளகாய் வறுபடுகிறது. ” பாஸ்லே எக்ஸாமினர் கையெழுத்தே ஆகல்லே. எனக்குத் தெரியும், ரயில்வேக்காராளுக்குப் பாஸ் இருந்தாலும் இத்தனை ட்ரிப்தான் போகலாம்னு கணக்கு உண்டுன்னு இதிலேயானா நீ இத்தனை தடவை வந்ததுக்குக் கணக்கா ஒரு கையெழுத்துக் கூட காணும்! நீ என்ன பண்ணணும் தெரியுமா? முதல் காரியமா இந்தப் பாஸைக் கொண்டு போய் ‘சரண்டர்’ பண்ணணும். இனிமேல் உன் கைக்காசைச் செலவழிச்சுண்டு வர முடியும்னாலே என்னைப் பார்க்க வரணும்.”

ஹரஹர சங்கரர் அறநெறிச் சங்கரராக ஜ்வாலை விட்டு அனைவரையும் பிரமிக்கச் செய்கிறார்.

இந்த அயனான சந்தர்ப்பத்திலே சென்னையைச் சேர்ந்த சிஷ்யப் பிரமுகர் ஒருவர் ஆயிரம் ரூபாய் காணிக்கை பெரியவாளுக்குச் செலுத்த முன்வருகிறார்.

இதற்குப் பதினோறாண்டுகளுக் முன் முனிவர் ஸ்ரீமடத்தை விட்டு வெளிவந்த அன்றிலிருந்து பணக் காணிக்கையைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என்று இவர் நன்கறிந்தவர்தான். ஆயினும் பெரியவாளின் திருவுளக்கருத்தினர் படியே செலவழிக்கப் படவேண்டுமென்று அந்தரங்க பக்தியுடன் ஒதுக்கப்பட்ட தொகையாதலாலே இந்த ஆயிரத்தை செலுத்துகிறார்.

பெரியவர் புரிந்து கொள்ளாமல் போவாரா?

“எங்கே ‘பெல்காம்’?” என்கிறார்.

திருணமாக வந்து நிற்கிறார் அந்த நபர்.

நெய்யிலே இப்பொழுது முந்திரியாக்கும் வறுபடுகிறது!

பெல்காமில்……….நிறைவேற்றி வரும் ஆசாரிய ஸேவைத்

திட்டங்களைப்பற்றி ஏகமாக ச்லாகிக்கிறார், பெரியவர். இடித்த

மேகமே இன்மழை கொட்டுகிறது.

அதில் ஒரு பணிக்கே இந்த ஆயிரம் ரூபாயைப்

பயன்படுத்துமாறு அருளாணை பிறக்கிறது.

“பணத்தை எப்படிக் கொண்டு போவே?”

“பத்ரமா எடுத்துண்டு போறேன்” என்கிறார் ‘பெல்காம்’

பொறுப்புணர்ச்சியுடன் நிறைவுடனும் அபார உலகியல்

அறிவுடனும் முனிவர் சொல்கிறார்: ” அதெல்லாம்

ஸரியில்லை தொலைஞ்சு போச்சுன்னா, நீயோ, அவனோ

( கொடுத்தவரோ) ஜவாப் இல்லை. நான்தான் ஜவாப்.

( கொடுத்தபிரமுகரைப் பார்த்து) ,நீ இந்தத்தொகைக்கு அவன்

பேரிலே ‘ட்ராஃப்ட்’ வாங்கிக் குடுத்துடு.”

அறம் என்ன, அன்பு என்ன, பொறுப்பு என்ன, ஸமயோசிதம்

என்ன என்பதற்கெல்லாம் அன்றன்றும் இப்படி அற்புத

முன்னுதாரணம் தருவதே முனிவரின் இயல்பாயிருக்கிறது.

– மஹா பெரியவாள் விருந்து, ரா.கணபதி அண்ணா

தும்பிக்கை ஆழ்வார் ….பெரியவா சொன்னது !!!!!

”மகா பெரியவா தனக்கு நெருக்கமா இருக்கறவாகிட்டயும, தன்னைச் சுத்தி இருக்கறவாகிட்டேயு&;்தான் கருணை காட்டுவார்னு நினைச்சா, அது தப்பு. அவருக்கு எப்பவுமே ஜனங்கமேல அபரிமிதமான அன்பு உண்டு. அவங்க கஷ்டப்படறதைப் பொறுத்துக்கவே மாட்டார். அவரால அதை சகிச்சுண்டு இருக்கமுடியாது!” என்ற பீடிகையுடன், பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்தார் பட்டு சாஸ்திரிகள்.

”திருமழிசைஆழ்வார் பிறந்த க்ஷேத்திரம் திருமழிசை. அந்த ஊருக்குப் பக்கத்திலேயே நூம்பல்னு ஒரு கிராமம் இருக்கு. இங்கே, மகா பெரியவா ஒருமுறை முகாமிட்டிருந்தார் .

ஒருநாள்… திருக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, பக்கத்திலேயே இருக்கிற பெருமாள் கோயிலுக்கு வந்தார் பெரியவா. அப்போ மணி 11 இருக்கும்; சுள்ளுனு வெயில் அடிச்சிண்டிருந்;. சூடுன்னா அப்படியொரு சூடு!

கோயில் வாசல்ல பெரிய கதவும், அதுலேயே சின்னதா ஒரு கதவும் இருக்கும். அதைத் திட்டிவாசல்னு சொல்லுவா! அந்த வழியா உள்ளே போன பெரியவா, மதிலை ஒட்டி கொஞ்சம் நிழல் இருந்த இடத்துல போய் அப்படியே சாய்ஞ்சு உட்கார்ந்துட்டார். அவருக்கு எதிரே அடியேன்; பெரியவா கேக்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிண்டு இருந்தேன்.

வெயில் நெருப்பா கொதிச்சிண்டு இருந்த இடத்துல நின்னுண்டிருந்தேன& . இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நின்னுண்டிருந்தா, காலே பொசுங்கிடும்போல இருந்துது. அப்படியரு சூடு! பெரியவாகிட்டே பேசிண்டிருந்த அதே நேரம், தரையோட சூடு பொறுக்கற வரைக்கும் ஒரு கால், அப்புறம் சட்டுன்னு அடுத்த கால்… இப்படியே கால்களை மாத்தி மாத்தி வெச்சு நின்னு சமாளிச்சுண்டிருந்;ேன்!

மகா பெரியவா, நம்மோட மனசுல என்ன இருக்குங்கறதையே தெரிஞ்சுக்கற மகான். எதிர்ல நிக்கற என்னோட நிலைமை அவருக்குத் தெரியாம இருக்குமா? சட்டுன்னு பேச்சை நிறுத்தின பெரியவா, ”வெளியில என்னவோ பேச்சு சத்தம் கேக்கற மாதிரி இருக்கு. என்னன்னு போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு!”ன்னார்.

விறுவிறுன்னு வெளியே வந்தேன். வாசல்ல நின்னு எட்டிப் பார்த்தேன். அங்கே ஒரு நூத்தம்பது, இருநூறு பேர் நின்னுண்டிருந்தா. எல்லாரும் மகா பெரியவாளை தரிசிக்கிறதுக்காகதான் நிக்கறாங்கன்னு தோணுச்சு. பெரியவாகிட்ட வந்து விவரத்தைச் சொன்னேன்.

ஆனா மகா பெரியவாளோ, ”அவா எதுக்கு வந்திருக்கா? ஸ்வாமி தரிசனத்துக்குதானே வந்திருக்கா?! சரியா கேட்டுண்டு வா!”ன்னு மறுபடியும் என்னை அனுப்பினார்.

‘அடடா… பெரியவா சொல்றதுபோல, வெளியில நிக்கறவா எல்லாரும் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கலாம், இல்லையா? நமக்குத் தோணாம போச்சே! பெரியவாளை தரிசனம் பண்ணத்தான் வந்திருக்கானு நானாவே எப்படி நினைச்சுக்கலாம்?’ என்று யோசிச்சபடி, வாசல் பக்கம் நகர்ந்தேன்.

”அப்படியே கையோட, அவாள்லாம் வெயில்ல நிக்கறாளா, நிழல்ல நிக்கறாளானு பார்த்துண்டு வா”ன்னார் பெரியவா.

‘நீ மட்டும்தான் கால் சூட்டோட என்கிட்ட பேசிண்டு நிக்கறதா நினைக்கறியோ?! உன்னைப்போல எத்தனை பேரு வெயில்ல கால்கடுக்க நின்னுண்டிருக்கான&; உனக்குத் தெரியவேணாமா?’ன்னுதா ;ன், மகா பெரியவா என்னை அனுப்பிவைச்ச மாதிரி தோணிச்சு எனக்கு.

ஜனங்க கூட்டமா நின்னுண்டிருந்த இடத்துக்கு வந்தேன். ”எல்லாரும் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கேளா… இல்ல, மகா பெரியவாளை தரிசிக்க வந்திருக்கேளா?”ன்னு ; கேட்டேன்.

”பெரியவாளை தரிசனம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்குறதுக்குதான் வந்திருக்கோம்”னு கோரஸா பதில் சொன்னா. ஓடி வந்து பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னேன்.

அவர் உடனே எல்லாரையும் உள்ளே அனுப்பிவைக்கச் சொன்னார். ”இங்கே மதிலோட நிழல் விழறது. எல்லாரும் அப்படியே நிழல்ல உட்கார்ந்துக்குங்& #2965;ோ”ன்னார்.

வெயிலின் உக்கிரத்தைத் தாங்கமுடியாம தவிச்ச என்னோட நிலைமையைக் கவனிச்ச அதே நேரம், வெளியே ஜனங்க நின்னுட்டிருக் கிறதையும், அவங்களும் வெயில்ல கஷ்டப் படுவாங்களேங்கிறதை& ம் பெரியவா யோசிச்சு, அவங்களை உடனே உள்ளே அனுப்பச் சொன்னார் பாருங்கோ, அதான் பெரியவாளோட பெருங்கருணை.

இதைக் கேட்கறதுக்கு ரொம்பச் சின்ன விஷயம்போலத் தெரியலாம். ஆனா, எந்த ஒரு சின்ன விஷயத்துலேயும் நுணுக்கமான பார்வையோடு, ஜனங்க மேல மகா பெரியவா காட்டின அன்பையும் அக்கறையையும்தான் நாம இங்கே முக்கியமா கவனிக்கணும்.

கூட்டத்தோடு பேசிண்டிருந்த நேரத்துல, ”நீ போய் கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு வா”ன்னு என்னை அனுப்பினார். பெரியவா உத்தரவு ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது உள் அர்த்தம் ஒண்ணு இருக்கும்.

நான் பிராகாரத்தை வலம் வந்தப்ப, அங்கே பிள்ளையார் சந்நிதியைப் பார்த்தேன். ஆச்சரியமும் குழப்பமுமா இருந்தது. தென்கலை நாமத்தோட காட்சி தந்தார் பிள்ளையார். பெருமாள் கோயில்ல பிள்ளையார் எப்படி? தலையைப் பிய்ச்சுண்டேன். யோசிக்க யோசிக்க, பதிலே கிடைக்கலை.

கோயிலைச் சுத்தி முடிச்சு, மகா பெரியவா எதிரே வந்து நின்னேன். என்னை ஒருகணம் உத்துப் பார்த்தார்.

”என்ன… தென்கலை நாமம் போட்ட பிள்ளையார் இருக்காரேனு பிரமிச்சுட்டியோ? வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரை ‘தும்பிக்கை ஆழ்வார்‘னு சொல்லுவா!”னு விளக்கம் சொல்லிட்டுச் சிரிச்சார் பெரியவா.

source::::kanchiperivaaforum
Natarajan
Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3023#ixzz2E39X7qYP

Kaveri Prasanna Maha Ganapathi Temple …

[image]

Thiruvaiaru is a ‘punya bhoomi’ with 5 rivers flowing through it ( Cauvery, Kudamuruti, Vadavaru, Vennaru and Vettaru ). About 9 km from here is Thirupoonthuruthi and a nearby village is ‘Nadukkaveri’.

It was the year 1942. The house of Chinnaswamy Iyer. He has a son, Ramachandran and his wife is Sita.They have been married for some time and longing for a child. They are of course devotees of Periyava.

The Maha Swamy visited the village and walked through the length of it with His sishyas and devotees.

At Chinnaswamy Iyer’s house, Sita was busy doing a ‘Kolam’. Periyava, walking at a brisk pace, suddenly stopped near Sita . She was completely taken by surprise and was speechless. With tears in her eyes she prostrated before Periyava. Periva asked her, “Where is your Raman?. Saying that He entered the house, looked around and opened a room (which was actually a dumping place) which had been kept closed for a long time, dusted off the floor with a ‘thundu’ and sat down.

By this time Raman and Sita were there. He looked at Raman and said ‘go get milk from the udders of the cow in a sombu’.

Raman did as was told. Then Periva did japa and told Rama, ‘go to Kudamuruti river, pour some milk in it and the rest on the banks of the river. Dig where you poured the milk and you will hit a basement. There, you build a temple for Vinayaga. You will live happily’. So saying, He got up and left.

Raman did as Periva said, and indeed found the basement and built a Ganesha temple there. Soon after, Sita delivered a male child and they named him ‘Ganesan’.

Well, the temple ? It still stands there in Nadukkaveri – ‘Kaveri Prasanna Maha Ganapthi temple’.

source: yahoo groups…and kanchi periva forum

Natarajan

Read more:http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3044#ixzz2E36AJPDt