” சில சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக…”

வாழ்க்கையில் நமக்குத் தெரிந்த சில விஷயங்களை நாம் மறந்து விடுவதுண்டு. அதனை நினைவு படுத்தும் வகையில்தான் இந்த கட்டுரை உங்களுக்காக.

நாம் செய்ய மறந்த, செய்யாத, கவனிக்காத விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

நாம் சிரிப்பதால் நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தி குறைகிறது. அதே சமயம், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகளின் பலம் கூடுகிறது.

6 வயதாகும் ஒரு குழந்தை சராசரியாக ஒரு நாளைக்கு 300 முறை சிரிக்குமாம். ஆனால் நம்மைப் போன்ற பெரியவர்கள் ஒரு நாளைக்கு 15 முதல் 100  முறை தான் சிரிக்கிறோமாம். சிலர் அது கூட சிரிக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஒவ்வொரு முறை நாம் தும்மும் போதும், நம் மூளையில் உள்ள ஒரு செல் உயிரிழக்கிறது.

நமது இடது நுரையீரல், வலது நுரையீரலை விட சிரியதாக அமைந்திருக்கும். அதற்குக் காரணம், இடது பக்கம், இதயத்துக்கு இடம் விடுவதற்காக.

மனிதனின் இறப்புக்குப் பிறகும், தலைமுடியும், நகமும் வளரும்.

உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்தாலும், உடலில் ரத்தம் பாயாத பகுதி ஒன்று உள்ளது. அதுதான் நமது கண்ணில் உள்ள விழிப்படலமான கார்னியா. இதற்கு தேவையான ஆக்ஸிஜனை நேரடியாக காற்றில் இருந்தே பெற்றுக் கொள்கிறது.

நமது உடலில் ஏதேனும் சிறிய காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் முன்பு எல்லாம் நமது எச்சிலைத் தடவுவார்கள். உண்மையிலேயே, நமது எச்சிலுக்கு காயத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவும், தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கவும் சக்தி உள்ளது.

நாம் சிரிக்கும் போது முகத்தில் உள்ள 14 தசைகள் வேலை செய்கின்றன. முகம் சுளிக்கும் போது 43 தசைகள் வேலை செய்கின்றன. எனவே எப்போதும் சிரித்துக் கொண்டிருப்போம்.

உடலில் ஏற்படும் வலிகளை நம் நரம்புகள் மூளைக்குக் கொண்டு செல்வதால் தான் நம்மால் வலியை உணர முடிகிறது. ஆனால் மூளையில் ஏற்படும் பிரச்னைகளை மூளையால் உணர முடியாது. மூளைக்கு ஏற்படும் வலியை மூளைக்கு சொல்லும் ஒரு விஷயம் இல்லவே இல்லை. அதனால் மூளையில் ஏற்படும் ஒரு பாதிப்பினால் நமக்கு உடனடியாக வலி ஏற்படுவதில்லை. மூளையில் ஏற்படும் காயங்கள் அல்லது பாதிப்பு எப்போது மூளையின் திசு, நரம்பு அல்லது ரத்த நாளங்களுக்கு பரவுகிறதோ அப்போதுதான் நமக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்படுகிறது.

மூளை என்பது 80% தண்ணீரைக் கொண்டதாகும். எனவே தண்ணீர் உடலை விட மூளைக்கு மிக அதிகமாகத் தேவைப்படும். எனவே உங்கள் உடலை தாகம் எடுக்கும் அளவுக்கு வைக்காமல் எப்போதும் தண்ணீர் அருந்திக் கொண்டே இருங்கள்.

உண்ணும் உணவுகளை செரிக்க சுரக்கப்படும் சுரப்பிகளில் இருந்து நமது குடல் பகுதியைக் காப்பதற்காக 3அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடலின் உட்பகுதியில் புதிய லேயர் உருவாகும்.

இதயத்தைப் பொருத்தவரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளதாகவே இருக்கிறது. ஆண்களை விட பெண்களின் இதயம் அதிக முறை துடிக்கிறது. மாரடைப்பு போன்ற நோய்களின் போது பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே முறையான சிகிச்சை பலனளிப்பதில்லை.

நாம் வயிற்றில் உள்ள பல முக்கிய உறுப்புகளை எடுத்து விட்டும் வாழ முடியும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அதாவது, வயிற்றில் உள்ள மண்ணீரல், 75 சதவீத கல்லீரல், 80 சதவீத பெருங்குடல், ஒரு சிறுநீரகம், ஒரு நுரையீரல் என ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு எடுத்து விட்டாலும் ஒரு மனிதன் வாழ முடியும் என்ற அளவுக்கு வந்து விட்டோம்.

ஆனால், இயற்கையோடு பொருந்திய வாழ்க்கை முறையே சுகாதாரமான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை என்பதை உணர்ந்து செயல்படுவோம்..

SOURCE::: http://www.dinamani.com

Natarajan

Jan 4 2015

Leave a comment