“மென் பொங்கல்'” வாழ்த்துக்கள் !!!
தகவல் அறிவியல்
புரட்சி யுகத்தில்
வலைதளம், வாட்ஸ்ஆப்பில்
வண்ணக்கோலம்,
பொங்கும் பானை,
துள்ளும் காளை
அள்ளும் ஆட்டம் கண்டு
‘மென் பொங்கலும்’
கொண்டாடுவோம்!
வெண் பொங்கலும்
சக்கரப் பொங்கலும்
பொங்கும் இந்த நேரம்
நல்ல நேரம் …
பொங்கட்டும் மகிழ்ச்சி
பொங்கி வழியட்டும் எங்கும்
மனித நேயம் !!!
இனிமேல் வேண்டாமே வன்முறை
இங்கும்… அங்கும் …எங்கும் !
தங்கட்டும் நன்முறை …நல்
நெறிமுறை … நம் நாட்டில்
இவ்வுலகில் …
இதுவே என் ” மென் பொங்கல் ” வாழ்த்தும்
விழைவும் இன்று !!!
நடராஜன்
Jan 15 2015
Concept Carved out out of Greeting Message from My friend Shri . Ramanathan A.V
Natarajan

Thank you Sir for your encouraging response. Pongal greetings and regards.
Thank u for the warm pongal greetings. Wish u all the same.