” சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவ மனையில் …”

இவர்கள்தான் மனித தெய்வங்கள் ! இறைவன் குடியிருக்கும்கோவில் , எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை !

download (7)

மொத்தமும் உருக்குலைந்து நிலையில் சேர்க்கப்பட்டான் அந்தச்சிறுவன்!அரசு மருத்துவமனையில் என்ன நடந்தது?

தனியார் மருத்துவமனைகள்தான் உசத்தி. எவ்வளவு மோசமானநிலையில் இருப்பவர்களையும் காப்பாற்றும் வசதிஅவர்களுக்குத்தான் இருக்கிறது. அரசு மருத்துவமனைகள்அத்தனையும் வேஸ்ட். அங்கு முறையான சிகிச்சையும்தரப்படுவதில்லை, மருத்துவர்களும் தகுதியானவர்கள் இல்லைஎன்று நினைப்பவரா நீங்கள்? படியுங்கள் இதை!

பிப்ரவரி மாதம் 18-ம் தேதி… காலை 8.30 மணி… திருவேற்காடுசுந்தரசோயபுரம்…

கட்டடத் தொழிலாளி ரமேஷ் – சொர்ணலட்சுமி தம்பதியின்இரண்டாவது மகன் கெளதம். வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த தனியார்பள்ளி வேன் ஒன்று, குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ரிவர்ஸ்எடுத்துத் திரும்பும்போது அதன் பின்பகுதியில்விளையாடிக்கொண்டு இருந்த கெளதம் மீது ஏறிவிட்டது. இரண்டுவயது ஆக இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளவன் அவன்.கெளதமை மீட்டு எழும்பூர் அரசு குழந்தைகள் நலமருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அவனை மருத்துவக்குழுவினர் பரிசோதித்துப் பார்த்தபோது, கெளதமின் நெஞ்சுப்பகுதியில் இருந்த எலும்புகள் பாதிக்கப்பட்டு, வயிற்றில் இருந்தகுடல் மேலேறி நெஞ்சுப் பகுதிக்கு வந்து இதயத்தைஅழுத்தியிருந்தது. மேலும் நுரையீரல், மண்ணீரல்சேதமடைந்திருப்பதும் பக்க விலா எலும்பு உடைந்து இருப்பதும்கண்டறியப்பட்டது. அதாவது மொத்த உடல் அமைப்பும் சிதைந்த

நிலையில்தான் கெளதம், அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டான்.

அடுத்து என்ன நடந்தது..?

பேராசிரியரும், குழந்தைகள் அவசரச் சிகிச்சைத் துறை தலைமைமருத்துவருமான இந்துமதி விவரிக்கிறார். ‘‘அந்தக் குழந்தையைமருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோதே மூச்சு, இதயத்துடிப்புஇல்லை. இப்படி ஆபத்தான நிலையில் இருந்த குழந்தைக்கு‘கோல்டன் ஹவர் மேனேஜ்மென்ட்’ என்ற சிகிச்சை மிகவும்முக்கியம். காயம் அடைந்தவரை அடிபட்ட நேரத்தில் இருந்துமருத்துவமனைக்குக் கொண்டுவருவதற்கான இடைப்பட்ட நேரமேஅது. அந்த நேரத்தில் முதலுதவி கொடுப்பது மிகவும் முக்கியம்.அதில்தான் ஓர் உயிர் பிழைப்பதும் இறப்பதும் இருக்கிறது. எனவே,மூன்று மணி நேரம் போராடி ரத்த ஓட்டத்தைச் சீராக்கினோம்.அதன்பின் இதயம் மெதுவாக இயங்க ஆரம்பித்ததும் அடுத்தகட்டசிகிச்சையை மேற்கொண்டோம். வேன் சக்கரம் மேலே ஏறியதால்குழந்தையின் நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதி கடுமையாகப்பாதிக்கப்பட்டிருந்தது. நுரையீரலையும், குடலையும் பிரிக்கும்

ஜவ்வுப்பகுதி கடுமையாக சேதமடைந்திருந்ததால் அதனைஅறுவைச்சிகிச்சையின் மூலம் அகற்றினோம். அதன்பின்கடுமையான கண்காணிப்பில் குழந்தையை வைத்தோம். இந்தநிலையில் குழந்தைக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற ஆய்வுகளைச்செய்ய முடியாது. மீறிச் செய்தால், அது குழந்தையின் உயிருக்கேஆபத்தாகிவிடும். எனவே, தேர்ந்த மருத்துவர்கள் குழுகுழந்தையைப் பரிசோதனை செய்தபோது குடல், இதயத்தைநோக்கி மேலே ஏறியிருந்தது.

அடுத்தகட்ட அறுவைச்சிகிச்சையில் மேலேறியிருந்த குடல் பகுதிவயிற்றுப் பகுதிக்குள் பொருத்தப்பட்டது.

அதிகமாகச்சேதமடைந்திருந்த மண்ணீரலை நீக்கிவிட எங்கள் மருத்துவர் குழுமுடிவு செய்தது.

மீண்டும் 8

மணி நேர அறுவைச்சிகிச்சை நடத்தப்பட்டு அந்தப் பகுதியையும்நீக்கினோம். 10 நாட்களுக்கும் மேலாக அவசர சிகிச்சைப் பிரிவில்வைக்கப்பட்டிருந்த குழந்தையை தீவிரமாகக் கண்காணித்தோம்.அதனைக் கண்காணிக்க தனியாக மருத்துவக்குழுஅமைக்கப்பட்டது. இப்படி அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சு,மயக்கவியல் என மொத்தம் 25-க்கும் மேற்பட்ட துறை மருத்துவர்கள்,தேர்ந்த செவிலியர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அந்தக்குழந்தை உயிர் பிழைத்துள்ளது. இது எங்களுக்குக் கிடைத்தமிகப்பெரிய வெற்றி!” என்று சொல்கிறார். கேட்கவே சந்தோஷமாகஇருந்தது.

அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் சிரத்தையோடும்கவனத்தோடும் செயல்பட்டால் எந்த உயிரையும் காப்பாற்ற முடியும்என்பதை நிரூபித்துள்ளார்கள் இந்த அரசு மருத்துவர்கள். இதேசிகிச்சையை ஒரு தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால்குறைந்தது 25 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகியிருக்கும்என்கிறார்கள்.

இந்தியாவிலேயே எழும்பூர் அரசு மருத்துவமனையில்தான்குழந்தைகளுக்கான அவசரச் சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது.இதற்கென தனியாக படிப்பும், மருத்துவப் பயிற்சியும் இருக்கிறது.இந்த அறுவைச் சிகிச்சை, தனியார் மருத்துவமனையில்செய்யப்பட்டிருந்தால் அதற்கான கட்டணம் அதிகம். அதோடுஇதற்கான உபகரணங்கள் அவர்களிடம் இருக்கிறதா? அந்தமருத்துவர்கள் அனுபவ ரீதியாக இந்தச் சிகிச்சைகளில்திறமையானவர்களா என்பதும் முக்கியம். முதலமைச்சரின்விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்தஅறுவைச்சிகிச்சைகள் நடத்தப்பட்டன. எனவே, ஏழ்மை நிலையில்இருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு மருத்துவச் செலவும்குறைந்தது. சென்ற மாதம் 30-ம் தேதி குழந்தை டிஸ்சார்ஜ்செய்யப்பட்டு பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டது. அப்போதுஅந்தக் குழந்தையின் முகம் மலர்ந்து இருந்தது.

அந்தப் பெற்றோரின் 

முகத்தில் இருந்த திருப்திதான் எங்களது மருத்துவச் சேவைக்குக்கிடைத்த வெகுமதி’’ என்றார் மருத்துவர் இந்துமதி பெருமிதத்துடன்.

அந்தக் குழந்தையின் தாய் சொர்ணலட்சுமியிடம் பேசினோம். ‘‘விபத்து நடந்தவுடனே என்ன செய்யறதுனே தெரியலை.அங்கிருந்தவங்க 108 ஆம்புலன்ஸுக்கு போன் செஞ்சாங்க. அப்பவேகுழந்தைக்குப் பேச்சு, மூச்சு இல்லை. இந்தக் குழந்தைகள்ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்ததுக்கு அப்புறம் அவங்க செஞ்சட்ரீட்மென்ட்னாலதான் குழந்தைக்கு மூச்சு இருந்ததே தெரிஞ்சது.நிறைய டாக்டருங்க வந்தாங்க. ஆபரேஷன் பண்ணுனாங்க. இப்போஎன் குழந்தை நல்லபடியா இருக்கான்.

அதுக்குக் காரணமான எல்லா டாக்டருங்களுக்கும் நன்றி. காப்பீட்டுத்திட்டத்துல பண்ணுனதுனால செலவு கொஞ்சம் கம்மியாகி இருக்கு.இதுவே, தனியார் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தா  பல லட்சம்வரைக்கும் செலவாகி இருக்குமாம். அவ்ளோ வசதி எல்லாம்எங்களுக்கு ஆண்டவன் கொடுக்கல. ஆனா, என் மகன திரும்பக்கொடுத்துட்டாரு. அதுவே போதும்’’ என்றார் கண்ணீரோடு.
அவரது கணவர் ரமேஷ், ‘‘இப்போ வரைக்கும் ஆபரேஷன் நடந்தஇடத்துல வலி இருக்கும்போல. அதனால அந்தப் பகுதியை காட்டிஅழுதுட்டே இருக்கான். நோய் எதிர்ப்புச் சக்தி குறையாம இருக்கஊசி போட சொல்லியிருக்காங்க. அந்தத் தனியார் பள்ளி தரப்புலஇருந்து எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க.இப்போ ஒவ்வொரு வாரமும் செக்கப் வர சொல்லிருக்காங்க. இடதுபக்க கிட்னி பாதிச்சு இருக்காம். அத எடுக்கவேண்டியதாகூடஇருக்கலாம்னு சொல்லி இருக்காங்க. ஆனா, அவன் இப்போநல்லபடியா இருக்கான்’’ என்றார்.

இந்த மருத்துவர்கள்போல அனைத்து அரசு மருத்துவர்களும்தங்களின் பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால் எல்லோருடையமனங்களும் மகிழ்ச்சியால் நிறையும். நடக்குமா?

– மா.அ.மோகன் பிரபாகரன்
படங்கள்: எம்.உசேன்

‘‘மருத்துவத் துறையின் மைல்கல்!”

கெளதமுக்கு தரப்பட்ட சிகிச்சை பற்றி  அனுபவம் வாய்ந்த தனியார்மருத்துவர் ஒருவரிடம் பேசினோம். ‘‘ஒன்றரை வயது குழந்தைக்குஇதுபோன்ற சிகிச்சைகள் அளிக்க வேண்டுமானால், அதற்கு கூட்டுமுயற்சியும் அனுபவம் வாய்ந்த டாக்டர்களும் முக்கியம். எல்லாமருத்துவமனைகளிலும் அதற்கான வசதிகள் இருக்காது. ஏன்இங்கேகூட இரண்டு தனியார் மருத்துவமனைகளில்தான்அதற்கான வசதிகள் உண்டு. ஆனால், அங்கு போனால் ஆகும்செலவுகள் உங்களை வாய் பிளக்க வைக்கும். உதாரணமாகமண்ணீரலை அகற்ற லட்சக்கணக்கிலும், அதற்கான பரிசோதனைசெய்ய ஆயிரக்கணக்கிலும் செலவாகும். முக்கியமாக வயிற்றுப்பகுதியில் ஜவ்வுப்பகுதியை அகற்ற அதற்கு அனுபவம் வாய்ந்தடாக்டர்கள் தேவை. மருந்து, மாத்திரை, டாக்டர் ஃபீஸ், ஆபரேஷன்தியேட்டர் வாடகை என அந்தத் தொகையை நடுத்தர மக்கள்கூட கட்டஇயலாது. சில மருத்துவர்களின் தவறான நடவடிக்கைகள் மட்டும்

இல்லாமல் இருந்தால் அரசு மருத்துவமனைகளை சேவைத் தரத்தில்வீழ்த்திவிட முடியாது’’ என்றார்.

நன்றி :- ,ஜுனியர் விகடன், 10-05-2015

 Natarajan

Leave a comment