“மனித நேயம்”
…………..
இயற்கை அன்னையின் சீற்றத்தில் பொங்கியது
ஆறும் , ஏரியும் மட்டுமா ?
மனித நேயமும் சேர்ந்துதானே !
பிரளய நேரத்தில் பிற மொழி மக்களும் நெருங்கிய
உறவாக மாறி தங்கள் கரம் நீட்டி பல இன்னுயிர்
காக்க ….காரணம்… இன்னமும் இம்மண்ணில் வற்றாமல்
ஊறும் மனித நேயம் !
இது எம் மதம் அது உம் மதம் என பேதம் பார்க்காமல்
எம்மதமும் சம்மதம் …”அதுவே என் வேதம் இனி” என
நம்மை சொல்ல வைத்ததும் … நம் உயிர் காத்த வேற்று மத
மனிதநேயம் !
வீடிழந்த மக்களை தேடி அழைத்து நம் வீட்டில் தங்க
இடம் கொடுத்து உன்ன உணவும் நாம் கொடுத்த அந்த தருணம்
நம்முள் தூங்கி விட்ட மனித நேயத்தை நாமே தட்டி எழுப்ப ,
இயற்கை நமக்கு கொடுத்த ஒரு அரிய வாய்ப்பு !
இயற்கையின் சீற்றத்தில் பொங்கி வழிந்த இந்த மனித நேயம்
இனி என்றும்
மங்காமல்,வற்றாமல் ஒரு ஜீவ நதியாகவே தங்கி ஓடவேண்டும் நம்முள்!
This Kavithai of mine has been published in Dinamani as Vaasagar Kavithai under the caption ” Kavimani “…. in http://www.dinamani .com on 14 dec 2015
Natarajan