பிறக்கிறது புது ஆண்டு… வரும் ஆண்டு சிறப்பாக , செழிப்பாக
மாறட்டும், நம் யாவருக்கும் !
நாமும் பிறக்கவேண்டும் புதிதாக , புத்தாண்டுடன் சேர்ந்து !
மறு பிறவி விவாதம் ஒரு விடை இல்லா கேள்வி …மனிதப் பிறவி
நமக்கு ஒரு இரவு முழுக்க உறக்கம் ….காலையில் கண் விழிப்பு..
இப்படி நித்தம் நித்தம் காலையில் நாம் எடுப்பது ஒரு புதுப் பிறவியே !
மொத்தத்தில் இதுவே நமக்கு மறு பிறவி !
எதிர் வரும் ஆண்டில் அல்லன நீக்கி நல்லன கொண்டு நம்
பயணம் நாம் தொடர்ந்தால்
மறு பிறவி நித்தமும் காணும் நாம் நிச்சயம் பிறப்போம்
புதிதாக , புது ஆண்டுடன் சேர்ந்து ஒரு தனிப் பிறவியாக !!!
Natarajan
30 Dec 2015