My Tamil Kavithai in Dinamani Kavithaimani on 24th oct 2016
ஜன்னல் நிலா
…………..
எனக்கு என் தாத்தா காட்டிய “ஜன்னல்” நிலா….நான் இன்று
காட்டுகிறேன் என் பேரனுக்கு !….அதே ஜன்னல் … அதே நிலா !
ஜன்னல் மட்டும் உரு மாறி விட்டது ..காலத்தின் வேகத்தில் ! என்னைப் போலவே !
நிலவு தெரியாத நேரம் என் மடிக் கணிணி ” ஜன்னலில் ” காட்டுகிறேன்
அந்த நிலவை என் பேரனுக்கு …” ஜன்னல் நிலவாக “
நிலவு பார்த்து சலித்த என் பேரன் பார்க்க வேண்டும் நாம் வசிக்கும்
பூமியை ஜன்னல் வழி என்றான் !
நம் பூமியையும் காட்டினேன் அவனுக்கு கணினி “ஜன்னல் ” வழியே !
பூமியிலிருந்து நிலவு பார்ப்பது போல் , நிலவின் ஜன்னல் வழி நம் பூமி
பார்க்க வேண்டுமாம் என் பேரனுக்கு !
என் காலத்தில் என் மக்கள் கால் வைத்தார் நிலவில் ! உன் காலத்தில் நீ நிலவில்
வீடு கட்டி உன் நிலவு வீட்டு ஜன்னல் வழியே கட்டாயம் பார்ப்பாய் நம் பூமியை
பேராண்டி !!!…இது நடக்கும் நிச்சயம் …பார் நீ !
நான் கட்டும் நிலவு வீட்டுக்கு நீயும் வந்து விடு தாத்தா …நாம்
இரண்டு பேரும் சேர்ந்தே பூமியைப் பார்க்கலாம் தாத்தா என் நிலவு வீட்டு ஜன்னல்
வழியே …நீ தனியாக என்ன செய்யப் போகிறாய் பூமியில் ?…என்று கேட்கும்
என் பேரனின் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல ???!!!
Natarajan in http://www.dinamani.com on 24th Oct 2016