எதிர்காலம்
————-
நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்து இவ்வுலகு …சொன்னான்
வள்ளுவன் ! வள்ளுவன் வாக்கையும் வென்று
நான் காண்பேன் கதிரவனை நாளை காலை
என்னும் நம்பிக்கை நம் எதிர்கால கனவுக்கு
நாம் போடும் அடித்தளம் …இன்று இல்லாவிட்டால்
என்ன …”நாளை நமதே” என்னும் நம் நம்பிக்கை
மாற்றும் நம் எதிர்காலத்தை ஒரு வசந்த காலமாக !
புரியாத புதிர் அல்ல நம் எதிர்காலம் …ராசி
பலன் சொல்வதும் அல்ல நம் எதிர்காலம் !
நம் எதிர்காலம் நம் கையில்தான் ..கை ரேகையில் அல்ல !
“நாளை நமதே ” என்னும் நம்பிக்கை நனவாக
தேவை இன்று நம் கடின உழைப்பு …
உழைப்பு …விடா முயற்சி ..தன்னம்பிக்கை
இம்மூன்றும் அருமையான வித்தாகும் ஒரு
முத்தான எதிர் கால மலர் பூங்கா பூத்துக் குலுங்க!
எதிர்காலம் நமக்கு ஒரு வசந்த காலமாக மலரட்டும் !
எதிர் மறை நினைவும் உணர்வும் நம்மை விட்டு விலகட்டும் !
Natarajan