வாரம் ஒரு கவிதை ….” தாக்குங்கள் எங்களை ….” !!!

தாக்குங்கள் எங்களை ….
++++++++++++++++++++++++
படையெடுத்து வாருங்கள் …அணிவகுத்து
வாருங்கள்  எங்களைத்  தாக்க !
குறி பார்த்து தாக்குங்கள் எங்களை !
காத்திருக்கிறோம் நாங்கள் !
மிரண்டு ஓடி ஒளிய மாட்டோம் நாங்க !
திரண்டு வாருங்கள் கருமேகங்களே
“குண்டு ”  மழை  பொழிய !
மண்டியிட்டு உங்களை வணங்குவோம்
உங்கள் “குண்டு ” மழை எங்களை
முத்தமிடும் நேரம் !
தாக்குங்கள் எங்களை சீக்கிரம் !
K .நடராஜன்
22/06/2019

வாரம் ஒரு கவிதை …. தண்ணீர் …2

தண்ணீர்
+++++++++
தண்ணீர் விட்டு வளர்த்தேன்  என் வீட்டு
தோட்ட செடிகளை ..என் வீட்டுக்  குழந்தையை
சோறு ஊட்டி வளர்ப்பது போல !
வாடி நிக்குது என் வீட்டு செடிகள் இன்று!
தேடி தவிக்குது தண்ணீர் தண்ணீர் என்று !
வாடிய செடி கொடி பார்த்து கண்ணீர்
வடிக்கிறேன்  நான் ! தண்ணீர் கொடுக்க
முடியவில்லையே  என் ” வீட்டுக் குழந்தைக்கு ” !
தண்ணீர் தண்ணீர் என்று நானே அலைகிறேன்
இன்று ! ஆனால் என் தாகம்  தணிக்காதே என்
கண்ணின் நீர் ! வாடும் என் வீட்டு செடி கொடிக்கு
அதன் பசி நீக்கும் உணவாக மாற வேண்டும் என்
கண்ணீர் !… வாடிய  செடி துளிர்க்க
வேண்டும் மீண்டும்  என் கண்ணின்
நீரால்  என் கண் முன்னே !
K.Natarajan
20/06/2019

வாரம் ஒரு கவிதை ….” தண்ணீர் “

தண்ணீர் …
+++++++++++++
தண்ணீர் …தண்ணீர்  நாடகமும்
திரைப்படமும்  பார்த்த நேரம் புரியவில்லை
தண்ணீரின் அருமை பெருமை !
திரை இயக்கத்தின் பெருமை பேசி
அப்போதே மறந்து விட்டோம் தண்ணீரின் அருமை !
தண்ணீர் தண்ணீர் என்று கலங்கினான்
இந்த மண்ணின் விவசாயி வாடிய அவன்
பயிர்  பார்த்து ….அப்போதும் தெரியவில்லை
நகரவாசி  நமக்கு  தண்ணீரின் அருமை !
காற்று மட்டும் வரும் தண்ணீர் குழாய் ,
வறண்டு கிடைக்கும் குளம் குட்டை ஏரி,
அரண்டு மிரண்டு இருக்கு நம் நகரமே இன்று !
“தண்ணீர் இல்லை எங்க வீட்டிலும்  ” என்னும்
ஒரே ஓரு வார்த்தையில் இணைந்துவிட்டோம் நகர
வாசிகள் அனைவரும் இன்று! சாதி ,மத ,மொழி
இனம் பேதம் ஏதும் இல்லை இந்த ” இணைப்புக்கு ” !
“தண்ணீர் இல்லை” என்னும் விதியால் இணைந்த
நாம்  சாதி ,மதம் ,  மொழி பேதம் பாராமல்
மனதாலும் இணைவது எப்போது ?
K.Natarajan
in http://www.dinamani.com dated 19/06/2019

வாரம் ஒரு கவிதை …” கண்ணீர் மாறட்டும் தண்ணீராக …”

கண்ணீர்  மாறட்டும் தண்ணீராக …
++++++++++++++++++++++++++++++++
தண்ணீர் விட்டு வளர்த்தேன்  என் வீட்டு
தோட்ட செடிகளை ..என் வீட்டுக்  குழந்தையை
சோறு ஊட்டி வளர்ப்பது போல !
வாடி நிக்குது என் வீட்டு செடிகள் இன்று!
தேடி தவிக்குது தண்ணீர் தண்ணீர் என்று !
வாடிய செடி கொடி பார்த்து கண்ணீர்
வடிக்கிறேன்  நான் ! தண்ணீர் கொடுக்க
முடியவில்லையே  என் ” வீட்டுக் குழந்தைக்கு ” !
தண்ணீர் தண்ணீர் என்று நானே அலைகிறேன்
இன்று ! ஆனால் என் தாகம்  தணிக்காதே என்
கண்ணின் நீர் ! வாடும் என் வீட்டு செடி கொடியாவது
பசியாறட்டும்  என் கண்ணீரால் !!!  மாற வேண்டும் என்
கண்ணீர்  தண்ணீராக … வாடிய  என் செடி துளிர்க்க
வேண்டும்  மீண்டும் … என் கண்ணின்
நீரால்  என் கண் முன்னே !
K .நடராஜன்
19/06/2019