Message For The Day….Call Upon God in Your Own Heart !!!!

You need not even read the Gita or the Upanishads. You will hear a Gita specially designed for you if you call upon the Lord in your own heart. He is there, installed as your own Charioteer. Ask Him and He will answer. Have the Form of the Lord before you when you sit quietly in a place for meditation and have His Name – that is, any Name when you do japam (repetition of the divine Name). If you do japam, without a Form before you, who is to give the answer? You cannot be talking all the time to yourself. The Form of the Lord you are calling will hear and respond to you. All agitations must cease one day, is it not? Meditation of the Form of the Lord and repetition of His Name are the only means for your mental agitations to cease.

Source:::: Swami Sathya Sai”s Discourses

Natarajan

துளசி மாலை ….மகாபெரியவருக்கு அது பக்தி மாலை !!!

சாதாரணமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். வயது பன்னிரண்டு அல்லது பதிமூன்று இருக்கலாம். ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருக்கலாம்.

மாநிறம். எண்ணெய் அதிகம் கண்டிராத தலை. தடிமனான அரை டிராயர்; கசங்கிப் போன மேல்சட்டை… அரை டிராயரும் மேல்சட்டையும் என்ன நிறம் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் எவரும் சொல்லி விடமுடியாது. அழுக்கேறிப் போயிருந்தாலும் அந்த ஆடைகள் அவ்வப்போது துவைத்துத் தான் அணியப் படுகின்றன என்பதை அதைப் பார்க்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும். நெற்றியில் ஒரு வளைந்த கீற்றாக – முறையே இல்லாமல் ஏனோ தானோ என்று விபூதி பூசப்பட்டிருந்தது. ஒருவேளை இங்கு கிளம்பி வருகிற அவசரத்தில் அவனது அம்மா இட்டு விட்டிருக்கலாம்.

தேர்வு காலங்களில் கிராமத்தில் இருப்பவர்கள் தெருமுனையில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய், ஒரு சின்ன கற்பூரத்தை ஏற்றி வைத்து, பேனாவை பிள்ளையார் பாதத்தில் வைத்து வழிபட்டு விட்டுப் பரிட்சை எழுதப் போவார்கள். இது ஒரு விதமான நம்பிக்கை. அதாவது இறைவன் அருளோடு தேர்வு எழுதப் போகிறோம் என்கிற ஒரு தைரியம் மாணவர்களுக்கு வரும்.

அது போல் இந்த சிறுவன் காஞ்சிபுரத்தில் வசிப்பவன் என்பதாலும், மஹா பெரியவாளின் சாந்நித்யம் பற்றி யாரோ சொல்ல – அவன் தகுதிக்கு ஏதோ கேள்விப்பட்டிருந்& #2980;ாலும் இன்று தேர்வு எழுதப் போகும் முன் ஸ்ரீமடத்துக்கே வந்து விட்டான் போலிருக்கிறது.

விடிகாலை நேரத்தில் விஸ்வரூபதரிசனம் காண வந்திருந்த பக்தர்கள் பலரும் இன்னமும் நகராமல் அங்கேயே நின்றிருந்தபடி பெரியவா தரிசனத்தில் திளைத்திருந்தார்க& #2995;். இதைத் தவிர, காலை வேளையில் ஏராளமான பக்தர்கள் வேறு ஸ்ரீமடத்தில் குவிந்து விட்டிருந்தார்கள். நாம பஜனைகளும் சங்கர கோஷமுமாக ஸ்ரீமடமே பக்தி மணம் கமழ… அருள் நிரம்பிக் காணப்பட்டது.

இவ்வளவு கூட்டம் பெரியவா தரிசனத்திற்காகக் காத்து நின்றாலும், சிறுவனாகப் பட்டவன் வரிசையில் நின்று கொண்டிருக்கும் எந்த ஒரு பக்தரைப் பற்றியும் கவலைப் படாமல், ராஜபாட்டை போல் விறுவிறுவென்று நடந்து மஹா பெரியவாளின் சந்நிதியை நெருங்கினான்.

முகத்தில் உற்சாகம் கொப்பளிக்க, பெரியவாளைப் பார்த்தபடியே நின்றான். அவனை எவரும் தடுக்கவில்லை. ஏதும் கேள்வி கேட்கவில்லை. காரணம் – அந்தச் சிறுவனின் ஆர்வத்தையும் பரபரப்பையும் பார்த்த பின் இயல்பான அந்த பக்திக்குத் தடை போட எவருக்கும் விருப்பமில்லை.

“மடத்துக்குப் போய் சாமியைக் கும்பிடணும்னா, அவருக்குத் தோதா ஏதாவது எடுத்துட்டுப் போகணும்” என்று அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ…. தெரியவில்லை. தன் கையில் தொடுத்த ஒரு மாலையை வைத்திருந்தான். அந்த மாலையைப் பார்த்த பல பக்தர்களும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளைத் தங்களுக்குள் வெளிப்படுத்திக்கொ& #2979;்டு விமர்சித்துப் பேசினார்கள்.

சிலர் வியந்தார்கள்; சிலர் வெளியே ஏதும் பேச முடியாமல் தங்களுக்குள் கேலியாகச் சிரித்துக் கொண்டார்கள்.

பலரது விமரிசனத்துக்கும் கேலிச் சிரிப்புக்கும் உள்ளான அந்த மாலையில் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?

அது – துளசி மாலை!

அதுவும் துளசியை அடர்த்தியாக – கொத்துக் கொத்தாக வைத்துக் கட்டப்பட்ட மாலை இல்லை. தனித் தனி துளசி இலைகளைக் கோணாமாணா என்று – ஒரு முறை இல்லாமல் கோர்த்துத் தொடுக்கப்பட்டிருந& #3021;த மாலை.

ஒருவேளை அடுத்தடுத்து துளசி இலைகளை நெருக்கமாக வைத்துத் தொடுத்திருந்தால் அதில் இடைவெளி என்பதே தெரியாமல் போயிருக்கும். ஆனால் இந்தச் சிறுவன் தொடுத்துக் கொண்டு வந்திருந்த துளசி மாலையில் இடைவெளி அதிகம் தெரிந்தது. அதனால் பார்த்தவுடன் ’மாலை’ என்று சொல்வதற்கு எவருக்கும் வாய் வராது.

இதில் இன்னொரு அலங்கோலமும் வெளிப்பட்டது. அதாவது இறைவழிபாட்டிற்குக& #3021; கொண்டு செல்கிற துளசியைப் பெரும்பாலும் வாழைநாரில்தான் கட்டுவார்கள். ஆனால் இந்தச் சிறுவன் ஒரு சணலில் இந்த ’மாலை’யைக் கட்டி எடுத்து வந்திருந்தான். (வீட்டில் ஏதாவது பொருளைக் கட்டி வைத்திருந்த மூட்டையில் இருந்த சணலை மட்டும் பிரித்து எடுத்திருப்பான் போலிருக்கிறது). இது போன்ற காரணங்களால் சிறுவன் எடுத்து வந்திருந்த துளசி மாலையைப் பார்த்து சிலர் சிரித்தார்கள்.
ஆனால் பக்குவப்பட்ட சிலர், ”இந்த வயதில் இந்த அளவுக்கு பெரியவாளிடம் ஒரு பக்தி இருக்கிறதே… வெறுங்கையோடு வரக்கூடாது என்கிற நாசூக்கு தெரிந்திருக்கிறதே” என்று நெகிழ்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில் பெரியவாளின் திருப்பார்வை அவன் மேல் விழுந்தது. ஒரு புன்னகையை உதட்டோரம் தவழ விட்டு, ”அருகில் வா” என்பது போல் அவனுக்கு ஜாடை காட்டினார்.
விறுவிறுவென்று நடந்து முன்னுக்கு வந்தான்.

”என்ன?” என்பது போல் ஆச்சரியமான முகத்துடன் தலையை மேலும் கீழும் அசைத்து ரசனையாகக் கேட்டது அந்தப் பரப்ரம்மம்.

சிறுவன் சந்தோஷமானான். தனக்கு உரிய அங்கீகாரம் இந்த சந்நிதானத்தில் கிடைத்துவிட்டது என்பதாக மகிழ்ந்தான். கையில் துளசி மாலையோடு பெரியவாளை இன்னும் நெருங்கி, அவரின் திருவடி அருகே இதை சமர்ப்பித்தான். பெரியவாளின் கைங்கர்யப் பணிக்காக அங்கே இருந்த சீடர் ஒருவர் அந்த துளசி மாலையை அங்கிருந்து எடுத்து வேறு இடத்தில் சேர்ப்பிப்பதற்காக& #2965;் குனிந்தார்.

சற்றே நிமிர்ந்து அந்த சீடரைப் பார்த்த பெரியவா, ’வேண்டாம்’ என்பது போல் வலது ஆட்காட்டி விரலை இடப்புறமும் வலப்புறமும் அசைத்து சமிக்ஞை செய்தார். சீடரையும் தள்ளி நிற்கச் சொன்னார். அந்த மாலையைத் தான் அகற்றுவதைப் பெரியவா விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சீடன், நின்ற வாக்கிலேயே அப்படியே ரிவர்ஸில் நகர்ந்து கொண்டான்.

”எக்ஸாம் இன்னிக்கு இருக்கோ?” – சிறுவனைப் பார்த்துப் பெரியவா கேட்டார்.

இவ்வளவு பேர் கூடி இருக்கும் இடத்தில் தன்னைப் பார்த்துப் பெரியவா ஒரு கேள்வி கேட்கிறார் என்பது அந்தச் சிறுவனின் முகத்தில் ஏராளமான சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது. தவிர, தனக்குத் தேர்வு இருப்பதைப் பெரியவா எப்படிக் கண்டு பிடித்தார் என்கிற ஆச்சரியமும் அவன் முகத்தில். பிரகாசமானவன், “ஆமா சாமி, இன்னைக்கு சயின்ஸ்” என்று கூடுதல் தகவலையும் சொன்னான்.

”தொளசி மாலையை எனக்காகக் கொண்டு வந்தியோ?” என்று அவனைப் பார்த்துக் கேட்டு, அந்த மாலையைக் கையில் எடுத்தார்.

இப்படியும் அப்படியும் அதை ஆராய்ந்தார். தான் காணிக்கையாக எடுத்து வந்திருந்த மாலையைப் பெரியவா தன் கையால் எடுத்து விட்டார் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அச்சிறுவனுக்குப் பெருமை பிடிபடவில்லை…”எங்க வீட்டுலேயே துளசிச் செடி இருக்கு… அதுலேர்ந்து நானே பறிச்சுக் கட்டினேன்.”
அந்தப் பரப்ரம்மம் அவனைப் பார்த்துச் சிரித்தது. கூடி இருந்த திரளான பக்தர்களும் அடுத்துப் பெரியவா என்ன செய்யப் போகிறார் என்பதைக் கவனிப்பதில் ஆர்வமானார்கள். ஒரு க்ஷண நேரத்தில் இந்தச் சிறுவன் பெரியவரின் கவனத்தை இப்படிக் கவர்ந்து விடுவான் என்று அங்கிருந்த எவரும் எதிர் பார்க்கவில்லை. சிறுவன் மேல் பெரியவா செலுத்தும் கரிசனத்தைக் கண்டு, சீடர்களும் மடத்துச் சிப்பந்திகளும் கூட அதிசயப் பட்டுப் போனார்கள்.

அந்தத் துளசி மாலையை தன் கையில் எடுத்துக் கொண்டார். வலக் கரத்தால் அந்த மாலையை எடுத்துத் தன் தலைக்கு மேல் வைத்தார். என்ன புண்ணியம் செய்ததோ அந்தத் துளசி மாலை! பெரியவாளின் தலையில் அமர்ந்து கொண்டது. துளசி மாலை பெரியவா சிரசில் அப்படியே நின்றது. சுற்றிலும் நின்றிருந்த தன் பக்தர்களை இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தார் பெரியவர். எல்லாப் பக்கமும் திரும்பிப் பார்க்கிற வேளையில் அவர் முகத்தில் ஒரு புன்னகை ததும்பியது. ”இந்தக் கோலத்தில் நான் எப்படி இருக்கேன்? இந்த மாலை நன்னா இருக்கா?” என்று பெரியவா கேட்பதாக எல்லோருக்கும் பட்டது.

பெரியவாளுக்கு சமர்ப்பிக்க வேண்டி பக்தர்கள் வாங்கி வந்திருந்த எத்தனையோ மலர் மாலைகள் அவருக்கு முன்னால் – சற்றும் மணம் குறையாமல் – மலை போல் குவிந்திருந்தன. ரோஜா, மல்லிகை, சம்பங்கி என விதம் விதமான மலர்களைக் கொண்டு மிகவும் நேர்த்தியாகத் தொடுக்கப்பட்டிருந& #3021;த மாலைகள் அவை. ஆனால், அனைத்தையும் விட்டு விட்டு, ஒரு ஒழுங்குமுறையே இல்லாத, ஒரு மாலைக்கு உரிய எந்த விதமான இலக்கணத்திலும் சேராத, சாதாரண சிறுவன் கொண்டு வந்த துளசி மாலை ஏனோ பெரியவாளுக்குப் பிடித்து விட்டது. தானே அதை ஸ்வீகரித்துக் கொண்டார்.

’இதுதான் பக்தி’ என்பதை அங்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் உணர்த்தும் விதத்தில், ‘இந்த மாலையை அணிந்திருக்கிற நான் எப்படி இருக்கேன்?’ என்பதாக அனைவரையும் பார்த்தாரோ? எத்தனையோ மலர் மாலைகள் இருந்தும் அன்பின் மிகுதியால் – ஆர்வத்தின் வெளிப்பாடாகத் தொடுத்துக் கொண்டு வரப்பட்ட இந்தத் துளசி மாலை என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது என்பதைப் பகட்டான பக்தர்களுக்கு உணர்த்துகிறாரோ?

பக்தி என்றால் என்ன என்பதைப் பற்றிப் பெரிதும் படிக்காத, கேட்காத இந்தச் சிறுவன் தன் செய்கையால் அங்கிருந்த அனைவருக்கும் பெரியவரின் அருட்செயலின் மூலம் உணரச் செய்து விட்டான். செல்வச் செழிப்பில் திளைக்கும் எத்தனையோ பக்தர்கள் குவிந்திருக்கும் இந்த சந்நிதானத்தில் தான் அன்புடன் எடுத்து வந்திருக்கும் ஒரு துளசி மாலைக்கு இவ்வளவு மரியாதையா என்று சிறுவன் திகைத்துப் போனான்.

அவன் விழிகளில் லேசாக ஈரம் ததும்பியது. சரேலென்று தரையில் விழுந்து பெரியவாளை நமஸ்கரித்தான். எழுந்து நின்றான். சுமார் பத்து நிமிடங்கள் கழித்துத் தான் அந்தத் துளசி மாலையைத் தன் தலையிலிருந்து எடுத்துக் கீழே வைத்தார் பெரியவா. புன்னகை அரும்ப அந்த சிறுவனை ஆசீர்வதித்தார். கல்கண்டும் குங்குமமும் கொடுத்தார்.

தன் தலையில் வைத்திருந்த மாலையை அருட் பிரசாதமாக அவனிடமே கொடுத்தார். அதன் அருமை தெரிந்தோ தெரியாமலோ பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான். எந்த ஒரு மாலையைப் பார்த்துப் பரிகசித்துத் தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டார்களோ, அந்த பக்தர்கள் இப்போது நெகிழ்ந்து போனார்கள். அவர்களின் பரிகசிப்புக்கு உள்ளான மாலை இப்போது புனிதம் பெற்று விட்டது.

மாலையைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் அந்தச் சிறுவனிடம் இருந்து, “குழந்தே, அதில் இருந்து ரெண்டு துளசி தளங்களைப் பிய்ச்சு எங்ககிட்ட தாயேன். அது பெரியவா பிரசாதம்” என்று கெஞ்சும் குரலில் கேட்டனர்.

அப்படிக் கேட்டவர்களுக்கெல்& #2994;ாம் துளசி இலைகளைப் பிய்த்துக் கொடுத்துவிட்டு, “எக்ஸாமுக்கு டயமாச்சு. ஸ்கூல்ல பெல் அடிச்சுடுவாங்க..” என்று சொல்லி விட்டான் ஒரே ஓட்டம்! இன்று சயின்ஸ் தேர்வாயிற்றே!

source::::www.periva.proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3779#ixzz2Ma6BfsKC

Let The Biscuits Get Burnt….But Not Your Relationship !!!

– Biscuits

When I was a kid, my mom liked to make breakfast, food for dinner every now and then. And I remember one night in particular when she had made breakfast after a long, hard day at work.

On that evening so long ago, my mom placed a plate of eggs, sausage and extremely burned biscuits in front of my dad. I remember waiting to see if anyone noticed! Yet all my dad did was reach for his biscuit, smile at my mom and ask me how my day was at school. I don’t remember what I told him that night, but I do remember watching him smear butter and jelly on that ugly burned biscuit. He ate every bite of that thing… never made a fuss nor uttered a word about it!

When I got up from the table that evening, I remember hearing my mom apologize to my dad for burning the biscuits. And I’ll never forget what he
said: “Honey, I love burned biscuits every now and then.”

Later that night, I went to kiss Daddy good night and I asked him if he really liked his biscuits burned. He wrapped me in his arms and said, “Your Momma put in a hard day at work today and she’s real tired. And besides – a little burned biscuit never hurt anyone!”

As I’ve grown older, I’ve thought about that many times. Life is full of imperfect things and imperfect people. I’m not the best at anything, and I forget birthdays and anniversaries just like everyone else. But what I’ve learned over the years is that learning to accept each other’s faults, and choosing to celebrate each other’s differences, is one of the most important keys to creating a healthy, growing, and lasting relationship.

And that’s my prayer for you today…that you will learn to take the good, the bad, and the ugly parts of your life and lay them at the feet of God.

Because in the end, He’s the only One who will be able to give you a relationship where a burnt biscuit isn’t a deal-breaker! We could extend this to any relationship. In fact, understanding is the base of any relationship, be it a husband-wife or parent-child or friendship! “Don’t put the key to your happiness in someone else’s pocket – keep it in your own.” So, please pass me a biscuit, and yes, the burned one will do just fine.

source ::::input from a friend of mine::::

Natarajan

” நீ கலியுக நந்தி ” !!!….சொன்னது மஹாபெரியவர் !!!!

பாலக்காடு மணி ஐயர் வாழ்வில் நடந்த சம்பவம்

கர்நாடக இசை மேதை பாலக்காடு மணி ஐயர் வாழ்வில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது.

பாலக்காட்டில் தனது வீட்டில் அமர்ந்து மிருதங்கங்களை வாசித்துப் பார்த்தார் மணி ஐயர். அவற்றில் சிலவற்றுக்குத் தோல் மாற்ற வேண்டியிருந்தது. எனவே கடைவீதிக்குச் சென்றார்.
கடைக்காரர் அவரிடம் “தற்சமயம் தோல் ஸ்டாக்கில் இல்லை. அடிமாடுகள் வந்துள்ளன. தோலை உரித்துப் பதப்படுத்தி ஒரு வாரத்தில் தருகிறேன்” என்றார்.

மிருதங்க இசைக்குத் தோல் தேவைதான். இருந்தாலும் இந்த முறை மணி ஐயரின் மனம் ஏனோ வேதனைப்பட்டது. ”ஒரு ஜீவனை ஹிம்சைப் படுத்தி இந்தத் தொழிலைத் தொடரத்தான் வேண்டுமா?” என்கிற சஞ்சலமான மனதுடன் வீடு திரும்பினார்.

அன்று இரவு அவருக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. உண்ணாமலே படுத்து விட்டார். மூன்று மாத காலத்திற்கு கச்சேரிகளை அவர் ஒப்புக் கொண்டிருந்தார். எனவே அவற்றை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு மேற்கொண்டு புதுக் கச்சேரிகளை ஒப்புக் கொள்ளாமல் தவிர்ப்பது என்று தீர்மானித்தார்.

ஓரிரு நாட்களுக்குப் பின் கச்சேரி ஒன்றுக்காக சென்னை வந்த மணி ஐயர் மஹாபெரியவரைத் தரிசிக்கக் காஞ்சி ஸ்ரீமடத்திற்குச் சென்றார். அப்போது மஹாபெரியவர் அங்கு இல்லை. காஞ்சியில் இருந்து 50 கி.மீ.தொலைவில் ஒரு கிராமத்தில் முகாமிட்டிருப்பதா& #2965; சொன்னார்கள். ”மஹா பெரியவாளை எப்படியும் பார்த்து விடுவது” என்று தீர்மானித்த மணி ஐயர், அந்தக் கிராமத்தை அடைந்த போது மாலை மணி ஐந்து.

சந்திப்பும் நிகழ்ந்தது.

மஹா பெரியவர், “மணி, நீ இன்று இரவு தங்கு…. நாளை காலை போகலாம். உன் தனி ஆவர்த்தனம் கேட்டு ரொம்ப நாளாச்சு!” என்று கூறிப் பூஜைக்குச் சென்றார்.

பூஜை முடிந்து எல்லோருக்கும் ப்ரசாதம் வழங்கினார்கள். இரவு எட்டு மணிக்கு மடத்து சிஷ்யர் ஒருவர் மணி ஐயரிடம் வந்து, “ பெரியவா வந்து பார்க்கச் சொன்னார்!” என்றார்.

மணி ஐயர் மஹா பெரியவருடைய குடிசைக்குச் சென்றார். ஒரு ஹரிக்கேன் விளக்கு மட்டும் இருந்தது. சிஷ்யர் அதைத் தூண்டி விட்டார். மஹா பெரியவா, ”என்ன மணி, உடம்பு அசௌகரியமோ? ஏன் வாட்டமா இருக்கே? கவலையா?” என்று அன்புடன் வினவினார்.

மணி ஐயர் கண்கள் கலங்க தன் வேதனையை விவரித்தார். அந்தப் பேச்சின் முடிவாக, ”இதுவரை நடந்தது போதும் பெரியவா. இனி ஜீவஹிம்சை செய்து அதன் மூலம் கச்சேரி செய்யப் போவதில்லை. அதனால் வரும் வருமானம் ஒரு சல்லிக்காசு கூட எனக்கு வேண்டாம்” என்றார் குரலில் உறுதியாக.

மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந& #3021;த மஹா பெரியவா, ”மணி, நீ சிவன் கோவில்ல நந்திகேஸ்வரரை தரிசனம் செஞ்சிருக்கியோ?” என்று கேட்டார்.

மணி ஐயர் “ஆமாம்” என்று தலையசைத்தார்.

”அவரது வேலை மத்தளம் (மிருதங்கம்) வாசிப்பது. நீயோ கலியுக நந்தி. இனிமேல் நீ மிருதங்கம் வாசிக்காமல் இருந்தால் தான் மகா பாவம். உனக்கு ஒரு பாவமும் வராது. மனசைப் போட்டு அலட்டிக் கொள்ளாதே. போய் வேலையைப் பார். இன்னிக்கு ரொம்ப நாழி ஆயிடுத்து. படுத்துத் தூங்கு. நாளைக்குப் பிரசாதம் வாங்கிண்டு கிளம்பு. உன்னுடைய தனி ஆவர்த்தனத்தைக் கேக்கணும்னு ஆசையா இருக்கு. நாளைக்கு ஒரு அரை மணி நேரம் வாசிச்சுட்டுக் கிளம்பலாம்!” என்று கூறி அனுப்பினார்.

மறு நாள் பூஜைக்குப் பிறகு கச்சேரி செய்து விட்டு மஹா பெரியவரிடம் பிரசாதமும் பெற்றுக் கொண்டு மனநிறைவுடன் வீடு திரும்பினார் மணி ஐயர்.

இந்த அரிய தகவலைக் கூறியவர் மணி ஐயரின் மருமகன் பதஞ்சலி!

source::::www.periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3773#ixzz2MXMhByFx

Message For The Day…Sorrow Disappears, When Ego Goes …..

Every struggle to realize the Unity behind all the multiplicity is a step on the path of Divine Life. You have to churn the milk if you wish to separate and identify the butter that is present within it. So too, carry on with life and purify your thoughts and action in order to get unshakeable faith. Divine Life does not admit the slightest dross in character or delusion in the intellect. People dedicated to divine life must emphasize this by precept and practice. Wipe out the root cause of anxiety, fear and ignorance, if any, within you. Then your true personality will shine forth. Anxiety is removed by faith in the Lord, the faith that tells you whatever happens is for the best and that the Lord’s will be done. Sorrow springs from egoism, the feeling that you do not deserve to be treated so badly, that you are left helpless. Sorrow disappears when egoism goes!

Swami Sathya Sai in one of His discourses…

Natarajan

” குறை ஒன்றும் இல்லை எனக்கு ” !!!!…..மகாபெரியவர் !!!!

காஞ்சி மஹான் சதாராவில் முகாமிட்டிருந்த சமயம்.

கோடீஸ்வரரும் தொழிலதிபருமான பிர்லா அவரைத் தரிசிக்க வந்தார். பம்பாயில் பாரதீய வித்யா பவனைக் கட்டிக் காத்து வந்து பக்திமான் அவர்! அவர் வந்திருக்கிறார் என்பதால் மஹான் தங்கியிருந்த இடத்தில் எந்த விதமான பரபரப்பும் ஏற்படவில்லை. சாதாரண பக்தர்களுக்கு எப்படி தரிசனம் கிடைத்ததோ, அதைப் போலவே திரு ஜி.டி. பிர்லாவும் ஜன்னலுக்குப் பின்னால் அமர்ந்திருந்த மஹானைத் தரிசித்தார்!

எப்போதுமே பிர்லா எந்தக் கோயிலுக்கோ அல்லது புண்ணிய க்ஷேத்திரங்களுக்க& #3019; போனால் நிறைய நன்கொடை தருவது வழக்கம். வெளியே போகும்போது செக் புத்தகத்தை உடன் எடுத்துச் செல்வார். மஹான் ஏதாவது நன்கொடை கேட்பார் என்று அவர் நினைத்து விட்டார்.

அவர் அங்கிருந்து நகரும் வரை மஹான் வாயைத் திறக்கவில்லை.

பொறுக்க முடியாமல் பிர்லாவே கேட்டுவிட்டார்.

”நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?”

இதற்கு மஹான் சொன்ன பதில் பிர்லாவை பிரமிக்க வைத்துவிட்டது.

”நீ இப்போ செய்யற தொண்டையே விடாமல் செஞ்சுண்டிருந்தா போதும். நீயும் உன் குடும்பமும் க்ஷேமமாய் இருப்பீர்கள்!” என்று முடித்துவிட்டார்!

அத்துடன் பிர்லாவை சகல மரியாதைகளுடன் அனுப்பி வைக்கும்படி மடத்து சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டார்.

பக்தனின் திரட்டுப்பாலை ஏற்றுக்கொண்ட மஹான், கோடீஸ்வரரிடம் தான் கேட்க ஏதுமில்லை என்று சொல்லிவிட்டார் மாமுனிவர்!

source::::www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3769#ixzz2MRWVEtif

Message For The Day….Explode All Myths and Start Living Divine Life !!!!

It is the Divine that inspires, activates, leads and fulfils the life of every being, however simple or complex it may be! From the atom to the Universe, every single being is flowing fast to merge in the sea of bliss. Never forget that every one of you is Sath-Chith-Ananda Swarupa (Embodiments of Existence-Consciousness-Bliss) – only you are unaware of it and imagine yourself to be bound to this form and its limitations! This is the myth that should be exploded, so that your Divine Life may begin. Leading a Divine Life consists of practising Truth, Love and Non-injury (Sathya, Prema and Ahimsa). Since all are parts of the same Divine Self, all should be loved as oneself, without fear and falsehood. When all are one, why should we injure another one, who is part of the same Divine Being?

Swami Sathya Sai…in one of His discourses…

Natarajan

God is Not in Facebook ….But HE is My Best Friend !!!!

God does not have Blackberry or an iphone or ipad. But He is my favourite contact. HE does not have an account in Facebook. But HE is my best friend. HE does not have a Twitter , but i follow HIM .

HE does not have an internet…but i am connected to HIM. I call HIM at anytime and HIS customer service number never puts me “on hold” !
HE loves me truly and no conditions apply !!!

May we all feel blessed in the company of God by making HIM our best friend and following HIM thro the countless Blessings that HE has showered on us.

May we all feel connected to HIM by realising that you get happiness by giving happiness to your loved ones..

You are at peace when you choose to have peace with your enemy. You feel the Bliss thro the Blessings , a person in need gives you and above all , you have faith on HIM that everything will be alright as long as you do your best and leave the rest on HIM !!!!

SOURCE ::::from a SAI Devotee…

Natarajan

கனவில் கிடைத்த உத்தரவு ….ஒரு அற்புதம் !!!!

கனவில் கிடைத்த உத்தரவு

மஹா பெரியவா ஸித்தி அடைந்த பிறகும் அருள் பாலித்த அற்புதமான நிகழ்ச்சி!

மஹா பெரியவாளுடன் காஞ்சியில் தங்கி மஹானின் தேவைகளை மிகவும் சிரத்தையாகவே கவனித்துக் கொண்டு இருந்தவர் மேச்சேரி பட்டு சாஸ்திரி. சாஸ்திரி மெத்தப் படித்த வித்வானான தனது வித்வத்தன்மையை வெளிக்காட்ட மாட்டார். அவ்வப்போது மஹான் அவரைப் பல கைங்கர்யங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வதுண்டு. வருடா வருடம் மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபத்தை மூன்று நான்கு நாட்கள், ஏன் ஒரு வாரமே ஆக்ரமித்து, அங்கே மஹானின் ஜெயந்தியை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவார்.

இவருக்கேற்ற மகன் மௌலி. மஹானின் கைங்கர்யத்தில் தந்தை கொஞ்சம் என்றால் மகன் அவருக்கு ஒரு படி மேலே. இதில் என்ன குறை என்றால் இவர்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு அவர்களிடம் பொருள் வசதி இல்லை. யாரோ சிலர் அவ்வப்போது உதவும் தொகை போதுமானதாக இருக்காது.

வீட்டில் உள்ள பெண்களின் நகை, கடன் என்று பல வகைகளில் பணத்தைச் சேர்த்து மஹானின் ஜெயந்தியை மிகவும் விமர்சையாக நடத்தி வருவார்கள். ஒரு வருடம் சாஸ்திரியாருக்கு ஒர் ஆசை. மஹானின் திருவுருவத்தை சிலையாக வடித்து வைத்துப் பூஜை செய்ய வேண்டும்! அவர் ஏற்கனவே இப்படி இரு சிலைகளை சேலத்தில் பக்தர்கள் வீட்டில் பார்த்திருக்கிறார& #3021;!

மனதில் எண்ணம் தோன்றியவுடன் அதை உடனே செயலாக்கினார். இவருக்கென்று ஸ்வாமிமலையில் ஒரு ஸ்தபதி கிடைத்தார். இருவர் எண்ணங்களும் ஒன்றாகவே, மஹான் சிலையை தத்ரூபமாக உருவாக்கினார். குறித்த காலத்திற்கு முன்பே சிலை வந்து விட்டதால் பட்டு சாஸ்திரி பணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கவில்லை. ஜெயந்திக்கான செலவு அபரிமிதமாக இருந்தது. சிலையைக் கொண்டு வந்து கொடுத்த ஸ்தபதிக்கு என்ன கஷ்டமோ, “பணத்தைப் பெற்றுக் கொண்டே ஊருக்குப் போகிறேன்” என்று அங்கேயே தங்கி விட்டார்.

சாஸ்திரிகளும் அவரது மகனும் கேட்காத இடம் பாக்கி இல்லை. தொகை என்னவோ வெறும் ஆறாயிரம் ரூபாய் தான். ஏற்கனவே நன்கொடை வழங்கியவர்களை மீண்டும் அணுக முடியாது. புதிதாக யாரும் தர முன் வரவில்லை. இப்படியெல்லாம் சோதனை வருகிறதே என்று தந்தையும் மகனும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தனர்.

இவர்கள் படும் பாடு, எல்லாம் தெரிந்த மஹானுக்குத் தெரியாதா என்ன?

அப்போது கடம் விநாயகராம் அமெரிக்காவிலே இருந்தார். அங்கே அவர் பல கச்சேரிகளில் கலந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட தினத்தன்று அவரது கனவில் தோன்றிய மஹான், அவரை சென்னையில் உள்ள அவர் மகன் மூலமாக பட்டு சாஸ்திரிக்கு ஆறாயிரம் ரூபாயைக் கொடுக்கும்படி சொன்னார்.

இது கனவு தானே என்று கடம் மாஸ்டர் தொடர்ந்து தூங்க ஆரம்பித்தார். அடுத்த தடவை இவரை யாரோ தொட்டு எழுப்பியது போன்ற உணர்வுகளுடன் அதே கனவு.

இது மஹானின் உத்தரவு தான் என்று புரிந்து கொண்ட கடம் மாஸ்டர், உடனே சென்னையில் இருந்த மகனிடம் தகவல் சொல்லிவிட அன்றே பணம் பட்டு சாஸ்திரியின் கைக்கு வந்துவிட்டது. எப்படிப்பட்ட அற்புதம்!

தன் சிலை செய்த கூலியை மஹானே கொடுத்து உதவியிருக்கிறார். வாய் ஓயாமல் பட்டு சாஸ்திரி இந்த மகத்தான உதவியை அன்று பூராவும் அயோத்தியா மண்டபத்திற்கு வந்தவர்களுக்கெல்ல& #3006;ம் தெரிவித்துக் கொண்டு இருந்தார்.

நாம் நல்ல நிலையில் இருக்கிறோம். நம் உதவி பெறுபவர் நம்மை விட தாழ்ச்சியாக இருக்கிறார், ‘நாம் கருணை காட்டுகின்றோம்’ என்று நினைக்கும்போதே, நாம் செய்யும் – செய்கிற உபகாரம் அசுத்தமாகிவிடுகிற& #2980;ு. உபகாரம் செய்வதன் பலனாக நமக்கு எளிமை, அடக்கம், அஹங்காரம் இல்லாமை ஆகியவை உண்டாக வேண்டும்.

source::::www.periva.proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3761#ixzz2MDEr8cAn