|
When plans are laid by the rulers for the uplift of the people and for training the children of the land, I want that the ancient wisdom of Bharath, still preserved and practised by scholars, be consulted. That will keep the keel of the ship straight. I want that the knowledge embodied in the Upanishads should be handed down to everyone. Bhakthi or devotion-directed education must take precedence over the Bhukthi or enjoyment-directed learning that prevails today in most countries of the world. Bhakthi is the yearning which goads you onto the spiritual discipline which will endow you with the Supreme Wisdom. Have both – faith and steadiness – in this pursuit, and you will win.
|
Religious
அனுமன் ஜெயந்தி …ஒரு ஸ்தோத்ரம் தமிழில் ….

அனுமன் ஜெயந்தியன்று அவரை வழிபடுவதற்காக இந்தப் பகுதியைத் தந்துள்ளோம். …..DINA MALAR…. TAMIL DAILY…….
* இடது கையில் மலையும், வலது கையில் தண்டாயுதமும் கொண்டவரே! பிரகாசிக்கும் குண்டலம் அணிந்தவரே! அனுமனே! உம்மை வணங்குகிறேன்.
* பட்டாடை அணிந்தவரே! மான்தோல் போர்த்தியவரே! பிரகாசிக்கும் கூந்தலை முடிந்தவரே! உம்மைச் சரணடைகிறேன்.
* ஆபத்தில் சிக்கியவர்களின் மனக்கவலையை போக்குபவரே! எதிர்பாராமல் வந்து உதவுபவரே! விபத்துகளில் இருந்து பாதுகாப்பு தருகிறவரே! உம்மை பணிகிறேன்.
* சீதையைப் பிரிந்த ராமனின் சோகம், பயத்தைப் போக்கியவரே!, ஆசைகளை விரட்டுபவரே! உம்மை நமஸ்கரிக்கிறேன்.
* கவலை, வியாதி, கிரகபீடைகளைப் போக்குகிறவரே!, அசுரர்களைக் கொன்று அடக்குகிறவரே! ராமனின் உயிருக்கும் உயிராக விளங்கும் அனுமனே! உம்மை வணங்குகிறேன்.
* செயல்பாடுகளை தடங்கல் இன்றி சாதிக்க உதவுபவரே! மிருகங்கள், திருடர்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிர்ப்பவரே! வாயுவின் பிள்ளையே! வானரங்களுக்கு உயிரானவரே! அஞ்சனை மைந்தரே! உமக்கு என் பணிவார்ந்த வணக்கம்.
* கருணை நிறைந்தவரே! கெட்டவர்க்கு கெட்டவரே!, அனைத்து செல்வங்களையும் தருபவரே! எனக்கு வெற்றியும், புகழும் அருள வேண்டுகிறேன்.
* அனுமனே! பயணம் செய்யும் போதும், தேசத்திற்காகப் போராடும்போதும், என்னை நோக்கிவரும் ஆபத்தைத் தடுத்து உதவ பிரார்த்தனை செய்கிறேன்.
* வஜ்ராயுதம் போன்ற சரீரமும், அளவற்ற தேஜஸும் உள்ளவரே! போர்க்களத்தில் அக்னியாய் திகழ்பவரே!, பிரம்மாஸ்திரத்தையே ஸ்தம்பிக்கச் செய்பவரே! ருத்ரமூர்த்தியே! உமக்கு நமஸ்காரம் செய்கிறேன்.
* அளவற்ற உற்சாகம் கொண்டவரே! எதிரிகளைச் சம்ஹாரம் செய்பவரே! உமது பக்தனாகிய எனக்கு தைரியத்தை தந்தருளும்.
* சுத்தமான மனதுடையவரே! ராமதூதர்களில் முதல்வரே! பாலசூரியனுக்கு ஒப்பான முகத்தை உடையவரே! கருணை பொங்கும் கண்களை உடையவரே! யுத்தத்தில் இறந்த வீரர்களை சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து பிழைக்கச் செய்தவரே! புகழத்தக்க மகிமை உள்ளவரே! அஞ்சனாதேவி செய்த புண்ணியத்தால் அவதரித்த அனுமனே! உம்மை தரிசித்து மகிழ்கிறேன்.
* எல்லா ஆசையையும் துறந்தவரே! தாமரை போல பெரிய கண்களும், சங்கு கழுத்தும், அழகும் பொருந்தியவரே! அனுமனே! உம்மைச் சரணடைகிறேன்.
* சீதையின் கஷ்டங்களை விலக்கியவரே! ராமனின் நினைவை உருவாக்குபவரே! துன்பப்படுபவர்களை காப்பாற்றுபவரே! ஆஞ்சநேயப் பெருமானே! இந்த ஸ்தோத்திரத்தைப் படித்த எங்களுக்கு நீண்ட ஆயுளையும், செல்வத்தையும் தருவீராக.
You may like to read this Stotra in Tamil on HANUMAN JAYANTHI day…JAN 11…..
Natarajan
குசேலர் தினம் … இது தெரியுமா உங்களுக்கு ?
குழந்தைகள் தினம் , மகளிர் தினம், ஆசிரியர் தினம் …என்றெல்லாம் நாம் கேட்டதுண்டு. குசேலர் தினம் பற்றி உங்களுக்கு தெரியுமா !!!!
தம் பால்ய நண்பனான கிருஷ்ணனை காண , துவாரகை சென்றார் , குசேலர். அங்கவஸ்திரத்தில் , அவர் முடிந்து சென்ற அவலை கண்ணன் கேட்டு வாங்கி , ஒரு பிடி அளவு எடுத்து ரசித்து சாப்பிட்ட பிறகு , ” திருப்தி …அக்ஷ்யம் ” என்று பெரு மகிழ்ச்சியுடன் கிருஷ்ணன் கூறினார். கண்ணன் அந்த அவலை எடுத்து சாப்பிடும் சமயம் , குசேலரின் குடில் மாளிகையாக மாறி விட்டதாம் ! வீடு நிறைய தானியங்கள் …குசேலர் மனைவி சுசிலையும் அவளது 27 குழந்தைகளும் , தக தகக்கும் பட்டு ஆடைகளுடன் , மின்னும் தங்க நகைகளுடன் ஜொலித்தனர் !!!!
இது நாம் அறிந்த சரிதம் !!!!
குசேலர், கிருஷ்ணனை தரிசிக்க ஆவலுடன் , அவல் கொண்டு சென்ற நாள் , மார்கழி மாதம் முதல் புதன் கிழமை. அதனால் , இன்றும் குருவாயூரிலும் , சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ உத்திர குருவாயூரப்பன் திருக்கோவிலிலும் , மார்கழி முதல் புதன் கிழமையை , குசேலர் தினமாக கொண்டாடுகின்றனர் ..
அன்றைய தினம் , ஸ்ரீ குருவயூரப்பனக்கு அவலும் , அவல் பாயசமும் நைவேத்யம் செய்யப்படுகிறது . பக்தர்களும் , ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு அவல் கொண்டு வந்து காணிக்கையாக தருவர். இதனால் , தங்களுக்கு , ஸ்ரீ கிருஷ்ணன் அருள் புரிந்து , அவரவர் வீட்டுக்கு சுபிக்ஷம் வந்து சேரும் என்பது நம்பிக்கை !!!!!
source::::DEEPAM..Tamil bimonthly
Natarajan
வைகுண்ட ஏகாதசி … ஒரு தகவல் …..

நார, அயந என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம் என்பது உயிர்த்தொகுதி, அயனம்-இடம் உயிரிங்களுக்கு இடமானவன் நாராயணன். உயிரினங்களைக் காப்பதற்கு இறைவன் சில தலங்களைத் தேர்ந்தெடுப்பது போல சில காலங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவை புண்ணிய காலங்கள் எனப்படும். தலங்களில் திருவரங்கம் போல புண்ணிய காலங்களில் ஏகாதசி உயர்ந்தது; ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு. ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே வைணவம். எட்டு வயதுக்கு மேல் எண்பது வயது வரை மானிடர் யாவராயினும் இரு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர், சிவனை அணுகி அபயம் கேட்டனர். நாரணனைச் சரணடையுமாறு வழிகாட்டினார் சிவன். சரணடைந்த தேவர்களுக்காக முன்னின்று யுத்தம் புரிந்தான் நாரணன். முரன் கிளர்ந்தெழுந்தான், அமரர் சிதறினர், இறைவனும் ஆற்றலிற் குறையுடையவன் போல் பயந்தோடி வதரி மலையிலுள்ள சிம்ஹவதி என்னும் குகையில் போய் களைப்புதீர கண்ணுறங்கினான். முரன் பின் தொடர்ந்து வாள் கொண்டு வதம் செய்ய முற்பட்டான். அவ்வமயம் இறைவன் திருமேனியினின்று கன்னி ஒருத்தி வெளிப்பட்டுப் போரிட முரனுக்கு முன்னின்றாள். முரன் முடிந்தான். கன்னி வடிவத்தில் தன்னிடமிருந்து வெளிப்பட்ட சக்தி அவ் இறைவனுக்கே வியப்பளிக்கிறது.
என் பகவானை முடித்தது யார்? என்று பரமன் கேட்கிறான் அக்கன்னி உலகை அச்சுறுத்தும் அசுரனைத் தானே கொன்றதாக கூறினாள். பேருதவி புரிந்த அக்கன்னியிடம் நன்றி கூற வரம் வேண்டுமாறு கேட்டான் மாயன். ஏகாதசி என்று பெயர் கொண்ட அவ்வனிதை நின் அன்புக்கு உரியவளாக நான் ஆகவேண்டும் , திதிகளுள் முக்கியமானவளாக நான் விளங்க வேண்டும். நான் பிறந்த இந்நாளில் உபவாசம் இருப்போர் சித்திகள் அனைத்தும் பெற வேண்டும் என்னும் வரங்களை வேண்டிக்கொண்டாள். இப்படிதான் ஏகாதசி தோன்றியது, மார்கழி மாதம் கிருஷ்ணபட்சத்தில் ! ஆகையால், மார்கழி மாதத்து கிருஷ்ணபட்ச ஏகாதசி உத்பத்தி ஏகாதசி என்று வழங்கப்பட்டது. மார்கழி மாதத்து சுக்லபட்ச ஏகாதசி மோட்ச ஏகாதசி என்று வழங்கப் பெறும். இதுவே விமோசனம் தரவல்லது இந்த ஏகாதசி விரதத்தைக் கைக்கொண்ட அளவிலே ஒருவன் இன்னல்களிலிருந்து விடுதலை பெறுவதோடு தன் தொடர்புடையவர்களையும் இன்னல்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் பெறுகிறான் என்கிறது சாஸ்திரம்.
source:::::Dina Malar…Tamil Daily
Natarajan
இன்று யோகி ராம்சூரத் குமார் பிறந்த தினம் 1 Dec 2012…
இன்று யோகி ராம்சூரத் குமார் பிறந்த தினம்…..
கங்கை நதி தீரத்தில் பிறந்து
திருவண்ணாமலையில்
வந்து யோகி ராம்சூரத் குமாராய்
மலர்ந்துமணம் வீசி
மக்களின் தாபத்தை போக்கியவர்
தனை ஒரு பிச்சைக்காரன்
என்றே அழைத்துக்கொண்டிருந்தவர்
தன்னை அண்டி வந்தோருக்கெல்லாம்
ஆன்மீக பிச்சை போட்டவர்
அன்பை அள்ளி அள்ளி தந்தவர்.
வழக்கம்போல் ஞானிகளை நம் நாட்டு மக்கள்
என்றும் துவக்கத்தில் அறிந்துகொண்டதில்லை
அவரை துன்புறுத்தி பல கொடுமைகளை அவருக்கு
இழைத்து மகிழ்ச்சி கொண்டனர்.
ஆனால் தான் உடல் அல்ல தான் ஒரு ஆத்மா
என்று உணர்ந்துகொண்ட அந்த ஜீவன்
அதையெல்லாம் சட்டை செய்யாது
தன்னை அண்டி வருவோருக்கெல்லாம்
அன்பையும்,ஆறுதலையும், அருளையும்
வாரி. வாரி வழங்கியது.
மனமெல்லாம் இருளை நிரப்பும்
பொருளை தேடி நம் நாட்டு மக்கள்
மேலை நாடுகளுக்குசாரி சாரியாக
செல்லும் நேரத்தில் மன இருளை போக்கும்
ஞானிகளை தேடி அனைத்தையும் விட்டு விட்டு
ஓடி வருகின்றனர் மேல் நாட்டு மக்கள்.
அவர்களில் ஒருவர்தான் இந்த ஞானியை
பற்றி வெளி உலகத்திற்கு தெரிவித்தவர்.
பிறகுதான் அனைவரும் அவரின்
தெய்வீக தன்மையை உணர தொடங்கினர்.
இன்று அண்ணாமலையில்
அவரின் ஆசிரமம் அவரின்
பெருமைகளை பரப்பிக்கொண்டிருக்கிறது
அவர் ஜபித்த மந்திரம்:
ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்
ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்
அவர் நமக்களித்த மந்திரம்
யோகிராம் சூரத்குமார்
யோகிராம் சூரத்குமார்
யோகிராம் சூரத்குமார்
ஜெயகுருராயா
தான் என்ற அகந்தை கொண்டவனுக்கும்
மதம் கொண்டவர்களுக்கும் மகான்களின்
மகத்துவம் புரியாது.
அது நம் மனதில் இருக்கும் வரை
இறைவனின் தத்துவம் புரியாது.
எப்படி ஒரு நாயால் ஒரு தேங்காயை
எவ்வளவு முறை உருட்டினாலும்
அதை உடைத்து அதன் உள்ளே
இருக்கும் தேங்காயை தின்ன முடியாதோ.
அதுபோல்தான் நாமே கடவுளை தேடுவதும்
.
இறைவனை அறிந்துகொண்ட
மகான்களின் பாதங்களை பற்றினால்
நம்மைபல பிறவிகளாக பற்றிக்கொண்டு
நம்மை துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும்
அறியாமையிலிருந்து
நம்மை விடுவித்துக்கொள்ளும் வழியை
நமக்கு உபதேசிப்பார்கள்.
அதற்க்கு அவர்களிடம் நம்மை பூரணமாக
அர்ப்பணிக்கவேண்டும்.
பலன் எதிர்பாராமல்அனைத்து உயிர்களுக்கு
தொண்டு, இயன்ற அளவிற்கு
தர்மமும் செய்யவேண்டும்.
அப்போதுதான்அசுத்தஎண்ணங்களால்
நிறைந்துள்ள நம் மனம் சுத்தமாகும்.
சுத்தமான மனதில்தான் இறையுணர்வு உண்டாகும்.
அப்போதுதான் தேவையற்ற விஷ யங்களிருந்து
நம் மனம் விடுபட்டு. உண்மை பொருளைநாடும்
.எத்தனையோ பிறவிகளை கடந்து வந்து விட்டோம்.
இந்த பிறவியிலாவது. அருணை மகானை
நினைந்து நம் எண்ணம் ஈடேற பிரார்த்திப்போம்.
ஜெய். குரு மகராஜ் .
source::::: input from one of my friends….
Natarajan
படித்ததில் பிடித்தது ….பக்தரை காக்கும் மகாபெரியவா ….
SOURCE:::: INPUT RECD. FROM ONE OF MY CONTACTS WHO IS A STAUNCH DEVOTEE OF KANCHI MUTT…
NATARAJAN.K
காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்” எனும் பீடிகையுடன், உருக்கமானதொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன்.
”ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால், பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.
அந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை, அவரது முகம் காட்டிக் கொடுத்தது. இதை மகா பெரியவாளும் கவனித்திருக்கவேண்டும். தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி அழைத்தார். அருகில், காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்துவந்த பாலு என்பவரும் இருந்தார்.
பெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர், ”எனக்குத் தீராத வயித்து வலி சுவாமி! உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத வைத்தியம் இல்லே! கொஞ்சமும் குணம் தெரியலே. பரிகாரம்கூட பண்ணியாச்சு. ஒரு பலனும் கிடைக்கலே. எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி, அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன். ‘காஞ்சிப் பெரியவரை உடனே போய்த் தரிசனம் பண்ணு; உன் கஷ்டத்தைச் சொல்லு. அவர் தீர்த்துவைப்பார்’னு சொன்னார். அதான், இங்கே வந்தோம்” என்றார் குரல் தழுதழுக்க.
”ஓஹோ… அப்படியா சொன்னார்..?” என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார் பெரியவா.
அவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே, நெல்லை அன்பருக்கு நம்பிக்கை பிறந்ததுபோலும்! தொடர்ந்து… ”எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை விட்டுப் போகணும், பெரியவா! நீங்களே கதின்னு வந்திருக்கேன். உங்க அனுக்கிரகம் கிடைக்கலேன்னா… இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறதுதான் விதின்னா… தினம் தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட, இங்கேயே இப்பவே என் உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன். பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும்” என்று கதறினார்.
பெரியவா, சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருக்க… நெல்லை அன்பர் தனது வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார். சிறிது நேரத்தில், ”இப்ப என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா!” என்று வியப்பும் கண்ணீருமாகச் சிலிர்த்துச் சொன்னவர், பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவருடைய பெற்றோரும் நமஸ்கரித்தனர். பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக் கொண்டு, திருநெல் வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், அன்றிலிருந்து பெரியவா என்னவோபோல் சோர்ந்து காணப்பட்டார். கருணையே உருவான காஞ்சி மகான், தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படு கிறார் எனத் தெரிந்தது. பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும், புரண்டு தவிப்பதையும் கண்ட மடத்து பாலு, செய்வ தறியாது கலங்கினார்.
பெரியவாளுக்கு பிக்ஷை தயார் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவர் பாலுதான். பெரியவா படும் பாட்டைப் பார்த்து, தான்தான் பிக்ஷை யில் ஏதேனும் தவறு இழைத்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார். தன் குலதெய்வமான ஸ்ரீவைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது.
மறுநாள் ஏகாதசி என்பதால், சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு. அன்றைய தினம், பெரி யவாளுக்கு பிக்ஷை செய்து வைக்க வேண்டாம். ஆகவே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது எனத் திட்டமிட்டார். எனவே, பெரியவாளிடம் சென்று, ”எனக்கு என்னவோ, எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது. பெரியவா உத்தரவு தரணும்!” என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினார் பாலு.
உடனே, ”’என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு அடிக்கடி சொல்வியே பாலு… இப்ப ஏன் போகணும்கறே?” என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார் பெரியவா.
எப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு. ”இல்லே பெரியவா… சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது. அப்புறம், குலதெய்வத்தை தரிசனம் பண்ணப் போகவே இல்லை. அதான்…” என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பாலு. பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க, பாலு கிளம்பிச் சென்றார்.
வைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்ப வர்கள், நோய் தீருவதற்காக கை, கால் என வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி, ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு, வெள்ளியில் ‘வயிறு’ வாங்கக் கடை கடையாக அலைந்தார். ‘வயிறு’ கிடைக்கவே இல்லை.
உடலும் மனமும் சோர்ந்துபோனவ ராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின் அருகில், கிழவி ஒருத்தி வந்து நின்றாள். ”என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா? அது கடைகள்ல கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க. நீ கேட்டுப் பாரு, சாமி! உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க!” என்று சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.
பாலுவுக்கு ஒரே குழப்பம். ‘யார் இந்தக் கிழவி? நான் வெள்ளியில் ‘வயிறு’ வாங்க அலைவது இவளுக்கு எப்படித் தெரியும்? வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே!’ என வியந்தவர், கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.
‘பெரியவாளுக்கு வயிற்று வலி’ என்று சொல்லமுடியுமா? ஆகவே, சாதாரண பக்தரைப் போல, கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு. பேச்சின் ஊடே… பாலு சிறு வயதில் படித்த மன்னார்குடி பள்ளியில்தான் அந்த அதிகாரியும் படித்தார் என்பது தெரிய வந்தது. சக பள்ளி மாணவர்கள் என்கிற இந்த சிநேகிதத்தால், கஜானாவில் பத்திரமாக வைத்திருந்த வெள்ளி வயிற்றை, 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார் அந்த அதிகாரி.
பிறகென்ன… சந்நிதிக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார் பாலு.
மடத்தை அடைந்தவர், ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்தார். பெரியவாளின் வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவரது முகத்தில் பழைய மலர்ச்சி குடிகொண்டு இருந்தது.
”பெரியவா அனுக்கிரகத்தால், குல தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்துட்டேன்” எனச் சொல்லி நெகிழ்ந்த பாலுவை ஏறிட்ட மகா பெரியவா, ”சரிதான்… என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!” என்றார் புன்னகைத்தபடி!
சிலிர்த்துப்போனார் பாலு. நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு, பாலுவின் ‘வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும் தெரியாமல் போய்விடுமா, என்ன?!
hara hara sankara
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய ஸ்வதந்த்ரம் பற்றி விரிவான அறிக்கை தயார் பண்ண, ஒரு பார்லிமெண்டரி டெலிகே ஷனை இந்தியாவுக்கு அனுப்பியது. இதற்கு கிட்டத்தட்ட ஏழெட்டு மாசம் முன்பே பெரியவா அவருடைய பரம பக்தரும், பரம வைஷ்ணவருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சார்யாரை “இந்தியாவில் மத விஷயங்களில் அரசாங்கம் தலையிடக் கூடாது” என்பது பற்றி பல தந்திகள், கடிதங்கள் அரசுக்கும், பார்லிமெண்டரி டெலிகே ஷனுக்கும் அனுப்பச் சொல்லியிருந்தார். இவைகள் ஒன்றுக்குக் கூட பதில் வந்ததில்லை.
ஏழெட்டு மாசத்துக்கப்புறம் ஒருநாள் பெரியவா கும்பகோணம் பக்கத்தில் உள்ள மேலூரில் முகாம். அன்று வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், வந்திருந்த பக்தர்களில் பெரும்பாலானோர் வக்கீல்கள்! பெரியவா அவர்களை ஒன்றாக அழைத்திருந்தார்.
“ஒங்களையெல்லாம் இங்க ஏன் வரச்சொன்னேன்னு தெரியுமோ?”
“பெரியவா சொன்னா தெரிஞ்சுக்கறோம்”
“நம்மளோடது எல்லாத்தையும், அதாவது சமுதாயத்தை காப்பாத்த வேண்டிய பொறுப்பு வக்கீல்களுக்குத்தான் இருக்கு. செய்வேளா?” எல்லாரும் உணர்ச்சிமயமானார்கள். பெரியவா சொல்லி ஏதாவது செய்ய முடியாமல் போகுமா?
“வெறுமே செய்யறோம்..ன்னு சொன்னாப் போறாது. இதோ….எதிர்ல இருக்காரே சந்திரமௌலீஸ்வரர்! அவர் முன்னால சத்யப்ரமாணம் பண்ணுங்கோ..நிச்சியம் செய்யறதா!” எல்லோரும் அப்படியே ப்ரமாணம் பண்ணினார்கள். எதற்கு?
“ஒங்க எல்லாரோட முக்யமான கடமை என்ன தெரியுமா? நம்ம constitution ஐ நீங்கள்ளாந்தான் காப்பாத்தி ஆகணும்”
constitution ஆ? அப்படீன்னா? அப்படி ஒன்று இந்தியாவில் அப்போது இல்லவே இல்லையே! இல்லாத ஒண்ணை எங்கிருந்து காப்பாற்றுவது? இதுவரை கேள்விப்படாத வார்த்தை.
“நம்ம தேசத்துக்கு constitution ன்னு ஒண்ணு வரும். அதுல என்னென்ன சேக்கணும்…ன்னு பேச்சு வரும். அப்போ…நம்ம மதத்தை காப்பாத்த எதெதை சேக்கணுமோ, அதை இப்போவே யோஜிக்கணும். அதுல முக்யமான விஷயம் என்னன்னா……..அரசாங்கம், மதத்தை control பண்ற விஷயம் இருக்கப்டாது. மதம்..ங்கறது அவாவா நம்பிக்கைக்கு ஏத்தாமாதிரி நடக்கறதுதான். அதுல அரசாங்கம் நுழையவே …..ப்டாது! இந்த மதவிஷயம் ஜனங்களோட “fundamental right “ஆ……. வரணும். இதை constitution ல சேக்கறதா promise பண்ணுங்கோ!……”
வக்கீல்கள் திகைத்து நின்றனர். பெரியவாளுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தோன்றுகிறது? எப்படி இத்தனை நுணுக்கமாக யோஜிக்கிறார்?
அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் எதேச்சையாக ஒருநாள் “ஹிந்து” ஆபீசுக்கு வந்தபோது, ஏகப்பட்ட கூட்டம். “பார்லிமெண்டரி டெலிகே ஷேன் இந்தியாவுக்கு வந்திருக்கு. இங்க ஆபீஸ்ல அவர்களுக்கு “டீ” பார்ட்டி” என்றார்கள். அக்னிஹோத்ரம் அந்த வாய்ப்பை நன்றாக உபயோகித்து அவர்களை பார்த்து பேசி, ஏழெட்டு மாசங்களாக தாம் அனுப்பிய லெட்டர்கள், தந்திகள் எல்லாவற்றையும் பற்றி சொன்னார். மத விஷயத்தில் அரசாங்க தலையீடு இருக்கக் கூடாது என்று சொன்னார்.
“இது ரொம்ப புரியாத பெரிய விஷயமாக இருக்கே! எங்களோட நாட்டிலேயே அரசாங்கம்தான் சர்ச்சுகளை நிர்வகிக்கிறது. நீங்கள் டெல்லிக்கு வந்து cabinet ஐ பார்த்து பேசுங்கள்” என்று சொன்னார்கள். பெரியவா சொன்ன விஷயம். மடமடவென நடந்தது. டெல்லிக்கு மடத்து சார்பாக போன அக்னிஹோத்ரம், சர்தார் வல்லபபாய் படேல் ஐ சந்தித்தார். “unity in divecity ” தான் பெரியவாளோட கருத்து. “மேலேழுந்தவாரியா எல்லாரும் பிரிஞ்சு இருக்கறா மாதிரி இருந்தாலும், ஆழமாப் பார்த்தால், எல்லாரும் ஒண்ணாத்தான் இருப்பா” என்ற பெரியவாளுடைய கருத்தை சொன்னதும், படேல் அதிர்ந்து விட்டார்!
“யார் அது? இப்பேர்ப்பட்ட எண்ணங்களைச் சொல்லும் மதத் தலைவர்? வக்கீலுக்கு படித்தவரா? பெரியவாளைப் பற்றி சொன்னார். கடைசியில் constitution இல் சேர்க்கவேண்டி பெரியவாளிடம் நகலைக் கொண்டுவந்தார் அக்னிஹோத்ரம். பெரியவா சொன்னது இதுதான்……….
“EVERY RELIGION ‘S DENOMINATIONS OR ANY RELIGION THERE OF ” என்ற வாக்குதான். படேல் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். “ஒரு பெரிய சட்ட நிபுணரால் மட்டுமே இந்த மாற்றங்களைப் பண்ண முடியும். ஒரு மடாதிபதி இவ்வளவு விவரம் தெரிந்தவரா!”
பெரியவா சாக்ஷாத் சட்டநாதன் இல்லையா? இன்றும் Indian Constitution article 26 எடுத்துப் பார்த்தால், இந்த வார்த்தைகள் “ஆம். தெய்வத்தின் குரல்” அதில் இடம் பெற்றுள்ளது!
