
அன்பு விதை!
பள்ளி சென்று
திரும்பும் குழந்தைகள்
அன்று
உணவுக்கு ஏங்கின
இன்று
பாசத்திற்கு ஏங்குகின்றன!
ஆதாயம் தேடும்
அவசர உலகில்
அன்பை
அடகு வைத்து விடுவதால்
துன்பங்களே நம்மை
துரத்துகிறது!
பிச்சைக்காரன் என்றாலும்
உன்னை வணங்கினால்
நீயும் அவனை வணங்கு…
மனசிருந்தால்
காசு போடு
இல்லையென்றால்
ஒரு புன்னகை சிந்து…
பூரித்துப் போவான்!
ஒவ்வொரு பூக்களும்
வாசத்திற்கு உரியவை தான்
ஒவ்வொரு மனிதனும்
நேசத்திற்கு உரியவன் தான்!
இறுகிக் கிடக்கும்
இதயங்களை கொஞ்சம்
தளர்த்திக் கொள்ளுங்கள்…
ஒவ்வொரு ஆன்மாவின் சுவாசமும்
அன்பால்
அரவணைக்கப்பட வேண்டும்!
விதை நெல்லாய்அன்பு பராமரிக்கப்பட்டு
வீரியமிக்க விதைகளாய்
இம்மண்ணில் துளிர்க்கட்டும்!
மகத்தான அன்பு விதைகள்
மனித மனங்களில்
அறுவடையாகிற போது
அங்கே
மனிதநேயம்
மறுமலர்ச்சியடையும்!
அன்பு இல்லாதவர்கள்
அரவணைக்கப்படுவதில்லை
அன்பை இழந்தோர்
ஆராதிக்கப்படுவதுமில்லை!
சிற்பத்தைப் போல்
செதுக்கப்படுவதல்ல அன்பு
இதயத்தில்
இயல்பாய் மலர்வது!
விருப்பு வெறுப்புகளை
புறந்தள்ளி
இதயங்களிலும்
அன்பு விளக்கேற்றுவோம்
எங்கும்
ஆனந்த ஒளி பரவட்டும்!
ஜோதி பாரதி,
தேனி. in http://www.dinamalar.com
Natarajan
பிரமாதம்