படித்ததில் பிடித்தது …” நல்லதே செய் …அதுவும் இன்றே செய் …” !!!

‘நல்லதை இன்றே, இப்போதே செய்ய வேண்டும்; கெட்டதை தள்ளிப் போட வேண்டும்’ என்று பல்வேறு கதைகளின் மூலம் வலியுறுத்தியுள்ளனர் நம் முன்னோர். இதற்கு உதாரணமாக, பழந்தமிழ் நுாலில் உள்ள கதை இது:
ஒரு நாள், கர்ணன் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்காக, தங்க கிண்ணத்தில் இருந்த எண்ணெயை இடது கையால், வலக்கையில் ஊற்றி, உடம்பெங்கும் தேய்த்தபடி இருந்தான்.
அச்சமயத்தில், அந்தணர் ஒருவர், கர்ணனிடம் தானம் வாங்க வந்தார். அவர் யாசகம் கேட்ட மறுவினாடியே, இடது கையில் இருந்த தங்க கிண்ணத்தை, அப்படியே இடது கையாலேயே அந்தணருக்கு கொடுத்தான் கர்ணன்.
அதை வாங்கிய அந்தணர், ‘கர்ணா… இடக் கையால் தானம் அளிக்கக் கூடாது என்பது உனக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், ஏன் இடது கையால் கொடுத்தாய்…’ எனக் கேட்டார்.
அதற்கு கர்ணன், ‘ஐயா… இடக் கையில் இருக்கும் கிண்ணத்தை, வலது கைக்கு மாற்றுவதற்குள், என் மனசு மாறி விட்டால் என்ன செய்வது? அது மட்டுல்ல, அந்த சிறிதளவு நேரம் கூட நீங்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகவே, அப்படிச் செய்தேன்.
‘மானிட வாழ்வு நிலையில்லாதது; நீர்க்குமிழி போல நொடியில் போய்விடும். இடக்கையில் இருந்து, வலக்கைக்கு மாற்றுவதற்குள், என் உயிர் போய் விட்டால், உங்களுக்கு கொடுக்காத பாவம் என்னை வந்து சேருமல்லவா… அதனால் தான் இடது கையாலேயே கொடுத்தேன்…’ என்றான் கர்ணன்.
ஏழை மறையோர்க்கு இடக் கையாலே எண்ணெய்க் கிண்ணம் ஈந்தான் அன்றோ என, இத்தகவலைச் சொல்லும், ‘ஜெயங்கொண்டார் வழக்கம்’ எனும் பழங்கால நூல், நாளை என்பார் கொடை தனக்குசடுதியிலே இல்லை என்றால் நலமதாமே என்றும் கூறுகிறது.
அதாவது, உதவி கேட்டு வருபவர்களை, ‘நாளை வா…’ என்று சொல்லி இழுத்தடிப்பதை விட, இன்றே இல்லை என்று சொல்லிவிடுவது நல்லது என்றும் கூறுகிறது.
ஆகையால், நல்லதைச் செய்வதும், அதை உடனடியாக செய்வதும் நன்மை தரும்.

பி.என்.பரசுராமன்  in http://www.dinamalar.com 

Natarajan

One thought on “படித்ததில் பிடித்தது …” நல்லதே செய் …அதுவும் இன்றே செய் …” !!!

  1. job hunting statistics's avatar job hunting statistics April 20, 2015 / 7:57 am

    Very nice post. I simply stumbled upon your blog and wished to say
    that I have truly enjoyed browsing your weblog posts.
    After all I will be subscribing on your rss feed and I’m hoping you write once more soon!

Leave a reply to job hunting statistics Cancel reply