இலவசம் என்னும் வசியம்
…………………..
இது இலவசம் …அது இலவசம் என கூவி உன்னை அவர் அவர் தம்
வசம் இழுக்க காத்திருக்கு ஒரு பெரிய கூட்டம் ….எல்லாம் உன்
ஒரே ஒரு ஓட்டுக்காக!!! ….சற்றே யோசி தம்பி …என்ன இல்லை
உன் வசம் ?
மசிய வேண்டுமா நீ இலவச வசியம் காட்டி மயக்கும் கூட்டம் முன்னால்?
அவசியமா உனக்கு இன்னும் உன் தன் மான இழப்பு ? நீ ஒருவன்
யோசிக்க ஆரம்பித்தால் உன் பின்னல் திரளும் ஒரு பெரும் கூட்டம்
வசிய மருந்து நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்ல !
வசிய மருந்தும் வேண்டாம் …நீ யார் வசமும் விழவும் வேண்டாம்
நீ இருக்க வேண்டும் நீயாக …உன் முடிவு இருக்க வேண்டும்
தெளிவாக …உறுதியாக … உன் தேர்வு யார் என்று ..!!!
இன்று நீ எடுக்கும் முடிவு கட்டாயம் ஒரு நாள் யோசிக்க வைக்கும்
உன் வாக்கை யாசிக்கும் கூட்டத்தையும் சேர்த்து !
உன்னால் முடியும் தம்பி…இந்த நாட்டின் எதிர் காலம் இருக்கு
உன் முடிவை நம்பி !!!
Natarajan
Nice kavithai. apt for today’ situation. Hope people think twice before they get cheated and elect candidates by merit.