புறக்கணிப்பு
…………..
சிறப்பு கவனிப்பு வேண்டாம் என்றால் வலிக்காது
புறக்கணிப்பு என்றும் உனக்கு ! …. எதிர்பார்ப்பு இல்லையேல்
ஏமாற்றமும் இல்லை ! ….உன்னை கண்காணிப்பது
உன் மனசாட்சி மட்டுமே….அது கணிக்கும் வழியில் நீ
நடந்தால் புறக்கணிக்கும் உனக்காக அதுவே தப்பான வழியை !
சிறப்பிக்கும் உன் வாழ்க்கைப் பாதையை …மறுக்காமல் ,
வெறுத்து ஒதுக்காமல் நீ உன் உள் மனதின் சொல் கேட்டால்
புறக்கணிப்பு என்னும் சொல் என்றும் இல்லை உனக்கு …தம்பி !
பட்டம் பதவி புகழ் தேடி நீ அலைந்தால் உனக்கு கிடைப்பது
புறக் கணிப்பு மட்டுமே ! பதவி புகழ் சுகம் துறந்து அதை
நீ புறக்கணிக்கும் நேரம் உன்னைத் தேடி ஓடி வரும் ஒரு
சிறப்பு கவனிப்பு உன்னைப் புறக்கணிக்காமல் !
புறக்கணிக்க வேண்டாம் நீயும் பிறரை… இவர் எளியவர், இவர்
தாழ்ந்தவர் என்று !….உன் சிறு கவனிப்பும் புன்முறுவலும்
அந்த எளியவருக்கு ஒரு சிறப்பு கவனிப்பே …தம்பி !
புறக்கணிக்க வேண்டியது புறக்கணித்து கவனிக்க வேண்டியதைப்
புறக்கணிக்காமல் நீ பயணித்தால் சிறகடித்துப் பறப்பாய் உன்
வாழ்க்கையில் நீ !
Natarajan….in http://www.dinamani.com on 13 June 2016
