என் ஓட்டம் …என் இலக்கு
………………………
என் ஓட்டம் …ஓடும் நதியோட்டம் .. என் உயிரோட்டம் … என் இலக்கு… நதி நீர்
இந்த மண்ணுக்கும் …மண்ணில் விளையும் பயிருக்கும் !
விதி விலக்கு இதில் எதுவும் இல்லை எனக்கு … ஓடிக்கொண்டே இருக்கும்
நதி எனக்கு , நீயும் பிள்ளைதான் , அவனும் பிள்ளைதான் !
மதி கெட்டு நதி நீர் “எனக்கு” மட்டும்தான் என்று ஆணவக்
கூக்குரல் எதற்கு மனிதா? மமதையுடன் மண்ணுக்கும் , தண்ணீருக்கும்
உரிமைக் குரல் எழுப்பும் நீ அந்த விண்ணுக்கும் , விண்ணில் உள்ள
நிலவுக்கும் ,பகலவனுக்கும் தனி உரிமை கோர முடியுமா சொல்லு ?
நதி மூலம் அறியாமல் உன் மதி மயங்கி ஒரு நதியின் ஓட்டத்தை
தடுக்க நினைக்காதே ! உன் அரசியல் விளையாட்டுக்கு எல்லாம்
நதி என்னை பகடைக் காயாக்காதே !
நதி என்னை என் வழியில் ஓட விடு ..என் ஓட்டத்தையும்
இலக்கையும் குலைக்க நினைக்காதே !
Natarajan
13 sep 2016