கை கோர்ப்போம் …
——————-
“பார்க்கிறேன் நான் ஒரு கை” என்று சொல்லும்
வாய் “கோர்க்கிறேன் என் கை உன்னுடன்” என்று
சொல்ல வேண்டும் …
கை கோர்த்து நிற்கும் மனித சங்கிலி தொடுவது
இரு ஊரின் எல்லையை மட்டுமல்ல ! எல்லை தாண்டி
இருக்கும் இதயங்களையும் சேர்த்துதான் !
நிலவுக்கே மின்தூக்கியும் படியும் அமைக்க
வழி சொல்லும் இன்றைய இளம் தலைமுறை
நமக்கு நினைவு படுத்தும் பாடம் “கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை “
இல்லை இனிமேல் எங்கள் ஊருக்கு ஒரு எல்லை
இல்லை இனிமேல் எங்கள் நதிக்கு ஒரு எல்லை
இல்லை இனி ஒரு சாதி மத பேதம் எங்கள் நாட்டுக்குள்
இல்லை இனி ஒரு மத துவேஷம் எங்களுக்குள் !
இது எதுவும் இல்லையென்றால் வானம்தான் எல்லை
நம் நாட்டின் மறுமலர்ச்சிக்கு… வளர்ச்சிக்கு !
இணையும் கைகள் இணைக்கும் நம்
இதயங்களையும் ! இனித்து மலரும் புது உறவும் !
உறவுகள் ஒன்றானால் சச்சரவு ஓடி மறையும் !
இதயங்கள் இணையும் நேரம் நதிகளும் இணையும் தன்னால் !
இன்னும் என்ன தயக்கம் நமக்கு ? கோர்ப்போம் கைகளை
இன்றே ! நிலவுக்கு படி கட்ட நினைக்கும் நம் பிள்ளைக்கு
காட்ட வேண்டும் பச்சைக் கொடி நாம் அனைவரும் நம்
கை கோர்த்து ! நிலவின் படிக்கட்டுக்கு நாம் அமைத்துக்
கொடுக்கும் வலுவான அடித்தளம் இணையும் கைகளே !
கை கோர்ப்போம் …கை கொடுப்போம் …இளம்
விஞ்ஞானிகள் கனவு நனவாக !
Natarajan
in http://www.dinamani.com dated 10th April 2017