வாரம் ஒரு கவிதை ….” நிழலில் தேடிய நிஜம் ” 2

 

நிழலில் தேடிய நிஜம்
…………………..
நிஜம் நிஜமாய் இருந்தபோது
தேடினோம் நிழலை !
நிஜத்தின் அருமை பெருமை
தெரியவில்லை அப்போது !
நிஜம் நிழல் ஆக மாறிய பின்
நிழலுக்கு மாலை மரியாதை !
சிலையும் கூட சிலர் நிழலுக்கு !
தேடுகிறோம் நிஜத்தை நிழலில் !
இருக்கும் போது மதிக்காத
நிஜத்தை அது இல்லாதபோது
நிஜம் எங்கே எங்கே என்று
நிழலில் தேடி என்ன பயன் ?
Natarajan

வாரம் ஒரு கவிதை …” நிழலில் தேடிய நிஜம் “

 

நிழலில் தேடிய நிஜம்
…………………
நிழல் என்றும் ஆகாது நிஜம் !
பதவியும் பணமும் வெறும் நிழல்தானே !
அந்த நிழலில் தேட வேண்டும்
நிஜம் என்ன என்பதை ?
நிழலில் தேட தேட நிஜம்
என்ன என்று புரியும் !
நிழல் நிஜம் ஆகாது
என்னும் உண்மையும் தன்னால்
தெரியும் !
நிழல் எல்லாம் நிஜம் என்று
நம்பினால் நிஜம் என்ன என்று
தெரியாது கண்ணுக்கு !
நிஜத்தை தொலைத்து விட்டு
இல்லாத நிழலில் தேட முடியுமா
நிஜம் எங்கே என்று ?
K.Natarajan  in http://www.dinamani.com
Dated 8th April 2018

வாரம் ஒரு கவிதை …” அலை பாயும் மனதினிலே …”

அலை பாயும் மனதினிலே …
…………………………
கடல் அலை கடலுக்கு முகவரி
கரை தொட்டு செல்லும் அலை
கரை கடக்காதவரை இல்லை
ஒரு சுனாமி !
தன் எல்லை என்ன என்று
தெரியும் கடல் அலைக்கு !
அலை பாயும் மனதுக்கு மட்டும்
தெரியாது தன் எல்லை என்ன என்று !
உன் மன அலையின் எல்லை எது
வரை என்று நீ செய்ய வேண்டும்
ஒரு வரைமுறை தம்பி !
மனதின் அலையோடு பயணிப்பதும்
ஒரு கலைதான் தம்பி …அலையின்
வேகத்தில் நீ காணாமல் போகும் வரை !
நீ படிக்க வேண்டிய நேரம் இது …படிக்க
வேண்டிய நேரத்தில் திசை தவறி நீ
பயணிக்க வேண்டாம் !
உன்னை வளைத்துப் பிடிக்க காத்திருக்கு
என்னற்ற வலைத்தளம் பலப் பல !
எந்த ஒரு வலையிலும் சிக்க மீன் அல்ல
தம்பி நீ ! உன்னைப் பெற்றவருக்கும்
இந்த நாட்டுக்கும் நீ ஒரு நம்பிக்கை தூண் !
இங்கும் அங்கும் அலைந்தாலும் உன் மனம்
என்னும் கப்பலை இயக்கும் தலைவன் நீ
என்பதை மறந்து விடாதே !
அலை பாயும் உன் மனதின் கடிவாளம்
இருக்க வேண்டும் உன் கையில் தம்பி !
Natarajan  in http://www.dinamani.com dated 2nd April 2018
2nd April 2018

வாரம் ஒரு கவிதை …” இரை தேடும் பறவை “

 

இரை தேடும் பறவை
——————-
இரை  தேடும்  பறவைக்கு
இலக்கு ஒன்றே ஒன்று என்றும் !
இங்கும் அங்கும் அலைந்தாலும் தன்
இலக்கு என்ன என்று அது  மறக்காதே !
அங்கும் இங்கும் அலையும்
மனிதன் மனது மட்டும் தனக்கு
தினம் இரை வழங்கும் இறைவன் யார் ,
எங்கே என்று இன்னும் தேடுவது ஏன் ?
இரை தேடும் பறவையிடம் இறை
தேடும் மனிதன் கற்க வேண்டும் பாடம் !
K.Natarajan
in http://www.dinamani.com dated 25th March 2018

வாரம் ஒரு கவிதை …” நெருப்பின் தாகம் “

நெருப்பின் தாகம்
——————-
மலையேறும் மோகம் …உன் மடி மீது விளையாடும்
தாகம் …வேகம் வேகமாய் உன்னிடம் ஓடி
வந்த அந்த சிறுமலர்கள் செய்த பாவம் என்ன ?
சொல்லு மலையன்னையே  …உன் வெறுப்புக்கு
காரணம் என்ன ?
உன் நிழலில் ஓடி விளையாடி ஒரு புது உலகம்
காண வந்த அந்த  சிறு மலர் கொத்து
மீது நீ நெருப்பைக் கொட்டியது ஏன் ? யார் மீது
வெறுப்பு உனக்கு ?
நெருப்பின் தாக்கம் என்ன என்று தெரியாதா உனக்கு ?
உன் கோப நெருப்பின் தாகத்துக்கு உன் பிள்ளைகள்
என்ன தண்ணீரா ?
உன் வெறுப்பு யார் மீது இருந்தாலும் கொட்ட  வேண்டாம்
மீண்டும் உன் கோப  நெருப்பை யார் மீதும் தாயே !
போதும் இந்த சோகம் …வேண்டாம் இன்னொரு நெருப்பின்
தாகம்!  பிள்ளைகள் எங்கள் பிழை  பொறுத்து
மன்னிக்க வேண்டும் மலையன்னை நீ !
K.Natarajan
in http://www.dinamani.com dated 17th March 2018

வாரம் ஒரு கவிதை …” தற்கொலை செய்யும் கனவுகள் “

தற்கொலை  செய்யும்  கனவுகள் …
———————————–
ஆட்சியைப் பிடிப்பது கட்சியின் கனவு !
நல்ல  ஆட்சியை அரியணை ஏற்றும்
கனவு நம் பாமர மனிதனுக்கு !
காணும் கனவு நனவாகும் என்னும்
நம்பிக்கை இருவருக்குமே !
கட்சி கண்ட கனவு நனவாகி காட்சி
மாறுது … ஆட்சியும் மாறுது !
சாமான்யன் அவன் கண்டான் கனவு
 கிடைக்க வேண்டும் எனக்கு ஒரு
நல்ல  மாற்றம் என்று !
ஆனால் அவனுக்கு கிடைத்தது நல்ல
மாற்றம் அல்ல …பெரும் ஏமாற்றம் !
அவன் கண்ட கனவு சிதைந்து மடியுது
அவன் கண் முன்னே …!
பக்குவமாய் செதுக்குவார் இந்த சிற்பி
ஒரு நல்ல ஆட்சி என்னும் சிலையை!
கண்டான் கனவு அந்த சாமான்யன் !
இன்று ,கண்ட கனவு எல்லாம் மடிவது
நிஜம் !… சிலைகள் உடைந்து கீழே
விழுவது நிஜம் ! புதிய சிலை ஒன்று
செதுக்க வேண்டாம் …இருக்கும் சிலையை
உடைக்க வேண்டுமா ?
உடைவது சிலைகள்  மட்டும் அல்ல..நம்மில்
பலர்  மனமும்  சேர்ந்துதான் !
வாக்களித்த வாக்காளன்  கண்ட கனவு
ஒரு இனிய கனவாகவே சாமான்யன்  மனதின்
ஒரு ஓரத்தில் புதைந்து மறையும் நேரம்
என் மனதில் ஒரு கேள்வி !
சாமான்யன் அவன் கனவுக்கு மட்டும்
ஏன் இந்த அகால மரணம் ?
Natarajan
12th March 2018

வாரம் ஒரு கவிதை …” கொஞ்சி விளையாடும் கோபம் “

 

கொஞ்சி விளையாடும் கோபம்
—————————-
நேற்று இருந்தவர் இன்று இல்லை …இது
தெரிகிறது எனக்கு !…இன்று இருப்பவர்
எல்லாம் நாளை விடியல் பார்ப்பாரா இல்லையா ?
விடை இல்லையே என்னிடம் இந்த கேள்விக்கு !
நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்து இவ்வுலகு …சொன்னான்
அன்றே வள்ளுவன் ! குறளை  பாடமாக படித்த
நேரம் புரியவில்லை அவன் சொல்வது என்ன என்று !
வாழ்க்கைப் பாடம் தினம் படித்து வள்ளுவன் சொன்னது
என்ன என்று புரியும் இந்த நேரம் கோபம் கொஞ்சமும்
வேண்டாம் எனக்கு என்று நினைக்கிறேன் நான் இன்று !
வேண்டாம் நீ என்று நான் சொன்னாலும் விட மாட்டேன் நான்
உன்னை என்று என்னுடன் கொஞ்சி விளையாட வரும்
கோபமே …கெஞ்சிக் கேட்கிறேன் உன்னை , விட்டு விடு
என்னை இன்று ஒருநாள் !
நாளை விடியலை நான் பார்த்தால் மீண்டும் கெஞ்சுவேன்
உன்னிடம்  கோபமே, “கொஞ்சி விளையாட வர வேண்டாம்
நீ என்னிடம்  இன்னும் ஒரு நாள் ” என்று !
K.Natarajan
in http://www.dinamani.com dated 4th March 2018

வாரம் ஒரு கவிதை… ” எங்கும் எதிலும் “

எங்கும் எதிலும்
————–

photo-1485546246426-74dc88dec4d9

எங்கள் வங்கியில் எங்கும் எந்த ஊரிலும்
எந்த கிளையிலும் நீங்க உங்க பணம்
பெறலாம் ..பணம் கட்டலாம் என்று
சொன்னது என் வங்கி …மகிழ்ந்தேன் நான் !
வங்கிக்கு செல்லும் வீண் சங்கடம் எதுக்கு
உனக்கு…. உன் வங்கி கணக்கு விவரம்
இப்போ உன் மடிக் கணினியிலும் கைபேசியிலும்
சொன்னது மீண்டும் என் வங்கி !
வங்கியே என் கையில் இப்போது ..எங்கும் எப்போதும் !
பணம் எடுக்க ATM …எங்கும் எதிலும் எப்போதும் !
விண்ணில் பறந்தேன் நான் …மண்ணில் இல்லை
என் கால் !
எங்கும் எதிலும் எப்போதும் பண பரிமாற்றம் !
உங்க வங்கிக்கு நீங்க வரவே தேவை இல்லை
உங்க வங்கி கணக்கு இப்போ உங்க கையில்
என்றும் சொன்ன என் வங்கி இருக்குதா
அதே இடத்தில் என் பணத்துடன் ?
இன்று சென்று பார்க்க வேண்டும் நான் !
எங்கும் எதிலும் நானாவது கவனமாக
இருக்க வேண்டாமா ? என் வங்கியில்
இருப்பது என் பணம் அய்யா !
Natarajan
in http://www.dinamani.com dated 25th Feb 2018

வாரம் ஒரு கவிதை….” அந்நாளே திருநாள் …”….2

அந்நாளே  திருநாள் …
————————-
“உங்க வாக்கு எனக்கு தேவை …
என் சேவை உங்களுக்கு தேவை ..”
என்று சொல்லி யார் கொடுக்கும்
இலவசமும் வேண்டாம் எனக்கு…அது எனக்கு விஷம்
என்று  நீ  உறுதிபட சொல்லும் அந்த நாளே
ஒரு திருநாள் தம்பி !
என் தேவை என்ன என்று புரிந்து நீ
எனக்கு சேவை செய்வாயா  …இல்லை
வெற்றி முகம் பார்த்தவுடன்  யார் நீ என்று
உனக்கு வாக்களித்த என்னையே நீ திருப்பிக்
கேட்பாயா ?…என் வாக்கு உனக்கு நான்
அளிக்கும் முன் நீ தர வேண்டும் எனக்கு ஒரு உறுதி மொழி !
” நான்  உண்மை  ஊழியன் என்றும் உனக்கு ” என்று !
மக்கள் ஊழியரிடம் உறுதி  மொழி  இதை நீ
கேட்டு பெறும் அந்த  நாள் …ஒரு திருநாள் தம்பி !
வெற்றிக்கனி பறித்து ஆட்சியில் அமர்ந்து அதிகார
மமதையில் மக்களின் தேவை என்ன என்பதை
மறந்து தங்கள் தேவை என்ன என்றே குறி
வைத்து காய் நகர்த்தும் உன்  ” ஊழியரை “
அடையாளம் கண்டு அவர் செய்யும் வேலைக்கு நீ
கொடுத்த உத்தரவைத் திரும்பப் பெறும் அதிகாரம்
உனக்கு கிடைக்கும் அந்த நாள் …ஒரு திருநாள் !
தன்  பதவி நிரந்தரம் அல்ல … ஜன நாயக
மன்னன் நீ   நினைத்தால் “மக்கள் ஊழியன் “
என்னும் பதவி  ,  பதவிக் காலம்
முடியும் முன்பே கூட  பறி போகும் என்னும்
அச்சம் உன் ஊழியனுக்கு வரும் அந்த நாள்
எனக்கும் உனக்கும் மட்டும் அல்ல …நம்
ஜன நாயகத்துக்கே ஒரு திருநாள் !
வரவேண்டும் விரைவில் அந்த திருநாள் !
பெற வேண்டும் நம் ஜன நாயகம் ஒரு
மறு மலர்ச்சி !
Natarajan
18th Feb 2018

வாரம் ஒரு கவிதை ….” அந்நாளே திருநாள் “

அந்நாளே  திருநாள் …
…………………….
அந்த காலம் மாதிரி வருமா …அந்த நாள்
ஒரு திருநாள் … என் தாத்தா சொல்லி
நான் கேட்டேன் !
உன் காலம் எல்லாம் அந்த நாள் போல
இல்லை … நான் வாழ்ந்த அந்த நாள்
தினமும் ஒரு திருநாள்தான் ! என் அப்பா
சொல்லியும் கேட்டு  விட்டேன் நான் !
நானும் என் பிள்ளைக்கு சொல்லி வளர்த்தேன்
அவனை … நான் பார்த்த அந்த நாள்   ஒரு திருநாள் …
என் காலம் போல இல்லையே  உன் காலம் தம்பி  என்று !
இந்த நாள் இருக்கலாம் ஒரு திருநாள்
இல்லாத நாளாக … இனி வரும் காலம்
தினம் தினம் திருநாளாக இருக்க வேண்டும்
என் அன்பு பேரனே !
இது ஒரு தாத்தாவின் வெட்டி ஆசை இல்லை !
உன் காலத்தில் நீ வாழப் போகும்  மண்ணில்
நீ காணப்போகும்  புதிய பாரதத்தின்  புதிய முகம்
பார்க்க இந்த தாத்தா உனக்கு தரும் புது நம்பிக்கை !
நம்பிக்கை விதை விதைத்து விட்டேன் உன் மனதில்
அதை செடியாகி நல்ல கனி தரும் மரமாக்கி அதன்
நிழலில் நீ சொல்ல வேண்டும் உன் பிள்ளையிடம்
” என் அப்பா தாத்தா காலத்தில் இல்லாத வளமும்
  சுபிக்ஷமும் இப்போ உன் காலத்தில் இருக்கு கண்ணே
  நம் மண்ணில் … இந்த காலம் நம் மண்ணுக்கு
  ஒரு பொற்காலம் … “
அந்த நாள் போல இந்த நாள் இல்லை என்னும் பழைய
பல்லவி நீ பாடாமல், இந்த நாள் போல் அந்த நாள் இல்லை
என்று நீ உன்  பிள்ளையிடம் சொல்லப் போகும் அந்த நாள்
நிச்சயம் ஒரு திருநாள் நம் மண்ணுக்கு !
Natarajan
In http://www.dinamani.com  dated 17 Feb 2018