பெரியவா தேடி சென்ற பாட்டி !!!

source: Sage of Kanchi blog..
natarajan

ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ர;ு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”

“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.

“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுத ான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!

பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.

“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”

“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”

என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!

“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.

“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”

“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?

பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.

பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….

“என்னது இது?”

“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”

“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”

“குடுத்துட்டோம். பெரியவா”

“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.

“குடுத்தாச்சு. பெரியவா……”

“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”

ருத்ர முகம்!

“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.

“………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.

ஆம். தவறுதானே?

“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.

“நீ எங்கே குடியிருக்கே?”

“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”

“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”

“அங்க சுப்புராமன் இருக்கார்……”

பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!

“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”

“இல்லை……….”

“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்த& #3006;ன் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”

“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”

“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”

பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!

இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.

பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.

இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.

தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.

Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam

Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3277#ixzz2GnLU0CtU

Secret of Happiness….

YOGAKSHEMAM VAHAMYAHAM

One day, one friend asked another, ‘How is it that you are always so happy? You have so much energy, and you never seem to get down.. ‘

With her eyes smiling, she said, ‘ I know the Secret!’ ‘What secret is that? ‘ To which she replied, I’ll tell you all about it, But you have to promise to Share the Secret with others.’

‘The Secret is this: I have learned there is little I can do In my life that will make me truly happy I must depend on God to make Me happy and to meet my needs. When a need arises in my life, I have to trust God to supply According to HIS riches. I have learned most of the time I don ‘ t need half of what I think I do. He has never let me down. Since I learned that ‘ Secret ‘ , I am happy.’

The questioner’s first thought was, ‘ That’s too simple! ‘ But upon reflecting over her own life She recalled how she thought a bigger house Would make her happy, but it didn’t! She thought a better paying job Would make her happy, but it hadn’t. When did she realize her greatest happiness? Sitting on the floor with her grandchildren, Playing games, eating pizza or reading a story, A simple gift from God.

Now you know it too! We can’t depend on people to make us happy. Only GOD in His infinite wisdom can do that. Trust HIM! And now I pass the Secret on to you! So once you get it, what will you do?

YOU have to tell someone the Secret, too!

That GOD in His wisdom will take care of YOU! But it ‘ s not really a secret… We just have to believe it and do it.. Really trust God! I just did and hope you will too.

“To have God in our side doesn’t mean sailing on a boat with no storms, it means having a boat that no storm can sink!”

source::::: input from a friend of mine.
natarajan

Message for The Day…Adhere to Right Conduct….

God will not be attracted by learning, wealth or material possessions. God is drawn only by devotion. Take to Him, any troubles you have – He will accept all of them and fill you with joy. God loves every devotee. He accepts you for who you are. He is aware of all the difficult situations, trials and tribulations you go through and your devotion to Him, which gives you so much happiness. However, this devotion alone is not enough. What is needed is the regulation of that Divine Love, in the form of virtue and service. Do not criticise others, rather criticize yourself. Have the Name of the Lord on your tongue and the Form of the Lord before your eye. If you shape yourself this way, the place where you live will be the holiest of all. Let all your activities be directed only towards this purification in your hearts. I bless each and every one of you with success, in this noble effort!

To secure the grace of God you must adhere to right conduct and observe purity in thought, word and deed. – Baba

source::::: divine discourse message from Swami Satya Sai

Natarajan

Message For the Day…Jana Seva is Janardhana Seva….

Today we bid farewell to the year gone by and welcome the new year. We pray that the new spring should confer on all beings longevity, health and goodness. Pleasant experiences and unpleasant memories of the previous year that linger in the mind, contain many good lessons. When one reviews the past year within oneself, one can realise how much time was spent selfishly and how much in service. It is not good to keep quiet when there are people around in the society facing hardships. If need be, you should give up japa and sadhana (Spiritual practices), and uplift such people through service and sacrifice. You should feel that Jana Seva is Janaardhana Seva (service to people is service to God).Those who seek the joy of liberation should burn selfishness in the fire of jnana (spiritual wisdom).

Make good use of time by recognising what is permanent and true in human life. – Baba

source:::: spritual message from Swami Satya Sai on one of the NEW YEAR DAYS….
Natarajan

திருப்பாவை பாடல் 16 சொல்லும் செய்தி !!!!!

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

பொருள்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். “அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

விளக்கம்: ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, “”இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. “அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், “இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.

Alongwith Water , Happiness and Bliss also Gushing out !!!!

It was a hot summer season. Severe water scarcity prevailed in the villages. The rivers and ponds had all dried up. In many homes, even their wells went dry. Whatever water was available, the villagers shared among themselves.

On the request of devotees of a village where there was severe water scarcity, Periva had come to the village and was giving darshan.

Everyone in the village came for darshan – the rich and the poor, the good and the bad, the miser and the philanthropist; everyone.

A very old person had come. The others who were there gave him way, out of respect, to have Periva’s darshan. It was evident that he was an important person in the village.

He paid his obeisance, and stood up.

Periva asked him “What is your age?”

“Me? I am quite old now – eight two years”, replied the old man.

“Sowkiama?” (Is all well with you?), asked Periva.

“No, Sami. Where is the room for happiness? There are quarrels in my family all the time. No one listens to what I say. I am not in good health too. I am living life just for the sake of it”, said the old man.

“You must be very depressed…”

“Yes.., Sami”

“If I show you a way to be happy, will you obey me?”, asked Periva.

“Tell me Sami”, said the old man, eagerly.

“You have fenced the pump-set in your Thottam (field), with the intention that others cannot take even a drop of water. People here are undergoing a lot of hardship for water to drink and cook. You are using the water from your pump-set to water your crops, and your Thottam (field) alone is flourishing. You say that your property and family is not giving you any happiness. Break down the fence around your pump-set. Let all the people take the water. They will all bless you for this and you will find the happiness that you want”.

Tears were flowing down the eyes of the old man.

The villagers who were listening to Periva’s advise stood there stunned!

“None of them had told Periva about the pump-set in the old man’s house (or) that he had fenced it preventing them from fetching water. Nor did they tell Periva that the old man will not hesitate to pick up a fight if they trespassed”. They only prayed for the water crisis to be resolved by Periva’s grace. That’s all.

When Periva was about to leave the place, two youngsters came running. “The old man has taken off the fencing around the pump-set!”, they exclaimed.

Water was gushing from the pump-set.

Happiness and sheer bliss was also gushing from the heart of the old man who had removed the fence, paving way for everyone in the village to use the water.

Periva’s compassion has no boundaries. His Arul (Divine grace) will continue to flow like a river which never runs dry.

source::::perivaa forum….
natarajan
Read more: http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3187#ixzz2GacB9Na4

Message for the Day…GOD is your Goal !!!!

A mother fetching water from the well, will have a pot on her head, another on her hip and a third in her hand, and will be hurrying her way home, as she is always conscious of the infant in the cradle. If she forgets the infant, her gait slows down and she wanders around, chatting with all her friends. Similarly, if God, the Goal, is not cherished in the memory, one has to wander through many births and arrive home late. Hence keep the memory of the Lord and His glory, always with you. That will quicken your steps and you will arrive soon at the goal.

The God-centred person has three qualities: Purity, Perseverance and Patience. – Baba

Divine message for the Day from Swami Satya Sai…

natarajan

The Other Side …Perspective ….

A man went out for a walk.

He came to a river and saw a woman on the opposite bank.

“Yoo-hoo,” he shouted, “how can I get to the other side?”

The woman looked up the river then down the river then shouted
back,

“You’re already on the other side.”
Life and truth is often a matter of perspective and viewpoint.

I thought about that issue for a good part of the day.
It was short and somewhat funny but extremely profound.

Do you realize how many people are trying to get to the very
side that you are already on while you are trying to get
somewhere else?

Do you know how many people wish they had a good husband or
wife like you do?

Do you realize how many couples wish they could have children
like you do?

Do you know how many suffering people wish they had a pain free
body like you do?

Do you know how many people wish they just had enough money to
pay their basic bills like you do?

Do you realize how many people wish they could get to the weight
that you are already at?

Do you realize how many people wish they had a job like you do?

Do you realize how many people wish they could see like you can?

…could hear like you can?

…could walk like you can?

I, like most of you reading this, wish for many things.
I have a lot of dreams and visions.

“Perspective” really made me think and realize
that with so many of the rivers of life,

I’m already on the “other” side.

So are you !!!!!!

source::::unknown…a practical one to understand and share with kith and kin…
natarajan

Message for the Day…Live in HIS Glory..

Practice is the real thing that matters in spirituality. Scholarship is a burden, many times a handicap even. So long as God is believed to be far away, in temples and holy places, one will feel religion a burden and a hurdle. But instal Him in your heart and you feel light, burdenless and even strong. It is like the food basket – when carried on a shoulder, it feels heavy. You are too weak, even to carry it. But sit near a stream and eat your food from the basket – though the food weight has not decreased, you feel stronger and joyful. That is the consequence of taking the food in. Do likewise, with the idea of God. Do not carry it on the shoulder, take it ‘in’! The scriptures teach, “God is verily the Life-breath, of every soul.” So practise to live in His Glory, in His Memory, in His contemplation, every single moment of your life.

True devotion really means installing the Divine in the heart and enjoying the bliss of that experience. – Baba

source:::: divine discourse message from Swami Satya Sai

natarajan

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் அமுத மொழிகள் …

இன்று ஆருத்ரா தரிசன நன்னாள். இதே நன்னாளில் தான் இன்றைக்கு 133 ஆண்டுகளுக்கு முன்னால் பகவான் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் அவதரித்தார். திருவாதிரையை அடுத்த புனர்பூச நட்சத்திரத்தில் அவர் ஜனனம் நிகழ்ந்தது. பிரசவத்தின் போது ஒரு பார்வையற்ற கிழவி உடனிருந்தாள். அவர் ரமண அருட் குழந்தையாக அவதரித்த அச்சமயத்தில் ஒரு சில கணங்கள் மட்டும் “பேரொளி”யை தரிசிக்கும் பாக்யம் பெற்றாள். அப்பேரொளி பின்னர் அருணாசலத்தை நாடி வந்து, அங்கேயே வாழ்ந்து, அதனுடனேயே இறுதியில் இரண்டறக் கலந்தது.

அந்த ரமண ஒளி அவதரித்த இந்த நன்னாளில் அவரது அருண்மொழிகள் சிலவற்றை அவரது மொழியிலேயே நினைவு கூர்வோம்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

***************

கே: ஸர்வவியாபியான ஈசுவரனைக் காண்பதெப்படி?

ப: கடவுளைக் காண்பதென்பது கடவுளாயிருப்பதே. வியாபித்தற்கு அவருக்கு அன்னியமாக ‘எல்லாம்’ என்பது இல்லை. அவரே இருக்கிறார்.

கே: நான் சரணாகதி அடைந்தால் ஈசுவரனை வேண்டுதல் தேவையில்லையா?

ப: சரணாகதியே மகத்தான பிரார்த்தனை.

கே: ஆனால் சரண்புகு முன் அவரது தன்மை இன்னதென்று அறிய வேண்டாமா?

ப: நீ விரும்புவதையெல்லாம் ஈசன் உனக்காகச் செய்வாரென்று நம்பினால், நீ உன்னை அவரிடம் ஒப்புக் கொடுத்து விடு. இல்லாவிட்டால் அவரைச் சும்மா விட்டு விடு.

கே: யோகிக்குப் பூர்வஜன்மமெல்லாம் தெரியுமா?

ப: இந்த ஜன்மத்தைப் பற்றி முதலில் உனக்குத் தெரியுமா? பூர்வஜன்மமெல்லாம் தெரியவேண்டுமென்கிறாயே! இந்த ஜன்மத்தைப் பற்றிய உண்மையை இப்பொழுது தெரிந்துகொள்; மற்ற ஜன்மங்களைப் பற்றிய உண்மையெல்லாம் தானே தெரியும். இப்போதுள்ள இச்சிற்றறிவை வைத்துக் கொண்டே இவ்வளவு கஷ்டப்படுகிறாய். இன்னும் அதிக அறிவை மனத்தில் ஏற்றிக் கொள்வானேன்! இன்னும் அதிகக் கஷ்டப்படவா?

கே: படித்தவனுக்குக் குருகிருபை தேவையில்லாததால் அவன் ஞானோதயத்துக்கு விசேஷ யோக்கியதையுடையவனல்லவா?

ப: படிப்பற்ற ஞானியின்முன் பண்டிதனும் பணிய வேண்டியதுதான். எழுத்து வாசனையில்லாதது அறிவின்மைதான். படிப்போ, கற்றும் அறிவின்மை. இரண்டு பேரும் உண்மை லக்ஷியத்தை அறிந்தவரல்லர். வேறோர் விதத்தில் ஞானியும் அறியாதவனே; ஏனென்றால் அவனுக்கு ஒரு லக்ஷியமுமில்லை.

கே: ஆத்ம ஞானமடையக் குரு உதவி செய்வாரா?

ப: குரு உன் கையைப் பிடித்துக்கொண்டு காதில் ஓதுவாரா? நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே அவரும் இருப்பதாக நீ எண்ணிக் கொள்ளலாம். உனக்கு உடம்பிருப்பதனால் அவருக்கும் உடம்பிருக்கிறதென்றும் உனக்கு அவர் ஏதோ பிரத்தியக்ஷ அனுகூலம் செய்வாரென்றும் நீ கருதுகிறாய். ஆனால் அவர் வேலை அந்தரங்கத்தில் ஆத்ம சம்பந்தமானது.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

source::::: input from a friend of mine
Natarajan