” என்னை சங்கராசார்யா என்று சொல்லுவார்கள் “!!!

அம்பத்தூரில் வசித்த கம்பெனி தொழிலாளி ஒருவர். அவர் மனைவி ஒரு நோயாளி. அவருக்குப் பிறந்த பிள்ளைகளோ பொறுப்பு இல்லாமல் தறுதலையாக அலைந்தார்கள். இப்படி சிரமங்களையே சந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு நண்பர் ஒருவர். மகானின் பக்தர்.

“கருணைக் கடலாக இருக்கும் காஞ்சி மகானிடம் ஒரு தடவை சென்று தரிசித்தபின் அவரது ஆசியைப் பெற்றுக்கொண்டு வா. உன் சிரமங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்”, என்று யோசனை சொன்னார்.
அப்போதிலிருந்து அவரது மனதில் “காஞ்சி மகானைப் பார்க்க வேண்டும்” என்கிற எண்ணம் வேர் விட ஆரம்பித்தது.

தொழில் சம்பந்தமாக அவர் வெளியூர் செல்லும்போது காஞ்சி வழியாகப் போகும் சந்தர்ப்பம் வரவே, காஞ்சியில் இறங்கி யாரிடமோ வழிகேட்டு வரும்போதுதான் அவரது மனதில் அந்த எண்ணம் தோன்றியது.

“உலகோர் போற்றிப் புகழும் நிலையில் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக நிற்க, பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் இந்த சாமியாரைத் தான் எப்படிப் பார்ப்பது” என்கிற எண்ணத்துடன் இவர் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தார்.

இவர் எதிர்பார்த்த மாதிரி ஆடம்பரங்களோ..ஆரவாரம ;ோ ஏதும் தென்படவில்லை.

“அந்த சாமியார் வேறு எங்கோ போய்விட்டார் போலிருக்கிறது” என்று இவர் நினைத்துக் கொண்டார். தனக்கு விடிவுகாலம் பிறக்க அவரிடம் ஆசி பெறலாம் என்று வந்த அவரது கடுகளவு ஆசையும் மறையத் தொடங்கியது.

யாரிடம் போய்க்கேட்பது? ஆள் அரவமே இல்லையே என்று அவரது கண்கள் தேடியபோது, ஒரு பெரியவர் மட்டும் அவரது கண்களில் தென்பட்டார்.

வந்தவர் அவரிடம் கேட்டார்.

“இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே. அவர் எங்கே போயிருக்கார்?”

“அவரையா பார்க்க வந்தேள்? யார் சொல்லி அனுப்பினா?”

இந்தக் கேள்வியும் அவரது அமைதியான முகபாவமும் வந்தவரின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின. அதனால் வந்தவர் தனது குடும்ப சூழ்நிலையையும் தற்போது ஏற்பட்டுள்ள வறுமையான சூழ்நிலையையும் சொல்லி, தன் நண்பர் ஒருவர் இங்கே இருக்கும் சாமியாரைப் பார்த்து ஆசிகள் வாங்கச் சொன்னார் என்றார்.

“அவர் கிட்டே சிரமங்களைச் சொன்னா தீர்வு கிடைக்குமா என்ன?” கேள்வி பிறந்தது அவருக்கு.

வந்தவரோ, ‘இந்த வயதான கிழவர் தன்னிடம் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார்’ என்று நினைத்தார்.

வயதான பெரியவர் தொடர்ந்தார்.

“சிரமம், சிரமம்னு சொல்றியே.. அதை ஏன் நீ படறதா நினைக்கிறே.. அந்தப் பாரம் உன்னோடது இல்லையின்னு நீ நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே…”

இது எப்படி சாத்தியம் என்று வந்தவருக்கு மனதில் சந்தேகம்.

“அது எப்படி சாமி? நான்தானே அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்க வேண்டிருக்கு. என் கஷ்டங்களை வேறு யார் சுமப்பா?”

வயதான பெரியவர் சிரித்தபடியே சொன்னார்.

“இப்போ ஊருக்குப் போறோம்னு வையுங்க. உங்களோட பெட்டி, மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும் சுமந்துண்டு போய்த்தானே ஆகணும்? அப்ப என்ன பண்றோம்? யாராவது கூலியாள் கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம் இல்லையா? அது போலத்தான் நாம படற சிரமங்களை நம்மது இல்லே, பகவான் பார்த்துப்பான்னு பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது.

இதைக் கேட்ட அம்பத்தூர்காரருக்& #2965;ு கொஞ்சம் மனத்தெளிவு ஏற்பட்டது போல் இருந்தது.

அவர் வயதான பெரியவரைப் பார்த்து,

“பெரியவரே இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போல இருக்கு. என்பாரம் உன்னோடதுன்னு பகவான்கிட்டே சொல்லிடறது நல்லதுதான். நீங்கள் சொல்ற மாதிரி இந்த சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப் போகலாமுன்னு வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே..

எனக்கு உடனே மெட்ராஸ் போயாகணும். காத்திருந்து அவரைப் பார்க்க முடியாது. எனக்கு இன்னமும் நல்ல காலம் வரலே போலத் தோணுது.

ஆனா உங்களாண்டை பேசினதுனாலே மனசுக்குக் கொஞ்சம் இதமாக இருக்கு. ஆமா நீங்க யாரு? இதே ஊரா?”என்று கேட்டார்.

வயதான பெரியவர் முகத்தில் சிரிப்பு.

“என்னை இங்கே சங்கராச்சார்யார்ன& #3009; சொல்லுவா” என்று சொன்னதும் அம்பத்தூர்காரருக்& #2965;ு இன்ப அதிர்ச்சி. வியப்போடு அந்த எளிமையின் உருவத்தைப் பார்த்தவண்ணம் ஒன்றுமே தோன்றாமல் மலைத்து நின்றார்.

அதுவரை அந்த மனித தெய்வத்திடம் அஞ்ஞானமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சற்றே திரும்பிப் பார்க்க, அந்தத் தவமுனிவரைத் தரிசிக்க ஒரு பெருங்கூட்டமே காத்திருந்தது.

இத்தனை நேரம் ஒரு மாபெரும் மகானிடம் சர்வ சாதாரணமாக பேசி, அவரிடம் யோசனைகள் பெற்றதை எண்ணி அந்தப் பக்தர் வியந்தார்.

“நமஸ்காரம் பண்ணிக்கிறேன்” என்ற பக்தரை ஆசிர்வதித்தார் மகான்.

யாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல் விலகின…..

source: http://www.periva.proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3752#ixzz2M5hdRP00

Thiruneermalai….A Temple Which Witnessed the Wedding of MS and Kalki Sadasivam!!!!

The temple at Tiruneermalai - Photo: Special Arrangement

The temple at Tiruneermalai – Photo: THE HINDU
Column By V.Sriram  in The Hindu….

Last week, I went in the company of friends to the hill temple of Tiruneermalai just off Chromepet. It is one of the historic shrines around the city that I had been meaning to visit for years. Picturesque beyond description, it comprises as can be seen in the picture, a large tank, a hill and two temples, one at the base and another at the top. Rather uniquely, Vishnu is in four postures, standing, sitting, reclining and walking.

Considering that Bhoothathalwar (7 century CE) sang in praise of the Lord here, the temple must be of Pallava vintage. However, there is nothing of that period left to see for then, it probably was an edifice of brick and wood that perished over time. The Cholas rebuilt it with stone in the 9 century and the rulers of Vijayanagar extended it in the 14 and 15 centuries. The work of the last named period is evident in abundance here though the sanctum is probably Chola.

Inscriptions are in plenty all around the two temples, making them an epigraphist’s delight. These pertain to Chola, Pandya and Vijayanagar times. When you also consider that this is also a site of megalithic importance, you can see that Tiruneermalai has been a continuing witness to historic development over ages.

When Tirumangai Alwar of the 8 century came here and sang his 19 verses, the hill was completely surrounded by water. This must have been a frequent phenomenon, giving the place its name. Several historic accounts note the presence of water and lush green groves. And it is not so surprising considering that Chennai and its environs were once noted for their water-bodies. Even now, Tiruneermalai has plenty of water in its vicinity — apart from its own tank there is the Pallavaram Periya Eri, the Kadapperi and the Pallikaranai Marsh.

In the 19 century, the temple came to be governed by Venkatachala, a rich dubash. The Sanskrit work Sarvadeva Vilasa, (translated by Dr V Raghavan) notes that Venkatachala rebuilt the temple tower and car. The latter now stands outside the lower temple, shrouded in plastic sheets. The book has a fascinating description of a soiree conducted by Venkatachala in a large grove near the temple. Performing in it were the courtesans of the patron and Sonti Venkataramanayya, the guru of the noted Carnatic music composer Tyagaraja.

The British appear to have not considered the temple of importance though there are unverified stories that Clive camped here during the Arcot wars. In the 20 century, Tiruneermalai became the venue for unostentatious weddings, the most famous being that of MS Subbulakshmi and T Sadasivam in July 1940, with Kasturi Srinivasan of The Hindu being witness. The place also became notorious as the venue where lovers, fearing parental wrath, got surreptitiously married, earning it the sobriquet of ‘Thiruttuthali Malai’. But that is another story.

Was Hitler A Vegetarian ?!!!?

was Hitler a vegetarian ?….By Roya Nikkhah in THE TELEGRAPH UK

Natarajan

Margot Woelk, 95, said that Hitler ate only the freshest fruit and vegetables during the two and a half years that she was forced to check his food for traces of poison.
During the Second World War, Mrs Woelk, a German citizen whose husband had been sent to fight, was taken by the SS to Hitler’s Eastern Front headquarters in modern-day Poland, known as the “Wolf’s Lair”.
There, she joined a team of a dozen other women whose job it was to protect Hitler from any attempts to poison him.
She said: “Between 11 and 12 o’clock, we had to taste the food, and only after all of us had tried it was it driven to the headquarters by the SS.
“It was all vegetarian, the most delicious fresh things, from asparagus to peppers and peas, served with rice and salads. It was all arranged on one plate, just as it was served to him. There was no meat and I do not remember any fish.
“Of course I was afraid. If it had been poisoned I would not be here today. We were forced to eat it, we had no choice.”

Hitler’s apparent enthusiasm for vegetarianism reflected the Nazi obsession with Aryan bodily purity.
A Hitler Youth manual from the 1930s promoted soya beans, which it called “Nazi beans” as an alternative to meat.
In 1942, Hitler told Joseph Goebbels that he intended to convert Germany to vegetarianism when he won the war.
But although he referred to meat broth as “corpse tea”, he was not fastidious about declining meat. Dione Lucas, his cook before the war, claimed that he was a fan of stuffed pigeon and he was also known to be partial to Bavarian sausages and the occasional slice of ham.
His table manners also came under scrutiny. In a secret diary, one German soldier wrote: “Hitler eats rapidly, mechanically. He abstractedly bites his fingernails, he runs his index finger back and forth under his nose, and his table manners are little short of shocking.”
Hitler spent 800 days at the Wolf’s Lair between 1941 and November 1944, when he abandoned it as the Russians approached.
Mrs Woelk is believed to be the only surviving member of Hitler’s food tasting team.
Shortly before his camp fell to the Russians, she was smuggled out and helped back to Berlin by a sympathetic soldier.
“He put me on Goebbels’s train and I got out,” she said. It is thought that the other women with whom she worked were shot by the Russians.
In 1946, Mrs Woelk was reunited with her husband, Kurt, whom she had presumed dead. The couple lived together until his death in 1990.

Apple Computers….A Look at iPad mini 2012 alongwith apple1 1976 !!!!

 Apple products are admired for their sheer designs. By designs it means everything from exterior looks that catch yours eye balls to interior hardware that gives joys of a superbike ride. As all the nice things come with the antecedent stories that tell about their evolution; Apple’s designs are no exception.

Apple I: 1976

 

It was in the spring of 1976 that Apple released the Apple I, and it is the first product to come out of their company housed in a garage. This personal computer was designed and hand built by Steve Wozniak. The project was financed by Steve Jobs by selling his VW van and Wozniak, by selling his HP-65 calculator. It was demonstrated in July 1976 at the Homebrew Computer Club in Palo Alto, California.

 
Unlike other hobbyist computers of its day, which were sold as kits, the Apple I was a fully assembled circuit board containing about 60+ chips. The Apple I’s built-in computer terminal circuitry was distinctive— all one needed was a keyboard and an inexpensive television set. This made the Apple I an innovative machine for its day.

 


“The evolution of the Apple Mac computers is a timeline of Silicon Valley,” says Silicon Valley graphic designer Steve Yamaguma of Design2Market.

 iPad: 2010

 
The first iPad was released on April 3, 2010, and it loudly declared Apple’s design powers. The hardware design of the iPad re-introduced a form factor that had labored to become mainstream, but this time Apple’s timing couldn’t have been better. Mobile computing was fast gaining in popularity. The clean, elegant look of the iPad made rival netbooks look cheap and boring, which quickly led to their demise.

 
“The iPad challenged our traditional way of work and play and opened up a new realm of possibilities in how we live our daily lives,” says Yamaguma.

 
Siri: 2011

 
Siri is an application which acts as intelligent personal assistant and knowledge navigator that can recognize natural language. This software product from Apple is in this list for its “design” represents something bigger to Apple’s image and the future of computers.

 

“The pursuit of technology into the future will render technology ubiquitous and invisible,” says Yamaguma.

 
 iPad Mini: 2012

 
iPad mini was announced on October 23, 2012 and is a mini version of Apple’s popular iPad. This device offers Apple’s design and expertise in a cheaper way.

 

source:::::silicon india net

Natarajan

 

 

 

 

This Tablet is not Available in Chemist Shop !!!!

Before We were exposed to Computer ….

Memory was something related to our Mind!!!

An Application was for the Employment !!!

A Program was a TV show!!!

A Keyboard was identified with Piano and Typewriter!!!

A Web was a Spider”s home!!!

A CD was a BANK Deposit account!!!

A Hard Drive was a long trip on the Road !!!

A Mouse Pad was a place where mouse lived!!!

A Net was a Fishing net or Mosquito net !!!

A Screen was a TV screen !!!

A Hardware was linked to a Timber store !!!

A Software was a Soft footwear!!!

A Window was identified with every home!!!

AND last But not the least …a TABLET was available only in Medical shop !!!!

source ::::unknown

Natarajan

“அனுஷா ” என்று பெயர் வை ….சொன்னது மகாபெரியவர் !!!

மகான்கள் நம் கனவில் வருவதுற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் . அந்த கனவு நனவாகும் போது கிடைக்கும் மகிழ்சிக்கு அளவே கிடையாது .

இந்த கணவன் மனைவிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நேரத்தில், ஒரு நாள் அந்த மனைவியின் கனவில் பரமாச்சார்யார் வருகிறார். அவர்கள் வீட்டிற்குள் வந்து எல்ல இடத்தையும் பார்த்து விட்டு, பூஜை அறையும் பார்த்து விட்டு வெளியே செல்கிறார்.

அச்சமயம் , அந்த பெண் ஆசார்யரிடம், என் குழந்தையை பார்த்து ஆசீர்வாதம் பண்ணுங்கோ என்கிறார். அதற்கு, மகான், நீ குழந்தையை அங்கே கொண்டு வா என்கிறார் . அத்துடன் கனவு கலைகிறது..

அது முதல் , அந்த பெண்மணிக்கு காஞ்சிபுரம் சென்று ஆசார்யாராய் தரிசனம் செய்ய வேண்டும் என்று தவிப்பு.

தன கணவனுடன், குழந்தையை எடுத்து கொண்டு, காஞ்சிபுரம் சங்கர மடம் செல்கிறார். அங்கு ஆச்சர்யாளை பார்க்க காலையில் பெருங் கூட்டம். . கையிலோ மூன்று மாத குழந்தை. இருப்பினும் அந்த பெண்மணி மனம் தளரவில்லை . எவ்வளவு நேரமானாலும் பெரியவாளை தரிசனம் செய்யாமல் செல்வதில்லை என்ற முடிவோடு குழந்தையுடன் அங்கேயே அமர்கிறார். மாலை வருகிறது .. ஆசார்யாள் தரிசனம் ஆரம்பம்.

அப்பொழுது, ஒரு அணுக்க தொண்டர் ஒருவர், அந்த பெண்மணியிடம், குழந்தையை பெரியவாளிடம் கொடுக்க சொல்கிறார். பெரியவா அந்த மூன்று மாத குழந்தையை தன் மடியில் வைத்து கொண்டு வைத்து கொண்டு, கொழந்தைக்கு பெயர் வைச்சாச்சா என்று கேட்கிறார். இல்லை என்கிறார் அந்த தாய். அப்படி என்றால் இவளுக்கு காமாக்ஷி என்று பெயர் வை என்கிறார். அதற்கு அந்த பெண்மணி, என்னுடைய பெயர் காமாக்ஷி என்கிறார். பிறகு மகான், அப்படினா இவளுக்கு ” அனுஷா ” என்று பெயர் வை என்கிறார் . மகான் திரு வாயால் பெயர் பெற்ற குழந்தை . தன்னிடம் 20 -30 நிமிடங்கள் வைத்து கொண்டு பிறகு குழந்தையை தாயிடம் திரும்ப கொடுக்கிறார்.

மகான் தன மடியில் குழந்தையை வைத்து கொண்டு இருப்பதை பார்த்ததில் அங்கு கூடி இருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யம். அப்பொழுது , அந்த பெண்மணிக்கு, மகான் கனவில் வந்து, ” கொழந்தையை அங்கே கொண்டு வா ” என்று சொன்னதின் அர்த்தம் விளங்கியது.

மஹா பெரியவரை தரிசனம் செய்வதற்கே ஒரு கொடுப்பினை வேண்டும். அவரிடம் ஆசி பெறுவதற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

எங்கும் நிறைந்த அந்த பரப்ருமம் மடியில் இருக்க அந்த குழந்தை செய்த தவம் யாரறிவார் !! அந்த பரப்ருமமே அறியும் !!

source::::www.periva.proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3725#ixzz2LdbiAobG

நன்றி மறவா ஜீவன் !!!

1927ம் ஆண்டில் காஞ்சி மடத்திற்கு ஒரு நாய் வந்தது. மகாபெரியவரின் பார்வையில் அது பட்டது. அது அங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.

அந்த நாய் மடத்தில் கொடுக்கும் உணவை மட்டுமே சாப்பிடும். மடத்திற்கு வருபவர்கள் என்ன கொடுத்தாலும் சாப்பிடாது. தெருப்பக்கம் போனாலும், அங்கே கிடைப்பவற்றையும் உண்ணாது. தினமும் அதைக் குளிப்பாட்டி, நெற்றியில் திலகமிடுவார்கள். பெரியவரைக் காணவரும் பக்தர்களுக்கு எந்த இடைஞ்சலும் செய்யாது. மடத்தின் கால்நடைகளையும், பொருட்களையும் பாதுகாக்கும். மடத்து ஊழியர்கள் கண்ணயர்ந்து விட்டால், இது தூங்காமல் விழித்திருக்கும். நாயின் இந்த குணத்தை அறிந்த பெரியவர் ஒவ்வொரு நாள் மாலையிலும் புன்னகையுடன், “நாய்க்கு உணவு கொடுத்தாகி விட்டதா?” என்று வாஞ்சையுடன் கேட்பார்.

சில நேரங்களில் ஊழியர்கள் உணவிட மறந்து விட்டால், பட்டினியாகவே கிடக்கும். பெரியவர் உபவாசம் (உண்ணாநோன்பு) இருக்கும் நாட்களிலும் அது சாப்பிடாது.

பெரியவர் மற்ற ஊர்களுக்கு முகாமிட பல்லக்கில் செல்லும் போது, பல்லக்கின் அடியிலேயே நாயும் செல்லும். யாத்திரை கிளம்பினால், அவருடன் செல்லும் யானையின் கால்களுக்கு இடையில் நடக்கும்.

ஒருநாள், பெரியவர் ஒரு ஊரில் முகாமிட்டிருந்தபோ& #2980;ு, சிறுவன் ஒருவன் அதன் மீது கல்லை வீசியதில் காயம் ஏற்பட்டது. நாய் வலி தாங்காமல் குரைத்துக் கொண்டே இருந்தது. பெரியவருக்கு தெரிந்தால் என்னாகுமோ என பயந்த மடத்து அதிகாரிகள், “”நாயை ஏதாவது ஊரில் விட்டு வந்து விடுங்கள்,” என உத்தரவிட்டனர்.

ஊழியர்களும் அதைப் பிடித்துக் கொண்டு, 40 கி.மீ., தள்ளி இருந்த ஒரு கிராமத்திற்கு கொண்டு சென்று கட்டிப் போட்டு விட்டு வந்து விட்டனர். ஆனால், நாய் விட்டதா என்ன…! கட்டை அறுத்துக்கொண்டு, ஊழியர்கள் மடத்திற்கு திரும்பும் முன்பே, வேறு ஏதோ வழியில் முகாமுக்கு வந்து விட்டது.

அன்றுமுதல், அது உயிர் வாழ்ந்த வரை, மகாபெரியவரைத் தரிசிக்காமல் சாப்பிட்டதில்லை. பெரியவரைத் தரிசிக்க வரும் பக்தர்களெல்லாம், இந்த அதிசய நாயையும் பார்த்துவிட்டே செல்வார்கள்.

பக்தி என்பதே நன்றி மறவாமை தான்! ஆம்..நன்றி மிக்க இந்த நாயின் பக்தி நமக்கும் நன்றி மறவாமல் இருக்க பாடம் கற்றுத்தருகிறது.

source::::www.periva.proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3701#ixzz2LWAENAVq

An Open Letter From a Senior Citizen !!!

Senior citizens are constantly being criticised for every conceivable deficiency of the modern world, real or imaginary. We know we take responsibility for all we have done and do not blame others.

HOWEVER, upon reflection, we would like to point out that it was NOT the senior citizens who took

The melody out of music;

The pride out of appearance;

The courtesy out of driving;

The romance out of love;

The commitment out of marriage;

The responsibility out of parenthood;

The togetherness out of the family;

The learning out of education;

The service out of patriotism;

The Golden Rule from rulers;

The nativity scene out of cities;

The civility out of behavior;

The refinement out of language;

The dedication out of employment;

The prudence out of spending;

The ambition out of achievement or

God out of government and school.

And we certainly are NOT the ones who eliminated patience and tolerance from personal relationships and interactions with others!!

And, we do understand the meaning of patriotism, and remember those who have fought and died for our country.

Just look at the Seniors with tears in their eyes and pride in their hearts as they stand at attention with their hand over their hearts!

source::::input from a friend of mine…
Natarajan

World Radio Day….13 Feb…

February 13 is the WORLD RADIO DAY… Why do we need to celebrate this Day ?The Radio is an integral part of people”s lives. In those days before the advent of TV , radio brought the family together to listen to news, music and drama.

Radio continues to play the role of family unifier bringing in its wake music and local news.

Here are some fun facts about Radio….

#Radio is ranked Number 2 in the list of 101 Gadgets that changed the world according to History Channel..

# One incident that truly demonstrated the power of Radio way back in 1930s is the dramatisation of H.G.Well”s “THE WAR OF WORLDS”. On October 30 1938, a regular radio programme was interrupted by a news bulletin announcing the invasion of Earth by Martians, and what followed was utter panic and chaos !!! It was later found that the radio adaptation of the science fiction was altered to present it in a more realistic way !!!!!

# Today there are over 100000 radio stations around the world. Worldwide, there are more than Two Billion radio sets in use….a proof that video never killed the radio !!!!

Keep listening music and news over your Radio Receiver ….

source:::: THE HINDU

Natarajan

பூக்கார அம்மாவுக்கு கிடைத்த பெரியவா பாதுகை !!!

[image]

காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள் பெரியவாளை “அப்பா” என்றுதான் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள்.பெரி யவா “ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்கு காசு கிடைக்குமே!” என்பார். “காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்” என்பாள். பூக்காரி.

மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும் எழுப்பக் கூடாது. ஆனால், இந்தக் காமாட்சி மட்டும் விதிவிலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம். ஏனெனில், பெரியவாளே அவளிடம், ” நீ உன் வியாபாரத்தை முடித்துக் கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு வரக் கூடாது!” என்று கட்டளை இட்டிருந்தார்.அவளத ு பிழைப்பை தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?

ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை 9 மணி நியூஸ் கேட்டுச் சொல்லச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந& #3021;தார். வேதாந்த தத்துவங்கள் ஒரு புறம் இருந்தாலும், உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகு படுக்கப் போக நாழி ஆகிவிடும். அன்று, புதுக்கோட்டையிலிர& #3009;ந்து “ஜானா” என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை செய்து கொண்டு வந்திருந்தாள். அதைக் காலை முதல் பெரியவா கழற்றவேயில்லை. படுக்கைக்குப் போகு முன் கொட்டகை சென்று, தேகசுத்தி பண்ணிக் கொண்டு வரச் சென்றார். அப்போது நியூஸ் படிக்கும் நாகராஜன், “இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான்தான் எடுத்துக்கொள்வேன், என்னிடம் பெரியவா பாதுகையே இல்லை!” என்று கழட்டுவதற்குக் காத்திருந்தார். பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தா& #2992;். பூக்காரி வந்து நமஸ்காரம் செய்தாள். பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம், “இது உனக்குத்தான், எடுத்துக்கோ!” என்றார்.

“நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!” என்று நாகராஜன் குறையோடு திரும்பினார். அப்படிப்பட்ட அன்புக்கு அந்த ஏழைப்பூக்காரி பாத்திரமாயிருந்தா& #2992;். எத்தனையோ பேர் அவளிடம் லட்ச ரூபாய் தரோம், இந்தப் பாதுகையைக் கொடு என்றனர். அவள் அசையவேயில்லை. பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்தார்.அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி,வண்டியாக கல்யாண சாமான்கள் அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல் ஏதாவது பழம் முதலியன போட்டுத்தான் அனுப்புவார்.அவர் மறைவுக்குப் பின் வெறுங்கூடையைப் பார்க்கவே வருத்தமாக இருந்தது. “அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா!” என்று புலம்பினாள். கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திவளுக்க& #3009; தூக்கிவாரிப்போடும& #3021;படி அதிஷ்டானத்திலிருந& #3021;து ஒரு சம்பரத்தைப் பூ யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது.

இது போல் பல நிகழ்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பிரத்தியட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார்.

நம்பினோர் கெடுவதில்லை…..இது நான்கு மறை தீர்ப்பு.

Source: http://www.periva.proboards.com

Natarajan

Read more:http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3660#ixzz2Kgdf4xiu