Overnight Cooked Rice Soaked In PlainWater…Healthy Breakfast!!!… How ?

previous day’s cooked rice soaked in plain water

For the benefit of friends who do not know Tamil, the following message is made out and is being sent to all . I hope you will take advantage of the write-up and derive benefits and enjoy good health

During the good old days, there was no special practice of preparing hot morning break-fast, as we do now, among most South Indian families, except that, previous day’s cooked rice that was soaked in plain water the previous night was consumed the next day morning with some nutritious supplements such as fresh buttermilk, slightly-salted onions or other non-spicy pickles such as goose berry or lemon. This is an excellent, rich and the most nutritious food. This is known as ” Pazhaya Saadham” (meaning old rice) in Tamil and “Saddhi Annamu” or “Saddhennamu” (meaning cold rice) in Telugu.

An American Nutritionist, dietitian and scientist had researched on the food practices among various regions in the world and concluded that the South Indian tradition of consuming the previous day’s cooked rice soaked in plain water overnight, in the morning next day, as break-fast, is the best.

For centuries, this has been the staple food of many South Indian families, particularly of the low income groups. It is, of course, now replaced with fashionable hot break-fast.

It is found out that previous day’s cooked rice soaked in plain water is very compact and complete break-fast. It has the rare B6, B12 vitamins which are not otherwise easily available in other food supplements. This rice generates and harbours trillions of beneficial bacteria that help digestion and has many disease fighting and immunity developing agents. The bacteria that grow in the intestines due to this rice safeguard the internal organs and keep all organs battle fit and ready. Consuming this rice helps quicker digestion and wards off ageing, bone related ailments and muscular pains.

It is worth giving a try. The cooked rice can be soaked in an earthen vessel or vessels made of natural clay or rock. (In Tamil families, vessels made of natural rock, called as “Kalchatti” was used. Many South Indian families also use this even now though it is called by different names in other languages. Some families use this “Kalchatti” that is handed down to them since generations even. It is found to be free from harmful bacteria and other normal disease causing harmful elements.

” Brown Rice”is the best for this as its nutrients are retained intact.

You will be happy to know that the American Nutritionist had listed the following benefits that accrue to the body if you stick to the practice of consuming such soaked rice.

1. Consuming this rice as break-fast keeps the body light and also energetic.

2. Beneficial bacteria gets produced in abundance for the body.

3. Stomach ailments disappear when this is consumed in the morning, as, excessive and harmful heat retained in the
body is neutralized.

4. As this food is very fibrous, it removes constipation and also dullness in the body.

5. Blood pressure is normalised and hypertension subsides appreciably.

6. Body feels less tired due to this food as a result of which one feels fresh through out the day.

7. This removes allergy induced problems and also skin related ailments.

8. It removes all types of ulcers in the body.

9. Fresh infections are kept at bay due to consuming this rice.

10. It helps in maintaining youthful and radiant look.

Once you consume this, the body does not crave for tea or coffee. In the olden days, people who worked in the fields used to leave their houses in the early morning after consuming this soaked rice and worked hard for over 8 to 10 hours non-stop.

source:::input from my friend…

Natarajan

எத்தை தின்னால் பித்தம் தெளியும் !!!

வாதம்-பித்தம் -கபம்

”எதைத் தின்னால் இந்த ’பித்தம்’ தெளியும்? ஒருவேளை ’வாதக்’க் குடைச்சலாய் இருக்குமோ? நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு…”,என்கிற வசனங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கொழிந்து வருகிறது. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இவ்வரிகள் ரொம்ப முக்கியமானவை. இன்னும்கூட நம் பாட்டி தாத்தா இப்படிப் பேசிக் கொள்வதை, கிராமங்களில் மருத்துவரிடம் தம் நோயை அவர்கள் இப்படிச் சொல்வதை பார்க்க முடியும். நாகரீக அனாதைகளாகி வரும் இளையதலைமுறையான, இன்றைய ’கூகிள்’ தலைமுறைக்கு, இது புதுசு. லூலூபி பாடுவதில் இருந்து, வெண்பொங்கலுக்கு மிளகை எப்போ போடணும்?, மயிலாப்பூர்ல ஏழு சுத்து கை முறுக்கு எங்கே கிடைக்கும் –ங்கிற வரை எல்லாத்தையுமே கம்ப்யூட்டரில் தேடும் அவர்கட்கு இந்த ”வாதம் பித்தம் கபம்” எனும் வார்த்தைகள்- வரிவிலக்கு பெற்று வந்திருக்கும் தமிழ்ப் பட டைட்டிலோ என்று மட்டுமே யோசிக்க வைக்கும்.

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. அப்ப அதல்லாம் சித்தா ஆயுர்வேத டாக்டர்கள் சமாச்சாரமாச்சே.. நமக்கெதுக்கு? என நகர வேண்டாம். இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பு இருந்திருந்தது. ”ஐய்யோ..ஐஸ்கிரீமா? த்ரோட் இன்ஃபெக்‌ஷனாயிடும்! ரோட்டோர பரோட்டாவா..அமீபியாஸிஸ் வந்துடப் போகுது,” என்ற அறிவை வளர்க்கும் நாம், “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும். மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவை இந்த வாரம் கொஞ்சம் இப்படி தீட்டுவோமா?.
”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் – போன்ற அனைத்தையும் செய்வது. கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. இந்த மூன்று வாத பித்த கபமும் சரியான கூட்டணியாய் பணிபுரிந்தால் உடம்பு எனும் பார்லிமெண்ட் ஒழுங்காய் நடக்கும். ஒண்ணு ”காமன் வெல்த்”திலும்-இன்னொன்று அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் சேட்டை செய்தால்- ஒரே நோய்களின் கூச்சலும் குழப்பமும் தான் உடம்பு பார்லிமெண்ட்டில் ஓடும்.

இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது. ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை காசியில் விட்டு விடலாம். புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும். மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உனவ்பில் சேர்ப்பது வாத்தை குறைத்திட உதவும்.

பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு. இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். அரிசி அந்த விஷயத்தில் சமத்து.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) சாப்பிடணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரனமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பழு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.

ஆதலால் சந்தோஷம் கால்படி, சிரிப்பு அரைப்படி போட்டு, அதில் கண்டிப்பாய்“ நான்”-கிள்ளி நீக்கிப் போட்டு, விட்டுக்கொடுத்தலில் வேகவைத்து புன்னகையில் தாளித்தெடுத்து காதலோடு பரிமாறுங்கள். பித்தமென்ன மொத்தமும் அடங்கும்.

அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியை அச்சுபிச்சு இல்லாமல் காப்பதில், சமையல்கூடத்திற்கு சந்தேகமில்லாமல் பங்கு உண்டு.அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது முட்டாள்தனம். அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!

source::::input from a friend of mine…
Natarajan

சீடர்கள்…. திருடர்கள் !!!!….சொன்னது மகாபெரியவர் !!!!!

காஞ்சி மஹா பெரியவாள் ஒரு முறை, தரிசனத்துக்கு வந்தவாளை பாத்து…..

“இப்போ இங்கேந்து போறானே, அவன் பேர் என்ன தெரியுமோ ? ஸ்ரீ கண்டன். ஆனா, அப்படிச் சொன்னா, சர்க்காருக்கு விரோதமா ஆயிடும்…..

ஏன்னா, இனிமே “ஸ்ரீ”ன்னு சொல்லபடாது, “திரு”ன்னு தான் சொல்லணும்னு சர்க்கார் உத்தரவு…..

ஸ்ரீன்னா, லக்ஷ்மி-ன்னு மட்டும் நெனச்சுண்டு, அத திருன்னு மாத்தறா….ஆனா, பாம்புன்னு ஒரு அர்த்தம் உண்டு, அதனால தான் ஸ்ரீகண்டன் ன்னு பேரு…

ஸ்ரீகண்டன்னா, லக்ஷ்மிய மார்ல வெச்சுண்டிருக்கற பெருமாள் இல்ல…. அத கழுத்துல போட்டுண்டு இருக்கும் சிவன் தான் …அது தெரியாம, ஸ்ரீன்னாலே லக்ஷ்மி தான்னு மாத்தீருக்கா….”

சற்று அமைதிக்குப் பின், சிரித்தபடி…..

“இவன் ஸ்ரீ கண்டனோ …. திருக்கண்டனோ தெரியாது….
ஆனா இவன் திருடன்…..”

சற்று இடைவெளி விட்டு…..

“இவன் மட்டுமில்லே, நீங்க எல்லாருமே திருடர்கள்…. [ ]

ஸ்ரீமான் ஸ்ரீநிவாசன் இப்படி எல்லாத்தையுமே, சீமான் சீனுவாசன்னு தானே தமிழ்ல சொல்றோம்? அப்போ, ஸ்ரீ – சி எல்லாம் ஒண்ணு தானே? அதனாலே நீங்கள்ளாம், என் சீடர்கள்….. அதாவது, திருடர்கள்…..”

source:::::input from a friend of mine…
Natarajan

தமிழ் பொன்மொழிகள் சில…நம் .பொன்னான வாழ்வுக்கு !!!

ஒரு மனிதன் பண்பட சில நல்ல பொன் மொழிகள் …உண்மையிலே பொன்னான வார்த்தைகள் …

நம்மை உயர்த்தும் 7 குணங்கள் …

1. ஏழ்மையிலும் நேர்மை

2. கோபத்திலும் பொறுமை

3.தோல்வியிலும் விடாமுயற்சி.

4.வறுமையிலும் உதவும் மனம்

5. துன்பத்திலும் துணிவு

6.செல்வத்திலும் எளிமை

7.பதவியிலும் பணிவு.

நாம் அறிந்து கொள்ளவேண்டிய 7 படிப்பினைகள் …

1. சிந்தித்து பேசவேண்டும்

2.உண்மையே பேசவேண்டும்

3.அன்பாக பேசவேண்டும்

4. மெதுவாக பேச வேண்டும்

5. சமயம் அறிந்து பேச வேண்டும்

6. இனிமையாக பேசவேண்டும்

7.பேசாது இருக்கவும் பழக வேண்டும் !!!

source:::::unknown….input from a friend of mine…

Natarajan

சும்மா ஒரு தமாஷ் !!! கடி தமாஷும் கூட!!!!

மனைவி: ஏங்க, ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணணும்னு சொல்வாங்க. நம்ம கல்யாணத்துக்கு எத்தனை பொய் சொன்னீங்க?
கணவன்: ஒரே ஒரு பொய்தான் சொன்னேன்
மனைவி: அப்படியா? என்ன பொய் சொன்னீங்க?
கணவன்: உன்னைப் பிடிச்சுருக்குன்னு ஒரே ஒரு பொய்தான் சொன்னேன்

(வேகமாக மணியடித்தபடி சென்று
கொண்டிருந்த தீயணைப்பு வண்டியைப்
பார்த்துவிட்டு பக்கத்து வீட்டுப் பையன்)
இந்த வேகத்துல போனால், ஒரு ஐஸ் கூட விக்க முடியாது அங்கிள்!

ஒருவன் டீக்கடைக்குப் போனான்.
அவன் பெஞ்சுக்கு எதிரில் இன்னொருவன் டீ குடித்துக் கொண்டிருந்தான். அவனுடைய காலடியில் ஒரு நாய் படுத்துக் கிடந்தது. இவன் பயந்துபோய், “”உங்க நாய் கடிக்குமா?” என்று கேட்டான். அதற்கு அவன் “இல்லை’ என்றான். நிம்மதியாக உட்கார்ந்து ஒரு பிஸ்கட்டை இவன் வாயில் வைக்கப் போகும்போது, நாய் திடீரெனப் பாய்ந்து இவன் கையைக் கடித்துவிட்டது.
அலறியபடி இவன் கேட்டான்: “ஏம்ப்பா… உன் நாய் கடிக்காது என்றாயே?”
“ஆம். இது என்னுடைய நாய் இல்லை. என் நாய் வீட்டில் இருக்கிறது” என்றான் அவன்.

source::::input from a friend of mine..
Natarajan

நான் ஒரு தமிழன் ஆக பிறக்க வேண்டும் ….சொன்னது மகாத்மா காந்தி !!!!!

“ நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் ” இப்படி சொன்னவர் யார் தெரியுமா…? நம் தேச தந்தை காந்தியடிகள்…!

மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் ‘தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது’ என்று குறிப்பிட்டார்.

கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, ‘இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளு வரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்’ என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்…

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்.

இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், ‘நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே… இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்றார்.

தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம்…! தமிழன் என்று சொல்லடா !!!!!தலை நிமிர்ந்து நில்லடா !!!!

source:::::input from a friend of mine…
Natarajan

__._,_.___

பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் !!!

            பொங்கல் நல்வாழ்த்துக்கள் …பொங்க வேண்டும்  நல்ல பொங்கல்… பொங்கும் மங்களம் தங்க வேண்டும்
                                                                            நம்  இல்லத்திலும்  உள்ளத்திலும் !!!

சன்மிஷ்டை

ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும்; ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல் தேதியை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதை என்று ஒன்று உண்டு. இதனை “மகர சங்கராந்தி தேவதை’ என்று அழைப்பார்கள். இவ்விதம் 60 வருடங்களுக்கு தனித்தனி பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த தேவதைகளின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை- தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள். இத்தகைய புண்ணிய தினமான சங்கராந்தியன்று சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்திர அயனம் என்று பெயர். அன்றைய தினம் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார்.

அன்றைய தினம் சூரிய வழிபாடு செய்ய மிக உகந்த நாளாகும். எனவேதான் அன்று சூரியனுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம். சூரியனை வழிபடுவதால் உலகில்  அடைய முடியாதவையே கிடையாது. வேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. “நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே’ என்பதை வேதம் கூறுகிறது.

மேலும், சூரியன் ஆன்மா வைத் தட்டி எழுப்பி நல்வழிப்படுத்துபவர் என்பதை “ஓம் ய ஏஷோந் தராதித்யே ஹிரண்மய புருஷ’ எனப் புகழ்கிறது.

உடல் ஆரோக்கியத்தை அளிப்பதிலும் சூரியன் அருட்கடல் என்பதை வேதம், “ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்’ என்றும்; இதய நோயை நீக்குபவர் என்பதை “ஹ்ருத்ரோகம் மம சூர்ய ஹரிமாணம் ச நாசய’ என்றும் குறிப்பிடுகிறது. இவரே மழை பெய்யக் காரணம் என்பதை வேதத்தில் “யாபி ராதித்யஸத்பதி ரஸ்மிபிஸ் தாபி:’ எனக் கூறுப்படுகிறது. இதையே கீதாசார்ய னும், “ஆதித்யஜாஜாயதே வ்ருஷ்டி’ என்று கூறுகிறார்.

இத்தகைய சிறப்புமிக்க சூரிய பகவானைப் போற்றும் சூரிய நமஸ்கார மந்திரங்கள் யஜுர் வேதத்தில் 32 அனுவாகங்களாக உள்ளன. ரிக்வேதம் இவரைப் பற்றி “மஹா ஸௌரம்’ என்ற ஒரு துதியை வெளியிடுகிறது. சாமவேதம் சூரியனை “சுக்ரியம்’ என்ற ஒப்பற்ற துதியால் போற்றுகிறது.
சூரிய தேவனது பெருமையைக் கூறும் “அசதி உபநிஷத்’ என்ற உபநிடதத்தை ஜெபிப்பவர்கட்கு கண்நோய் ஏற்படாது என்றும்; இந்த கிரந்தத்தை ஜெபம் செய்வதால் எத்தகைய பயங்கரமான நோய் ஏற்பட்டிருந் தாலும் அதைப் போக்கிவிடலாம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பாண்டவர்கள் விராட நகரத்தில் அஞ்ஞாத வாசம் செய்தபோது, கீசகனால் துன்புறுத்தப்பட்ட திரௌபதி சூரியனை வேண்டி தன்னைக் காப்பாற்றுமாறு துதித்தாள். அப்போது சூரியன் தனது தூதனை அனுப்பி கீசகனை விரட்டியதாக பாரதம் கூறுகிறது. மேலும் மகாபாரதத்தில் சூரியனுக்கு சித்திரை முதலான மாதங்களிலும் பன்னிரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. அவையாவன: மித்ரன், ரவி, சூரியன், பானு, சுகன், பூஷ்ணன், ஹிரண்ய கர்ப்பன், மரீசி, ஆதித்யன், ஸவிதா, அர்க்கன், பாஸ்கரன் என்பதாகும்.

பெண்கள் சூரியனுக்கு அர்க்யம் கொடுத்தால், ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் வைதவ் யம் (விதவைக் கோலம்) அடைய மாட்டார்கள் என்று கூறுகிறது. விதவைப் பெண்களை கஷ்டங் களினின்று காப்பவன் என்று சூரிய சஹஸ்ரநாமம் போற்றுகிறது.

சூரிய பகவானது கருணையை விளக்க சௌர புராணத்தில் ஒரு வரலாறு கூறப்படுகிறது. ஒரு காட்டில் தன் மனைவி, மக்களுடன் ஏழை ஒருவன் வசித்து வந்தான். ஒருநாள்அவனுக்கு காட்டில் எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லை. அன்று மாலை வரை தண்ணீர்கூட அருந்தாத அம்மனிதன் சூரியனை நோக்கி தற்செயலாகத் தன் குறையைக் கூறி புலம்பிவிட்டு தரையில் மயங்கி வீழ்ந்தான். இரவு முழுவதும் அவ்விதம் மயக்கத்தில் கிடந்தான். கண் விழித்து பார்த்தபோது அவ்வழியே வந்த அரசன் ஒருவனது பாதுகாப்பில் இருப்பதைக் கண்டான்.

தற்செயலாக இம்மனிதனைப் பார்த்த அரசன் அவனைக் காப்பாற்றியதோடு மட்டுமின்றி,  அவனது ஏழ்மை நிலை பற்றி அறிந்ததும்

அவனைப் பெரும் செல்வந்தனாகவும் ஆக்கிவிட்டான். இவையனைத்துக்கும் காரணம் அம்மனிதன் அன்ன ஆகாரமின்றி இருந்த தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகும். எனவே பானுவார விரதம் இருந்து சூரியனை வழிபட்டதால் இப்பேறு கிடைத்தது என்று சௌரபுராணம் கூறுகிறது.

மேலும் ராமாயணத்தில் வரும் சுக்ரீவன்  என்ற வானரனும், பாரதத்தில் வரும் கர்ணனும் சூரிய புத்திரர்கள் ஆவார்கள். வாலகில்யர்கள் எனப்படும் 60,000 முனிவர்கள் சூரியனது சீடர்கள் ஆவர். இவர்கள் மிகச்சிறிய வடிவம் உடையவர்கள். தண்டி, பிங்களன் என்பவர்கள் இவரது முக்கிய ஏவலர்களாகும்.

சூரிய பகவானை சிவாகமங்களும், அபிதான சிந்தாமணி, சூரிய உபநிஷத் போன்ற நூல்களும், ஜோதிட நூல்களும் புகழ்கின்றன. சூரியன் இல்லையேல் இவ்வுலகில் ஒளியும் உயிரினங் களும் இல்லை என்பதை மகாநாராயண உபநிஷத், “க்ருணி ஸூர்ய ஆதித்யோ ப்ரபாவாத்யக்ஷரம்’ என்று கூறுகிறது.

சூரியனை மேல்நாட்டார் அப்பல்லோ என்கின்றனர். இவருக்கு உரிய சமித்து எருக்கு ஆகும். சீர்காழிக்கருகில் உள்ள திருவெண்காட் டில் சிலப்பதிகாரம் புகழும் சூரியகுண்டம் உள்ளது. திருக்கண்டியூரில் மாசி மாதமும்; திருவேதிக்குடி, திருநாவலூரில் பங்குனி மாதமும்; சித்திரை மாதம் குடந்தைக் காரோணம் என்று புகழப்படும் நாகேசுவரன் கோவிலிலும் சூரிய பூஜை சிறப்பாக நடக்கிறது. அன்று கதிரவன் இத்தலங்களில் சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

தை மாதம் முதல் தேதியான மகர சங்கராந்தி தினத்தன்று திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் இறைவன் சிறப்பாக ஆராதிக்கப்பட்டு தீர்த்தம் கொடுக்கிறார்கள் பூஜை செய்வோர். மன்னார்குடி என்ற வைணவத் தலத்தில் சங்கராந்தி முதல் “ஸங்க்ரமண உத்ஸவம்’ சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது. மகர சங்கராந்தியன்றுதான் மதுரையம்பதியில் இறைவன் கல் யானைக்குக் கரும்பு அளித்த திருவிளையாடல் நடந்தது. சபரிமலையில் ஐயப்பனுக்குக்குரிய “மகரஜோதி தரிசனம்’ காண்பதும் இந்த புண்ணிய தினத் தன்றேயாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த உத்ராயண புண்ணிய காலத்தில் இறக்கும் ஜீவன்கள் நற்கதி அடைவதாகக் கூறப்படுகிறது. உத்தராயணத்தில் இறந்த உயிர்கள் முக்தி பெறுவதைப் பற்றி விவரிக்கும் பகவத்கீதை (அக்னிர் ஜோதிர் அஹ: சுக்ல: ஷண்மாஸா உத்தராயணம்’ என்று கூறுகிறது. மகாபாரதமும் மிகச்சிறந்த யோகியான பீஷ்மர் உத்தராயண புண்ணிய காலம் வந்தபின்பே தன் உயிரை விட்டார் என்றும் சிறப்பாக விவரிக்கிறது.

இத்தகைய பவித்ரமான உத்தராயண புண்ணிய காலம் தொடங்கும் மகர சங்கராந்தி தினத்தன்று நாம் அனைவரும் சூரிய வழிபாடு செய்து, கிரக தோஷங்கள் நீங்கி எல்லா வளமும் பெறுவோமாக!

என்றும்  உங்க இல்லத்தில்  சந்தோஷம் பொங்க , அன்புடன்  பொங்கல் நல் வாழ்த்துக்கள் …..
நடராஜன்

eBook on Anjaneyar on Hanumat Jayanthi !!!!

 

[image]

We are pleased to present to you the ninth ebook from our Forum – this is a special edition on Lord Anjaneyar which is getting released on the day of Hanumat Jayanti, and includes beautiful discourses of Sri Maha Periva on the Lord and a few interesting pieces of information and insight about the Vayu Putra. We humbly submit this ebook at the lotus feet of Sri Maha Periva and distribute this with His blessings to you all.

As you might be aware, this is the latest in the series of ebooks which we have brought out on “The Essence of Hindu Tradition & Culture”. If you are interested to take part in this seva as an author / co-author, or if you wish to submit your feedback on the same, please write to us at:kanchiperiva@gmail.com

We also invite you to regularly visit our parent websitewww.periva.orgwhich has a rich treasure of information, articles and a large collection of direct audio files of Periva’s Upanyasams.

Link to download the ebook:https://docs.google.com/open?id=0BwuDCferB6sJR1ZhZ2t6X0xBVTQ

Note that once the file opens up in Google, you can save it to your local drive (Ctrl+S works in most browsers) and view it at leisure. Some of the photos and letter layouts also look better in a local copy, rather than the online version rendered by Google.

Read more:http://periva.proboards.com/index.cgi?board=downloadlinks&action=display&thread=3408#ixzz2Hd3m0lAT

source::::kanchi perivaa forum..

Natarajan

அனுமன் ஜெயந்தி …ஒரு ஸ்தோத்ரம் தமிழில் ….

Temple images

அனுமன் ஜெயந்தியன்று அவரை வழிபடுவதற்காக இந்தப் பகுதியைத் தந்துள்ளோம். …..DINA MALAR…. TAMIL DAILY…….

* இடது கையில் மலையும், வலது கையில் தண்டாயுதமும் கொண்டவரே! பிரகாசிக்கும் குண்டலம் அணிந்தவரே! அனுமனே! உம்மை வணங்குகிறேன்.
* பட்டாடை அணிந்தவரே! மான்தோல் போர்த்தியவரே! பிரகாசிக்கும் கூந்தலை முடிந்தவரே! உம்மைச் சரணடைகிறேன்.
* ஆபத்தில் சிக்கியவர்களின் மனக்கவலையை போக்குபவரே! எதிர்பாராமல் வந்து உதவுபவரே! விபத்துகளில் இருந்து பாதுகாப்பு தருகிறவரே! உம்மை பணிகிறேன்.
* சீதையைப் பிரிந்த ராமனின் சோகம், பயத்தைப் போக்கியவரே!, ஆசைகளை விரட்டுபவரே! உம்மை நமஸ்கரிக்கிறேன்.
* கவலை, வியாதி, கிரகபீடைகளைப் போக்குகிறவரே!, அசுரர்களைக் கொன்று அடக்குகிறவரே! ராமனின் உயிருக்கும் உயிராக விளங்கும் அனுமனே! உம்மை வணங்குகிறேன்.
* செயல்பாடுகளை தடங்கல் இன்றி சாதிக்க உதவுபவரே! மிருகங்கள், திருடர்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிர்ப்பவரே! வாயுவின் பிள்ளையே! வானரங்களுக்கு உயிரானவரே! அஞ்சனை மைந்தரே! உமக்கு என் பணிவார்ந்த வணக்கம்.
* கருணை நிறைந்தவரே! கெட்டவர்க்கு கெட்டவரே!, அனைத்து செல்வங்களையும் தருபவரே! எனக்கு வெற்றியும், புகழும் அருள வேண்டுகிறேன்.
* அனுமனே! பயணம் செய்யும் போதும், தேசத்திற்காகப் போராடும்போதும், என்னை நோக்கிவரும் ஆபத்தைத் தடுத்து உதவ பிரார்த்தனை செய்கிறேன்.
* வஜ்ராயுதம் போன்ற சரீரமும், அளவற்ற தேஜஸும் உள்ளவரே! போர்க்களத்தில் அக்னியாய் திகழ்பவரே!, பிரம்மாஸ்திரத்தையே ஸ்தம்பிக்கச் செய்பவரே! ருத்ரமூர்த்தியே! உமக்கு நமஸ்காரம் செய்கிறேன்.
* அளவற்ற உற்சாகம் கொண்டவரே! எதிரிகளைச் சம்ஹாரம் செய்பவரே! உமது பக்தனாகிய எனக்கு தைரியத்தை தந்தருளும்.
* சுத்தமான மனதுடையவரே! ராமதூதர்களில் முதல்வரே! பாலசூரியனுக்கு ஒப்பான முகத்தை உடையவரே! கருணை பொங்கும் கண்களை உடையவரே! யுத்தத்தில் இறந்த வீரர்களை சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து பிழைக்கச் செய்தவரே! புகழத்தக்க மகிமை உள்ளவரே! அஞ்சனாதேவி செய்த புண்ணியத்தால் அவதரித்த அனுமனே! உம்மை தரிசித்து மகிழ்கிறேன்.
* எல்லா ஆசையையும் துறந்தவரே! தாமரை போல பெரிய கண்களும், சங்கு கழுத்தும், அழகும் பொருந்தியவரே! அனுமனே! உம்மைச் சரணடைகிறேன்.
* சீதையின் கஷ்டங்களை விலக்கியவரே! ராமனின் நினைவை உருவாக்குபவரே! துன்பப்படுபவர்களை காப்பாற்றுபவரே! ஆஞ்சநேயப் பெருமானே! இந்த ஸ்தோத்திரத்தைப் படித்த எங்களுக்கு நீண்ட ஆயுளையும், செல்வத்தையும் தருவீராக.

You may like to read this Stotra in Tamil on HANUMAN JAYANTHI day…JAN 11…..

Natarajan