கடவுளைவிட மேலானது நம்பிக்கை! ……

image1.JPG

பெரியவாளோட பரம பக்தர் ஒருவருடைய அனுபவம்…..

டெல்லியில் ஸென்ட்ரல் கவர்ன்மென்ட் உத்யோகம். 1974 ல் காலை ஆபிஸுக்கு வந்து அட்டன்டன்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்து போடப் போனபோது ….எங்கே போடுவது? என்றுகூட தெரியாத அளவு திடீரென்று பார்வை போய்விட்டது! பகவானே!  உடனேயே ஸப்தர்ஜங் ஹாஸ்பிடலுக்கு போய் காண்பித்தார். டாக்டர்களோ கண்ணாடி போட்டால்கூட பார்வை வருவது ஸந்தேஹம் என்று சொல்லிவிட்டனர். உடனே மெட்ராஸுக்கு வந்து அப்போதுதான் ப்ரபலமாகிக் கொண்டிருந்த டாக்டர் பத்ரிநாத்திடம் காண்பித்தார். 
அவர் எல்லா டெஸ்டும் பண்ணிவிட்டு  இது “போட்டோ கொவாகுலேஷன் ” என்று சொல்லிவிட்டார். அதாவது ரெடினாவை ஒரு திரவம்  மறைப்பதால்,உண்டாகும் ஒரு வ்யாதி. ஆபேரஷன் மூலம் அந்த திரவத்தை வற்றச் செய்யலாம். அதோடு ஒரு கண்ணாடியும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

என்ன ஆனாலும் பெரியவா தர்ஶனத்துக்கு அப்பறந்தான்! என்று மனஸை திடப்படுத்திக் கொண்டு, மறுநாள் தேனம்பாக்கத்தில் இருந்த பெரியவாளை தர்ஶனம் பண்ணப் போனார் டெல்லி பக்தர். நல்ல கூட்டம். அங்கே போனதும் இவர் மனஸில் ஒரு ஸங்கல்பம். “பெரியவாளா கூப்டு கேட்டாலொழிய அவர்கிட்ட எதுவும் சொல்லப் போறதில்லே” என்பதே! கிணத்தடியில் உட்கார்ந்திருந்த பெரியவா இவரையும் இவர் குடும்பத்தாரையும் எதுவும் கேட்காமல் ஆஸிர்வாதம் மட்டும் பண்ணினார்.

பக்தரும் குத்து மதிப்பாக பெரியவா இருந்த திசைக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, எதுவும் சொல்லாமல் வந்துவிட்டார். மறுநாள் கண்ணாடியுடன் டாக்டரை பார்க்கப் போனபோது கடைசி பொடி  எழுத்து வரை ஈஸியாக படித்துவிட்டார். டாக்டர் பத்ரிநாத்துக்கோ ஆச்சர்யம்!

“என்  மெடிக்கல் நாலெட்ஜை தாண்டி ஏதோ அதிஸயம் நடந்திருக்கு. ரெட்டினால நேத்திக்கு கசிஞ்சுண்டு இருந்த liquid இன்னிக்கு எப்டியோ ஒங்க ஸிஸ்டத்துக்குள்ள absorb ஆயிருக்கு” என்றார்.

“நேத்திக்கி பெரியவாளை தர்ஶனம் பண்ணினேன்….அவ்வளவுதான்!”

“என்னது? அவ்ளோவ்தானா! அதானே பாத்தேன்! மஹாவைத்யநாதன் ஒங்களுக்கு அனுக்ரஹம் பண்ணினதுக்கப்பறம் வேற யார் treatment குடுக்கணும்?…..” டாக்டர் பத்ரிநாத் பெரியவாளின் பரம பக்தராச்சே! 

அவ்வளவுதான்! பெரியவா என்ற தெய்வத்திடம் நாம் எதுவுமே சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதில்லை, என்ற பேருண்மையை  டெல்லி பக்தர் அன்றே அப்போதே ப்ரத்யக்ஷமாக உணர்ந்தார். ஆனாலும், நம் மனித மனம் ‘குரங்கு’ இல்லையா? பக்தருக்கும் ஒரு ஸந்தேஹம் வந்தது….. “கண் பார்வை வந்தது…ஒருவேளை ரொம்ப நாளானதால, automaticஆ, மங்கின பார்வை தானாவே  சரியாப் போய்டுத்தோ? இது இயற்கையா நடந்ததுதானோ?இதுல, நாமளா பெரியவாளோட கருணை…ன்னு, நடுவுல சொருகிட்டோமோ?” என்று அலைபாய்ந்தது.

‘கல்கி’ இதழில் அவருடைய கண் பார்வை கிடைத்த அனுபவம் வெளியாகியிருந்தது.  அதை படித்துக் கொண்டிருக்கும் ஸமயத்தில்தான் இந்த பாழாப் போன ஸந்தேஹம். இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, மேலே எதையுமே படிக்க முடியாதபடி பார்வை மங்கிவிட்டது! 
“ஈஶ்வரா! என்னை மன்னிச்சுடுங்கோ!பெரியவா! ஸாக்ஷாத் சந்த்ரமௌலீஶ்வரனோட க்ருபையை ஸந்தேஹப்பட்டுட்டேனே! மஹாப்ரபோ! அடியேனோட பார்வையை பிச்சையா போடுங்கோ!” கண்ணீர் வழிய வாய் விட்டு அலறினார்.

அடுத்த க்ஷணம்…….இதோ…..மந்தஹாஸமான புன்னகையோடு தண்ட கமண்டலுவோடு  இவருடைய  அனுபவத்தோடு வெளிவந்த பெரியவாளின் ஜோதிப்  பிழம்பான திவ்யமங்கள ரூபம் இவர் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது.

 
JAYA JAYA SHANKARA  HARA HARA SHANKARA
Source….Input from a friend of mine
Natarajan

Leave a comment