A to Z 🔔
🔔APPRECIATION – மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
> 🔔BEHAVIOR – புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்.
> 🔔COMPROMISE – அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள். நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
> 🔔DEPRESSION – மற்றவர்கள் நம்மை புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.
> 🔔EGO – மற்றவர்களை விட உங்களையே உயர்வாய் நினைத்துக் கர்வபடாதீர்கள்.
> 🔔FORGIVE – கண்டிக்கக்கூடிய அதிகாரமும் , நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
> 🔔GENUINENESS – எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக கையாளுங்கள்.
> 🔔HONESTY – தவறு செய்தால் உடனே மன்னிப்புக் கேட்பதைக்
> கௌரவமாக கருதுங்கள்.
> 🔔INFERIORITY COMPLEX – எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள் நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டு விடுங்கள்.
> 🔔JEALOUSY – பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே அழிக்கும்.
> 🔔KINDNESS – இனிய, இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
> 🔔LOOSE TALK – சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும், பின் அறியாமலும் பேச வேண்டாம்.
> 🔔MISUNDERSTANDING – மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளதீர்கள்.
> 🔔NEUTRAL – எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம் .பேசிவிட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.
> 🔔OVER EXPECTATION -அளவுக்கு அதிகமாகவும், தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.
> 🔔PATIENCE – சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்.
> 🔔QUIETNESS -தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்சனைகளுக்குக்
> காரணம் தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.
> 🔔ROUGHNESS – பண்பில்லாத வார்த்தைகளையும், தேவைஇல்லாத
> மிடுக்கையும் காட்டாதீர்கள்.
> 🔔STUBBORNNESS – சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
>
> 🔔TWISTING – இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை
> இங்கேயும் சொல்வதை விட்டு விடுங்கள்.
>
> 🔔UNDERESTIMATE – மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
>
> 🔔VOLUNTARY -அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று
> காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கு முதலில்
> காது கொடுங்கள். பின்பு அதற்கு பதில் கொடுங்கள்.
>
> 🔔WOUND – எந்தப் பேச்சும், செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
>
> 🔔XEROX – நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்தவேண்டும்.
>
> 🔔YIELD – முடிந்தவரை விட்டுக்கொடுங்கள். விட்டுகொடுப்பவன்
> கெட்டுப்போவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.
> 🔔ZERO – இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும்.
>
>Source…..unknown….Input from a friend of mine
Natarajan