
காஞ்சிபுரம் மாவட்டம் நீஞ்சல் மடுவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் பகுதியில் முற்றிலும் மூழ்கிப்போன குடியிருப்புகள். | படங்கள்: காஞ்சி கோ.கார்த்திக்

செங்கல்பட்டு நீஞ்சல் மடுவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மகாலட்சுமி நகர் பகுதியில் முதல்மாடியை நெருங்கி வரும் வெள்ளநீர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தச்சூர்-தேவாதூர் கிராமத்தில் விவசாய நிலங்களை மூழ்கடித்த வெள்ளம்.

கொளவாய் ஏரியின் வெள்ளப் பெருக்கால் செங்கல்பட்டு ஜேசிகே நகர் குடியிருப்புப் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

|
மதுராந்தகம் அடுத்த அருங்குனம் கிராமத்தில் தண்ணீரில் முழ்கியுள்ள நாற்றங்கால்.

பேசின் பாலம் அருகே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மெதுவாக இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில். | படம்: ச.கார்த்திகேயன்

சென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும் சைதாபேட்டை பாலத்தின் தடுப்பைத் தாண்டி குடியிருப்புகளை மூழ்கடித்து பாய்கிறது அடையாறு வெள்ளம்

மோசமான பாதிப்பை சந்தித்துள்ள கோட்டூர்புரத்தின் பிரதான சாலையை ஆக்கிரமித்து காட்டாற்று வெள்ளம் போல செல்லும் மழைநீர்

|
அசோக் பில்லரின் நான்கு திசைகளிலும் நீர் சூழ்ந்ததால் அசோக்நகர், கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

தி.நகர் தெற்கு போக் சாலையில் வெள்ளத்தில் சிக்கியவர் தெர்மாகூல் மீது டிஷ் ஆண்டானா பலகையை வைத்து அதன்மீது அமர்ந்தபடி பாதுகாப்பாக வெள்ளத்தை கடந்து வருகிறார் | படங்கள்: க. ஸ்ரீபரத்

சென்னை அருகே சிங்கபெருமாள் கோயில் விஞ்சூர் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் நீந்தி செல்லும் பேருந்து | படம்: காஞ்சி கோ.கார்த்திக்

|
ஆவடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழை நீர். இதனால் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

|
கூவம் ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்

அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்துக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அண்ணாசாலையின் முக்கிய பகுதிகள் இருளில் மூழ்கின. மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்த நீரை வெளியேற்ற முடியாமல் தவிக்கும் மின்துறை ஊழியர்கள்.

|
பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் எழும்பூரையும் இணைக்கும் கெங்குசாமி நாயுடு சுரங்கப்பாதையில் நீச்சல் குளம்போல நீர் தேங்கியிருக்கிறது.

சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் ரெட்டேரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியை ஒட்டிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் அதிகளவில் திறக்கப்பட்டதால் அடையாற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் கட்டிடத்தின் மேற்கூரையில் ஏறி உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்.

|
அனகாபுத்தூர் தரைப்பாலம் மூழ்கியுள்ள நிலையில் அருகிலுள்ள குடியிருப்புகளின் மேற்கூரையில் தஞ்சமடைந்த மக்கள்.

அடையாற்றின் மத்தியில் உள்ள மரத்தில் சிலர் சிக்கியிருப்பதாக பொதுமக்கள் கூறியதால், தேடும் பணியில் ஈடுபட்ட பேரிடர் மீட்புக் குழுவினர்.

|
அனகாபுத்தூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை அனுப்பி உதவும் தன்னார்வ இளைஞர்கள்.

மதுரவாயல்-தாம்பரம் பை-பாஸ் சாலையில் தண்ணீரில் மிதக்கும் வாகனங்கள். அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. | படங்கள்: ம.பிரபு











Source….’தி இந்து’ புகைப்பட நிருபர்கள்… http://www.tamil.thehindu.com
Natarajan
|
|
|
|
|
|
|