மனம் என்னும் மாயப் பேய் !!!
……………………
மனம் ஒரு குரங்குதான் …இல்லை என்று சொல்லவில்லை நான் !
இங்கும் அங்கும் அலையும் மனக் குரங்கை அடக்கி வைக்கும் ஒரு
குரங்காட்டியாக நீ இருக்கலாம்… தவறில்லை !
மனக் குரங்கு தறி கெட்டு நெறி தவறி அடங்கா குரங்காட்டம்
போடும் நேரம் உன் மனமே ஒரு பேயாக மாறும் ,உன்னை தன்
மாய வலையில் சிக்கவைத்து ..! உன்னையும் மாற்றும்
அந்த மாயப் பேய் தன் கூட்டத்தின் ஒரு அங்கமாக !
சிக்கவும் வேண்டாம் அந்த மாய வலையில் …மாயாவியாக
நீ மாறவும் வேண்டாம் !… ஒரு நல்ல குரங்காட்டியாக மட்டும்
நீ இருந்தால்! உன் மனக் குரங்கும் ஒரு குரங்காக மட்டுமே
அலையும் என்றைக்கும்… நீ போடும் “கோட்டை” தாண்டாமல் !
நல்லன ஏற்று அல்லன ஒதுக்கி உன் மன சிற்பம் நீ செதுக்கினால்
அல்லல் என்றும் இல்லை உனக்கு தம்பி ! உன்
மனம் என்றும் நல்ல மனமாக மணக்கும் …உன் வாழ்வும் இனிக்கும் !
இந்த ஊரும் நாடும் உன்னைப் போற்றி வணங்கும் !
Natarajan
http://www.dinamani.com on 17th oct 2016