பட்டாசு சத்தம்
……………
பட்டாசு சத்தத்தில் பறக்க மறந்தன பறவைகள் …கண்
திறக்காமல் பயந்து அழுதன சிறு குழந்தைகள் !
மறக்காமல் இனிப்பு சுவைத்து வாழ்த்துக்கள் சொன்னது
“பெரிய” மனிதர்கள் நாம் மட்டுமே ! ! ஆனால் …வெடித்த
பட்டாசு சத்தத்தில் நாமும் மறந்தது நமக்கு பட்டாசு கொடுக்கும்
அந்த சிவகாசி சிறாரின் அவல நிலையை !…வான வேடிக்கை
வெளிச்சத்திலும் நாம் நினைத்துப் பார்க்க மறந்தது ஒரு சிவகாசி தொழிலாளியின்
இருண்ட வாழ்க்கையை …! அது மட்டுமா ?
நீரின்றி வாடும் தன் நிலம் பார்த்து சத்தம் போட்டு
அழும் அந்த உழவனின் மனக்குமுறலை மறைத்ததும்
இந்த பட்டாசு சத்தம்தான் !
சுத்தமான காற்று சத்தமில்லாமல் தொலைந்து
மறைந்து போனதும் இந்த பட்டாசு சத்தம் போட்டு
விட்ட கரும் புகையினால்தானே !
தீப ஒளி மட்டும் ஏற்றி புத்தாடையுடன் பலகாரமும் நலிந்தோர்
வீட்டுக் குழந்தைகளுடன் பகிர்ந்து மகிழும் பண்பை நம் பிள்ளைக்கு
நாம் போதிக்க வேண்டும் ஒரு பால பாடமாக ! இந்த பாடம்
ஒரு நல்ல வித்தாகும் பட்டாசு சத்தமும் புகையும் இல்லா தீபாவளி
திருநாள் ஒருநாள் பூத்து மலர !
Natarajan
http://www.dinamani.com …on 1st Nov 2016