” எத்தனை எத்தனை கணபதி ” !!!!

பாலகணபதி:மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.

தருண கணபதி:பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டு கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.

பக்த கணபதி:தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நன்கு அமையும்.

வீர கணபதி:தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

சக்தி கணபதி:பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

துவிஜ கணபதி:இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.

சித்தி கணபதி:பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்கும் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பென் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.

உச்சிஷ்ட கணபதி:வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.

விக்னராஜ கணபதி:சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், ரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.

க்ஷிப்ர கணபதி:கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

ஹேரம்ப கணபதி:அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள்.

லட்சுமி கணபதி:பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

மகா கணபதி:பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

புவனேச கணபதி:விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.

நிருத்த கணபதி:மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதிரம் ஜொலிக்கும் ஆறாவது கையான துடக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில் ஆனந்த நடனமாடும் இவர் நர்த்தன கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

ஊர்த்துவ கணபதி:பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். பச்சை நிற மேனியுடன் விளங்கும் தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

source::::: Dinamalar …Tamil Daily

natarajan

ஐங்கரனின் ஆறு படை வீடு !!!


ஆனைமுகத்தான் விநாயகருக்குரிய ஆறுபடைவீட்டுக் கோவில்கள் இருக்கின்றன. முதல் படைவீடு திருவண்ணாமலை. கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு, “அல்லம் போக்கும் விநாயகர்’ வீற்றிருக்கிறார். வணங்குபவர்களின் அல்லலைக் களைவதில் இவர் நிகரற்றவராகத் திகழ்கிறார்.இரண்டாம் படைவீடாக இருப்பது விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில். காசிக்குச் சமமாகத் திகழும் இக்கோவிலில் “ஆழத்துப்பிள்ளையார்’ என்ற பெயரில் இவர் காட்சி தருகிறார். பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி இவரைத் தரிசனம் செய்ய வேண்டும். (காளஹஸ்தியிலும் இவ்வாறு ஒரு சந்நிதி உள்ளது) தனியாக கொடிமரம் இவருக்கு அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு. இவரை வழிபாடு செய்தபின் படியேறி மேலேறுவது போல், வாழ்வில் மேன்மைகளைத் தந்தருள்பவர் இப்பெருமான்.

வள்ளலாக விளங்குகிறார்:மூன்றாவது படைவீடு திருக்கடையூர் அபிராமி கோவில். இங்கு “கள்ளவாரணப்பிள்ளையார்’ என்ற திருநாமம் கொண்டுள் ளார். இவரை வழிபடுவோர் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று மகிழ்வர். அபிராமிப்பட்டர் அந்தாதியில் இவரைப் போற்றி வணங்குகிறார்.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், சித்தி விநாயகராக தன்னை நாடி வருபவர்களுக்கு வாழ்வில் சித்தியை (வெற்றியை) அருளும் வள்ளலாக விளங்குகிறார். அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் இவர் உள்ளார். “மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பதற்கேற்ப, அளவில் சிறியவர் என்றாலும், சக்தி வாய்ந்தவராக உள்ளார். (பிற்காலத்தில் முக்குறுணிப் பிள்ளையார் சன்னிதி உருவானதும் இவரது சந்நிதியில் வழிபாடு குறைந்து விட்டது) மாணிக்கவாசகர், பாண்டியநாட்டு படைக்காக குதிரைவாங்கச் செல்லும் போது இவரை வழிபாடு செய்துவிட்டே கிளம்பினார்.

ஐந்தாம் படைவீடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பிடம் பெறுகிறார். சிவலிங்கத்தை வலக்கையில் தாங்கி, சிவபூஜை செய்யும் நிலையில் இப்பெருமான் கேட்ட வரம் தரும் கற்பகவிருட்சமாகத் திகழ்கிறார். ஆறாம் படைவீடு பொல்லாப் பிள்ளையார் கோவில் கொண்டிருக்கும் திருநாரையூர் (கடலூர் மாவட்டம்)ஆகும். பொள்ளுதல் என்றால் செதுக்குதல் என்பது பொருள். உளியால் செதுக்கப்படாமல் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தியாவார். காலப்போக்கில் இப்பெயர் மருவி பொல்லாப்பிள்ளையார் என்று மாறிவிட்டது.

 

source :::::Dinamalar Tamil Daily

natarajan

” தெரிஞ்சே தப்பு பண்ணிட்டேன் …. மன்னிச்சுடுங்கோ ” !!!!

சென்னை ஸம்ஸ்கிருதக் கல்லூரியில் ஸ்ரீசரணர் முகாமிட்டிருக்கிறார். ஒரு சிறிய பெண் அவரிடம் ஸ்ரீராமநாமம் எழுதிய நோட்டுப் புத்தகத்தை ஸமர்ப்பித்து வெள்ளிக் காசு கேட்டது.

ஒரு லக்ஷம் நாமம் எழுதினால் பொற்காசும், அதில் எட்டில் ஒரு பங்கான 12,500 நாமம் எழுதினால் வெள்ளிக்காசும் ஸ்ரீசரணர் வழங்கி வந்த காலம் அது.

சிறுமி கேட்டவுடன் பெரியவாள் வெள்ளிக் காசு கொண்டுவரச் சொல்லி அதற்கு ஈந்தார்.

சிரித்துக் கொண்டு காசுடன் ஓடிய சிறுமி சிறிது நேரத்திலேயே கண்ணைக் கசக்கிக்கொண்டு திரும்பி வந்தது.

“ஏம்மா அழறே?” என்று பரிவுடன் கேட்டார் ஸ்ரீசரணர்.

“காசு எப்படியோ காணாமப் போயிடுத்து” என்று விக்கிற்று குழந்தை.

”அழாதேம்மா!” என்று கனிந்து சொன்ன பெரியவாள், “அது ஸரி, நீ எவ்வளவு நாமம் எழுதியிருந்தே?” என்று கேட்டார்.

“8,500” என்றது குழந்தை.

“12,500 எழுதினாதான் காசு தரதுன்னு ஒனக்குத் தெரியுமோன்னோ?”

“தெரியும், தெரிஞ்சேதான் பொய் பண்ணிட்டேன். தப்புதான். மன்னிச்சுடுங்கோ!”

சின்னஞ்சிறுமி தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு வேண்டியதில் ஸ்ரீசரணரின் மனம் உருகிவிட்டது!

“பரவாயில்லேம்மா! இனிமே அப்படிப் பண்ணாட்டா ஸரிதான். இப்படி ஒக்காரு” என்று பிரியமாகச் சிறுமியை அருகே உட்கார்த்தி வைத்துக் கொண்டார்.

அருகே இருந்தவர்களைப் பார்த்து, “நீங்க எல்லாரும் இப்பவே ராம நாமா எழுதி ஸொச்சம் நாலாயிரத்தையும் ‘கம்ப்ளீட்’ பண்ணுங்கோ. இந்தக் கொழந்தையும் எழுதட்டும். நீங்கள்ளாமும் எழுதுங்கோ” என்றார்.

எல்லோருக்கும் காகிதம், எழுதுகலம் வழங்கப் பட்டது. அந்த ஒரு பாலகியின் தவற்றினாலேயே அன்று பல பேருக்கு திவ்ய நாமம் எழுதும் பாக்கியத்தைப் பெரியவா அருளினார். பலர் எழுதியதால் விரைவிலேயே நாலாயிரம் பூர்த்தியாயிற்று.

பாலகியை அழைத்தார் மாமுனி. “ஒனக்கு வெள்ளிக் காசு வேண்டாம். தங்கக் காசே தரேன்” என்று மஹா பெரிய போனஸாகப் பொற் கழங்சு ஒன்றை அந்தப் பிஞ்சின் குஞ்சுக் கரத்தில் போட்டார் குணகுஞ்சரர்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!

source:::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/4970/maha-periyava-children-12#ixzz2eNFgII00

An Auspicious Greetings on Ganesh Chaturthi Day….

 

source :::::

Respected moderator Smt Sumi has sent us this wonderful greeting to be shared with all our members on the great occasion of Vinayaka Chaturthi 2013 thro http://www.periva.proboards.com .Please note that this greeting contains a beautiful discourse of Sri Maha Periva as well, and would be a visual and audio treat to all of you. I sincerely hope you get to see this on this auspicious day,

Read more: http://periva.proboards.com/thread/5084/ebook-vinayaka-chaturthi-special-edition?page=1&scrollTo=9265#ixzz2eN7JzHuz

natarajan

Top 10 Mesmerizing Views Around The World !!!!

From the freedom of wide open spaces to glittering of big city lights, our world is filled with thousands of breathtaking panoramas just waiting to be enjoyed. With the variety of natural wonders and stunning cities throughout the world, finding the best views can be somewhat of a daunting task. Well, we’ve gone to the community of thousands of travelers and locals at minube to find out their favorite viewpoints, overlooks, galleries, and gazebos the world over and create this list of the world’s 10 most mesmerizing views.

 

2013-09-05-PreikestolenNorwayPacoLdoRgz.jpg

Preikestolen, Norway – Towering more than 650 yards above the epic Lysefjord, Norway’s Preikestolen (or Pulpit Rock) is understandably one of the country’s most popular landmarks, and home to some of the world’s best views. While the hike up can be tough (travelers unanimously suggest bringing good boots!), you’re rewarded with a jaw-dropping landscape and a peaceful silence broken only by the wind bringing the fog dramatically down over the cliffs. (Photo by Paco Ldo Rgz)

Click here to see more photos of Preikestolen

 

2013-09-05-BaganMyanmarJohann.jpg

 

 

Bagan, Myanmar – Few relics of the ancient world are as spectacular as Bagan, an open plain in central Myanmar dotted with literally thousands of stupas and temples. To enjoy the best views (and the peace and quiet before the tour buses arrive), many travelers suggest getting there first thing in the morning when the sun first hits the stupas appearing slowly out of the morning mist. (Photo by Johann)

Click here to see more photos of Bagan

 

2013-09-05-IsladePescadoresGiuseppeCivica.jpg

Isla de Pescado, Bolivia – Bolivia’s Uyuni Desert is a seemingly endless and mesmerizing expanse of white salt whose center is marked by the Isla de Pescado, an “island” of cactus and rock rising out of the vast white landscape. From here, travelers have a unique vantage point to take in the flats in all their overwhelming glory and marvel at the ever-changing display of clouds and sky mirrored in the thin sheet of water covering the land. (Photo by Guiseppe Civica)

Click here to see more photos of the Uyuni Desert

 

2013-09-05-RockefellerCenterNYCFernandoCuestaLpez.jpg

Top of the Rock, New York City – 850 feet above the bustling streets of Manhattan, the Rockefeller Center observation deck has arguably the best views of the City that Never Sleeps, perhaps even better (and cheaper) than those of the Empire State Building. While many travelers suggest setting your alarms and getting there early to avoid the long lines, it’s especially spectacular during an evening visit when you can see the sunset cast its colors on Central Park and the buildings of Lower Manhattan begin to light up. (Photo by Fernando C. López)

Click here to see more photos of New York City.

 

2013-09-05-ChipequeCanaryIslandsRuymnGarcaFumero.jpg

Chipeque Viewpoint, Canary Islands – Perhaps the most romantic view on this list is the Chipeque Viewpoint in Tenerife in Spain’s Canary Islands. The magic of this viewpoint comes from the combination of Orotava Valley, the various towns below, the Atlantic Ocean in the background, the imposing peak of the Teide volcano. One of the best parts though, is the area’s unique geography, which lets travelers enjoy a bird’s-eye-view of the ebb and flow of fluffy white clouds coming in from the ocean. (Photo by Ruymán G. Fumero)

Click here to see more photos of Tenerife

 

2013-09-05-TunnelViewYosemiteEugenioVegaBencomo.jpg

Tunnel View, Yosemite National Park – As soon as you leave the Wawona Tunnel on California’s SR41, travelers are greeted with one of the most breathtaking views in the American West: the Yosemite Valley from the historic Tunnel View overlook. From here, the valley is in full splendor, with Bridalveil Fall and the craggy face of El Capitan creating the perfect welcome to this stunning National Park. (Photo by Eugenio V. Bencomo)

Click here to see more photos of Yosemite National Park.

 

2013-09-05-MrsMacquariesChairAustraliaNaxos.jpg

Mrs Macquarie’s Chair, Australia – On the thin strip of land jutting out into Sydney Harbor known as Mrs Macquarie’s Point, there’s a stone chair that beckons travelers to take a load off and enjoy the simply sublime view of the skyscrapers of the business district, the Harbour Bridge, and the iconic Sydney Opera House. As one traveler put it, “by day the view is stunning, but at dusk when the city lights reflect off the sea, it becomes a magical place.” (Photo by Naxos)

Click here to see more photos of Sydney.

 

2013-09-05-ThePeakHongKongDavidEsteban.jpg

The Peak, Hong Kong – There’s nowhere better to take in the neon spectacle that is Hong Kong’s skyline than The Peak, a complex of restaurants, shops, and bars perched atop the island’s highest point, Victoria Peak. You can get there quickly by cable car, spend the afternoon taking in the panorama and enjoying dinner with a view, and then try heading back down on foot (it’s fairly easy) to take in the city from all angles. Make sure to get tickets online and early, as the lines that form can be as impressive as the view itself! (Photo by David Esteban)

Click here to see more photos of Hong Kong

 

2013-09-05-RioBrazilMaryMora3S.jpg

 

Corcovado Mountain, Brazil – Few skylines are as unique and evocative as that of Rio de Janeiro, and there’s no better place to take it all in than the viewpoint atop Corcovado Mountain. Here, travelers can not only come face to face with the world-famous Christ the Redeemer statue, but also take in the dazzling Guanabara Bay topped off by the emblematic Sugarloaf Mountain. More than Ipanema Beach, Corcovado Viewpoint is the true essence of Rio. (Photo by Mary Mora3S)

Click here to see more photos of Rio de Janeiro

 

2013-09-05-YanyuangChinaBasso.jpg

Yuanyang Rice Paddies, China – After centuries of transformation, the Yuanyang terracs are the world’s largest rice paddies and home to one of the most interesting and surreal views on the planet. To enjoy them at their prime, try to visit during springtime when the paddies are flooded and mirror-like, gradually changing colors and reflecting the sky and surrounding hills. (Photo by Chiara Basso)

Click here to see more photos of Yuanyang

 

source ::::::

minube is a social travel platform where you can get inspired by real-life recommendations from thousands of travellers, plan your trips, and share your experiences.

natarajan

Message For The Day….Vinayaka”s Grace is Needed to Clear all Obstacles in Our Path ….

Vinayaka is the Lord who removes all obstacles. The elephant is noted for its acute intelligence. Ganesha’s elephant head symbolises sharpness of intellect and the highest power of discrimination. In a forest, when an elephant moves through the jungle, it clears all the obstacles, and leads the way for others to follow. Likewise, worship Ganesha at the start of any activity. His Grace is sufficient to clear all the obstacles in your path and grant success in your undertakings. The small mouse is a clever and lively creature. Symbolically it implies that we should be wise, agile and diligent in our actions. Vinayaka is a deity of infinite potency, who encompasses the entire universe within Himself. Accord Him a place of honour and secure His Grace. Then your journey of life will be made smoother and happier.    

 

Sathya Sai Baba

Animal Photos of The Week…

Jaguar ambushes caiman

This jaguar in Brazil swam silently across the river to ambush the unsuspecting caiman on the opposite bank. The 20-stone cat sank its teeth and claws into the 8 foot reptile, then carried it off in its jaws, swimming back across the river with its catch.

 

Water vole

This little vole has been seen whittling away from his nest in the Kent woodland, and caught the eye of amateur snapper Mark Bridger.

 

Hyena shower

Tourists at Kgalagadi Transfrontier Park in Mabuasehube, Botswana were amazed to see this hyena nip into the outdoor campsite bathroom for a soak just metres away from them.

 

Lions in shower

Word must have got out about the leaking shower, two lions turned up after the hyena in search of some water. Within a few minutes a pride of eight more lions descended on the outdoor shower. 

 

Two geese  looks out of step as they surrounded by a massive flock of black birds. The white geese cut a striking figure against the dark storm clouds and thousands of Red Winged Blackbirds

 

Two geese looks out of step as they surrounded by a massive flock of black birds. The white geese cut a striking figure against the dark storm clouds and thousands of Red Winged Blackbirds

 

Pictures of the day: 3 September 2013

A tuna swims among a school of fish at Galapagos Marine Reserve.

 

Pictures of the day: 4 September 2013

Dustin Bockman lies on top of his record setting alligator, weighing 727 pounds (330 kg) and measuring 13 feet (3.96 m), captured in Vicksburg, Mississippi. Dustin, a 27-year-old UPS driver, and his crew spotted the mammoth creature in the Mississippi River and trailed it for two hours before getting close enough to spear it. It took another two hours to hook it with a second line and noose its neck.

 

Pictures of the day: 4 September 2013

Keepers hand-rear baby elephant rejected by mother at Shendiao Mountain Zoo, Weihai, Shandong Province, China. When the mother of this cub gave birth early on 31 August she immediately appeared very agitated and refused to have anything to do with it. Zoo keepers then had to step in to rescue the cub and are now hand-rearing it..

 

Pictures of the day: 4 September 2013
The Memphis Zoo announced the first Snow Leopard birth in more than a decade. The cub, a male, was born to parents ‘Ateri’ and ‘Darhan.’ Ateri, a first-time mother, is nursing the cub behind the scenes. The public will be invited to vote on their favorite of seven pre-chosen names.

 

A bumblebee approaches a sunflower in Godewaersvelde, Germany

A bumblebee approaches a sunflower in Godewaersvelde, Germany

 

Whale shark

British diver Pash Baker photographed this whale shark in the Red Sea. These sea-beasts weigh in at an average of twenty tonnes as they cruise the ocean’s waters in their quest to consume as much plankton as they possibly can.

 

This giraffe took such a dislike to this cyclist – who was taking picture of the giraffe on his mobile phone – that the enraged 18-foot-tall creature gave chase, eventually destroying the cyclist’s mountain bike. The cyclist who stirred up the giraffe’s anger, Louise John Rex and his friend Ryk van Niekerk, who took the footage, were travelling by bike across the Groenkloof Nature Reserve in Pretoria, South Africa.’I had to jump off my bike immediately – there was no time to drive away,’ said Louise

 

Two male cheetah cubs, Winspear and Kamau

Two male cheetah cubs, Winspear and Kamau, born July 8, that have joined the Dallas Zoo population

 

A greedy chipmunk looks ready to burst after stuffing her cheeks full with peanuts

A greedy chipmunk looks ready to burst after stuffing her cheeks full with peanuts

 

source:::::The Telegraph uk

natarajan

விநாயகர் பூஜைக்கு உகந்த இலை , மலர் ….

இலைகளும், பலன்களும்

விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது. அதனால் கீழ்க்காணும் பலன்கள் கிடைக்கும்.

முல்லை இலை – அறம் வளரும்

கரிசலாங்கண்ணி இலை – இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்

வில்வம் இலை – இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

அருகம்புல் – அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்

இலந்தை இலை – கல்வியில் மேன்மை அடையலாம்

ஊமத்தை இலை – பெருந்தன்மை கைவரப் பெறும்.

வன்னி இலை – பூவுல வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்

நாயுருவி – முகப் பொலிவும், அழகும் கூடும்.

கண்டங்கத்திரி – வீரமும், தைரியமும் கிடைக்கும்

அரளி இலை – எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்

எருக்கம் இலை – கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும்

மருதம் இலை – மகப்பேறு கிடைக்கும்

விஷ்ணுகிராந்தி இலை – நுண்ணறிவு கைவரப் பெறும்

மாதுளை இலை – பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்

தேவதாரு இலை – எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்

மருக்கொழுந்து இலை – இல்லற சுகம் கிடைக்கப் பெறும்

அரசம் இலை – உயர் பதவியும் பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்

ஜாதிமல்லி இலை – சொந்த வீடு, மனை,பூமி பாக்கியம் கிடைக்கும்

தாழம் இலை – செல்வச் செழிப்பு உண்டாகும்.

அகத்தி இலை – கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/5082/vinayakar-benefits-archanai-different-leafs/#ixzz2eI92XUMY

Message For The Day….Don”t Expect Grace of God by Simply Visiting Sacred Places …

You ask for Grace, which is rare and is available at a high cost. However, you pay only trash and are disappointed that you are unable to secure it! Isn’t it sheer avarice! You claim that you have been visiting Puttaparthi (or other sacred places) and have served there, longer than 18 years or so and expect huge chunks of Grace. But it is not the years that matter – what matters is the depth to which the roots of Karma (past actions) have grown from your previous births. It takes a long time and systematic effort to clear the field of all those growths – that effort is the sadhana, of good actions and worship (Karma and Upasana).

 

Sathya Sai Baba

படித்ததில் பிடித்தது …டாக்ஸி டிரைவராக மாறிய பிரதமர் !!!!

ஜூன் மாதம். மதியம்.

பிரதமர் தனது அலுவலகத்தில் உள்ள ஓர் அறைக்குள் நுழைகிறார். வெளியே வரும்போது அவர் உடை மாறியிருக்கிறது. ஒரு டாக்ஸி டிரைவரைப் போல உடை. கண்களில் சன் கிளாஸ். தலையில் தொப்பி.

கறுப்பு நிற மெர்சிடெஸ் டாக்ஸியில் டிரைவர் சீட்டில் ஏறி அமர்கிறார் பிரதமர். தலைநகரின் மையப் பகுதிக்குக் கார் பறக்கிறது. சாலையில் ஒருவர் டாக்ஸிக்காக கையை நீட்டுகிறார். அவரை ஏற்றிக் கொண்டு கார் செல்கிறது. பிரதமர் டாக்ஸி டிரைவராக இருந்து கொண்டு, பின் சீட்டில் அமர்ந்திருக்கும் பயணியிடம் பேச்சுக் கொடுக்கிறார். அரசியல், தொழில், பொருளாதார வளர்ச்சி என்று ஏதேதோ பேசிக் கொண்டே போகிறார். பிரதமர் என்று தெரியாத பயணி தனது மனதில் பட்டதை எல்லாம் எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்கிறார்.

“இதுக்குத்தானே இந்த வேஷம்?’ என்று மனதுக்குள் மகிழ்கிறார் பிரதமர்.

இது ஏதோ திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சியல்ல.

அந்தக் காலத்து மன்னர்கள் மாறுவேடமணிந்து நகர்வலம் வந்ததைப் போல இந்தக் காலத்தில் ஒரு பிரதமர் உண்மையாகவே இப்படிச் செய்திருக்கிறார், நார்வே நாட்டின் பிரதமர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க்.

நார்வேயில் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து பதவியில் இருக்கிறது இடதுசாரிகளின் ஆதரவு பெற்ற லேபர் பார்ட்டி. லேபர் பார்ட்டிக்கு இந்த ஆண்டு தேர்தலில் கணிசமாக வாக்குகள் குறையும் என்று ஒரு கருத்துக் கணிப்பு சொன்னது. இது உண்மைதானா? மக்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்று நேரடியாகத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார் லேபர் பார்ட்டியைச் சேர்ந்த பிரதமர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க்.

வயது 54 ஆனாலும் இளைஞனுக்குரிய குறும்புத்தனம் இன்னும் போகவில்லை. அதனால் அவர் டாக்ஸி டிரைவராக உருமாறினார். காரில் ரகசியமாக வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

இத்தனைக்கும் அவர் கார் ஓட்டி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. காரில் கிளட்சை அழுத்துவதாக நினைத்துக் கொண்டு தானியங்கி பிரேக்கை மிதித்து, அடிக்கடி காரை பயங்கரமாகக் குலுங்கச் செய்திருக்கிறார். பயங்கரமான அதிர்வுடன் கார் அவ்வப்போது நின்று, தலைநகர் ஆஸ்லோவின் வீதிகளில் பயணித்திருக்கிறது. காரில் பயணம் செய்தவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். காரை விட்டு இறங்கியதும் தங்களுடைய கருத்தை வெளிப்படையாகச் சொன்னார்கள்.

“”நீங்கள் கார் ஓட்டியது படுமோசமாக இருந்தது. இவ்வளவு படுமோசமான டிரைவிங்கை என் வாழ்க்கையில் இதுவரை நான் அனுபவித்ததேயில்லை”

இன்னொருவர் சொன்னார்: “”நான் உயிருடன்தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். கடவுளுக்கு நன்றி”

இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க்.

“”மக்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது எனக்கு முக்கியம். மக்கள் மனதில் நினைப்பதை எந்தத் தடையுமில்லாமல் பேசும் இடம் டாக்ஸி என்பதால் டாக்ஸி டிரைவராக மாறினேன். இன்றைய அரசியலைப் பற்றி மக்களின் நேர்மையான விமர்சனத்தைத் தெரிந்து கொண்டேன்” என்கிறார் அவர்.

அவர் கார் ஓட்டிக் கொண்டே பயணிகளிடம் பேச்சுக் கொடுத்தது, பயணிகள் அவரிடம் பேசியது எல்லாம் வீடியோவில் பதிவாகி, இப்போது இணைய தளங்களின் மூலம் உலகம் முழுவதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

“”நீங்கள் தேர்தலில் தோற்றுவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகி டாக்ஸி டிரைவர் ஆகிவிடுவீர்களா?”

என்று ஓர் இளம் பத்திரிகை நிருபர் குறும்பாகக் கேட்டார்.

அதற்கு ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க் சிரித்துக் கொண்டே சொன்னார்:

“”நான் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால் நாட்டுக்கும், தோல்வியடைந்தால் டாக்ஸி டிரைவராகி பயணிகளுக்கும் என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாகப் பணியாற்றுவேன்”

இது தேர்தலுக்கான ஸ்டண்ட் என்று காட்டமாக விமர்சித்திருக்கிறது நார்வேயின் கன்சர்வேட்டிவ் கட்சி.

இப்படி ஸ்டண்ட் அடிக்கவும் துணிச்சல் வேண்டுமே?

 

source:::: Dinamani tamil daily.

natarajan