![[image]](https://i0.wp.com/i1066.photobucket.com/albums/u405/Sumi1971/Periva%20Posters/Template---162.jpg)
Self Improvement
மாப்பிள்ளை தேவை !!!!….Conditions Apply !!!!!
Selecting Mappillai!!!…..On the lighter side !!!! …Besides laughing while reading this story, i am sure we can not ignore the ground reality of situation today !!!! ….We must ensure a correction at the right time in the interest of our children”s future…
I can only pity the parents !!!!…..
Natarajan
சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு வித்யா போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க.
நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு
மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.
வித்யா: நான் MCA படிச்சிருக்கேன். நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம். வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே. நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம். வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே. நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம். வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.
நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற.
அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.
வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software
Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.
நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து
வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்? நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.
வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.
நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.
வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.
நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.
வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான்
மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.
நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?
வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.
நா.நா: ஹிம்ம்ம்… கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.
வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.
நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.
வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.
நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல
இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.
வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால
கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.
நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?
வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும்
வாய்ப்பிருக்கு. அதான்.
நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.
வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.
நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.
வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.
நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.
வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.
நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?
வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா
நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.
வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ்
ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.
நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.
வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்
நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்..
source::::input from a friend of mine….
Natarajan
முக்காலமும் அறிந்த மகாபெரியவர் !!!!
ஒரு தடவை நாங்கள் தரிசனத்துக்குப் போயிருந்த போது, மாயவரம் ப்ரும்மஸ்ரீ சிவராம சாஸ்திரிகளும் அங்கே வந்திருந்தார்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து, அவர் பின்னாலேயே, மாயவரம் முனிசிபல் கமிஷனரும் வந்தார்.
பெரியவாள், அவர்கள் இருவரையும் பார்த்து, “உங்களுக்குள் பழக்கம் உண்டா? ரெண்டு பேரும் மாயவரம் ஆச்சே?” என்று கேட்டார்கள்.
“தெரியும், அவ்வப்போது பார்த்திருக்கிறோம& #3021;, பழக்கம் என்று சொல்வதற்கில்லை” என்றார்கள் இருவரும்.
பிரும்மஸ்ரீ சாஸ்திரிகள், “இவர் மாயவரம் முனிசிபல் கமிஷனர்” என்றார்.
அவர், “இவர் பாகவதம் சொல்வதில் நிபுணர். நானும் கேட்டிருக்கேன்” என்றார்.
“நான் அதைக் கேட்கவில்லை. உங்களுடைய முப்பாட்டனார்கள், ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள். அது தெரியுமான்னு கேட்டேன்!”
இரண்டு பேர்களும் பிரமித்துப் போய், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
“குடும்பத்தில் ஏதோ தகராறு – ரெண்டு பேரும் பிரிஞ்சு போயிட்டா… அதனாலே, நீங்க ரெண்டு பேரும் பந்துக்கள் என்பது தெரியாமலே போச்சு! இப்போ சண்டைக்குக் காரணம் ஏதும் இல்லே; இனிமேயாவது சேர்ந்து, ஒற்றுமையா இருங்கோ..”
இதைக் கேட்டதும், சாஸ்திரி – கமிஷனர் முகங்கள் மகிழ்ச்சியில் பூரித்துப் போயின.
அப்புறம் சாராவது, சாஸ்திரியாவது? “அண்ணா, வாங்கோ; தம்பி வாடா” தான்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர! மஹா பெரியவாள் முக்காலமும் அறிந்த மாமுனி என்பதி ஐயம் உண்டோ?
source:::::periva.proboards.ocm
Natarajan
Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3806#ixzz2NEYwcqBF
PINCODE and Mantras ….Mahaperiavar”s Observations !!!
செகந்தராபாதில் பெரியவா முகாம்.
அப்போது ரயில்வேயில் மூத்த அதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தனர். அவர்களுக்கு ஒரு பெரிய குறை. அது என்னவென்றால்……….
“பெரியவாளோட அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களை எல்லாம் கூடியவரைக்கும் விடாமப் பண்ணிண்டு இருக்கோம். ஆனா, இந்த ஊர்ல, பூஜை, ஸ்ராத்தம், தர்ப்பணம் இதெல்லாத்தையும் சரியாப் பண்ணிவெக்க, வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் இல்லே! ஒரே ஒர்த்தர்தான் இருந்தார். அவருக்கும் பண்ணி வெக்கும்போது அவர் சொல்ற மந்த்ரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை. அர்த்தம் தெரியாம கர்மாக்களை பண்றதை, எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்க மாட்டேங்கறா. இந்தக் காலத்து பசங்களாச்சே! அதான்… பெரியவா தயவுபண்ணி மடத்துலேர்ந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்த்ரிகளா பாத்து இந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும்” என்று ப்ரார் த்தனை பண்ணினார்கள்.
“ஒங்காத்து பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு……….” என்று அவர் ஆரம்பித்தபோது, ஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக் கொண்டு ஒரு postman வந்தார். பெரியவா மேலாக சில கடிதங்களைப் படித்துவிட்டு, ஒரு லெட்டரை எடுத்தார். அதில் PIN என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி, “PIN ..ன்னு போட்டிருக்கே…..அதோட அர்த்தம் தெரியுமா?”
ரொம்ப சாதாரண கேள்விதான். ஆனால் அந்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை. கொண்டுவந்த தபால்காரருக்கும் தெரியவில்லை.
“POSTAL INDEX NUMBER ” என்று தானே அதற்கு விளக்கமும் குடுத்தார்.
சிரித்துக்கொண்டே அந்த அதிகாரிகளைப் பார்த்து ” நீங்கள்ளாம் நெறைய படிச்சு பெரிய உத்தியோகம் பாக்கறவா. ஆனா, சாதாரண தபால்ல வர PIN க்கு ஒங்களுக்கு அர்த்தம் தெரியலே. அவ்வளவு ஏன்? PINCODE ன்னு எதையோ எழுதின அந்த ஆஸாமிக்கே கூட அதோட அர்த்தம் தெரியாம இருக்கலாம். ஆனா, PINCODE ன்னு போட்டிருக்கற எடத்ல சரியான நம்பரை எழுதிட்டா அது சரியா போய்சேர வேண்டிய எடத்துக்கு போறா மாதிரி, பண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும், எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம் சொல்லணுமோ, அதை செரியா சொன்னா, அதுக்குண்டான பலனை அது குடுக்கும்! அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேஹமும் வேணாம்”.
“அதுனால, இப்போ இருக்கற ப்ரோஹிதரை நிறுத்தாம, நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை ஸ்ரத்தையோட பண்ணிண்டு வாங்கோ! ஒரு கொறைவும் வராது!” கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்”.
அதிகாரிகள் விக்கித்துப் போனார்கள்! ஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில் கூட வராத PIN னை வைத்தே, எப்பேர்பட்ட பெரிய சந்தேஹத்தை போக்கிவிட்டார்!
source::::periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3788#ixzz2MlLzjCZ9
![[image]](https://i0.wp.com/i1066.photobucket.com/albums/u405/Sumi1971/Periva%20Posters/Template---160_zpsa1be7daf.jpg)
![[image]](https://i0.wp.com/i1066.photobucket.com/albums/u405/Sumi1971/Periva%20Posters/Template---159.jpg)