1.. என் ஆதரவு ” டெஸ்டினேஷன் வெட்டிங் பிளானுக்கு “
2. பழக்கம் வழக்கம் என்று சொல்லி லட்சம் பல செலவு செய்து தங்கள் பகட்டு , பணம்
செல்வாக்கு என்ன என்று ஊருக்கு காட்டும் வழக்கமான திருமணத்தில் மணமகனும்
மணமகளும் வெறும் காட்சி பொம்மைகளே ! அக்னி சாட்சியாக நடக்கவிருக்கும்
மண நாளுக்கு முந்தைய தினமே இந்த இரண்டு ” பொம்மைகளை ” வைத்து அவர்
பெற்றோர் நடத்தும் “பொம்மலாட்டம்” அவர் செல்வாக்கை வெளிச்சம் போட்டுக்
காட்டும் ஒரு விளம்பர படம் ! ஆதலால் , என் வாக்கு “வேஸ்ட் லெஸ் டெஸ்டினேஷன்
வெட்டிங் பிளானுக்கு ” மட்டுமே !
3. இன்றைய திருமணத்தில் தவிர்க்கப் பட வேண்டிய குறைகள் சில ..
1. ஆடம்பர திருமண அழைப்பிதழ்
2. ஆடம்பர ஆடை அணிகலன்கள்
3. ஆடம்பர விருந்து
4. பகட்டு மேடை அலங்காரம் , மின் விளக்கு அலங்காரம்
5. மெல்லிசை நிகழ்ச்சி என்னும் பெயரில் திருமண மண்டபமே அதிரும்
அதிர்வலைகள் !
6.வாழ்த்து கூற விரும்பும் விருந்தினர் வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ..
வயது முதிர்ந்த தம்பதியரும் வரிசையில் நிற்கும் அவலம் !
பின்பற்றப் பட வேண்டிய நிறைகள் சில …
1. மங்கள இசை
2. மென்மையான மண மாலைகள்
3. வேத மந்திர உச்சாடனம் … அவரவர் மதம், குல வழக்கம் மனதில் கொண்டு
4. ஹோமம் , அக்னி சாட்சி …அவரவர் மதம் , குல வழக்கப் படி
5. அவரவர் குடும்ப பெரியவர் மற்றும் முக்கிய உறவினர் முன்னிலை …
6. எளிய சிறப்பு உடை …எளிமையான குடும்ப விருந்து …
4. வரவேற்பு , இரவு விருந்து என்னும் பெயரில் வீணடிக்கப்படும் வறட்டு ஜம்ப செலவு
பணத்தை , “வருங்கால சேமிப்பு வைப்பு நிதியாக ” மாற்றி மணமக்களுக்கு திருமண
பரிசாக கொடுக்கலாமே !
5. என்னுடைய புதிய ” டெஸ்டினேஷன் வெட்டிங் ” மற்றும் ” வேஸ்ட் லெஸ் வெட்டிங் “
திட்டம் .
1. மணமகன் , மணமகள் வழியில் நீண்ட திருமண வாழ்க்கை ..பொன் விழா
வைர விழா கண்ட முதிய அனுபவம் மிகுந்த தம்பதியர் இல்லத்தில்
நடக்க வேண்டும் ஒரு ” டெஸ்டினேஷன் வெட்டிங் ” .
2. இலட்சிய தம்பதியர் முன்னிலையில் அவர்கள் ஆசியுடன் நடக்கும்
ஒரு திருமணம் புது மண தம்பதிக்கு தாங்களும் அந்த
லட்சிய தம்பதி போல வாழ்க்கை நடத்திக் காட்ட வேண்டும் என்னும்
ஆசை விதையை அவர் மனதில் விதைக்கும் .
3. இல்லத்தில் நடக்கும் இனிய மண விழா என்பதால் முக்கிய உறவுகள்
தவிர மற்றவருக்கு இணைய தள நேரலை மூலம் திருமண நிகழ்வு
மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளப் படும் .
4. திருமண வாழ்த்து சொல்ல விரும்பும் மற்ற சுற்றமும் , நட்பும்
திருமண இணைய தளத்தில் தங்கள் மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்
பதிவு செய்வர் .
5. திருமண பரிசு கொடுக்க விரும்பும் அன்பர்கள் திருமண இணைய
தளத்தில் அறிவிக்கப் பட்டு உள்ள மணமக்களின் வங்கி கணக்கில்
செலுத்த அன்பு வேண்டுகோள் … பரிசு காசோலையும் அனுப்பும் வசதி !
6. பரிசு விபரமும் திருமண இணைய தளத்தில் பதிவு செய்யப் பட்டு விடும் .
7. வாழ்த்துக்கும் , பரிசுக்கும் நன்றி இணைய தளத்திலோ அல்லது
அவரவர் மின் அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கப்படும் .
8. இனிய மண நாள் நிகழ்வு புகைப் படங்கள் தொகுப்பு மற்றும்
ஒளிநாடா (வீடியோ ) திருமண இணைய தளத்திலேயே பதிவேற்றப்பட்டு
வேண்டும் சமயம் பார்த்து மகிழவும் மற்றும் சுற்றம் நட்புடன் பகிர்ந்து
கொள்ளவும் வழி வகுக்கும் .
9. இந்த மாதிரி ” டெஸ்டினேஷன் மற்றும் வேஸ்ட் லெஸ் வெட்டிங் ” மணமக்களின்
சந்ததியருக்கும் ஒரு நல்ல முன் மாதிரி ஆகும் !
10. ஒரு நல்ல ஆரம்பம் …அதுவே அந்த குடும்பத்தின் பழக்கமாகவும்
வழக்கமாகவும் மாறிட இது ஒரு நல்ல வாய்ப்பு !
The above input sent by me to the Tamil Daily Dinamani in response to a Contest announced by them a fortnight back has secure Second Prize in the contest.
Source …www.dinamani.com dated 27th Dec 2017
Natarajan