வாரம் ஒரு கவிதை …” மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு “

 

மல்லுக்கட்டும்  ஜல்லிக் கட்டு …
……………………………………………………
துள்ளி வரும் காளை …அதை அடக்கும்
துடிப்புடன்  களத்தில் இளம் காளையர் !
இது போர்க்களம் இல்லையே…ஒரு
வீர விளையாட்டுக்களம்  தானே !
ஜல்லிக்கட்டு …இந்த ஒரு பெயரே
உசுப்பிவிடுமே  தூங்கும் இளைஞரை !
காளை மாட்டுடன் மல்லுக்கட்டிய  ஒரு
வீரர் கூட்டம் இன்று ஜல்லிக்கட்டுக்காகவே
மல்லுக்கட்டும் ஒரு அவலம் !  ஜல்லிக்கட்டு
நடக்குமா நடக்காதா ..இந்த கேள்விக்குறி
ஜல்லிக்கட்டுக்கு மாத்திரம் அல்ல …ஒரு
கூட்டத்தின் குறி நம் ஜல்லிக்கட்டு மாட்டின் மீதே !
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை
படித்ததில்லையா நாம் ?  அதே கதைதான்
மீண்டும் அரங்கேற்றம் இன்று  ஜல்லிக்கட்டில் !
ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் சந்ததிக்கு
சத்தமில்லாமல் ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்
துடிக்கிறது ஒரு கூட்டம் இன்று… அவர்
ஆடும் ஆட்டம் ஒரு “சோதனை  ஓட்டம் “
இன்று… கேட்கவே வேதனை நமக்கு !
சோதனை எது  வந்தாலும்  சாதிக்க வேண்டும்
நாம் ! மல்லுக்கட்டி  மீட்க வேண்டியது வெறும்
ஜல்லிக்கட்டு போட்டியை  மட்டுமல்ல !
நம்  ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் வாழ்வையும்  அதன்
இன வளர்ச்சியையும்  சேர்த்துதான் !
மல்லுக்கட்டுவோம்  ஜல்லிக்கட்டுக்கு …ஜெயித்துக்
காட்டுவோம் இந்த  உலகுக்கு நாம் யார் என்று !
My Tamil Kavithai  as published  in  www.dinamani.com
Natarajan

2 thoughts on “வாரம் ஒரு கவிதை …” மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு “

  1. Sampathkumar K's avatar Sampathkumar K January 17, 2017 / 7:35 am

    nice kavithai. informative and expose the ulterior motives some people who are posing themselves as saviors of animals.Every one should read this and share with their friends.

  2. Natarajan's avatar natarajan January 17, 2017 / 9:14 am

    Thanks for your feedback …

Leave a reply to Sampathkumar K Cancel reply