நிசப்த வெளியில் …
———————
கருவறை வாசம் மட்டுமே நிசப்த வாசம் ஒரு சிசுவுக்கு
இந்த மண்ணில் வந்து பிறந்த நேரம் முதல் சத்தம்
சத்தமே எங்கும் எதிலும் !
சப்தம் தவிர்த்து நிசப்தம் தேடி ஓடுவது எங்கே ?
வாழ்வில் ஒலியும் சப்தமும் தேவைதான்
ஆனால் வாழ்வே சப்தமாகலாமா ?
ஒளி மயமான எதிர் காலம் தேடும் குழந்தைக்கு
கிடைப்பது ஒலி மயமான இரைச்சலும் அலைச்சலும்தான் !
அண்ட வெளியிலும் இல்லையே இன்று நிசப்தவெளி !
நாளும் பல விண்கலம் அண்டவெளியில் சுற்றி சுற்றி
நிசப்த வெளியின் தனித்துவமே தகர்ந்து விட்டதே !
சப்தம் மறந்து நிசப்தம் தேடி ஓடுவது எங்கே ?
நிசப்தம் தேடி நாம் ஓடிட வேண்டாமே …நம் வீட்டைத்
தேடி ஓடி வரும் நிசப்த வெளி நாம் நினைத்தால் !
வாரம் ஒரு நாள் …ஒரே ஒரு நாள் …கொடுப்போம்
விடுமுறை நம் வீட்டு தொலைக் காட்சிப் பெட்டிக்கு !
எப்போதும் சிணுங்கும் கைபேசிக் குழந்தைக்கும்
தப்பாமல் தர வேண்டும் ஒரு நாள் ஓய்வு !
இரைச்சல் இல்லாத ஒரு ஒரு வீடும் நிசப்த
வெளியே ! அலைச்சல் இல்லாத வழியும்
இதுதான் நிசப்தம் தேடி ஓடுவோருக்கு !
My Kavithai in http://www.dinamani.com dated 16th oct 2017
Natarajan