வாரம் ஒரு கவிதை ….” மழை நீர் போல …”

 

மழை நீர் போல …
——————–
வறண்டு கிடக்கும் பூமி …வானம் திறக்குமா கண் ?
மேலும் கீழும் பார்ப்பது உழவன் மட்டுமல்ல இன்று !
அடுக்கு மாடி கட்டிடக் குவியல் கூட்டில் குடி இருக்கும்
நகரத்துப் “பறவைகளும்” மழை தேடி வானிலை
அறிக்கையை காலையும் மாலையும் அலசும் அவலம் இன்று !
மழை நீரை முத்தமிட துடிக்கும்  வறண்ட பூமி நனையுது
மழை நீர் போல பெருகி வரும் உழவன் அவன் கண்ணீரில் !
குடிக்க நீர் இன்றி தவிக்கும் அடுக்கு மாடி “பறவைகள்”
வழி மேல் விழி வைத்து காத்திருக்குது  தினமும் ஒரு
லாரி தண்ணீருக்கு !
தண்ணீரும் பணமாக மாறும் காலம் இது ..மழை
நீர் சேமிப்பின் மதிப்பு உணராத மனிதன் கொடுக்கிறான்
நீருக்கு ஒரு விலை இன்று !
மழை வெள்ளம் வரும் நேரம் “இது என்ன பேய் மழை”
என்று அலறிய மனிதன் குரல் கேட்டு வானமும்
மனம் உடைந்து “கண்ணீர் ” விடவும் மறந்து போனதோ ?
தினம் தினம் தண்ணீர் தண்ணீர்  என்று மனிதன்
கண்ணீர் விட்டு என்ன பயன் இன்று ?
மாற வேண்டும்  மனிதன்… மாற்றி யோசிக்கவும்
வேண்டும் …வானமும் மகிழ்ந்து  தன் ஆனந்தக்
கண்ணீரால்  நனைக்க வேண்டும் இந்த பூமியை !
மனிதனுக்கும் புரிய வேண்டும்  எந்த நீர்
ஆனாலும்  மழை நீர் போல ஆகுமா  என்று !
Natarajan….
in http://www.dinamani.com dated  13th August 2017

Message for the Day…”Limit your desires to your capacity and even among them, have only those that will grant lasting joy. Do not run after fashion and public approval and strain your resources beyond repair. Also live in accordance with the code of rules that regulate life or the stage you have reached.,”

Source: http://media.radiosai.org/

Develop discrimination and evaluate even your own needs and wishes. Examine each on the touchstone of essentiality. When you pile up things in your apartments, you only promote darkness and dust; so also, do not collect and store too many materials in your mind. Travel light! Have just enough to sustain life and maintain health. The pappu (a lentils dish) must have only enough uppu (salt) to make the dish tasty. Do not spoil the dish by adding too much salt. Similarly, life becomes too difficult to bear if you put into it too much desire. Limit your desires to your capacity and even among them, have only those that will grant lasting joy. Do not run after fashion and public approval and strain your resources beyond repair. Also live in accordance with the code of rules that regulate life or the stage you have reached.,

Message for the Day…”See Him as the sap through every cell as the Sun warms and builds its every part. See Him in all, worship Him through all, for He is all! Engage in any righteous activity, and fill it with devotion: remember it is only devotion that sanctifies the activity!”

Source: http://media.radiosai.org

Life is a tree of delusion, with all its branches, leaves and flowers of maya. You can realise it as such when you do all acts as dedicated offerings to please God. Without knowing this secret of transmuting your every act into sacred worship, you suffer from disappointment and grief. See Him as the sap through every cell as the Sun warms and builds its every part. See Him in all, worship Him through all, for He is all! Engage in any righteous activity, and fill it with devotion: remember it is only devotion that sanctifies the activity! A piece of paper is almost trash but if a certificate is written on it, you value it and treasure it; it becomes a passport for promotion in life. It is the bhava (feeling behind) that matters, not the bahya (outward pomp); it is the feeling that is important, not the activity.

இவருக்கு கை கிடையாது… அவருக்கு கண் தெரியாது… இணைந்து ஒரு காடே வளர்த்திருக்கிறார்கள்!

 

“உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்; ஓடமுடியாவிட்டால் நடந்துசெல்லுங்கள்; நடக்கவும் முடியாவிட்டால் தவழ்ந்து செல்லுங்கள். ஆனால், எதைச் செய்தாலும் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருங்கள்”- மிகவும் பிரபலமான வரிகள் இவை. தன்னம்பிகையை தட்டிக்கொடுத்து வளர்க்கும் இந்த வரிகளுக்கு வாழும் சாட்சிகளாக இரண்டு பேர் சீனாவில் இருக்கிறார்கள். பார்வை இல்லாத ஒருவரும், இரு கைகளை இழந்த ஒருவரும் சேர்ந்து  பத்தாயிரம் மரங்களை வளர்த்திருக்கிறார்கள்.

 

புற்கள், மரங்கள் என பச்சைப் பசுமையாய் இருந்த வடகிழக்கு சீனாவின் ஏலி என்கிற கிராமத்துக்கு குவாரி ஒன்று  செயல்பட ஆரம்பித்திருக்கிறது. குவாரியின் வருகைக்குப் பின் சுற்றி இருக்கிற இடங்கள் எல்லாம் மாசுப்படுகின்றன. ஆற்றில் கழிவுகள் கலக்கின்றன. அதனால் ஆற்றில் இருக்கிற மீன்கள் இறக்கின்றன. அதேபகுதியில் ஜியா ஹைக்சியா என்பவர் வசித்து வருகிறார். 2000-வது வருடத்தில் குவாரியில் நடைபெற்ற ஒரு வெடி விபத்தில் ஜியா ஹைக்சியா சிக்கிக்கொள்கிறார். விபத்தின் விளைவால் தனது கண் பார்வையை நிரந்தரமாக இழக்கிறார். திடீரென பார்வை இழந்ததும், விபத்துக்கு முன்னர்தான் பார்த்த இடங்களை, மனிதர்களை, நினைத்து நினைத்து உடைந்து போகிறார். பிறவியில் பார்வை இல்லாமல் இருந்திருந்தால் வாழப் பழகி இருக்கும் என நினைக்கிற வெங்க்யூ ஒரு கட்டத்தில்  தற்கொலைக்கு முயல்கிறார்.

அதே கிராமத்தில் ஜியா வேங்க்யூ  என்கிற நபர் வசித்து வருகிறார். அவர் 3 வயதாக இருக்கும்போது மின்சாரம் தாக்கிய விபத்தில் தனது இரு கைகளையும் இழக்கிறார். கைகளை இழந்தவர் துவண்டுபோகாமல் தனது கால்களைப் பயன்படுத்தி எல்லா வேலைகளையும் செய்துவருகிறார். கிராமத்தில் இருக்கிற ஊனமுற்ற பாடல் குழுவில் இணைந்து, பாடல்கள்  பாடுவதை தொழிலாகக் கொள்கிறார். ஜியா வேங்க்யூவின்  பால்ய காலங்களில் ஜியா ஹைக்சியாவுடன்  பயணித்தவர். சிறு வயதில் இருந்தே இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள். இருவரது வீடுகளும் அருகருகே இருக்கிறது.

பார்வை இழந்து,  மன உளைச்சலில் இருக்கும் ஜியா ஹைக்சியாவை கைகளை இழந்த  ஜியா வேங்க்யூ சந்திக்கிறார். “எனக்கு நீ கையாக இரு. உனக்கு நான் கண்ணாக இருக்கிறேன்” என சொல்கிறார். கிடைத்த ஆறுதல் ஒரு பிடிப்பாக தெரியவே, ஜியா ஹைக்சியா அவரோடு இணைகிறார். ஒருவருக்கு ஒருவர் துணை என நடக்க ஆரம்பிக்கிறார்கள். ஆறுகளைத் தாண்டும் போதெல்லாம் ஹைக்சியாவை தூக்கிக் கொண்டு நடக்கிறார் ஜியா  வேங்க்யூ. எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்கிறார்கள். வறண்டு போய்  கிடக்கிற கிராமத்துக்கு நம்மால் முடிந்த ஒன்றைச் செய்ய வேண்டும் என இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அவர்கள்  மாற்றுத்திறனாளிகள் என்பதைக் கடந்து  யோசிக்க ஆரம்பிக்கிறார்கள்.  இருவரும் தங்களைச் சுற்றி இருக்கிற சூழல் மாசுபட்டுக் கிடப்பதை உணர்கிறார்கள்.. குவாரியில் இருந்து வருகிற கழிவுகள் ஆற்றில் கலந்தும், காற்றில் கலந்தும் இருப்பதை அறிந்து கிராமத்தில் மரம் வளர்ப்பது என முடிவெடுக்கிறார்கள்.

கிராமத்தைச் சுற்றி 800 மரக்கன்றுகளை நடவு செய்கிறார்கள்.  கைகளை இழந்த ஜியா வேங்க்யூ கழுத்துக்கு தோளுக்கும் இடையில் கம்பு போன்ற ஒன்றை பயன்படுத்தி தண்ணீர் எடுப்பது, மண் அள்ளுவது என பல வேலைகளைச் செய்கிறார். மரம் நடுவதற்கான குழிகளை தோண்டும்  அவர்களின் முயற்சியை  ஊர் மக்கள் கேலி செய்கிறார்கள். “கை  இல்லாதவனும் கண்ணு தெரியாதவனும் சேர்ந்து  என்ன பண்ணப் போறாங்களோ” என கேலியும் கிண்டலும் அதிகரிக்கிறது. ஆனால், அவர்கள் இருவரும் மரங்கள் வளரும் எனக் காத்திருக்கிறார்கள். மரக்கன்றுகள் வேர்பிடித்திருக்கும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. 800 மரங்களில் 2 மட்டுமே உயிர்ப்பிடித்திருக்கிறது. மற்ற அனைத்தும் இருக்கிற  தடம் இல்லாமல் அழிந்து போயிருக்கிறது. மரம் நடுவதும்  வளர்ப்பதும் எளிதானது என நம்பியவர்கள் அது சாதாரண காரியம் இல்லை என  உணர்கிறார்கள்.

தோல்வியில்  சோர்ந்து போயிருந்த ஜியா ஹைக்சியாவுடன் மனம் விட்டுப்  பேச ஆரம்பிக்கிறார்  ஜியா  வேங்க்யூ. “விடாம முயற்சி பண்ணுவோம். நிச்சயம் நமக்கு ஒரு நாள் விடை கிடைக்கும்” என தன்னம்பிக்கையை விதைக்கிறார் வேங்க்யூ. பிறகு மரக்கன்றுகள் இறந்து போனதற்கு காரணம் தண்ணீர் இல்லாமல்,  நிலம் காய்ந்து போய்  இருப்பதுதான் என்பதைக் கண்டறிகிறார்கள்.  தண்ணீர் போகிற பாதையில் மரக்கன்றுகளை நடுவதுதான் சிறந்த வழி  என முடிவு செய்கிறார்கள்.

பின், மரக்கன்றுகள் வாங்குவதற்கான பணம் இல்லாமல் இருக்கிறார்கள். மரங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்ற கிளைகளை நடவு செய்கிற முறையைப் பற்றி கேள்விப்படுகிறவர்கள், ஊரில் இருக்கிற மரத்தில் இருந்து கிளைகளை வெட்ட முடிவு செய்கிறார்கள். ஜியா ஹைக்சியாவின் உதவியுடன் ஜியா வேங்க்யூ மரம் ஏறி கிளைகளை வெட்டுகிறார். வெட்டிய கிளைகளை ஆறுகளின் ஓரத்தில் நடவு செய்கிறார்கள். தினமும் அம்மரக்கன்றுகளை கண்காணித்து வருகிறார்கள். ஆறு மாதங்கள் எந்த மாற்றமும் இல்லாதிருந்த அக்கன்றுகள் துளிர்க்க ஆரம்பிக்கின்றன. தனிமரம்  தோப்பாவதை காண்கிற மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பிக்கிறார்கள். இருவரது கனவுகளும் சேர்ந்து  ஒரு நாள் மரங்களாகின்றன. அப்படி அவர்கள் நட்ட கன்றுகள் எண்ணிக்கை இப்போது பத்தாயிரத்தைத் தாண்டி நிற்கிறது. அவை அனைத்தும் இன்று மரங்களாக வளர்ந்து நிற்கின்றன.”அடுத்தத் தலைமுறைக்கு கொடுத்து போக எங்களிடத்தில் மரங்கள் இருக்கின்றன” எனச் சொல்லும் இரு நண்பர்களும் “எங்களின்  இறுதி மூச்சு இருக்கிற வரை மரம் நடுவோம். எங்களைப்  போல ஒவ்வொரு தனி மனிதரும் ஒரு மரம் வளர்த்தால் இயற்கையை  எளிதாக காப்பாற்றி விடலாம்” என்கிறார்கள்.

ருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதில் இருக்கிற ஆனந்தத்தை விட, இல்லாதவர்கள் இருப்பவர்களுக்கு கொடுத்துவிட்டு போவதில் தான் அதிகம் இருக்கிறது. ”மரம் நடுங்கள்  என்றெல்லாம் சொல்லவில்லை; எழுந்து நடங்கள்” எனச் சொல்கின்றன இவர்களின் செயல்பாடுகள்.

இவர் அவரின் கை. அவர் இவரின் கண்.  எங்கேயே ஒலிக்கிறது ஒரு பாடல்

“ஒண்ணுக்கொண்ணு தான் இணைஞ்சு இருக்கு…

Source…

ஜார்ஜ் அந்தோணி in

http://www.vikatan.com


Message for the Day…”No bhokta (enjoyer) can be a bhakta (devotee); that is to say, one who has an eye on the profit that can be derived from service to God cannot be a true devotee.”

Source: http://media.radiosai.org

If you keep awake throughout the twelve hours on Shivarathri due to illness, that vigil will not win His favour. If you quarrel with your spouse and desist from food for one full day, it will not be recorded in the book of God as a fast. If you lose yourself in the depths of unconsciousness after a bout of drinking, you will not be counted as a person who has achieved Samadhi (spiritual trance). No bhokta(enjoyer) can be a bhakta (devotee); that is to say, one who has an eye on the profit that can be derived from service to God cannot be a true devotee. Such people praise the Lord to the skies one day and decry Him the next when their fortune gets dry. Treasure in your hearts the Amrita Vakyas (immortality granting message) that you have heard in spiritual discourses; ponder over them in the silence of your meditation and endeavour to realise the precious goal of this invaluable human birth.

Message for the Day…”As a result of pilgrimages, your habits must change for the better; your outlook must widen; your inward look must become deeper and steadier. You must realise the omnipresence of God and the oneness of humanity. You must learn tolerance and patience, charity and service”

Source: http://media.radiosai.org/

If you go on a pilgrimage like a picnic, without the mental preparation necessary to receive God’s Grace, your travel is only for sight-seeing, not to strengthen your spiritual inclinations! Your journey is like that of a postal article, collecting impressions on the outer wrapper, not on the core of your inner being. A visually impaired person does not worry about day and night. So too, you cannot differentiate one place from another, if you do not allow the holiness to act on your mind. As a result of pilgrimages, your habits must change for the better; your outlook must widen; your inward look must become deeper and steadier. You must realise the omnipresence of God and the oneness of humanity. You must learn tolerance and patience, charity and service. After your pilgrimage, in your homes, ruminate over all the splendid experiences and be determined to strive for the higher and richer experience of God-realisation.

Joke of the Day …. Cooking Eggs…!!!

 

A woman is cooking eggs in the kitchen when her husband comes running in…

Immediately, he sees the eggs and gasps in horror. “Be careful! CAREFUL! Put in some more butter! Oh, my GOSH!”

The wife, startled at her husband’s violent reaction, dashes to the fridge to get some butter.

You’re cooking too many at once. TOO MANY! Turn them! TURN THEM NOW!”

The wife, concerned by the status of her husband’s mental state, forgets about the butter and goes running to the eggs.

“WE NEED BUTTER! Are you CRAZY??? Where are we going to get the butter? They’re going to stick! HURRY!”

The wife runs to the fridge.

“CAREFUL about the eggs! CAREFUL. You NEVER listen to me when you’re cooking! Never! Turn them quickly! Oh not that quickly, don’t you know how to cook? Are you insane? Turn the DAMN EGGS”

At this point, the wife starts crying, since she has no idea what to do.

She gasps “What is WRONG with you? I know how to cook eggs.”

The husband simply smiles and remarks “I just wanted to show you what it feels like while I’m driving with you in the car” and leaves.

Source…,www.ba-bamail.com

Natarajan