வாரம் ஒரு கவிதை… ” தனிமையோடு பேசுங்கள் “

தனிமையோடு பேசுங்கள்
————————–
தனியாக பேசி தெருவில் நடந்தால் அவரை
ஒரு மாதிரி பார்த்த காலம் இருந்தது  தம்பி !
கைபேசி காலம் இன்று.. கைபேசியில்
பேசாமல் நடந்தால்தான் செய்தி இன்று !
இது காலத்தின் கோலம் … அலை பேசி
அழைத்தால் தனி இடம் தேடி பேச ஓடும்
நீ தனியாக பேச நினைப்பதில் தவறு இல்லை
தம்பி ..!.
தனியாகப் பேசும் நீ தனிமையை நேசிக்கவும்
வேண்டும் …தனிமையில் யோசிக்கவும் வேண்டும் !
தனிமை இனிமை என்று சொல்லவில்லை நான்
தனிமை ஒன்றுதான் வாழ்வின் உண்மை  என்பது
என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை !
உண்மை இது உணர்ந்து உன் மனதோடு  நீ பேசு
எப்போதும் … உன் மனதும் உனக்கு சொல்லும்
உண்மை என்ன என்று, நீ தனிமையில் யோசிக்கும்
போதும் …தனிமையோடு பேசும்போதும் !
உண்மை இது நீ உணர்ந்தால் உன் பேச்சில்
இனிமை இருக்கும் …பிறரை மதிக்கும் தன்மை
இருக்கும் … பெற்றோர் உற்றோரின் தனிமை நீ
தவிர்க்க  நல்ல வழியும் உனக்கு எளிதில் புரியும் !
தனியாக யோசி.. பேசு தனிமையில்  உன் மனசோடு !
நீ ஒரு தனி மரம் அல்ல … குடும்பம் என்னும்
தோப்பில் நீ ஒரு சிறு மரம்   என்னும் உண்மை
உனக்கு புரியும் ! உன் தன்னம்பிக்கையும் வளரும்
தன்னால் !
நீ ஒரு சிறு மரமானாலும் உன் நிழலில் வளரும்
சிறு செடிக்கு நீதான் போதி மரம் என்னும் உண்மையையும்
மறக்க வேண்டாம் நீ !
 in http://www.dinamani.com dated 11th Feb 2018
Natarajan

வாரம் ஒரு கவிதை …” வஞ்சம் செய்வாரோடு …”

வஞ்சம்  செய்வாரோடு …
————————-
கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் லஞ்சம்
வாங்குது ஒரு கூட்டம் …தயங்காமல்
லஞ்சம் கொடுக்கவும் தயாரா காத்திருக்கு  இன்னொரு கூட்டம் !
வஞ்சம் செய்வாரோடு வஞ்சனை இல்லாமல்
சேர்ந்து தாய் திருநாட்டை வஞ்சிக்கும்
இந்த கூட்டணி ஒரு வஞ்சக கூட்டணி !
பிறந்த மண்ணையே வஞ்சிக்கும் இந்த
வஞ்சக கூட்டணியை வளர விடலாமா ?
நம் நாட்டின் அடித்தளத்தை அசைக்க
நினைக்கும் இந்த கூட்டணியை
வேருடன் களைய வேண்டாமா நாம் ?
லஞ்சம் தவிர் ..நெஞ்சம் நிமிர் ..இது கொடுப்பவருக்கும்
சேர்த்துதான் ! நம் மண்ணின் பிஞ்சு
மனத்திலும் விதைக்க வேண்டும் இந்த
விதையை !
எந்த வளத்துக்கும் பஞ்சமில்லா ஒளி
மிகு பாரதத்தில் நெஞ்சம் நிமிர்ந்து
வீறு நடை போடும் காலம் கனிய
வேண்டும் நம் இளைய தலைமுறைக்கு
வஞ்சனை எதுவும் இல்லாமல் வெகு விரைவில் !
K.Natarajan
in www.dinamani.com dated 2nd Feb 2018

வாரம் ஒரு கவிதை … ” நல்லதோர் வீணை ” 2

நல்லதோர் வீணை
——————
நல்லதோர் வீணை …நல்ல தலைவர் பலர்
வடிவமைத்துக் கொடுத்த நாள் இன்று
26 சனவரி …குடியரசு திருநாள் !
.
நல்ல ஒரு வீணை இசையை ஓசையின்றி
தவிர்த்து தனித்தனி ஆவர்த்தனம் பல
மேடையில் இன்று அரங்கேற்றம் என் நாட்டில் !
வீணை இசை இல்லாமல் கச்சேரி
எப்படி களை கட்டும் ? தனி ஆவர்த்தனம்
ஒரு கச்சேரி ஆகுமா ?
நல்லோர் பலர் விட்டு சென்ற நல்லதோர்
வீணை மறக்க வேண்டாம் நாம் !
நாம் எல்லோரும் இந்தியர் என்று
இசைக்கும் அந்த வீணையின் கீதம்
வீணாய் காற்றில் கரையவும் வேண்டாம் !
நல்ல ஒரு வீணை இசை நம் மூச்சாக
இருக்கட்டும் … நல்லதோர் வீணை
இன்றும் என்றும் நம் பேச்சாக இருக்கட்டும் !
Natarajan
26th Jan 2018

வாரம் ஒரு கவிதை …”.நல்லதோர் வீணை “

 

நல்லதோர்  வீணை
——————
நல்லதோர்  வீணை … அதன் நாதம்
சுருதி பிறழாத  சப்தஸ்வர கீதம் !
இந்த மண்ணில் பிறக்கும் ஓவ்வொரு
குழந்தையும்  நல்லதோர் வீணைதான் !
அந்த  வீணை இசைக்கப் போவது இனிய
கீதமா …இல்லை அபஸ்வர ஒலியா ?
விடை இதற்கு  அதன் அம்மா அப்பாவிடம்தான் !
வீணை வாசிப்பு எப்படி என்று தெரியவேண்டும்
குழந்தையின் அம்மா அப்பாவுக்கு !
அம்மா அப்பாவின் இனிய  இசை இயக்கத்தில்
வளரும் பிள்ளை  தப்பு தாளம் போடாது ..
தவறியும்  சுருதி பிசகு செய்யாது ! தன் இசையால்
பிறர் மனதை கொள்ளை அடிக்குமே அல்லாமல்
மறந்தும் தன் வீட்டையும் நாட்டையும் கொள்ளை
அடிக்காது !
நல்லதோர்  வீணை செய்வோம் ஒவ்வொரு
வீட்டிலும் …வீணையின் இனிய இசை
ஒலிக்கட்டும்  நம் வீட்டிலும் நாட்டிலும் !
Source…..Natarajan
in http://www.dinamani.com dated 27th Jan 2018

வாரம் ஒரு கவிதை …” தூரத்து வெளிச்சம் ” 2

 

வாரம் ஒரு கவிதை ….” தூரத்து வெளிச்சம் “

 

தூரத்து வெளிச்சம்
—————–
தூரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி  என்றால்
தூரத்து வெளிச்சம் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் !
மழை வேண்டி ஏங்கி தவிக்கும் மண்ணுக்கு
வானில் கருமேகம்  தூரத்து வெளிச்சம் !
பார்வை இல்லாமல் இருட்டில்  தவிக்கும்   கண்ணுக்கு
கண் தான விருப்ப மனுக்கள்  ஒரு தூரத்து வெளிச்சம் !
கடல் பயணம் வழி தவறும் நேரம்
கலங்கரை விளக்கம் தூரத்து வெளிச்சம் !
ஒரு மருத்துவரே தூரத்து வெளிச்சம்
அவரிடம் சிகிச்சை பெரும் நோயாளிக்கு !
இன்று என்ன துயரம் இருந்தாலும்
நாளைய  விடியல் யாருக்கும் ஓரு
தூரத்து வெளிச்சமே !
இருட்டில் தடுமாறும் ஒருவனுக்கு
ஒரு மெழுகு வத்தி ஒளியும்
தூரத்து வெளிச்சம்தான் !
என்  நாட்டுக்கும் நல்ல காலம் பிறக்கும்
நல்ல தலைவன் ஒருவன் என்
நாட்டை நல்ல வழியில் நடத்துவான்
அவனே என் தூரத்து வெளிச்சம் !
இது என் எதிர்பார்ப்பு !
இன்று என் விண்ணில் தெரியும் ஒரு
சிறு ஒளிக்கீற்று தூரத்து வெளிச்சமா ?
இல்லை வெறும் மின்னல் கீற்று மட்டுமா ?
விடை இல்லையே  இதற்கு என்னிடம் !
அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் !
Source…..Natarajan
in http://www.dinamani.com dated 20th Jan 2018

வாரம் ஒரு கவிதை…. ” யுத்தம் செய்யும் கண்கள் ” …2

யுத்தம்  செய்யும்  கண்கள்
————————
அக்கம் பக்கம் யாருமில்லை …
யாரும் என்னைப் பார்க்கவில்லை
நான் செய்யும் தவறுக்கு சாட்சி
என்னைத் தவிர யாரும் இல்லை
என்னும் இறுமாப்பு அந்த கயவனுக்கு !
அவனுக்கு தெரியாது அவன் கண்கள்
தவிர ஒரு மூன்றாம் கண் அவனை
கண்காணிக்கிறது என்று !
சத்தம் இல்லாமல் மூன்றாம்  கண்
செய்யும் இந்த யுத்தம் நிச்சயம்
நிறுத்தும் அந்த கயவனை சட்டத்தின் முன்னால்
ஒரு நாள் !
Natarajan

வாரம் ஒரு கவிதை ….” யுத்தம் செய்யும் கண்கள் “

 

யுத்தம்  செய்யும்  கண்கள்
—————————
அகத்தின் அழகை முகத்தில் வெளிச்சம்
போட்டுக் காட்ட  கூர் விழிகள் நடத்தும்
யுத்தம் ஒரு மௌன யுத்தம் !
வாய் பொய் சொன்னாலும் கண்
சொல்லாது   பொய் ! கண்கள் பேசி
உண்மை தெரியும்  யுத்தம் ஒரு
தர்ம யுத்தம் !
கருவிழி அடையாளம் தனி மனிதன்
ஆதாரம் …நித்தம் நித்தம் முளைக்கும்
பித்தர் சிலரின்  தகாத செயலை இனம்
கண்டு அதை களை எடுக்க  கண்கள்
செய்வது அறிவியல் யுத்தம் !
தான் குடியிருக்கும் உடல் மறைந்தாலும்
தான் அழியாமல்   தன் விழி வழியே
இன்னொரு உயிர் இந்த பூவுலகைப்
பார்க்க தன்னையே தானமாகக் கொடுக்கும்
கண் தானம் கண்கள் செய்யும் ஒரு
அதிசய யுத்தம் !
Natarajan
in http://www.dinamani.com  dated 13th Jan 2018

வாரம் ஒரு கவிதை ….”வீணையின் நாதம் “… கவிதை 2

வீணையின் நாதம்
——————
வீணையின்  நாதத்தில் கீதமும் இருக்கும்
வேதமும் ஒலிக்கும்
பேதமும் பார்க்காதே  வீணை தன்னை
இசைப்பவர் யார் என்று ?
இசை ரசிக்கும் ரசிகருக்கும் எம்மதமும்
சம்மதமே..இசை ஒன்றே அவர் பேசும்
மொழி …உண்ணும் உணவு !
இசைவிழா நேரம் இனிய ராகத்தில்
இணையும் மனசு சட்டென்று மாறி
ஒருவர் மீது ஒருவர் வசை மாரி
பொழிவது ஏன் ?
நாதத்தின் ராகம் மட்டும் என்ன என்று
அலசிய அதே ரசிகர்  கூட்டம் ஒரே இரவில் நீ என்ன
இனம் நான் என்ன இனம் என்று
அபஸ்வர ராகம் பாடத் துடிப்பது ஏன் ?
வீணை வடிக்குது கண்ணீர் இன்று
தன் நாதமும் கீதமும் வீணாய் போனதே என்று !
Natarajan in
http://www.dinamani.com dated 7th Jan 2018

வாரம் ஒரு கவிதை ….” வீணையின் நாதம் “