பிள்ளையார் …. சில ருசிகர தகவல்கள் !!!!

 

கிரகதோஷம் போக்குபவர் :

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நன்மையோ தீமையோ அவற்றை நிர்ணயிப்பது கிரகங்களே. நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களைக் கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர்.விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையது. ஒன்பது கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழக்கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடதுகீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் நவக்கிரகதோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.

 

 

விக்னேஷ் விளக்கம்:

“விக்னம்’ என்றால் “தடை’. எனவே தான், தடைகளை நீக்கும் விநாயகரை “விக்னேஷ்’ என்பர். ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன், அது தடையின்றி நடக்க, விநாயகரை வணங்கி அவருடைய அருளை வேண்டுகிறோம். லலிதா சகஸ்ர நாமத்தில் “மஹாகணேச நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா’ என்ற நாமா வருகிறது.
அதாவது, அம்பிகை பண்டாசுரனை வதம் செய்யும்போது, விநாயகர் பெரும் உதவி செய்தார் என்பது இதன் பொருள்.
தனது (விநாயக) யந்திரத்தினால் பண்டாசுரனும், அவனுடைய சகாக்களும் விடுத்த அத்தனை பாணங்களையும் வீழ்த்தி தேவியை வெற்றி பெறச் செய்தார் விநாயகர். இதனால் தேவி மகிழ்ச்சி அடைந்தாள். வாழ்வில் குறுக்கிடும் தடைகள் அடியோடு நீங்க விநாயகப் பெருமானை வணங்க வேண்டும்.

ஐந்து ஐந்து ஐந்து :

இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் “பஞ்சகிருத்யங்கள்’ எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டிருக்கிறார். அதனால், ஐங்கரன் என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.

பிடித்து வைத்தால் பிள்ளையார்:

பிடித்து வைத்தால் பிள்ளையார் குழந்தை முதல் முதியோர் வரை விநாயகரை வணங்கி எல்லா இடையூறுகளையும் களைய பிரார்த்திக்கின்றனர். அவரை எந்த உருவத்திலும் வழிபடலாம். மஞ்சள் பொடியில் பிடித்து வைத்தாலும், களிமண்ணில் செய்தாலும், மரத்தில் செய்தாலும் அந்த உருவத்தில் நமக்கு அருள்பாலிப்பார். இதைத்தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்பர்.

 

 

மூஞ்சுறு வாகனம்:

யானை வடிவம் கொண்ட விநாயகர், மூஞ்சூறு மீது அமர்ந்த ரகசியத்தை கேளுங்கள்.ஒரு பெரிய உருவம், ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர முடியுமா? நம்ப முடியவில்லையே! என்று தான் விநாயகரின் வாகனத்தைப் பார்த்தவுடன் நினைப்பார்கள். இதில் நுண்ணிய அர்த்தம் உள்ளது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக கடவுள் இருக்கிறார் என்பதே இதன் தத்துவம். அவரை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், கடவுளையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது என்பதே இதன் உள்ளர்த்தம்.

கணேசினி:

பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையாரை கணேசினி என்றும், கஜானனி என்றும் அழைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர், பெண் வடிவத்துடன் நிற்கிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயில், சுவாமி சந்நிதி நுழைவு வாசலில், கணேசினியின் திருவுருவம்
பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால் வியாக்ரபாத கணேசினி எனப்படுகிறார்.

source ::::Dinamani …Tamil Daily

natarajan

ஐங்கரனின் ஆறு படை வீடு !!!


ஆனைமுகத்தான் விநாயகருக்குரிய ஆறுபடைவீட்டுக் கோவில்கள் இருக்கின்றன. முதல் படைவீடு திருவண்ணாமலை. கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு, “அல்லம் போக்கும் விநாயகர்’ வீற்றிருக்கிறார். வணங்குபவர்களின் அல்லலைக் களைவதில் இவர் நிகரற்றவராகத் திகழ்கிறார்.இரண்டாம் படைவீடாக இருப்பது விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில். காசிக்குச் சமமாகத் திகழும் இக்கோவிலில் “ஆழத்துப்பிள்ளையார்’ என்ற பெயரில் இவர் காட்சி தருகிறார். பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி இவரைத் தரிசனம் செய்ய வேண்டும். (காளஹஸ்தியிலும் இவ்வாறு ஒரு சந்நிதி உள்ளது) தனியாக கொடிமரம் இவருக்கு அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு. இவரை வழிபாடு செய்தபின் படியேறி மேலேறுவது போல், வாழ்வில் மேன்மைகளைத் தந்தருள்பவர் இப்பெருமான்.

வள்ளலாக விளங்குகிறார்:மூன்றாவது படைவீடு திருக்கடையூர் அபிராமி கோவில். இங்கு “கள்ளவாரணப்பிள்ளையார்’ என்ற திருநாமம் கொண்டுள் ளார். இவரை வழிபடுவோர் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று மகிழ்வர். அபிராமிப்பட்டர் அந்தாதியில் இவரைப் போற்றி வணங்குகிறார்.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், சித்தி விநாயகராக தன்னை நாடி வருபவர்களுக்கு வாழ்வில் சித்தியை (வெற்றியை) அருளும் வள்ளலாக விளங்குகிறார். அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் இவர் உள்ளார். “மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பதற்கேற்ப, அளவில் சிறியவர் என்றாலும், சக்தி வாய்ந்தவராக உள்ளார். (பிற்காலத்தில் முக்குறுணிப் பிள்ளையார் சன்னிதி உருவானதும் இவரது சந்நிதியில் வழிபாடு குறைந்து விட்டது) மாணிக்கவாசகர், பாண்டியநாட்டு படைக்காக குதிரைவாங்கச் செல்லும் போது இவரை வழிபாடு செய்துவிட்டே கிளம்பினார்.

ஐந்தாம் படைவீடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பிடம் பெறுகிறார். சிவலிங்கத்தை வலக்கையில் தாங்கி, சிவபூஜை செய்யும் நிலையில் இப்பெருமான் கேட்ட வரம் தரும் கற்பகவிருட்சமாகத் திகழ்கிறார். ஆறாம் படைவீடு பொல்லாப் பிள்ளையார் கோவில் கொண்டிருக்கும் திருநாரையூர் (கடலூர் மாவட்டம்)ஆகும். பொள்ளுதல் என்றால் செதுக்குதல் என்பது பொருள். உளியால் செதுக்கப்படாமல் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தியாவார். காலப்போக்கில் இப்பெயர் மருவி பொல்லாப்பிள்ளையார் என்று மாறிவிட்டது.

 

source :::::Dinamalar Tamil Daily

natarajan

An Auspicious Greetings on Ganesh Chaturthi Day….

 

source :::::

Respected moderator Smt Sumi has sent us this wonderful greeting to be shared with all our members on the great occasion of Vinayaka Chaturthi 2013 thro http://www.periva.proboards.com .Please note that this greeting contains a beautiful discourse of Sri Maha Periva as well, and would be a visual and audio treat to all of you. I sincerely hope you get to see this on this auspicious day,

Read more: http://periva.proboards.com/thread/5084/ebook-vinayaka-chaturthi-special-edition?page=1&scrollTo=9265#ixzz2eN7JzHuz

natarajan

Message For The Day….Vinayaka”s Grace is Needed to Clear all Obstacles in Our Path ….

Vinayaka is the Lord who removes all obstacles. The elephant is noted for its acute intelligence. Ganesha’s elephant head symbolises sharpness of intellect and the highest power of discrimination. In a forest, when an elephant moves through the jungle, it clears all the obstacles, and leads the way for others to follow. Likewise, worship Ganesha at the start of any activity. His Grace is sufficient to clear all the obstacles in your path and grant success in your undertakings. The small mouse is a clever and lively creature. Symbolically it implies that we should be wise, agile and diligent in our actions. Vinayaka is a deity of infinite potency, who encompasses the entire universe within Himself. Accord Him a place of honour and secure His Grace. Then your journey of life will be made smoother and happier.    

 

Sathya Sai Baba

விநாயகர் பூஜைக்கு உகந்த இலை , மலர் ….

இலைகளும், பலன்களும்

விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது. அதனால் கீழ்க்காணும் பலன்கள் கிடைக்கும்.

முல்லை இலை – அறம் வளரும்

கரிசலாங்கண்ணி இலை – இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்

வில்வம் இலை – இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

அருகம்புல் – அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்

இலந்தை இலை – கல்வியில் மேன்மை அடையலாம்

ஊமத்தை இலை – பெருந்தன்மை கைவரப் பெறும்.

வன்னி இலை – பூவுல வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்

நாயுருவி – முகப் பொலிவும், அழகும் கூடும்.

கண்டங்கத்திரி – வீரமும், தைரியமும் கிடைக்கும்

அரளி இலை – எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்

எருக்கம் இலை – கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும்

மருதம் இலை – மகப்பேறு கிடைக்கும்

விஷ்ணுகிராந்தி இலை – நுண்ணறிவு கைவரப் பெறும்

மாதுளை இலை – பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்

தேவதாரு இலை – எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்

மருக்கொழுந்து இலை – இல்லற சுகம் கிடைக்கப் பெறும்

அரசம் இலை – உயர் பதவியும் பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்

ஜாதிமல்லி இலை – சொந்த வீடு, மனை,பூமி பாக்கியம் கிடைக்கும்

தாழம் இலை – செல்வச் செழிப்பு உண்டாகும்.

அகத்தி இலை – கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/5082/vinayakar-benefits-archanai-different-leafs/#ixzz2eI92XUMY

படித்ததில் பிடித்தது ….தோப்புக்கரணம் எதற்காக ?…

விஷ்ணு காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று சக்ராயுதம். அவர் அந்தச் சக்கரத்தை ஒரு போரில் ஏவ, அது சக்தி இழந்து திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணு, வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.

அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றார். இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு, சிவனை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவனின் ஆயிரம் திருநாமங்களாகிய சஹஸ்ர நாமம் கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார். மனம் மகிழ்ந்த சிவபெருமான் முன்பொரு முறை ஜலந்தாசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சக்கரப் படையை விஷ்ணுவுக்கு கொடுத்தார். விஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார்.

விஷ்ணுவின் கையிலிருந்த சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக்கொண்டார். அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு, தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார். அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இரு காதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோப்புக்கரணம் போட்டார். இந்தச் செயல் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.

அப்போது அவர் வாயில் இருந்த சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு. இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் எனப் போற்றப்படுகிறார். இவர் காஞ்சி

புரம் கோயிலில் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார். இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள்புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.

 

source ::::Dinamani …Tamil daily

natarajan

விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்ரம் !!!

விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் படைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!

Temple images

 

 

கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே!

பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே!

ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனை கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே!

என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே!

தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்க வனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே!

எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.

உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட
மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத்
தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.

உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். எங்களுக்கு இம்மையில் சகல செல்வத்தையும், மறுமையில் முக்தியையும் தந்தருள்வாயாக.

 

source::::: Dinamalar…Tamil Daily

natarajan

D for Devi ..I for Ilango ..P for Prahaladha…and A for Anjaneya !!!

ரா.கணபதி அண்ணாவின் “மைத்ரீம் பஜத’ புஸ்தகத்திலிருந்து….

மேனா எனப்படும் பல்லக்கு ஸ்ரீபெரியவாளுக்குச் ‘சென்றால் ஊர்தியாம்; இருந்தால் சிங்காசனமாம்; புணையாம்’ (உறங்கப் பாயாம்)! ‘இருந்த திருக்கோல’த்தில் மேனாவுக்குள்ளிருந்து அவர் ராஜ்யபாரம் நடத்துவார். அப்படி ஒரு நாள்.

பக்கத்தில் ஒரு பெண் குழந்தை வந்து நின்றது.

“பேர் என்ன?” என்று விசாரித்தார் பெருமான்.

“தீபா” என்று கீச்சுக்குரலில் குட்டி கூறிற்று.

பெரியவாளுக்கு அது சரியாகக் காது கேட்கவில்லை. குழந்தையிடம், “நீ சொன்னது எனக்குக் கேக்கலியே! பலமாச் சொல்லும்மா”! என்றார்.

அது அழுத்தந்திருத்தமாக, “D for Donkey, E for Egg, இன்னொரு E for Elephant, P for People, A for Ant” என்றது.

பெரியவாள் மெய்யாலுமே அதில் வியப்படைந்தாலும் அவ்வியப்பை ஆயிரமாகப் பெருக்கி அபிநயித்து, “பேஷ், பேஷ், மஹா கெட்டிக்காரியா இருக்கியே! பொளந்து தள்றியே!” என்று குட்டியைச் சிலாகித்தார்.

அதற்கு ஏக மகிழ்ச்சி.

சின்னஞ் சிறிசிடம் பென்னம் பெரியவர் தொடர்ந்தார்: “நீ நன்னாதான் சொன்னே, ஆனா ஒம் பேரோட ‘டாங்கி’யையும் ‘எக்’கையும் சேக்கறதுக்குப் பதிலா நான் இன்னூரு தினுஸா சொல்லித் தரட்டுமா? ரொம்ப ஒஸ்த்தியானவாளோட சேத்துச் சொல்லித் தரேன். நீ D-e-e-p-aன்னு அஞ்சு எழுத்துல சொன்ன பேருக்கே இன்னுங் கொஞ்சம் ஈஸியா D-i-p-aன்னு நாலு எழுத்துலயும் ஸ்பெல்லிங் சொல்லலாம். அப்படி வெச்சுக்கலாம்.

“D for Devi, தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார். அம்மாஸ்வாமியா அவர் ரொம்ப அன்போட வரச்சே தேவின்னு பேரு. அம்மன் கோவில்னு கோவில்லே பாத்திருக்கியோ?”

“பாத்திருக்கேன்”.

“அங்கே இருக்கிற அம்மன் தான் தேவி. எங்கே சொல்லு, D for Devi”.

“D for Devi”.

”பேஷ்! அப்புறம் நீ ரெண்டு E சொன்னதுக்குப் பதிலா ஒரே I. I for Ilango. இ-ள-ங்-கோ. சொல்லு”.

“இளங்கோ அப்படின்னா?”

“இளங்கோ-ங்கிறவர்தான் தமிழ்லயே ரொம்ப ஒஸ்த்தியான பொயட்ரி கதை எழுதினவர். கண்ணகி-ன்னு ஒரு அம்மாவைப் பத்தி பொயட்ரியாவே ஸ்டோரி சொன்னவர். அந்த ஸ்டோரி ரொம்ப நன்னா இருக்கும். எனக்கு இப்ப சொல்றதுக்கு டயம் இல்லே. அப்பாவைப் பொஸ்தகம் வாங்கித் தரச் சொல்லு. I for Ilango”.

“I for Ilango”

”அப்புறம் P for Prahlada – ப்ரஹ்லாதன்…”

“தெரியும், தெரியும். பக்தியா இருந்த boy. அவனுக்காக Godஏ சிங்கம் மாதிரி வந்து அவனுக்கு enemy-யா இருந்த father-ஐ kill பண்ணினார்”.

“பேஷ், பேஷ், நன்னா தெரிஞ்சு வெச்சுண்டிருக்கியே! கடைசியா, A for Anjaneya. ஆங்ஜநேயர் தெரியுமா?”

”ஊஹூம்”.

“ஹநுமார்?”

”தெரியும். Monkey-God”.

“அவரே தான். அவருக்கே தான் ஆஞ்ஜநேயர்னு பேரு. சொல்லு”.

“ஆஞ்ஜநேயர். A for Anjaneya.”.

“கரெக்டா சொல்லிட்டே! இந்தாம்மா!” என்று பாலகியிடம் கற்கண்டை வீசினார் அருளாளர்.

“D for Devi, I for Ilango” என்று சொல்லியவாறு துள்ளி ஓடினாள் சூட்டிகைச் சிறுமி.

எழுத்துக்களை அறியும்போதே மதத்திலும் இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தித் தர ஜகத்குருவின் சுவையான பாடம்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4964/maha-periyava-children-11/#ixzz2e2CyXn2j

“ரோஜாப்பூ இன்று குழந்தைகளுக்கு”….மகாபெரியவர் !!!

நாலைந்து கூடைகள் நல்ல ரோஜா மலர்கள் ஒரு தினம் ஸ்ரீமடத்தில் ஸமர்ப்பணமாயிற்று. ஸ்ரீசந்திர மெளளீச்வரர் பூஜா விமானம் அற்புதப் புஷ்பாலங்காரம் பெறும் எனப் பணியாளர்கள் எண்ணினர்.

அப்போது ஒரு பள்ளிக் குழந்தை கோஷ்டி வந்தது. அவர்களுக்குத் தரிசனம் அளித்த அருட் தாத்தா ரோஜாக் கூடைகளைக் கொண்டுவரப் பணித்தார்.

”இன்று என்ன, வழக்கமில்லா வழக்கமாகக் குழந்தைகளுக்குப் புஷ்ப விநியோகம்?” என்று பாரிஷதர்களுக்குப் புரியவில்லை.

குழந்தைகளின் வாயாலேயே அவர்களுக்கு குருநாதன் புரிய வைத்தார்.

“இன்னிக்கு என்ன விசேஷம்:” என்று அவற்றைக் கேட்டார்.

“நேருஜி பிறந்த நாள்” என்று அவை ஒருகுரலில் கூறின.

“அவருக்கு ரொம்பப் பிடிச்சது என்ன?”

“ரோஜாப்பூ, ரோஜாப்பூ!”

“ஒங்களுக்கெல்லாமும் அவர் ஞாபகமா இன்னிக்கு ரோஜாப்பூ!”

இப்படியாகத்தானே ‘குழந்தையும் தெய்வமும்’ என்ற வாக்குப்படி, பூஜைக்கு என எண்ணப்பட்ட மலர்களை அரும்புப் பருவத்தினருக்கு விநியோகித்தவர், அருள் பழுத்த கனியான ஸ்ரீசரணர்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4947/maha-periyava-children-9/#ixzz2dQQwyZXF

Message For The Day…Remember we are all pilgrims towards the same goal …Routes differ !!!

Engage yourself in spiritual discipline, spiritual thoughts, and spiritual company. Forget the past and let it go its way. At least from now on be determined to save yourself. Never yield to doubt or unsteadiness. Have faith in any one Name and Form that appeals to you. If you revere one form of God and hate another, the net result is zero. God will not tolerate the slightest hatred of any Name or Form. Avoid factions, quarrelling, scorning and fault-finding, as they reveal your ignorance and actually recoil on you. You find fault in others, because you have the same faults in you. If you throw contempt at the form of God that another reveres, the contempt falls on your own God. Remember, everyone is a pilgrim towards the same goal. Some take one route, others take another.

 

Sathya Sai Baba