நவராத்திரி வழிபாடு !!! மகாபெரியவர் சொல்வதை கேட்போமா !!!

 

 
நவராத்திரி கொண்டாட்டம் – மகாபெரியவர் சொல்றதை கேளுங்க!
(ஆண்களுக்கு சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரி)

05-10-2013. 
Navarathiri Special

காஞ்சி மகாபெரியவர், ஒரு நவராத்திரி சமயத்தில் பக்தர்கள் முன்னிலையில் ஆற்றிய அருளுரை இதோ: 

உலகில் தீமை அழிந்து நன்மை பெருகிட நவராத்திரிகொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரி முக்கியம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், தீர்க்க சுமங்கலியாய் வாழவும் சுமங்கலிகள் இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகையை பூஜிக்க வேண்டும்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட மனதில் தைரியம் வளரும். அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை லட்சுமியாக வழிபட செல்வச் செழிப்பு உண்டாகும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக, தேவியை பூஜிக்க கல்விவளர்ச்சி மேம்படும். ஞானம் கைகூடும்.

தினமும் காலையில் சர்க்கரைப்பொங்கல், உளுந்தவடையும், மாலையில் சுண்டல், பால் பாயசமும் நைவேத்யம் செய்ய வேண்டும். பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாடவேண்டும். இந்நாட்களில் சவுந்தர்ய லஹரி, லட்சுமி, துர்கா அஷ்டோத்ரம், மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம், தேவி பாகவதம் போன்றவற்றை பாடலாம்.
நவராத்திரியின்போது சுமங்கலிகள் நூல் புடவை அணிவது சிறப்பு.

கன்னி பூஜை: முதல்நாள், ஒரு கன்னிக்கும் (பெண் குழந்தை), ஒரு சுமங்கலிக்கும் பூஜை செய்ய வேண்டும். அந்த குழந்தைக்கு பாவாடை, சட்டை, மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சீப்பு, பூ ஆகியவற்றை வழங்கி மகிழ்விக்க வேண்டும். இதே போல், இரண்டாம் நாள் இரு கன்னிகளும், மூன்றாம் நாள் மூன்று கன்னிகளும் என ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தையை அதிகப்படுத்தி, ஒன்பதாம் நாள் ஒன்பது கன்னிகளுக்கு பூஜை செய்ய வேண்டும். சுமங்கலியைப் பொறுத்தவரை, தினமும் ஒருவரே போதுமானது.

கொலு விதிமுறை: நவராத்திரி பூஜை செய்பவர்கள் மனத்தூய்மை, ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம். அம்பிகை கொலு வீற்றிருக்கும் இடம் எப்போதும் தூய்மையோடும், கோலம் இட்டு அழகுடனும் இருப்பது மிக அவசியம். பூக்களால் அம்பிகையை தினமும் அலங்காரம் செய்ய வேண்டும். கொலு வைத்தவர்கள் துக்க நிகழ்ச்சிக்குப் போகக்கூடாது. தேவி உபாசகர்களை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்ய வேண்டும். நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ, வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது.

காஞ்சிப்பெரியவரின் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நவராத்திரியைக் கொண்டாடுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் பெற்று மகிழ்வீர்கள். 

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

source:::::Dinamalar…Tamil Daily
natarajan

செல் {ல} பிள்ளையார் !!!

என்ன பண்றதுன்னே தெரியலை… பிரச்னைக்கு மேல பிரச்னை ஒவ்வொண்ணா வந்துகிட்டே இருக்கு…!’
“இதுக்கு ஏன் கவலைப்படறே… பிள்ளையாருக்கு ஒரு போன் பண்ணிப் பேசு…! அவர் தீர்த்துவைச்சுடுவார்.’
பொண்ணுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிச்சுட்டேன். இப்போ பார்த்து எதை எடுத்தாலும் தட்டிக்கிட்டே போகுது!
கணபதிக்கு ஒரு கால் பண்ண வேண்டியது தானே!
வியாபாரம் நொடிச்சே போயிடும்போல இருக்கு. கணேஷ்தான் கண்ணைத் திறக்கணும். அவருக்குத்தான் போன் பண்ணி கஷ்டத்தைச் சொல்லப்போறேன்.
இப்படியெல்லாம் யாராவது பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்?
பாவம் ரொம்ப கஷ்டம் போல இருக்கு. அதான் ஏதோ உளறுறாங்க… கடவுளுக்காவது போன் போட்டுப் பேசறதாவது! என்றுதானே நினைப்பீர்கள்?
ஆனால் மகாராஷ்டிராவில் இந்தூரில் உள்ள சிந்தாமன் கணேஷ் மந்திர் பற்றி கேள்விப்பட்டிருந்தால் நீங்கள் இப்படி நினைக்க மாட்டீர்கள்.
காரணம், அங்கிருக்கும் பாண்டாக்கள் (அர்ச்சகர்கள்) வைத்திருக்கும் மொபைலுக்கு தினம் தினம் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வருகின்றன. ஆனால் அவை அவர்களுக்கானது அல்ல. அங்கே அருள்பாலிக்கும் பிள்ளையாருக்கு.
இது என்ன புதுக் கதையா இருக்கிறது என்கிறீர்களா?
இது கதையல்ல நிஜம். வெளியூர், வெளிநாடு என்று எங்கெங்கெல்லாமோ இருந்து பக்தர்கள் இந்த கணபதிக்கு போன் செய்கிறார்கள். உடனடியாக செல்போனை விநாயகரின் காதருகே வைக்கிறார்கள் பாண்டாக்கள். நம் ஊரில் பக்தர்கள் நந்தியின் காதுகளில் பேசுவதுபோல, போன்வழியே தங்களின் கோரிக்கைகளை கணபதியின் காதில் சொல்கிறார்கள். அத்தனையையும் ஆகுவாகனன் கேட்டுக் கொண்டு பிரச்னைகளைத் தீர்த்துவைப்பான் என்று நம்புகிறார்கள்.
விஷயத்தைச் சொன்னதும் ஏதோ சமீபகாலத்தில் கட்டப்பட்ட கோயிலின் நூதன உத்தி என்று நினைத்துவிடாதீர்கள்.
சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் இது. இப்பகுதியின் செல்வாக்கு மிகுந்த விநாயகராக இருந்த இவர் “செல்’ கணபதியாக மாறியது ஒரு சுவையான சம்பவம். வேண்டுவோர் வேண்டுவன தரும் இந்த விநாயகரிடம் பக்தர்கள் கோரிக்கைகளை நேரில் வந்து சொல்வது வழக்கமாம். கடந்த அரை நூற்றாண்டுக்கு முன் இங்கிருந்த பலர், வெளியூர், வெளிநாடுகள் சென்றதில் கோயிலுக்கு வர இயலாத நிலை ஏற்பட்டது. எனவே அவர்கள் தங்கள் வேண்டுதலை கடிதமாக எழுதுவதும், அர்ச்சகர்கள் அதனை பிள்ளையார் முன் நின்று படிப்பதும் பழக்கமானத.
அஞ்சல் மட்டுமே தொலைத் தொடர்புக்கென இருந்த நிலை மாறி, இன்று செல்போன் பிரதான இடத்தைப் பிடித்துக் கொண்டதில் பக்தர்களும் தங்கள் கோரிக்கைகளை மொபைல் வழியே சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
கடிதம் எழுதி அதனை அர்ச்சகர் கணநாதன் முன் படிப்பதை விட, செல்போன் மூலம் பேசுவதில் தாங்களே பிள்ளையாரிடம் நேரில் சொல்வதுபோன்ற மன நிறைவு கிடைப்பதால் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போய் இன்று ஒவ்வொரு நாளும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகிறதாம் இந்த கணபதிக்கு. கோரிக்கையுடன் போன் செய்யும் பக்தர்களை காத்திருக்க வைத்தல் கூடாது என்பதால்தான் உடனுக்குடன் அவற்றை எடுத்த கணபதியின் காதினருகே வைக்கின்றனர்.
வேண்டுதல்கள் மட்டுமின்றி, பிரார்த்தனை ஈடேறியதற்காக பிள்ளையாருக்கு நன்றியையும் போனிலேயே தெரிவிக்கிறார்கள் பலர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் என்றால் தலபுராணம் இல்லாமல் இருக்குமா? இருக்கிறது, கிருஷ்ணருடன் தொடர்புடைய புராணம்.
கிருஷ்ணர், சிந்தாமணி (ஸ்யமந்தக மணி?) என்ற அபூர்வ மணியைத் தேடியலைந்த சமயத்தில் இருக்கும் இடத்தினை அடையாளம் காட்டியவராம் இந்த கணபதி.
கேட்டதைத் தரும் கற்பக மரம்போல இந்த சிந்தாமணியும் கேட்டதை உடனே தருமாம். கணபதி வழிகாட்டலில் அதனைக் கண்டுபிடித்த கிருஷ்ணர், முடிவில் அந்த ஒப்பற்ற மணியை பிள்ளையாருக்கே தந்துவிட்டாராம். அதனால் வந்த பெயர் தான் சிந்தாமணி விநாயகர். சிந்தாமன் கணேஷ், சிந்தாஹரன் (சிந்தா என்றால் துயரம் என்றும் சிந்தாஹரன் என்றால் துயரங்களைப் போக்குபவர் எனவும் அர்த்தமாம்) என்றெல்லாம் அழைக்கிறார்கள் மத்தியப் பிரதேசத்து பக்தர்கள்.
சுற்றுப்பகுதியில் உள்ள எவர் வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும் முதல் அழைப்பு இந்த மூத்த தெய்வத்திற்குத்தான். வாகனங்கள் வாங்கினாலும் இவர் முன் எடுத்துவந்து பூஜித்த பிறகே ஓட்டத் தொடங்குகிறார்கள்.
கிருஷ்ணருடன் தொடர்புடைய புராணம் இருப்பதால் மகாவிஷ்ணுவும் இங்கே இடம் பிடிக்கிறார்.
பதினோராம் நூற்றாண்டுக்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட கோயில், மகாராஷ்டிராவை பராமர்கள் ஆட்சிசெய்த காலத்தில் அமைக்கப்பட்ட கோயில் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கருவறையில்தானே தோன்றிய சுயம்பு வடிவினராக காட்சி அளிக்கிறார் சிந்தாமன் கணேசர். அவரது மனைவியரான சித்தியும், ரித்தியும் அருகே விக்ரக வடிவில் அமைந்து அருளாசி வழங்குகின்றனர்.
முழுக்க முழுக்க கற்களால் அமைக்கப்பட்ட ஆலயம். அலங்காரத் தூண்கள், எழிலான மண்டபம் என கோயில் நாளுக்கு நாள் வளர்ந்திருந்தாலும், பிள்ளையார் தானே தோன்றிய இடமான கருவறை, மாற்றம் ஏதுமின்றி அப்படியே, தெய்வீக மணம் நிறைந்திருக்கிறது.
ரித்தி, சித்தி சமேத விநாயகரையும், தனிச் சன்னதியில் காட்சிதரும் மகாவிஷ்ணுவையும், பக்தர்கள் சமமாகவே கருதி வணங்குகிறார்கள். ஆனால் பிரச்னைகளைச் சொல்வது பிள்ளையாரிடம் மட்டும்தான்.
பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி நடக்கும் உற்சவத்தின்போது இந்த கணேசருக்கு வரும் போன்கால்களின் எண்ணிக்கை, தொலைத்தொடர்பு சேவையையே திணறச் செய்யுமாம்.
மத்தியபிரதேச பக்தர்களின் செல்லப் பிள்ளையாரான இந்த “செல்’ல பிள்ளையை வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் ஒருதடவை சென்று தரிசியுங்கள்.
அல்லது, Shree chithaman ganesh mandir, railway station road, retnakhedi, madyapradesh – 456 006, india என்ற முகவரிக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். உங்கள் பிரச்னையை பிள்ளையார் காது கொடுத்துக் கேட்பார். நிச்சயம் தீர்த்துவைப்பார்.

எங்கே இருக்கிறது? 
மத்தியபிரதேச மாநிலத்தில் உஜ்ஜயினிக்கும் ஃபேட்டாபாத்துக்கும் இடையே ஜுனி இந்தூர் எனும் இடத்தில் இருக்கிறது.

எப்படிச் செல்வது? மத்தியபிரதேசத்தின் பல இடங்களில் இருந்தும் டாக்ஸி வசதி இருக்கிறது. இந்தூர் மற்றும் போபாலில் இருந்து பேருந்து வசதி உண்டு.

ஜெயாப்ரியன்

source::::::Kumudam Bhakthi  Weekly

natarajan

natarajan

Message For The Day…All is HIS and Nothing is Ours ….

Every one of you has in possession a ticket for liberation from the cycle of birth and death. But most do not know the train that has to be boarded; many get down at intermediate stations, imagining them to be the terminus and wander helplessly in the wilderness, or are carried away by sights and scenes. Until the wound heals, and the new skin is formed and hardens, the bandage is essential. So too, until Reality is realized, the balm of faith, holy company and holy thoughts must be applied to the ego-affected mind. It is dedication to the Lord that sanctifies all activities. He is the Prompter, the Executor, the Giver of the required strength and skill, and the Enjoyer of the fruit thereof. So dedication must come naturally to you, for all is His, and nothing is yours. Your duty is to believe that He is the impeller of your activities and draw strength from that belief.

 

Sathya Sai Baba

Largest Ganapathy Statue In India !!!

 

Chinmaya Ganadhish, Kolhapur
Chinmaya Ganadhish, Kolhapur

So do you wonder where is the largest Ganesh idol. No its not in Mumbai, nor in Pune, it is in Kolhapur!….85 Feet …

The colorful looking Ganesha statue depicts the lord in the most usual form with four hands and a five-head snake

source:::::Hub Pages

natarajan

முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர் !!!

புதுச்சேரி ரயில்வே நிலைய வாயில் அருகே உள்ள சாலைக்கு எதிரே கம்பீரமாக அமைந்துள்ளது கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில். அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலில் வள்ளி, தெய்வானை மற்றும் உடனுறை கௌசிக பாலசுப்பிரமணியருக்கு சந்நதிகள் உள்ளன. இக்கோயிலில் அனைத்து மதத்தி னரும் வழிபடுகின்றனர்.

இக்கோயிலைக் கட்டியவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முகமது கௌஸ். அவரது தம்பி முகம்மது அலியும், மகன் முகம்மது காதரும் தற்போது கோயில் நிர்வாகிகளாக உள்ளனர்.

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட முகமது கௌஸ் குடும்பத்தினர், 1940-களில் புதுச்சேரியில் குடியேறினர். சிறுவயது முதல், முகமது கௌஸ் முருகனை வழிபட்டு வந்தார்.

1969-ல் துளசி முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை அவர் நடத்தினார்.

அன்றைய தினம் அவரது தந்தை மரணமடைந்தாலும், திட்டமிட்டபடி கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தி முடித்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, தன் இறைப்பணியைத் தொடர்ந்தார்.

மாரியம்மன் கோயில் அருகிலேயே முருகன் கோயில் கட்ட விரும்பிய அவர், தனது சேமிப்பில் இருந்த ரூ.2 லட்சத்தை வைத்து கட்டுமான பணிகளை தொடங்கினார்.1970-ல் துணைநிலை ஆளுநராக இருந்த ஜாட்டி, மேயர் எதுவர் குபேர் ஆகியோர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினர்.

பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், 1977ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஒருமுறை இக்கோயிலுக்கு வருகை தந்த காஞ்சி சாமிகள், கௌசிக முருகன் கோயில் என்று இக்கோயிலுக்கு பெயரிட்டார். கடந்த 2003ல் முகமது கௌஸ் மறைந்த பின், அவரது சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் இக்கோயிலை நிர்வகிக்கின்றனர்.

அனைத்து பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன. மதத்தின் பெயரால் மனிதர்களுக்கு இடையே பிளவு ஏற்படுவதைத் தடுப்பதுடன், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் விதமாக இக்கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

source:::: The Hindu…Tamil
natarajan


“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்கு தெரியாதா ” ?

காஞ்சி மஹான், மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம்.

ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே
இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார் என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை. பெரியவாளுக்கு பரம திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போது ஜமீன்தாரிடம் கேட்டார்.

“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”

ஜமீந்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன் ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

“தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார்.

அன்றிலிருந்து அந்த வடநாட்டு இளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான். அடுத்த முகாம் எங்கோ ஒரு வசதியில்லாத பிரதேசத்தில்.

இரவு நேரம், மடத்து ஊழியர்கள் யாவரும் இரவு உணவை தயாரித்து உண்டு முடித்துவிட்டனர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும், எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது எனபது மஹாபெரியவாளின் கடுமையான கட்டளை.

எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், உள்ளே வந்த மஹான் , ஒவ்வருவரிடமும் “சாப்பிட்டாயிற்றா?” என்கிற கேள்வியை கேட்டு பதிலையும் பெற்றுக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியே வந்தார்.

பவார் முகாமின் காவலாளியாக வெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாதில்லையா?

“சாப்பாடு ஆயிற்றா?” என்று மஹான் சைகையினாலே கேட்க, “இல்லை” என்று சோகத்தோடு சைகை காட்டினான். மடத்து நிர்வாகியை அழைத்தார்.

“நம்மை நம்பி வந்திருக்கும் இவனுக்கு வேளா வேலைக்கு சோறு போடா வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அவனாக கேட்காவிட்டாலும்
நீங்கள் சைகை மூலமாக அவனிடம் கேட்டிருக்கக் கூடாதா? நீங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டீர்கள். இந்தப் பொட்டல் காட்டில் அவன் எங்கே போய் உணவைத் தேடுவான்…? என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். நிர்வாகி உடனே பவாருக்கு இரவு உணவை ஏற்பாடு செய்வதாக பெரியவாளிடம் சொல்லிவிட்டுப் போனார்.

சில நிமிடங்களில் முகாமுக்கு அருகே சைக்கிளில் வந்த ஒரு நபர், முகாமில் வெளிச்சம் தெரிவதைக் கவனித்து உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் ஒரு சிறிய தூக்கு.

விசாரித்ததில் அருகில் இருக்கும் ஓரிடத்தில் உணவு கொண்டு போவதாகவும், வழியில் அப்படியே மஹானைப் பார்க்க வந்ததாகவும் சொல்கிறார் அவர்.

காஞ்சி மஹான் அவரிடம் கேட்கிறார் “இதோ இருக்கும் நபருக்கு, ஏதாவது சாப்பிடக் கொடுக்க முடியுமா?” ஒரு ஊழியனுக்கு கருணை வள்ளல் புதியவனிடம் விண்ணப்பம் போடுகிறார்.

“இதோ இந்தத் தூக்கில் இரவு உணவு இருக்கிறது, சாப்பிடச் சொல்லுங்கள். நான் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்” என்று தான் கொண்டு வந்த தூக்கை அங்கேயே
வைத்துவிட்டு போய்விடுகிறார். தூக்கைத் திறந்து பார்த்தால் வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்தி, சப்ஜி எல்லாம் அதில் சுடச்சுட இருக்கிறது.

புன்னகையோடு பவாரை சாப்பிடச் சொல்கிறார் அந்த கருணை வள்ளல். தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப்ப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான் என்று நெகிழ்ந்து போனான் பவார்.

அதற்குப்பிறகு அந்த வழிப்போக்கன் முகாமின் பக்கமே வரவில்லை. தூக்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு போகவில்லை.

பவார் மடத்தில் நிரந்தர ஊழியன் ஆனபிறகு, அவனுக்கு மஹான்தான் எல்லாம். மஹான் தனது மேனாவிற்குள் சென்று உறங்கும்வரை, பவார்தான் உடனிருந்து கவனித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது. பல வருடங்களுக்குப்பிறகு ஒரு தடவை பவாரின் குடும்பம் அவரைப்பார்க்க காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இரண்டொரு தினங்கள் மடத்தில் தங்கி காஞ்சி மஹானை ஆசைதீர தரிசனம் செய்தபிறகு, அவர்கள் திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்கிற ஆசை.

பவார் இதை மஹானிடம் சொன்னபோது….“தாராளமாக போய்வரட்டும்” என்று உத்தரவு கொடுத்தார். அவர்களுடன் தானும் போகவேண்டும் என்று பவாருக்கு ஆசை.

ஆனால் மஹானின் உத்தரவு வேண்டும். இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? ஒரு நாளில் குடும்பத்தோடு போய்விட்டு திரும்பி வந்துவிடலாம் என்கிற நப்பாசை. மனதில் தயங்கித் தயங்கி மஹானிடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்தான்.

“பாலாஜியைத்தானே பார்க்கணும், நீயும் போய்வா” என்று வாய் மொழியாக மஹான் சொல்லிவிடவே, பவாருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. மஹானின் “மேனா” வை இரவில் இழுத்து மூடுவதும், காலையில் அதை முதலில் திறப்பதும் பவாரின் வேலைதான்.

அன்று காலை எல்லோரும் திருப்பதிக்குப் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கம்போல் மஹானின் “மேனா” வில் திரைச்சீலையை விலக்கிவிட்டு காலையில்
ஆற்றவேண்டிய சில கடைமைகளை செய்வதற்கு பவார் தன்னை தயார் செய்துகொண்டான்.

விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விளக்கிப் பார்த்த பவார் அதிர்ச்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான் அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?” பவார் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.

பேசமுடியாமல் இரண்டொரு நிமிடங்கள் கலவரத்தோடு நின்ற பவார் மெதுவாக மஹானை நோக்கி தன இரு கரங்களைக் கூப்பியவாறு “நான் திருப்பதிக்கு அவர்களுடன்
போகவில்லை” என்றான். சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் என்று பவார்
தனக்குதானே கேள்வியை எழுப்பிகொண்டான், என்பது உண்மை.

இதே பவாருக்கு மஹான் வேறொரு தெய்வத்தின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். வட இந்திய முகாமின்போது நடந்த சம்பவம் இது.

இடம் கிடைக்காத பட்சத்தில் ஏதாவதொரு பகுதியில் நகரைவிட்டு சற்று தள்ளி மஹான் முகாமை அமைப்பது வழக்கம் என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடம்…
ஒரு நாள் மாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மஹான் நடக்க ஆரம்பித்துவிட்டார். பவார் மட்டும் அவருக்கு வழித்துணை. வேறு யாரும் உடன் வரக்கூடாது என்று உத்தரவு.

ஒற்றையடிப்பாதை வழியாக மழையின் அடிவாரத்தை அடைந்த மஹான், சற்றே மேலே ஏறத் தொடங்கினார்.

சற்று தூரம் போனவுடன் சுற்றிலும் இருந்த செடி கொடிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தபோது அந்த மலையில் ஒரு சிறிய குகை வாயில் தெரிந்தது. ஒருவர் தாராளமாகப் போய்வரலாம்.

“உள்ளே போய் பார்த்துவிட்டு வரியா?” என்று மஹான் பவாரிடம் கேட்க, தான் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு…

“எனக்கு பயமாக இருக்கிறது, நான் போகவில்லை” என்று சொல்லிவிடவே, மஹான் அவனைப் பார்த்து புன்னகை …. பின் குகைக்குள் நுழைந்தார்.

என்னவோ ஏதோ என்று கைகளைப் பிசைந்தவாறு பவார் குகைக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தான். முகம், மனம் கவலையினால் நிரம்பி வழிந்தது.

சில நிமிடங்களுக்குப் பின் மஹான் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். “இப்போ நீ போயிட்டு வரலாமே” என்றார். மஹாபெரியவாளே போய்விட்டு வந்தபின்னர் இனி தான் பயப்படுவது நன்றாக இருக்காது என்று பவார் குகைக்குள் போனான்.

உள்ளே போனபிறகு, இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை.

மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின.

தன்னையே நம்பாதவனாக, வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.

வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான மஹான், “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார். கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே,
இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த பவார்தான் எவ்வளவு பாக்கியம் செய்தவன!!

source::::: http://www.periva .proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/5054#ixzz2fOZDSDFy

Sleepless Lakshmana !!!….Story Behind It !!!!

Lakshmanan !!… A story, ….Many of us Have not Heard  !!!!

Soon after his birth, Lakshman kept crying until he was placed next to Ram. Since that day he was always beside Ram, accompanying him to protect Vishwamitras yagna and following him into exile in the forest. Such was his devotion that he refused to take his wife along with him to the forest. He even refused to sleep for 14 years so that he could serve his brother day and night. Lakshmans wife, Urmila, wanted to follow her husband to the forest, as Sita had followed Ram, but Lakshman begged her to stay back saying that he will be busy taking care of Ram and Sita and will have no time for her. He asked her to help him by staying back so that he did not feel guilty or anxious about his wife’s wellbeing. So Urmila stayed back, reluctantly, wondering how she could help her husband to help Ram.

On the first night in the forest, Lakshman kept watch while Ram and Sita went to sleep. That is when Nidra, the goddess of sleep, approached him. He begged the goddess to leave him alone for fourteen years so that he could guard his brother and sister-in-law night and day. The goddess, impressed by his act of filial devotion, agreed. But the law of nature demanded that someone bear the burden of Lakshmans share of sleep. “Go to my wife, Urmila, and inform her of the situation”, said Lakshman. Nidra went to Urmila. Urmila bowed her head and replied, “Give me my husband’s share of sleep for fourteen years so that he can stay awake all that time without any fatigue”. So it came to pass that Urmila slept for fourteen years night and day while her husband stayed awake in the service of Ram and Sita.

This had an impact in the war against Ravana. Ravana’s mighty son, Meghnadh, was invincible. Only a man who had not slept for 14 years could defeat him. Thus Lakshman was able to kill him, all thanks to Urmila.
The story of Urmila comes from folk Ramayanas or Ram-kathas and is not part of Valmiki’s Sanskrit narrative or Tulsi’s Avadhi narrative. But the way the story is presented, especially in the Ram Kathas of South India, is even more interesting. It reminds us how vast and
imaginative and provocative the tradition of Ramayana is in India, and how we are often deprived of this variety in our quest for uniformity.

After Rama defeats Ravan, rescues Sita and returns to Ayodhya, the day of Ram’s coronation dawns. As the hymns were being chanted and the crown is brought before Ram, Lakshman started to laugh, startling everyone.
Everyone wondered why was Lakshman laughing, who was he mocking? Every person in the court, Rama and Sita included, was consumed by doubts and guilt, for each was embarrassed of some misdeed in their life. Each one remembered an event in their life, which they were not particularly proud of, and felt Lakshman was laughing at them.
Finally someone asked Lakshman why he was laughing and he replied, I have waited for this moment for the past 14 years and just when I am about to witness Ram being crowned king, the goddess of sleep, Nidra, reminds me of our agreement 14 years ago, and demands that I submit to her this very moment, and go to sleep and let Urmila awaken. I find the irony of the situation hilarious. So Lakshman dozed and Urmila woke up to see Rama crowned king, and everyone heaved a sigh of relief.

source::::input from a friend of mine

natarajan

“உங்களுக்கு தெரியுமா உத்தவ கீதை ” ?

உத்தவ கீதை
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் 
செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள்புரிந்தவர், உத்தவர். இவர் தனது 
வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
 துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், 
உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரே, இந்த அவதாரத்தில்பலர் என்னிடம் பல
 வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே
 கேட்டதில்லை. ஏதாவதுகேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது 
நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்கநினைக்கிறேன் 
என்றார்.
 தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின்
செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு… சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக 
இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராகஇருந்தன. அவற்றுக்கான காரண,
 காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார். 
பெருமானே! நீ வாழச் சொன்ன வழிவேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ 
நடத்திய மகாபாரத நாடகத்தில்… நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில்,
எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை 
அறிய ஆவலாக இருக்கிறேன்நிறைவேற்றுவாயா? என்றார் உத்தவர்.
உத்தவரே! அன்று குரு÷க்ஷத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, பகவத்
கீதை. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், உத்தவ கீதை. அதற்காகவே
உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன்.தயங்காமல் கேளுங்கள் என்றான் 
பரந்தாமன்
 உத்தவர் கேட்க ஆரம்பித்தார்; கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்
உண்மையான நண்பன் யார்?
நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து 
உதவி செய்பவனே உற்ற நண்பன்என்றான் கண்ணன். 
கிருஷ்ணா! நீ பாண்டவர்களின்
உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாகநம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ… உற்ற 
நண்பன் யார் என்பதற்கு நீஅளித்த விளக்கத்தின்படி… முன்னதாகவே சென்று, 
தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் ஏன்அப்படிச் 
செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம்
அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். 
அதையும் நீ செய்யவில்லை.
 தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டைஇழந்தான்;
 தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை 
விட்டிருக்கலாம். தம்பிகளை அவன்பயணம் வைத்த போதாவது, நீ சபைக்குள் 
நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.
 திரௌபதிஅதிர்ஷ்டம் 
மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் 
தருகிறேன் என்று சவால்விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக
சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச்சாதகமாக விழும்படி
செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.
மாறாக, திரவுபதியின் துகிலை 
உரித்து, அவளின்மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, துகில் 
தந்தேன். திரவுபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக்கொண்டாய். 
மாற்றான் 
ஒருவன், குலமகள் சிகையைக் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் 
முன்னிலையில்,அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன 
இருக்கிறது? 
எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா 
ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா? என்றுகண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர். 
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம்
அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே 
கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர். 
பகவான்சிரித்தார். உத்தவரே… விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது 
தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம்தருமனுக்கு இல்லை. அதனால்
தான் தருமன் தோற்றான் என்றான் கண்ணன். 
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க,கண்ணன் தொடர்ந்தான். துரியோதனனுக்கு
சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான
ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை 
உருட்டிச் சூதாடுவார் என்றார்துரியோதனன். அது விவேகம். 
தருமனும் அது போலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம் வைக்கிறேன்.ஆனால், 
என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான் என்று 
சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் 
எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக்காய்களில் போடத்தான் முடியுமா? 
அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைகளை என்னால்தான் போட முடியாதா?போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் 
என்பதையாவது மன்னித்து விடலாம்.
ஆனால், அவன் விவேகமில்லாமல் 
மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான். ஐயோ…. விதிவசத்தால் சூதாட
ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் 
தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும்சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் 
இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் 
வரமுடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென 
என்னிடமே வேண்டிக்கொண்டான்.யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் 
கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டுநின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, 
அவர்களும் துரியோதனனைத்திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து
கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிடமறந்துவிட்டார்களே! 
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரவுபதியின் 
சிகையைப் பிடித்தபோது,அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும்
தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்துகொண்டிருந்தாளே 
ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! 
நல்லவேளை… துச்சாதனன் துகிலுரித்தபோதும்
தனது பலத்தால்போராடாமல், ஹரி…. ஹரி… அபயம் கிருஷ்ணா… அபயம் எனக்
குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக்காப்பாற்ற அப்போதுதான்
எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் 
காக்க வழிசெய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு? என்று 
பதிலளித்தான் கண்ணன்.
அருமையான விளக்கம் கண்ணா!அசந்துவிட்டேன். ஆனால் ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி
 கேட்கிறேன் என்றார் உத்தவர். கேள் என்றான்கண்ணன். 
அப்படியானால்,கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, 
ஆபத்துகளில் உன்அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா? புன்னகைத்தான் 
கண்ணன். உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படிஅமைகிறது. நான்
அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சி
பூதம்.நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான்
தெய்வ தர்மம் என்றான். 
நன்றாயிருக்கிறதுகிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் 
தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள்தவறுகளைத் தொடர்ந்து
செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக்
கொண்டேஇருக்க வேண்டும். அப்படித்தானே? என்றார் உத்தவர். 
உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாகஉணர்ந்து 
பாருங்கள்.நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, 
உங்களால் தவறுகளையோ தீவினைகளையோநிச்சயமாகச் செய்ய முடியாது. 
அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச்
செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள்
நிகழ்வதும் அப்போதுதான்.
எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது
அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாகஎப்போதும், எல்லோருடனும் இருப்பவன் 
என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக
முடிந்திருக்கும் என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா… எத்தனைஆழமான 
தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை 
செய்வதும், அவனை உதவிக்குஅழைக்கும் ஓர் உணர்வுதானே! அவனின்றி ஓர் 
அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சிபூதமாக அருகில்
 நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் 
செயலாற்ற முடியும்?
 இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு 
 உபதேசித்தான்.  
source:::: input from a friend of mine
natarajan