கனியாக வந்த குழந்தை !!!

கனியாக வந்த குழந்தை

திருமணமாகிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
தசரதன் என்ற மாமன்னன் எதற்காக ஏங்கினானோ, அதே ஏக்கம் எங்களுக்கு. என்ன பாவம் செய்தோம்?

பக்தி சிரத்தையான குடும்பம். பிறந்தது – புகுந்தது என்ற இரண்டுமே வீடுபேறு பெற்ற பரம்பரை. என் மாமனார், புதுக்கோட்டை டாக்டர் ந.தியாகராஜன், புதுக்கோட்டை சங்கர மடத்தில் அப்போதைய முத்ராதிகாரி. மஹாபெரியவாள் இளையாத்தங்குடியில் தங்கியிருந்தபோது (1965) சிறிது உடல்நலம் குன்றியிருந்தார். கோயில் குளத்தில் நீராடிவிட்டு, என் மாமனார்தான் (பெரியவாளைத் தொட்டு) சிகிச்சை அளிக்கும் பாக்கியம் பெற்றவர்.

மஹாபெரியவாளின் பூர்வாசிரம சகோதரர் பிரும்மஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்திரிகள், கடைசிக் காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, சில மாதங்கள் எங்கள் மருத்துவமலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

தசரதனுக்கு வசிஷ்டர் இருந்தார். எங்களுக்கு?

“பெரியவாளைத் தரிசிக்க வேண்டும்” என்ற நோக்கத்துடன், விவாகமான நாள் முதல் (2-2-1977) நானும் என் கணவரும் சேர்ந்து புறப்படவிருக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு தடங்கல் வந்துவிடும்! யாராவது ஒருவர் மட்டும் சென்று தரிசித்துவிட்டு வருவோம்.

எங்களுக்கும் கொஞ்சம் கொடுப்பினை இருந்தது போலும்! 1-9-1988 அன்று கலவையில் நாங்கள் (இருவருமாக) மஹாபெரியவாளைத் தரிசித்தோம்.

ஒரு மாமாங்க ஏக்கம் தீரப்போகிறது.

நாங்கள் சென்ற சமயம், பெரியவாள் மேனாவுக்குள், கதவை மூடிக்கொண்டு ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.

”எப்போது தரிசனம் கொடுப்பார்கள்?”

“சித்தம் போக்கு, சிவம் போக்கு… சாட்சாத் பரமேஸ்வரனாலேயே பதில் சொல்லமுடியாத கேள்வி! இரண்டு மணி நேரம் கழித்துக் கதவைத் திறக்கலாம்; அல்லது இதோ இப்போதே…”அந்த விநாடி வந்துவிட்டது!

ஓர் அணுக்கத் தொண்டர், “புதுக்கோட்டை டாக்டர் தியாகராஜனின் இரண்டாவது பிள்ளை, தம்பதியா வந்திருக்கா தரிசனத்துக்கு” என்று சற்று உரத்த குரலில் விண்ணப்பித்துக் கொள்ள…
பெரியவாளே, கதவைத் திறந்தார்கள். தெய்விகப் புன்முறுவல்! அந்த க்ஷணகாலம் அப்படியே நிரந்தரமாகவே நின்று விடக்கூடாதா – என்றொரு வேட்கை.

“சாம்பமூர்த்தியை ரொம்ப நன்னா கவனிச்சிண்டார், உன் தகப்பனார்…” மெய் சிலிர்த்தது, எங்களுக்கு.

என் கணவர் குமார் (என்ற கிருஷ்ணமூர்த்தி) எங்கள் ஏக்கத்தை, நெஞ்சங் குழையக் கூறினார்.

“நாங்கள் தனித்தனியா தரிசனத்துக்கு வந்திருக்கோம். இப்போதான், முதல் தடவையா, ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கோம்…”

பெரியவா கைகளைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள். மேனாவிலிருந்த ஓர் ஆரஞ்சுப்பழத்தை, என் கணவர் கையில் கொடுத்தார்கள். ஒரு குழந்தையையே எடுத்துக் கொடுப்பதுபோல் எங்களுக்குத் தோன்றியது.

21-5-1989 அன்று எனக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. “இதிலென்ன ஆச்சரியம்? ஆச்சார்யாள் அனுக்ரஹத்தால் எல்லாம் நடக்கும்” என்று சொல்லிவிடலாம்தான்.

ஆச்சரியம் இருக்கிறது. அன்றைய தினம், வைகாசி அனுஷம் – பெரியவர் ஜன்ம நக்ஷத்ரம்!

முன்னர், ராமேஸ்வரத்தில் சில பரிகாரங்களைச் செய்து முடித்திருந்தோம். அதனால், குழந்தைக்கு இராமநாத் சந்திரசேகர் என்று பெயர் சூட்டினோம்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர…

source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/3949#ixzz2PZ8YjZ9h

” For You I will Be The Guru “…Mahaperiavar….

Of the many occasions I had visited this great Mahan, I used to stand alone by the side and watch for a few hours many mortals come and go. On one occasion, He noticed me standing in a corner and wondering why I am just standing allowing all others to come and go, He asked His sincere devotee, Balu mama:

“Why is he standing there? Does he want anything? Ask him.”

Balu mama came and asked me,

“Periyavaa wants to know is there anything you want. Why are you just looking at Him and not coming to have the Prasadams?”

I told Balu mama (most of the time tears of joy used to roll down my eyes), “Every time I come here I have witnessed a rare incident between Periyavaa and His staunchest devotee. So today also I am just waiting in the side lines for one.”

Periyavaa overheard this and He said smilingly, “Let him wait for a few more minutes and one such incident is about to happen!”

Many men and women passed by.

Sooner a lady, Saroja, came to see Periyavaa.

She hesitated a bit to go near Him.

Periyavaa asked Balu mama to ask her ‘what she wants’.

She replied to Balu Mama :”I am coming here for the first time. I have heard from my neighbours in Hyderabad talking so much about this Mahan. So I came to have His darshan”

Periyavaa smiled and asked her,

“There is something more than the Darshan you are trying to seek from me!”

She started weeping like a small child. She must be around 55 Yrs Old!

“Yes Swamiji. I am really unable to bear the agony.”

“You must be a Dwaithin..”Swamiji said, meaning she is an Iyengar lady.

She was startled to know that: “Yes Swamiji..Indeed Yes.”and her weeping power overtook her much more to the dismay of all around!

Swamiji asked her:”What is that which is worrying you inside?”

She started narrating in-between her weeps:

“I have been sincerely following one Saint for more than 25 yrs now. I never found anything wrong with him and I have gone to Sanmarga only through this Guru. But of late I have found my Guru is not a real Guru. He has some behavioural problems and I stopped going to him altogether. But I am unable to stand this happening as I trusted this Guru so much and suddenly I find a vacuum in my life, in my spiritual life. That’s why when my friends recommended me I came all the way to have Darshan from you and be a devotee of you for ever in my life!”

Periyava started smiling..

“So you think by just switching over to another Guru like me your problems get solved?”

“That is what I feel”

Periyavaa said:”You are wrong.Krishna says “Yathatho kapikauntheya, Purushasya Vipas chithaha…”

The moment you are born as a human, you are bound to make mistakes. There is no escape for anyone in this world. Just because you switch over to another Guru like me, what is the surety that I am more purer? The very thought itself is wrong, as every human being has his own limitations.

No doubt I can understand your agony. What you should do is to start praying silently within yourself to a God of your choice.Try to get that inner “Anandha” instead of searching for another Guru who according to Krishna “May be much worse than the one you have experienced.”

There was spellbound silence everywhere…

I went to get His Blessings.

He said smilingly, “For you I will ever be the Guru, Don’t worry.”

Silence was broken with laughter everywhere…

I came out wiping my tears of joy…

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

source:::: periva.proboards .com…..story as narrated by a devotee…
Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3881#ixzz2OdZhd35m

Message For The Day….Any Resource is Useless Without Righteous Quality !!!

The Kauravas had all the instruments for victory – wealth, tonnes of arms, allies and fanatic hatred for their enemies. However they were destroyed, for they never paid heed to the nobler values of Righteousness. They did not equip themselves with the Grace of God, which is reserved in abundance for those who walk the path of humility and peace. Nor did they accept the Divine as their charioteer – they put their faith in lesser things! What is truly required for victory is not mere collection of resources but faith and steadiness. The gale helps to toughen the trunk of the tree. So too calamities must deepen your courage, enlarge your faith and intensify your spiritual practices. In fair weather, a care-free attitude is pardonable. But in inclement weather, every precaution is of great value.

 Prayer does not mean merely appealing to God for favour. Through prayer, you should try to control the evil qualities in you. – Baba

Sathya Sai Baba

உத்தவ கீதை யின் முத்துக்கள் சில உங்கள் பார்வைக்கு !!!!

 உத்தவ கீதை
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன் என்றார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு… சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார். பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்… நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன் நிறைவேற்றுவாயா? என்றார் உத்தவர்.

உத்தவரே! அன்று குரு÷க்ஷத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, பகவத் கீதை. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், உத்தவ கீதை. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள் என்றான் பரந்தாமன்

 
 உத்தவர் கேட்க ஆரம்பித்தார்; கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்? நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன் என்றான் கண்ணன். கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ… உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி… முன்னதாகவே சென்று, தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பயணம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

மாறாக, திரவுபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, துகில் தந்தேன். திரவுபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைக் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா? என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர். இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர். பகவான் சிரித்தார். உத்தவரே… விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான் என்றான் கண்ணன். உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான். துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார் என்றார் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான் என்று சொல்லியிருக்கலாமே?

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைகளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான். ஐயோ…. விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரவுபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை… துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், ஹரி…. ஹரி… அபயம் கிருஷ்ணா… அபயம் எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு? என்று பதிலளித்தான் கண்ணன்.

அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால் ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கிறேன் என்றார் உத்தவர். கேள் என்றான் கண்ணன். அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா? புன்னகைத்தான் கண்ணன். உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சி பூதம். நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம் என்றான். நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே? என்றார் உத்தவர். உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள்.


நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

 

 SOURCE:::: input from a friend of mine
Natarajan

Image For The Weekend…. With a Quote From Shirdi Sai….

A very rare picture of the Samadhi Mandir.. My humble pranams to Baba and his sacred Samadhi and above all – to his unlimited leela’s in my life..May Sai baba’s blessings and grace always be with all of us..

QUOTE OF BABA:::

Let the world go topsy-turvey, you remain where you are. Standing or staying in your own place, look on calmly at this show of all things passing before you.

SOURCE::::iNPUT FROM  SAI DEVOTEE

Natarajan

Divine Image of The Day….With a Spritual Message From Gita ….

The Footprints
One night, a man had a dream. He dreamed he was walking along the beach with the Lord. Across the sky he saw scenes from his life. For each scene, he noticed two sets of footprints in the sand;
one belonging to him, and the other to the Lord. When the last scene of his life came before him, he looked back at the footprints in the sand. He noticed that many times along the path of his life there was only one set of footprints. He also noticed that it happened at the very lowest and saddest times in his life. This really bothered him, and he questioned the Lord about it. “Lord, You said that there is no one hateful or dear to You, but You are always with those who worship You with love and devotion. (Gita 9.29) I have noticed that during the most troublesome times in my life, there is only
one set of footprints. I don’t understand why, when I needed You most, You left me alone.” The Lord replied, “My dear child, you are my own soul. I love you, and I would never leave you, even if you leave Me sometimes. During your time of trial and suffering, when you see only one set of footprints, that was because then I carried you. When you have trouble, it is caused by your own Karma. That is
when you are tested and can grow stronger.”
The Lord Krishna said in the Gita: “I personally take care of the needs of devotees who always remember and love Me.” (Gita 9.22)
source:::: from a Sai Devotee…
Natarajan