Images Of The Week !!!!

Flying formation……. Part 1…….    Two parrots captured in flight in Madrid

Flying formation……Part 2…..An Emirates A380 aircraft (L) and Qantas A380 aircraft (R) fly over Sydney Harbour to mark the official launch of a partnership between the two carriers.

SOURCE:::::bbc.com .news

Natarajan

“நான் இருக்கேன் …எப்போதும் உன்னுடன் “….மகாபெரியவர் சொல்கிறார் !!!

“… பூர்ணசந்த்ர முகத்துடனும், அபய கரத்துடனும் சாக்ஷாத் பெரியவா தெரிந்தார்!”

April 2, 2013 –Sage of Kanchi site
பெரியவாளை செகந்தராபாத் அருகே உள்ளே ஒரு மலைக்குன்று மேல் உள்ள மஹா கணபதி கோவிலில் தர்சனம் பண்ணினார் ஒரு பக்தர். அப்போது பெரியவா அவருக்கு தன் படமும், திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் படமும் குடுத்தார். பக்தருக்கோ பரம ஆனந்தம்! மெட்ராஸில் ஒரு ஸ்டூடியோவில் குடுத்து அப்படங்களைப் என்லார்ஜ் பண்ணி, அழகாக frame பண்ணித்தரச் சொன்னார். இரண்டு நாட்களுக்குப் பிறகு இடிபோல் செய்தி வந்தது….அந்த ஸ்டூடியோவில் தீப்பிடித்து ஏறக்குறைய எல்லாமே எரிந்துவிட்டது! என்று. அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடினார்…….ஸ்டூடியோ நிர்வாகி இவரைப் பார்த்ததும், “ஸார்…நீங்க கவலைப்படாதீங்க….நீங்க குடுத்த பெரியவா படமும், வெங்கடாசலபதி படமும் பத்ரமா இருக்கு. நெருப்பு அதை கொஞ்சங்கூட தீண்டலைங்க ஸார்…” என்றார். இது ஒரு ஆச்சர்யம்!
சந்தோஷமாக அந்த படங்களை எடுத்துக் கொண்டு அவரும் ஒரு நண்பரும் காரில் பெரியவா முகாமிட்டிருந்த கார்டேர் நகருக்கு சென்றனர். போகும் வழியில் ஒரு பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபட்டுக் கொண்டிருந்தபோது அடுத்த ஆச்சர்யம்……..மடத்து பாரிஷதர் ஒர்த்தர் இவர்களை அங்கே தேடிக் கொண்டு வந்து, “மெட்ராஸ்லேர்ந்து கார்ல படம் கொண்டு வந்தவாளை பெரியவா ஒடனே அழைச்சிண்டு வரச்சொல்லி சொன்னார்……..” இது என்ன! எதிர்கொண்டழைப்பது என்பது இதுதானா? அல்ப ஜீவன்களான நம்மை அந்த மஹாப் ப்ரபு எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாரா! ஆடித்தான் போனார் பக்தர். இரண்டு கரங்களாலும் புஷ்பங்களை அள்ளித் தூவினார் அப்படங்கள் மேல், சாக்ஷாத் பெரியவா!

அதே பக்தர் ஒருமுறை திருக்கடையூர் சென்றார் தன் நண்பருடன். அப்போது அமிர்தகடேசனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. ஆனந்தமாக கண்டு களித்துக் கொண்டிருக்கும்போது, இவருக்கு ஒரு அரிய ஆனந்தமான ஒரு காக்ஷி !………கருவறை லிங்கத்தின் மேல் பூர்ணசந்த்ர முகத்துடனும், அபய கரத்துடனும் சாக்ஷாத் பெரியவா தெரிந்தார்! இவரோ, தனக்கு பெரியவா மேல் உள்ள பக்தியால் ஏற்பட்ட மனப்ரமை என்று எண்ணினார். அதே சமயம் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நண்பர் இவர் தோளைத் தட்டினார்……..”ஸ்வாமி….உள்ள பாரும் ஒய்!….பெரியவா தெரியறாளா? என்ன பாக்யம் ! என்ன பாக்யம்! சங்கரா.சங்கரா..” கண்கள் பனிக்க கன்னத்தில் போட்டுக் கொண்டார். பக்தர் ஸ்தம்பித்துவிட்டார்! சாக்ஷாத் பரமேஸ்வரனே தான்தான்! என்பதை ப்ரத்யக்ஷமாக ஒரே சமயத்தில், கற்பனையோ என்று சந்தேகப் படமுடியாமல், இரண்டு பேருக்குமே உணர்த்திவிட்டாரே பெரியவா!!!!!

source::::periva.proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/thread/3981/maha-periva-appeared-bright-moon#ixzz2Pf107xwA

Message For The Day….Faith Will Do Wonders!!!

A few elders in Brindavan who revelled in scandalizing Krishna set an ordeal for Radha to test her virtue. Radha was asked to fetch water in a pot from Yamuna to home. Radha, with full faith in Krishna, was immersed in the consciousness of the Lord, that she never bothered to know the condition of the pot. The mud pot she was given had a hundred holes. She immersed it in the river, repeating the name of Krishna as usual, with every intake of the breath and every exhalation. Every time the name Krishna was uttered, a hole was covered, so that by the time the pot was full, it was whole! That was the measure of her faith. Faith can affect even inanimate objects.

 Sathya Sai Baba

எம்மதமும் எம் மதமே !!!….

மூலம் : மஹாபெரியவாள் தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பகுதி
நினைவு கூர்ந்தவர்: ஸ்ரீமடம் பாலு
பக்கம் : 93,94,95

மௌனம் நா அசைத்தது

வட பாரதத்தின் வடமேற்கு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு முஸ்லிம்கள், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்கள். அவர்கள் எல்லோரும் செல்வந்தர்கள் என்ற நினைப்பை ஏற்படுத்தினாலும், எளிய உடை (வேஷ்டி, குல்லாய்) அணிந்திருந்தார்கள்.

“பெரிய பெரிய தேசியத் தலைவர்கள் எல்லாம் இந்த மஹந்திடம் ஆசிபெற்றுச் சென்றிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். அத்தகைய மஹந்தை (மகானை) தரிசனம் செய்ய வந்திருக்கிறோம்.”

பெரியவாள் அன்றைய தினம் காஷ்டமௌனம்! ஒரு ஜாடை, கண் அசைப்பு கூடக் கிடையாது, ஏதேனும் சொன்னால் கேட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, முகத்தில் எவ்விதச் சலனமும் இருக்காது.

முஸ்லிம்கள், வெகு தூரத்திலிருந்து, மிகவும் பக்தியோடு வந்திருக்கிறார்கள்.

“இன்று பெரியவாள் பேசமாட்டார்கள்” என்று சொல்லி, ஏமாற்றத்துடன் அவர்களை அனுப்பி வைப்பது, மகா அநியாயம். ஆனால், பெரியவாளிடம் யார் போய்ச் சொல்வது?

பாணாம்பட்டு கண்ணன் என்று ஒரு தொண்டர். நியாயமான துணிச்சல்காரர். ‘வடக்கேயிருந்து எட்டு முஸ்லிம்கள் வந்திருக்கிறார்கள். சமயப் பற்றுடையவர்கள் மாதிரி இருக்கு. ரொம்பவும் சாந்தமா இருக்கா… பெரியவாளிடம் ஆசீர்வாதம் வாங்கணும்னு ரொம்ப எதிர்பார்ப்போடு வந்திருக்கா…”

இரண்டு நிமிஷம் கழித்துப் பெரியவாள் வெளியே வந்தார்கள். “ஆயியே… ஆயியே..” என்று அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு, ஹிந்தியில் ஒவ்வொருவரிடமும் உரையாடினார்கள்.

வந்தவர்கள், “நாங்கள் ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருக்கிறோம். பெரியவா அனுக்ரஹம் வேணும்” என்று பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

பெரியவாள் சொன்னார்கள்:

“நீங்கள் எல்லோரும் நல்ல பக்தர்கள். தினமும் ஐந்து வேளை தொழுகை செய்யுங்கள். இது ரம்லான் மாதம். உபவாசம் இருந்து என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். அதனாலேதான், உங்களிடம் மட்டும் பேசுவதற்காக மௌனத்தை சிறிதுநேரம் விட்டுவிட்டேன்! உங்கள் கஷ்டங்கள் நீங்கும். ஆண்டவர் காப்பாற்றுவார்…”

அந்த எண்மரில், முதியவரான ஒருவருக்கு ஒரு பச்சை நிறச் சால்வையும், மற்றவர்களுக்குப் பழமும் கொடுத்தார்கள்.
அவர்கள் ஆனந்தம் பொங்கத் திரும்பிச் சென்றார்கள்.

source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/3972#ixzz2PZGoBQN5

Thought For The Day….Persistence is the Iron Quality of Success !!!

Your ability to persist in the face of adversities, setbacks and disappointments is the measure of your belief in yourself.

-Brian Tracy: Law of Persistence

Thrilling Facts…. Determination and Persistence

This is a real life story of an engineer who build the Brooklyn Bridge in New York, USA.

In 1883, a creative engineer named John Roebling was inspired by an idea to build a spectacular bridge connecting New York with the Long Island. However bridge building experts throughout the world thought that this was an impossible feat and told Roebling to forget the idea. It just could not be done. It was not practical. It had never been done before.

Roebling could not ignore the vision he had in his mind of this bridge. He thought about it all the time and he knew deep in his heart that it could be done. He just had to share the dream with someone else. After much discussion and persuasion he managed to convince his son Washington, an upcoming engineer, that the bridge in fact could be built.

Working together for the first time, the father and son developed concepts of how it could be accomplished and how the obstacles could be overcome. With great excitement and inspiration, and the headiness of a wild challenge before them, they hired their crew and began to build their dream bridge.

The project started well, but when it was only a few months underway a tragic accident on the site took the life of John Roebling. Washington was also injured and left with a certain amount of brain damage, which resulted in him not being able to talk or walk.

“People thought.” “Crazy men and their crazy dreams.” “It’s foolish to chase wild visions.”

Everyone had a negative comment to make and felt that the project should be scrapped since the Roebling’s were the only ones who knew how the bridge could be built. In spite of his handicap Washington was never discouraged and still had a burning desire to complete the bridge and his mind was still as sharp as ever. He tried to inspire and pass on his enthusiasm to some of his friends, but they were too daunted by the task.

As he lay on his bed in his hospital room, with the sunlight streaming through the windows, a gentle breeze blew the flimsy white curtains apart and he was able to see the sky and the tops of the trees outside for just a moment. It seemed that there was a message for him not to give up. Suddenly an idea hit him. All he could do was move one finger and he decided to make the best use of it. By moving this, he slowly developed a code of communication with his wife. He touched his wife’s arm with that finger, indicating to her that he wanted her to call the engineers again. Then he used the same method of tapping her arm to tell the engineers what to do. It seemed foolish but the project was under way again. For 13 years Washington tapped out his instructions with his finger on his wife’s arm, until the bridge was finally completed. Today the spectacular Brooklyn Bridge stands in all its glory as a tribute to the triumph of one man’s indomitable spirit and his determination not to be defeated by circumstances. It is also a tribute to the engineers and their team work, and to their faith in a man who was considered mad by half the world. It stands too as a tangible monument to the love and devotion of his wife who for 13 long years patiently decoded the messages of her husband and told the engineers what to do. The Brooklyn Bridge shows us that dreams that seem impossible can be realized with determination and persistence, no matter what the odds are. Often when we face obstacles in our day-to-day life, our hurdles seem very small in comparison to what many others have to face.

Concluding thought: Persistence is the iron quality of success; if you persist long enough you must eventually succeed where no handicap can keep you from achieving your goal.

source::::: input from a friend of mine…

Natarajan

Message For The Day….Have Water Of Love Inside Your Heart !!!!

The Lord is the Immanent Power in everything; those who refuse to believe that the image in the mirror (the world) is a reflection of themselves, how can they believe in the Lord, when He is reflected in every object around them? The moon is reflected in a pot, provided it has water. So too, the Lord can be clearly seen in your heart, provided, you have the water of Love inside it. When the Lord is not reflected in your heart, you cannot say that there is no Lord. It only means that there is no Love within you.

 Sathya Sai Baba

பழம் எல்லாம் பரம ஏழைக்கு !!!!!

கமால் ஜூம்லெட் என்ற லெபனான் நாட்டு அமைச்சர், மஹாபெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டவர். அத்வைத தத்துவக் கோட்பாடுகளை சென்னை, மும்பை மற்றும் கேரளாவிலிருந்த பல மகாபண்டிதர்களிடம் பாடம் கேட்டுத் தெரிந்து கொண்டவர்.

அவர், பெரியவாளைத் தரிசிக்க வரும்போது, இஸ்லாமிய சம்பிரதாயப்படி, “சலாமாலேகும்” என்று சொல்லி வணக்கம் தெரிவிப்பார்.

ஒரு தடவை, பல கூடைகளில் மாதுளை, ஆப்பிள் என்று வகைவகையான பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.

பெரியவாள் ஒரு மாதுளையைக் கையில் எடுத்துப் புரட்டிப் புரட்டிப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார்கள். அதாவது கமால் ஜூம்லெட் சமர்ப்பித்தவைகளை தான் ஏற்றுக் கொண்டுவிட்டதை அவருக்கு உணர்த்தி, அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்து கொண்டிருந்தார்கள்!

கமாலின் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. பெரியவாளும், ஸ்ரீமடத்துத் தொண்டர்களும் மிக உயர்ந்த ரக மாதுளை – ஆப்பிள்களை சாப்பிடப் போகிறார்கள் என்ற நினைப்பே அவருக்கு அமுதமாய் இனித்தது.

பெரியவாள், “இதுகளெல்லாம் ரொம்ப ஒசத்தியோன்னு அவரைக் கேளு” என்றார்கள்.

“ஆமாம், ஆமாம்! இவைகளை விட உயர்ந்த ரகம் எங்கேயும் இல்லை…”

பெரியவா, ஒரு தொண்டரை அருகில் அழைத்தார்கள்.

“பக்கத்திலே ஹரிஜன் காலனி ஏதாவது இருக்கோ”

“இருக்கு… பத்து நிமிஷ நடை தூரம்…”

“எல்லாக் கூடையையும் எடுத்துண்டு போய், அங்கே உள்ள எல்லோருக்கும் கொடுத்துட்டு வா. காலி கூடையையும் அவாகிட்டேயே கொடுத்துடு…”

தொண்டர் தயங்கினார். கமால் எதிரிலேயே அவர் கொண்டுவந்த பழங்களை இப்படித் (துர்)விநியோகம் பண்ணினால், அவர் மனம் நொந்து போகமாட்டாரா என்று எண்ணியிருக்கலாம்.

பெரியவாள் : “அவாளெல்லாம் பரம ஏழைகள். இந்த மாதிரிப் பழங்களையெல்லாம் பார்த்துக்கூட இருக்கமாட்டா…. அவா சாப்பிடட்டும்.”

இந்த சம்பாஷணை, சமிக்ஞைகளைக் கேட்டுக் கொண்டிருந்த கமால், சிஷ்யரிடம், “வாட்?” என்று கேட்டார். சிஷ்யர் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், “இந்தப் பழங்கள் எல்லாவற்றையும் பரம ஏழைகளுக்கு விநியோகம் செய்யும்படி பெரியவாள் ஆக்ஞை” என்றார்.

கமாலின் உள்ளம் கொதித்தது. (மன்னிக்கவும். கமாலின் உள்ளம் குதித்தது; களித்தது).

“ஓ! அல்லாஹ்… அல்லாஹ்…. அல்லாஹ்…” என்று இரு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு, பரவசமாகக் கத்தினார்.

பெரியவாள், அல்லா மட்டுமல்ல; எல்லாமாக இருப்பவர்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com

Read more:http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3964#ixzz2PD8mkDgV