வாரம் ஒரு கவிதை ….” சுய தரிசனம் “

சுய தரிசனம்
++++++++++++++
கண்ணாடியில் பார்க்கிறோம் நம்
முகத்தை  தினமும் .. திரும்பத் திரும்பப்
பார்த்து ரசிக்கிறோம் …அது சுய தரிசனம் !
கண்ணாடியில் தெரிவது இல்லை நம் சுய ரூபம் !
பார்த்தவுடன் தெரிவதில்லை நம்
சுய ரூபம் தன் மூக்கு கண்ணாடி
வழியே நம்மைப் பார்க்கும் அடுத்தவருக்கும் !
நம் கண்ணாடியும் காட்டுவதில்லை
நம் சுய ரூபத்தை ! அடுத்தவரும்
பார்ப்பதில்லை நம் சுய ரூபத்தை அவர்
கண்ணாடி வழியே !
நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டும்
தெரியும் அவன் வசிக்க ஏற்ற இடமா நம்
இதயம் என்று ! நம் சுய ரூபம் என்ன என்று !
இறைவன் வசிக்க ஏற்ற இடமாக நம்
இதயத்தை மாற்ற தேவை ஒரு சுய
பரிசோதனை …சுய தரிசனம் நமக்கு !
இதயத்தில் இறைவன் குடி புகுந்து விட்டால்
ஒரு கட்டண தரிசனமும்  தேவை இல்லையே
நமக்கு அந்த இறைவனை தரிசிக்க !
K.Natarajan
in http://www.dinamani.com  dated 12/06/2019

வாரம் ஒரு கவிதை ….” சித்திரம் பேசுதடி …”

சித்திரம் பேசுதடி …
+++++++++++++++++++
 நீல வண்ண சித்திரம் என்னை
விண்ணிலிருந்து  பார்த்து ரசிக்கும்
மனிதா நீ மண்ணில் என்னை சிதைப்பது
என்ன நியாயம் ?
உன் பூமித்தாய் கேட்கிறேன் உன்னை
உரிமையுடன் ! நீ இருக்கும் சோலைவனம்
விட்டு வேற்று கிரகத்துக்கு செல்கிறேன்
என்கிறாயே ! உன் விண்வெளி போட்டியிலும்
பூமி நான் சரித்திரம் படைப்பேன்  மனிதா !
ஏன் தெரியுமா …சித்திரம் நான் உனக்கு
மட்டும் சொந்தம் இல்லை … உன் பிள்ளைகளுக்கும்
நான் சொந்தம் ! புரிந்து நடந்து கொள் மனிதா !
நடராஜன்.K
in  http://www.dinamani.com  dated 06/062019
06/06/2019

வாரம் ஒரு கவிதை ….” கண்டெடுப்பின் காலக் குறிப்புகள் “

கண்டெடுப்பின் காலக்  குறிப்புகள்
=================================
கடலில் மட்டும் முத்துக்கள் இல்லை
இந்த மண்ணின் அடியிலும் புதைந்து
கிடக்குது நம் முன்னோர் வடிவமைத்த
நகரமும் கோயிலும் அழகு சிற்பங்களுடன்
காலத்தால் அழியாத அடையாள சின்னமாய் !
எந்த தொழில் நுட்பம்   இருந்தது நம் முன்னோருக்கு
அன்று ? ஆண்டுகள் பல கடந்தும் அவர் பேர்
சொல்லுதே இன்னும் !
கணிணி யுகத்தில் வாழும் நாம்  முறையாக
பதிவு செய்ய வேண்டும் நம் நாட்டின்
அருமை பெருமையை ஒரு பொக்கிஷமாக !
விட்டு செல்ல வேண்டும் நம் பெயர் சொல்லும்
பாத சுவடுகளை இனி வரும் தலை முறை
பின் தொடர்ந்து நடக்க !
இனம் மதம் மொழி தாண்டி நாம் இன்று
பதிக்கும் பாத சுவடு கல்லில் வடித்த சிற்பமாய்
அடையாளம் காட்டும் நம் புனித மண்ணை
ஒரு புதிய பூமியாக என்றென்றும் !
K.Natarajan   in http://www.dinamani.com dated  01/06/2019
01/06/2019

மா வாழை… ஒரு அரிய காட்சி !!!

வாழை மர நட்புக் கரங்களில்  மாங்கனிக்   கொத்து  தன்  இலைகளுடன் …. மாவாழை … ஒரு பசுமையான காட்சி …. உடனே  “கிளிக் ” செய்தேன் என்

அலைபேசி  கேமரா மூலம் …என் வீட்டு  மாடியிலிருந்து !

நடராஜன் K

31/05/2019