|
Just as underground water is the sustenance of all trees, the Atma is the underlying source of all the bliss that the individual experiences. The process of digging a borewell to bring the underground water to surface level involves steady hitting, digging, and thumping through a pipe which holds and directs the drill. The people who do the boring take a lot of care to ensure that air does not go into the pipe, for then the drilling process becomes unsuccessful. FInally through a lot of effort, you bring the subterranean water to the surface level for human consumption. So too, you must undertake the repetition of the Lord’s Name (Japam) very intensely taking care that you do not allow the attachment to worldly objects (Vishaya vasana) to enter and interfere with the process.
|
learnings
” அந்தக் கடைசி துளி நீர் ” ….


இதனைத் தலைப்பாக்கி ஓர் இணைய தளம், நச்சென்று நாம் எப்படி தண்ணீரைக் காப்பாற்ற வேண்டும் என ஒரு சில படங்களில் அறிவுறுத்துகிறது. இந்த தளம் பிரிட்டன் நாட்டு மக்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இயங்கினாலும், நீர் ஆதாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் இந்த உலகின் அனைத்து மக்களையும் பார்த்து நகைச்சுவை கலந்து, தகவல்களைத் தந்து எச்சரிக்கை செய்தியை வழங்குகிறது. இந்த அருமையான தளம் இயங்கும் முகவரி:http://everylastdrop.co.uk நம்முடன் தகவலைத் தந்து பேசும் இந்த தளத்தில் நுழைந்து, பின்னர், நாம் கீழாகச் செல்கையில், இதன் மேற்பகுதி மாறுகிறது. பகலாக இருப்பது இரவாகிறது. நமக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும், அன்றாட வாழ்க்கை முறையிலும், தொழிற்சாலைகளிலும், நாம் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறோம் என்று காட்டப்படுகிறது. நம் வாழ்வியல் முறைகளை மாற்றினால், எப்படி தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்று காட்டப்படுகிறது. எடுத்துக் காட்டாக, நாம் வழக்கமாகக் குளிப்பதைக் காட்டிலும், ஷவர் மூலம் குளித்தால், எவ்வளவு தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்று காட்டப்படுகிறது. அதே போல, ஆடைகளைத் தயாரிப்பதிலும், சாப்பிடும் முறைகளை மாற்றுவதிலும், மிச்சப்படுத்தும் தண்ணீரின் அளவு தெரிவிக்கப்படுகிறது. இதே திரையில் இன்னும் வேகமாக ஸ்குரோல் செய்து சென்றால், ஒன்றரை நிமிடம் இயங்கும் வீடியோ குறும்படம் காட்டப்படுகிறது. இதில் தண்ணீரை எவ்வாறெல்லாம் மிச்சப்படுத்தலாம் என்று பல தகவல்கள் தரப்படுகின்றன. இதை எல்லாம் பார்த்த பின்னர், ஒவ்வொருவரும் தண்ணீரை மிச்சப்படுத்தும் பல வழிகளைக் கடைப்பிடிப்பார்கள் என்பது உறுதி. பல் துலக்கும்போதும், துணிகளை சலவை செய்திடும்போதும் நிச்சயம் தண்ணீரைச் சிக்கனமாய்ச் செலவு செய்திட முயற்சிப்போம். இந்த அருமையான இணைய தளம் இயங்கும் முகவரி : http://everylastdrop.co.uk
source:::::computer malar from Dinamalar Tamil Daily
natarajan
கூகுள் கடந்து வந்த பாதை …


பதினைந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 27ல், மக்கள் தங்கள் இணைய உலாவில், கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இல்லை; குரோம்புக் பயன்படுத்தி யாரும் வீடியோ பார்க்கவில்லை; கூகுள் கிளாஸ் அணிந்து பாட்டு கேட்கவில்லை; அல்லது ஹாட் பலூன் தரும் இணைய இணைப்பில் தேடலை மேற்கொள்ளவில்லை. சாதாரண தேடு தளம் தரும் நிறுவனமாக, 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப் பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகில் மிகச் சிறந்த சக்தியும் தொழில் நுட்பமும் கொண்ட நிறுவனமாக, ஆக்டோபஸ் போல பல திசைகளில் தன் செயல்பாட்டினைக் கொண்டுள்ளது. உலகின் பல கோடி மக்கள் குறித்த தகவல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரே நிறுவனம் இதுவாகத்தான் இருக்கும். இந்த உலகம் மட்டுமின்றி, பிரபஞ்சம் குறித்த தகவல்களைத் தன்னிடத்தே வைத்திருப்பதிலும், விளம்பரம் வழியே வருமானம் பெறுவதிலும், கூகுள் நிறுவனத்தை மிஞ்ச இன்று எந்த நிறுவனமும் இல்லை. பலூன் வழியே இன்டர்நெட், ட்ரைவர் இல்லாத கார், கண்களின் அணியும் கம்ப்யூட்டர் என கூகுள் செல்வதைப் பார்த்தால், “”என்னிடம் வா, உன் வாழ் நாளை 10 ஆண்டுகள் நீட்டித்துத் தருகிறேன்” என்று கூகுள் சொன்னாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
இணையம் என்பது புரியாத புதிராகவும், குழப்பமான குவியலாக இருந்ததை, இதில் நீங்கள் மதித்துப் போற்ற வேண்டிய விஷயங்கள் உள்ளன என்று மக்களை ஏற்றுக் கொள்ள வைத்தது கூகுள்.
இணையத்தில் நம் அன்றாட பிரச்னைகளுக்கான தீர்வுக்காக அணுகியபோது, நம் சமூகத் தொடர்புகளை, நண்பர்களுடான உறவு கொண்டாடும் அஞ்சல்களை, அழகாக அடுக்கி வைத்து நாம் பயன்படத் தந்தது. நம் பேச்சுக்களை டெக்ஸ்ட்டாக மாற்றித் தந்தது. உலகில் நாம் எங்கு இருக்கிறோம்; எங்கெல்லாம் போக ஆசைப்படுவோம் என்று எடுத்துக் காட்டியது. நாம் பயணிக்கும்போது, நாம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டி, எடுத்துச் சொல்லி, வழிகாட்டியது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து, நம் எதிர்காலத் தேவைகளும், விருப்பங்களும் என்னவாக இருக்கும் என்று எடுத்துக் காட்டுகிறது.
உலகக் குடிமக்கள் அனைவரையும் வளைத்துப் போட்டு, அனைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிறுவனமாக கூகுள் எப்படி வளர்ந்தது? அமெரிக்காவின் மென்லோ பார்க் என்ற இடத்தில், லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் ஆகிய இருவரால், சூசன் ஓஜ்சிக்கி என்பவரது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில், 1998ல் தொடங்கப்பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகளாவிய நிறுவனமாகத் தன் 15 ஆவது ஆண்டின் நிறைவு விழாவினைக் கொண்டாடியது.
தேடுதல் வர்த்தகத்தில், கூகுளை நெருங்க, மைக்ரோசாப்ட் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. பல கோடி டாலர்கள் செலவில் தன் பிங் (Bing) தேடல் தளத்தினைத் தொடர்ந்து மாற்றி அமைத்து வருகிறது. ஆனாலும், அமெரிக்காவில் தேடல் வர்த்தகத்தில் 18 சதவீதப் பங்கினையே பெற முடிந்தது. கூகுள் அமெரிக்கா வில் 70 சதவீதப் பங்கினையும், உலக அளவில் 90 சதவீதத்தையும் கொண்டு வேகமாக முன்னேறியும் வருகிறது.
பதினைந்து வயது நிரம்பிய கூகுள், தொடர்ந்து முன்னேறுகையில், பல ஆண்டுகள் டிஜிட்டல் உலகில் கொடி நாட்டிய மைக்ரோசாப்ட், மொபைல் சாதனங்களில் ஏற்பட்ட மாற்றத்தை கோட்டைவிட்டதால், இன்னும் எழுந்து வர இயலாமல் தவிக்கிறது. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். தளத்துடன் இணைந்து, மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் மொபைல் போன் திட்டங்களைத் தகர்த்தது. மைக்ரோசாப்ட் பெற்ற வெற்றிமுனைகளையும், மேற்கொண்ட தவறுகளையும், கூகுள் பாடமாக எடுத்துக் கொண்டு தன் திட்டங்களை வகுத்தால், தோல்வியின்றி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
கூகுள் கடந்து வந்த பாதை:
நவம்பர் 1998: கூகுள் தன் இணையதளத்தினை http://google.stanford.edu என்ற முகவரியில் தொடங்கியது. ஐ.பி.எம், இண்டெல் மற்றும் சன் நிறுவனங்கள் இலவசமாகக் கொடுத்த சாதனங்களுடன், தன் நிறுவனத்தைத் தொடங்கியது கூகுள். சன் மைக்ரோசிஸ்டத்தின் துணை நிறுவனர் பெக்டால்ஷிம் ஒரு லட்சம் டாலர் நிதி அளித்து உதவி செய்தார்.
ஜனவரி 1999: கூகுளின் சோதனைத் தளம் http://alpha.google.com என்ற முகவரியில் இயங்கத் தொடங்கியது. பின்னர் Google.com என்ற முகவரிக்கு மாறியது.
ஏப்ரல் 1999: தன் அலுவலகத்தினைப் புதிய இடத்திற்கு மாற்றியது.
மே 2000: கூகுள் உலகளாவிய அளவில் தன் சேவையை நீட்டித்தது. பயனாளர்கள், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஸ்வீடிஷ், பின்னிஷ், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், டச், நார்வேஜியன் மற்றும் டேனிஷ் ஆகிய மொழிகளில் தங்கள் தேடல்களை மேற்கொள்ள கூகுள் உதவியது.
ஜூலை 2000: கூகுள் நூறு கோடிக்கும் மேலான இணைய தளங்களைப் பட்டியல் இட்டு, தகவல்களைத் தர முடிந்தது.
ஆகஸ்ட் 2000: எங்களுடன் விளம்பரப் படுத்துங்கள் என்ற லிங்க்கை கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. கூகுளில் தேடல் களின் நாளொன்றின் எண்ணிக்கை, ஒரு கோடியே 30 லட்சமாக உயர்ந்தது.
அக்டோபர் 2000: AdWords என்று சொல்லப்படுகிற விளம்பரச் சொற்கள், கூகுள் இணைய தளத்தில் வரத் தொடங்கின.
ஜூலை 2001: கூகுள் குரூப் தொடங்கப்பட்டது. தேஜா நியூஸ் என்ற நிறுவனத்தை கூகுள் வாங்கியது.இது செய்திகளைச் சேர்த்து வைத்துப் பயன்படுத்தும் நிறுவனமாகும்.இதனை groups.google.com என்ற தன் நிறுவனப் பிரிவிற்கு அளித்து, தன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வழங்கியது.
பிப்ரவரி 2002: கூகுள் ‘Search Appliance’ என்ற தேடல் வகையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம அனைத்து இணைய டாகுமெண்ட்களும் அலசப்பட்டு, தொகுப்பு பட்டியல் உருவாக்கப்பட்டு தரப்பட்டன. மைக் ரோசாப்ட் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் மற்றும் பி.டி.எப். பைல் உட்பட பலவகையான பைல் வகைகள் இதன் கீழ் ஆய்வுக்கும் தொகுப்புக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
நவம்பர் 2002: Google Answers சேவை வெளியானது. கூகுள் சலித்துத் தேடிக் கண்டறிந்த 500 வல்லுநர்களும், அறிஞர்களும், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் அளிக்கும் சேவை இது. இதற்கு கேள்வி ஒன்றுக்கு 2.50 டாலர் கட்டணம். 24 மணி நேரத்தில் விடை கிடைக்கும்.
மார்ச் 2003: Business Solutions தொடங்கப்பட்டது. நிறுவனங்களின் செயல்பாட்டிற்கு இந்த தீர்வு முறை மிகவும் உதவி வருகிறது.
மார்ச் 2004: Froogle அறிமுகமானது. நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொருட்கள் பட்டியல், வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்தது. பின்னர் 2007ல் இது Google Product Search எனவும், 2012ல் Google Shopping எனவும் பெயர் மாற்றம் பெற்றது.
பிப்ரவரி 2005: Google Local வெளியானது. வாடிக்கையாளர்கள், தாங்கள் வசிக்கும் இடங்களில், தங்களுக்குத் தேவையான வர்த்தகத் தகவல்களைப் பெற இந்தப் பிரிவு உதவுகிறது.
ஏப்ரல் 2006: கூகுள் மேப்ஸ் (Google Maps) அறிமுகமானது. டிஜிட்டல் உலகில் புதிய சகாப்தத்தினை இது ஏற்படுத்தியது. Google Local இதனுடன் இணைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2006: கூகுள் வீடியோ (Google Video) உருவாக்கப்பட்டுச் சோதனை முறையில் தரப்பட்டது. உலகின் முதல் ஆன்லைன் வீடியோ வர்த்தக மையமாக இது பெயர் பெற்றது. டிவி நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் டாகுமெண்ட்ரி படங்களை இதன் மூலம் தேடிப் பெற முடிந்தது. கூகுள் வீடியோ ஸ்டோரில், படங்களை விற்கலாம், வாங்கலாம், வாடகைக்கு எடுக்கலாம். அக்டோபர் 2006ல், யு ட்யூப் வாங்கப்பட்டு, அதனுடன் கூகுள் வீடியோ இணைக்கப்பட்டது.
மே 2007: கூகுள் இணைய தளத்திற்கு புதிய இண்டர்பேஸ் தரப்பட்டது. இதுவரை சர்ச் கட்டத்தின் மேலாகத் தரப்பட்ட லிங்க்ஸ் அனைத்தும், மேல் இடது பக்கம் கொடுக்கப்பட்டன. Maps, Labs, Patents, Reader, Scholar மற்றும் Finance போன்ற லிங்க்குகள் இடம் பெற்றன.
செப்டம்பர் 2009: யூசர் இண்டர்பேஸ் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது. I’m Feeling Lucky சர்ச் பாக்ஸிலிருந்து தள்ளி இடம் பெற்றது.
நவம்பர் 2011: Google + அறிமுகப்படுத்தப் பட்டது. முதலில் அழைப்பு பெற்றவர்களுக்கு மட்டும் எனச் செயல்படத் தொடங்கி, பின்னர், செப்டம்பர் 2011ல், அனைவருக்கும் தரப்பட்டது.
செப்டம்பர் 2013: கூகுள் தன் 15 ஆவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடியது. கூகுளின் புதிய தேடல் முறையாக “”ஹம்மிங் பேர்ட்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில், கம்ப்யூட்டர் மற்றும் பிற இணையத் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. வலைத் தளங்களின் எண்ணிக்கையும் வளர்ந்துள்ளது. எனவே, இந்த தேடல் முறை, மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாலெட்ஜ் கிராப் (Knowledge Graph) என்ற ஒரு தேடல் முறையை முன்பு அறிமுகப்படுத்திய கூகுள், தற்போது அதன் மேம்பாடடைந்த தொழில் நுட்பமாக இதனைத் தந்துள்ளது.
source >>>>>computer malar from Dinamalar….
natarajan
“ஊசி வாங்க சென்று ஊரையே வாங்கி வரலாமா ” !!!…சிந்திக்க வேண்டும் நாம் !!!

காற்று வாங்கப்போய் காதல் வாங்கி வருவதில் தவறில்லை. ஆனால் ஊசி வாங்கப் போய் ஊரையே வாங்கி வருவது அவசியமா? இன்று இதுதான் நடக்கிறது. வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் வீட்டைப் பூட்டிக்கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் கிளம்பி விடுகிறார்கள். கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கிக் குவிக்கிறார்கள். காதில் கேட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு வருகிறார்கள். அதுவும் தீராமல் அடுத்த வாரத்துக்கும் சிலவற்றைத் திட்டமிட்டே திரும்புகிறார்கள். மக்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் இந்த நுகர்வு கலாச்சாரம் எப்படி வந்தது?
அடுத்தவருக்காக வாழ்வதும் அடுத்தவரைப் பார்த்து வாழ்வதும்தான் முதலிரண்டு காரணங்களாக நிற்கின்றன. இது இல்லை என்றால் அவர்கள் என்ன சொல்வார்கள்? அதை வாங்கவில்லை என்றால் இவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்புக்குத் தீனிபோடவே பலர் பல பொருட்களை வாங்குகிறார்கள். கொட்டாவி போலத்தான் ஷாப்பிங் செய்வதும். ஒருவர் நகவெட்டி வாங்கினாலும், அந்தத் தெருவில் இருக்கிற அனைவரும் அதையே வெவ்வேறு வடிவங்களிலும் தரங்களிலும் வாங்கிவிடுவார்கள்.
அடுத்ததாக மக்களிடம் பொங்கிப் பிரவாகிக்கும் அழகுணர்ச்சி. இதை இந்தக் கோணத்தில் பார்த்தால் எவ்வளவு அழகு என்று சிலாகித்தே பல பொருள்களை வீட்டில் சேர்த்திருப்பார்கள். சுவரில் மாட்டுகிற ரோஜாக்கள் சிரிக்கிற அட்டையில் துவங்கி, தரையில் ஒட்டுகிற ஸ்டிக்கர் கோலம் வரை இவர்களின் அழகுத் தேடல் நீண்டுகொண்டே செல்லும். சில மாதங்கள் கழித்து இவற்றில் பல குப்பைத் தொட்டிகளில் பரிதாபமாய் முழிக்கும். குப்பையும் செல்வமாகும் என்பதை மாற்றிச் செல்வமும் குப்பையாகும் என்பதை நிரூபிக்கும் வித்தகர்கள் இவர்கள்.
மக்களை மாபெரும் நுகர்வோர்களாக மாற்றியதில் ஊடகங்களின் பங்கு இல்லாமலா? அவை காட்சிப்படுத்துகிற கவர்ச்சி விளம்பரங்களை நம்பித்தான் இன்று பல முதலாளிகள் பெரும் முதலாளிகளாகிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரபல நடிகர் பரிந்துரைக்கிற காபியைக் குடித்தால்தான் நம் தந்தையின் மனதையோ, மனைவியின் அன்பையோ புரிந்துகொள்ள முடிகிறது. காலை வேளையில் போருக்குத் தன் சேனைகளைத் தாயார்படுத்தும் தாய்மார்கள் பெயரே வாயில் நுழையாத ஏதேனும் வஸ்துவைச் சாப்பிடச் சொல்லிக் கொடுப்பார்கள். கௌரவமான அந்தக் காலை உணவை முடிக்காவிட்டால் இந்தச் சமூகத்தில் நம் அந்தஸ்து என்னாவது? அதை அப்படியே படம் பிடித்து ஃபேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யலாம் என்பது கூடுதல் வசதி!
கால் செருப்பு பிய்ந்து போனதெற்கெல்லாம் வகை தொகை இல்லாமல் ட்ரீட் கேட்கும் நண்பர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே கையைக் கடிக்காத விலைகளில் (அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்) புதுப்புது பானங்களையும் நொறுக்குத் தீனிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். வாழ்க்கையைக் கொண்டாட இது போதாதா நமக்கு? அவற்றின் எடையோ, தரமோ நாம் கொடுக்கிற பணத்துக்கு ஈடாகுமா என்ற கவலை நமக்கெதற்கு? உறைகளைப் பாருங்கள். அவைதான் எவ்வளவு பளபளப்பாக, அழகாக இருக்கின்றன! அது போதாதா?
இவை போதாதென்று நம் மனநிலை புரிந்தே புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்துவார்கள் சில வணிகப் புலிகள். கையில் பணம் இல்லையென்றால் என்ன? சுலபத் தவணைத் திட்டத்தில் சேர்ந்து மாபெரும் லாபம் அடைய வலைவிரிக்கின்றன அங்காடித் தெருக்கள். புடவையோடு பிரஷர் குக்கரையும் சேர்த்தே வாங்கச் சொல்லி வற்புறுத்துகின்றன தள்ளுபடிச் சலுகைகள்.
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியம் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற நம் மக்களின் மனநிலைதான். அவசியத்துக்கும் அநாவசியத்துக்கும் இடையே இருந்த தாம்புக் கயிறு இடைவெளியை நூலிழையாக்கிவிட்டு அதையும் சில நொடி தயக்கத்துக்குப் பிறகு அறுத்தெறிந்துவிடுகிறோம். எதைப் பார்த்தாலும் வாங்கத் துணிகிறபோது, எச்சரிக்கும் மனசாட்சியைத் துச்சமாக நினைத்துத் தவிர்த்துவிடுகிறோம். உலகமயமாக்கலின் விளைவாகப் பல்கிப் பெருகியிருக்கும் வியாபாரச் சுழலில் விரும்பியே சிக்குகிறோம். நாம் அனைவரும் நல்ல வாடிக்கையாளர்கள்தான். ஆனால் இதுவே வாடிக்கையாகிவிடக் கூடாது.
வாங்கப்போகும் பொருட்களின் பட்டியலோடு ஷாப்பிங் செல்வது நல்லது. எதை வாங்குவதாக இருந்தாலும் அந்தப் பொருள் இல்லாமல் எந்தெந்த வேலைகள் தடைபடும், அதனால் நிகழப்போகும் ஆக்கப்பூர்வமான மாற்றம் என்ன என்பதை மனதில் வைத்து அந்தப் பொருளை உங்கள் பட்டியலில் சேருங்கள். அழகுணர்ச்சி தேவைதான். அதுவே நம் மன அழுத்தத்தை அதிகரித்துவிடக்கூடாது. தேவையில்லை என்றால் அது சும்மா கிடைத்தாலும் வேண்டாம் என்ற மனநிலைக்கு மாற வேண்டும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம், எது தேவையோ அந்தப் பொருள் மீது மட்டும் கண்கள் இருக்க வேண்டும். தவறியும் பக்கத்துப் பொருட்களின் மீது பார்வை திரும்பினால், பணம் திரும்பாது.
விஷயம் இதோடு முடிந்துவிடவில்லை. வீட்டுக்குத் திரும்பியதும் நீங்கள் வாங்கிய தேவையில்லாத பொருட்களின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். என்னதான் திட்டமிட்டுக் கிளம்பினாலும் யானைக்கும் அடி சறுக்குவது சகஜம்தானே. இரண்டு பட்டியல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதற்கு மேலும் நீங்கள் வாங்கிய பொருட்கள் தேவையானவைதான் என நினைத்தால், நீங்கள் மிகச் சிறந்த வாடிக்கையாளருக்கான விருதைப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.









